அட்லி இயக்கும் தளபதி 63 படத்தில் கிறிஸ்தவராக விஜய்.?

thalapathy 63 stillsவிஜய் & அட்லீ 3வது முறையாக இணையும் படத்தை தயாரிக்கிறது ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ்.

தற்காலிகபாக ‘தளபதி 63’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்ற, ரூபன் எடிட்டிங் செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடுகின்றனர்.

இந்நிலையில், விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கேல் என்ற கிறிஸ்தவ பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Overall Rating : Not available

Latest Post