#BIGNews இன்று மாலை சன் பிக்சர்ஸின் *ரஜினி-165* பட டைட்டில் அறிவிப்பு

#BIGNews இன்று மாலை சன் பிக்சர்ஸின் *ரஜினி-165* பட டைட்டில் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalaivar 165கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தன் 165 படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் நாயகிகளாக சிம்ரன், த்ரிஷா இருவரும் நடித்து வருகின்றனர்.

செப்டம்பரில் கட்சி; டிசம்பரில் மாநாடு; ரஜினி அதிரடி திட்டம்

மேலும் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, பிரபல பாலிவுட் நடிகர் நவாஸ்தீன் சித்திக் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று செப்டம்பர் 7ல் மாலை 6 மணிக்கு இப்பட டைட்டில் & மோசன் போஸ்டரை வெளியிட உள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

*டார்ச் லைட்* டீமுக்கு சென்சார் கொடுத்த டார்ச்சர்.; அப்துல்மஜீத் வேதனை

*டார்ச் லைட்* டீமுக்கு சென்சார் கொடுத்த டார்ச்சர்.; அப்துல்மஜீத் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director abdul majeedவிஜய் நடித்த ‘தமிழன் ‘பட இயக்குநர் அப்துல் மஜீத் இயக்கியுள்ள படம் ‘டார்ச் லைட்’ .

இது பாலியல் தொழிலாளி பற்றிய கதை என்கிற பரபரப்பு நிலவி வருகிறது.

‘டார்ச் லைட் ‘படம் சார்ந்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது .

அப்போது படம் பற்றி நாயகி சதா பேசினார். அவர் பேசும் போது , ” நான் சற்று இடைவெளிக்குப் பின் தமிழில் நடித்திருக்கிறேன். இடையில் தெலுங்கு, இந்தி என்று நடித்தேன். நல்லதொரு கேரக்டருக்காக தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பியதால் இந்தத் தாமதம் நேர்ந்தது.

‘டார்ச் லைட் ‘படத்தின் கதையை இயக்குநர் மஜீத் என்னிடம் ஒரு முறை சொன்னார். கதை பிடித்தது. ஆனால் என்னால் உடனே முடிவெடுக்க முடியவில்லை. அதனால் மீண்டும் மீண்டும் கேட்டேன்.

அப்போதும் அவர் அதே தெளிவோடு கூறினார். என்னால் எதுவும் சட்டெனக் கூற முடியவில்லை. சரியாக வருமா நம்மால் முடியுமா என்கிற எண்ணம் இருந்தது.

மஜீத் என் மேல் நம்பிக்கை வைத்தார். உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார். நடிப்பது என்று முடிவெடுத்து விட்டேன். இது மாதிரி பாலியல் தொழிலாளியாக நடிக்கப் பலரும் தயங்கவே செய்வார்கள்.

காரணம் படத்தின் பாத்திரத்தை பாத்திரமாகப் பார்க்கும் பக்குவம் பலருக்கும் இருப்பதில்லை.

அது தான் பிரச்சினை . என்னைப் பார்க்கிறவர்கள் எல்லாருமே முதலில் இதைத்தான் கேட்கிறார்கள். என்னை படத்தில் சதாவாகப் பார்க்காதீர்கள். பாத்திரமாகப் பாருங்கள் என்பதே என்பதில். ட்ரெய்லர் பார்த்து விட்டு கேள்வி கேட்கிறார்கள்.

ட்ரெய்லர், போஸ்டர் பார்த்து விட்டு படத்தை முடிவு செய்யக் கூடாது. அட்டைப் படத்தைப் பார்த்து விட்டு ஒரு புத்தகத்தை முடிவு செய்ய முடியாது அல்லவா ?. ட்ரெய்லரில் சில வினாடிகள் உள்ள வசனங்கள் பற்றிக் கேட்கிறார்கள்.

சர்ச்சையாக இருக்கிறதே என்கிறார்கள். படம் பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள்.

இது பாலியல் தொழிலில் சிக்கிய பெண்கள் பற்றிய கதைதான். அவர்கள் அந்தத் தொழிலுக்கு விரும்பி வருவதில்லை.

ஆடம்பர வாழ்க்கைக்கோ, பெரிய பணத்துக்கோ, சந்தோஷத்துக்கோ என்று வருவதில்லை. குடும்ப வறுமை சூழலில் வருகிறார்கள்.

இந்தத் தொழிலில் ஆண்கள் சம்பந்தப்பட்டாலும் கெட்ட பெயரெல்லாம் பெண்களுக்குத்தான். அவர்களின் வலி, வேதனை, துன்பம், துயரம், மன அழுத்தம் யாருக்கும் தெரிவதில்லை.

அதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். படப்பிடிப்பின் பெரும் பகுதி அவுட்டோரில் நடைபெற்றது. அதுவும் லைவ் லொக்கேஷன்களில் நடைபெற்றது.

அங்கிருந்த யாருக்கும் நாங்கள் சினிமா எடுப்பது தெரியாது. அப்படிப்பட்ட இடங்களில் கேமரா பொசிஷன் பார்த்து நானும் கூட்டத்தில் கலந்து நடிக்க வேண்டும். இது ஒரு சவால் தான் இருந்தும் நடித்தேன்.

ஒரு முறை அப்படி நடித்த போது ஹீரோ என்னைத் தள்ளிவிட்டார். கீழே விழுந்து என் முட்டியில் அடிபட்டு காயம் ஏற்பட்டது.

மொத்தத்தில் பல வகையிலும் எனக்கு இது மறக்க முடியாத படம்.” இவ்வாறு சதா பேசினார்.

இயக்குநர் அப்துல் மஜீத் பேசும் போது “இது பாலியல் தொழிலாளி பற்றிய கதைதான் ஆனால் செக்ஸ் படமல்ல. இதை பல நடிகைகளிடம் கூறினேன்.

ஆனால் யாரும் நடிக்க வரவில்லை. சதா மட்டுமே முன்வந்தார். அவர் கதையை மீண்டும் மீண்டும் கேட்டு தெளிவு பெற்றார், அதன் பிறகு தயக்கத்தை விட்டு விட்டு நடிக்கத் தயாராகி விட்டார்.

அந்தக் கதாபாத்திரத்துக்குள் நுழைந்து விட்டார். பிரமாதமாக நடித்துள்ளார்.

படம் எடுத்த பின் சென்சாரில் நாங்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

ரிவைஸிங் கமிட்டி போய்த்தான் சர்டிபிகேட் பெற வேண்டியிருந்தது. ஏராளமான வெட்டுகள் கொடுத்தார்கள்.

சினிமாவில் சென்சார் பெரிய பிரச்சினையாக உள்ளது. அவர்களுக்குச் சினிமா மொழி புரிவதில்லை. சென்சாரில் தணிக்கைக் குழுவில் சினிமாத்துறையினர் நாலைந்து பேராவது இருக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள் இப்படம் செப்டம்பர் 7ல் வெளிவருகிறது.” என்றார்.

நிகழ்ச்சியில் நாயகன் வருண் உதய், ஒளிப்பதிவாளர் சக்திவேல், இசையமைப்பாளர் ஜேவி, படத்தில் நடித்துள்ள இயக்குநர் சி.ரங்கநாதன் ஆகியோரும் பேசினார்கள்,

‘டார்ச் லைட் ‘படத்துக்கு ஒளிப்பதிவு – சக்திவேல், இசை – ஜேவி, பாடல்கள்- வைரமுத்து, எடிட்டிங்- மாரீஸ், கலை – சேகர், நடனம் – சிவராகவ், ஷெரீப். தயாரிப்பு அப்துல் மஜீத், எம். அந்தோனி எட்வர்ட், ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர்

சதா, ரித்விகா, வித்தியாசமான நடிப்பில் புதுமுகம் வருண்உதய், தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா. இயக்குநர் ரங்கநாதன், சரவண சக்தி. மற்றும் பலர் நடித்துள்ளனர்

எந்த எதிர்ப்புகளையும் சந்திக்க தயார்; *தொட்ரா* பட எம்.எஸ். குமார் சவால்

எந்த எதிர்ப்புகளையும் சந்திக்க தயார்; *தொட்ரா* பட எம்.எஸ். குமார் சவால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor-MS-Kumar-speaks-about-his-debut-movie-Thodraடைரக்டர் பாண்டிராஜன் மகன் பிருத்வி, வீணா இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் தொட்ரா.

இப்படத்தை ஜெ.எஸ்.அபூர்வா புராடக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ளார்.

இயக்குனர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆஞ்சி ஒளிப்பதிவு செய்ய, உத்தமராஜா என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் கதை தர்மபுரியில் நடந்த ஒரு (ஜாதி) காதல் கலப்பு திருமண உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே இப்படத்திற்கு சில அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து படத்தயாரிப்பாளரும் இப்பட வில்லன் நடிகருமான எம்.எஸ். குமார் கூறியதாவது…

ஒரு மாஸ் மீடியாவில் ஒரு உண்மைச் சம்பவத்தை சொல்ல வேண்டும் என நினைக்கிறோம்.

இதனால் எதிர்ப்புகள் வந்தாலும் சமாளிக்க தயார்.” என கூறினார்.

பிரியாணி பிரியர்களுக்கு ட்ரீட்; அல்சஃபி ஆம்பூர் பிரியாணி ஹோட்டல் திறப்பு

பிரியாணி பிரியர்களுக்கு ட்ரீட்; அல்சஃபி ஆம்பூர் பிரியாணி ஹோட்டல் திறப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Alsafi Ambur Biriyani new outlet opened at Chennai Valasaravakkamசென்னையில் பல்வேறு வகையான புது புது உணவகங்கள் திறக்கப்பட்டாலும், மக்களின் நாவுக்கு ஏற்ற சுவையான மற்றும் தரமான உணவுகளை வழங்கும் ஒரு சில உணவகங்கள் மட்டுமே அவர்களது மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது.

அந்த வரிசையில் மக்களின் மனதுக்கு நெருக்கமான, கடந்த 1993 ஆம் ஆண்டு ஆம்பூரில் தொடங்கப்பட்ட அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகம் தற்போது சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி குப்பம் சாலையில் உள்ள நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட் பக்கத்தில் திறக்கப்பட்டுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகம், கடந்த 25 வருடங்களாக ஆம்பூரின் நம்பர் ஒன் பிரியாணி உணவகமாக திகழ்ந்து வருகிறது.

தற்போது சென்னையில் திறக்கப்பட்டுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகம் சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதிலும் திறக்கப்பட உள்ளது.

மலிவான விலையில், சுவையான தரமான பிரியாணி மற்றும் பிற அசைவ உணவு வகைகளை வழங்குவதையே தங்கள் நோக்கமாக கொண்டுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவக நிர்வாகம், இதனை தொழிலாக மட்டும் இன்றி ஒரு சேவையாகவும் செய்து வருகிறது.

தற்போது சென்னையின் முதல் கிளையை வளசரவாக்கம், ஸ்ரீ தேவி குப்பம் சாலையில் திறந்துள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகம், சென்னை முழுவதும் 20 கிளைகளை திறக்கப்பட இருப்பதோடு, தமிழகம்
முழுவதும் 2020 ஆம் ஆண்டுக்குள் 50 கிளைகள் திறக்கப்பட உள்ளது.

இன்று முதல் வளசரவாக்க கிளையில் விற்பனையை தொடங்கியுள்ள அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தில் ஆன்லைன் ஆப்-களுக்கான ஸ்விக்கி (Swiggy) சொமட்டோ (Zomato) உபேர் (Uber) மூலமாகவும் ஆர்டர் செய்யலாம்.

பிரியாணி மட்டும் இன்றி, கிரில் சிக்கன், சவர்மா, தந்தூரி வகைகள், சைனீஸ் வகைகள் என பல வகையான அசைவ உணவுகள் இங்கு கிடைக்கும்.

அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் உரிமையாளர் கமல் பேசும் போது, “சுவையான மற்றும் மலிவான விலையில் பிரியாணி மற்றும் பிற அசைவ உணவு வகைகளை வழங்குவது தான் அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் நோக்கம். சென்னையில் பல கிளைகளை திறக்க உள்ளோம்.

தமிழகத்தில் சுமார் 50 கிளைகள் திறக்க உள்ளோம். பிராஞ்சீஸ் முறையில் இந்த கிளைகள் திறக்கப்பட உள்ளது.

இதற்காக டெப்பாசிட் ஏதும் நாங்கள் வசூலிக்கவில்லை. 300 சதுர அடி இடம் இருந்தால் போதும், யாருக்கு வேண்டுமானாலும் பிராஞ்சீஸ் கொடுப்போம். இன்று வளசரவாக்க கிளையை திறந்தவுடனேயே விற்பனை
அமோகமாக இருப்பதோடு, பிராஞ்சீஸுக்காக 10 புக்கிங் செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தை சேர்ந்த அஜய் பாண்டியன் பேசும் போது, “நாங்கள் சமைக்கும் பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் அரிசி, மசாலா உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களும் தரமானதாக
இருக்கும், அதனால் தான் எங்களது பிரியாணி 25 ஆண்டுகளாக மக்கள் மனதிற்கு நெருக்கமாக உள்ளது.

தரமான உணவை மலிவான விலையில் கொடுப்பது தான் எங்கள் நோக்கம்.” என்றார்.

இன்று திறக்கப்பட்ட வளசரவாக்கம் அல்சஃபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட சில வாடிக்கையாளர்கள், பிரியாணி தரம் குறித்தும், சுவை குறித்தும் வெகுவாக பாராட்டியதோடு, விலையும் நியாயமானதாக இருப்பதாக கூறினார்கள்.

பிரியாணி பிரியர்களே, இப்போதே உங்க போனை எடுங்க, புட் ஆப்பில் அல்சஃபி ஆம்பூர் பிரியாணியை ஆர்டர் செய்து சுவைத்து பாருங்க.

Alsafi Ambur Biriyani new outlet opened at Chennai Valasaravakkam

alsafi biriyani shop

 

நான் ரொம்ப பேசுவேன் ஆனா இப்போ இல்ல..; CCV மேடையில் சிம்பு

நான் ரொம்ப பேசுவேன் ஆனா இப்போ இல்ல..; CCV மேடையில் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu didnt talk much in Chekka Chivantha Vaanam audio launchலைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஜோதிகா, விஜயசேதுபதி தவிர மற்ற அனைவரும் கலந்துக் கொண்டனர்.

இப்படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் பாடினார்.

பின்னர் மேடையேறிய சிம்பு…

‘நான் இங்கு வந்ததற்கு காரணம் ஒரு விஷயம் சொல்ல வந்தேன். அது என்னவென்றால் மணிரத்னம் அவர்களுக்கு நன்றி.

நான் பேசுவேன். நிறைய பேசுவேன். ஆனால், இப்போ பேசமாட்டேன். இந்த படம் பேசும். அதன்பின் நான் பேசுவேன்” என்று மட்டும் பேசிவிட்டு சென்றுவிட்டார் சிம்பு.

Simbu didnt talk much in Chekka Chivantha Vaanam audio launch

*சர்கார்* விஜய்யுடன் மோதும் தனுஷ்; இது 4வது முறை

*சர்கார்* விஜய்யுடன் மோதும் தனுஷ்; இது 4வது முறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Sarkar and Dhanushs ENPT movies will clash on 2018 Diwaliகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். ராணா டகுபதி, சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனுசுக்கு அண்ணனாக சசிகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதால், தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் கவுதம் மேனன் நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

`கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பு நிறைவு பெற்றது. நன்றி தனுஷ், எங்களுடன் இந்த பயணத்தில் இணைந்த சசிகுமாருக்கு மிக்க நன்றி.

இனி தர்புகா சிவா, எடிட்டர் பிரவீன் படத்தை பார்த்துக் கொள்வார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தர்புகா சிவா இசையமைக்கும் இந்த படத்தை கவுதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் இதே நாளில்தான் விஜய்யின் சர்கார் படமும் வெளியாகிறது.

எனவே இரு படங்களுக்கும் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கு முன்பே 3 முறை விஜய் மற்றும் தனுஷ் படங்கள் ஒரே நாளில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

Vijays Sarkar and Dhanushs ENPT movies will clash on 2018 Diwali

More Articles
Follows