தளபதி 63 கதை திருட்டில் சிக்குவாரா அட்லி..? எழுத்தாளர் சங்கத்தில் புகார்

New Project (5)அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஏஆர். ரஹ்மான் இசையமைக்க இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் தளபதி 63 படத்தின் கதை என்னுடையது என்று குறும்பட இயக்குனர் கே.பி.செல்வா எழுத்தாளர் சங்கத்தை அணுகியுள்ளார்.

இது தொடர்பாக செல்வா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில், ‘பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து நான் 265 பக்கங்கள் கொண்ட கதையை எழுதினேன்.

அந்த கதையை சில தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்தேன். இந்நிலையில் அட்லி இந்த கதையை இயக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்து நான் நீதிமன்றத்திற்கு சென்றேன்.

ஆனால் அவர்களோ எழுத்தாளர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தனர்.

பின்னர் அட்லி தரப்பில் என்னை தொடர்புகொண்டு கதை விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம், உங்களின் படத்தை கைவிட்டுவிடுங்கள் என்றார்கள். அதன் பிறகு கதை திருட்டு தொடர்பாக தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன்.

சங்க விதிப்படி உறுப்பினராகி 6 மாதம் கழித்த பிறகே கதை திருட்டு குறித்து புகார் அளிக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். அது தொடர்பாக கடிதமும் அளித்தார்கள்.

எழுத்தாளர் சங்கத்தில் புகாரை ஏற்க மறுத்த பிறகு நான் மீண்டும் நீதிமன்றம் சென்றுள்ளேன். கதை திருட்டு குறித்த வழக்கு வரும் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது என்றார் செல்வா.

Overall Rating : Not available

Related News

சென்னையில் கிரிக்கெட் விளையாட்டு நடைபெற்ற போது…
...Read More
சர்கார் படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும்…
...Read More

Latest Post