செப்டம்பரில் கட்சி; டிசம்பரில் மாநாடு; ரஜினி அதிரடி திட்டம்

rajinikanthநடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்டார். இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு 8 மாதங்கள் ஆனாலும் இன்னும் கட்சி பெயர் மற்றும் கொடி, கொள்கையை அவர் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்தார்.

நிர்வாக உறுப்பினர்கள் ஜாதி அமைப்பில் இருக்க்கூடாது, 18வயதுக்குள் இருக்க கூடாது, கொடியை ப்ளாஸ்டிக்கில் பயன்படுத்த கூடாது, போதை பழக்கத்துக்கு அடிமையாக இருக்க கூடாது உள்ளிட்ட பல விவரங்கள் இருந்தன.

ரஜினியின் இந்த விதிமுறைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ரஜினி தன் கட்சியை அடுத்த செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி சமயத்தன்று அறிவிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அல்லது அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று அறிவிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனையடுத்து வரும் டிசம்பரில் கட்சி மாநாட்டை திருச்சி அல்லது கோவையில் நடத்த ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமிதாப் பட அறிவிப்பை ரஜினியை தவிர யார் வெளியிட முடியம்.. : எஸ்ஜே. சூர்யா

Overall Rating : Not available

Latest Post