தேர்தல் களத்தில் ரஜினியை முன் நிறுத்த முயன்றது கொச்சைப் படுத்தப்படலாம். ஆனால்…; கழுகாருக்கு தமிழருவி மணியன் தரமான பதிலடி

தேர்தல் களத்தில் ரஜினியை முன் நிறுத்த முயன்றது கொச்சைப் படுத்தப்படலாம். ஆனால்…; கழுகாருக்கு தமிழருவி மணியன் தரமான பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth tamilaruvi manian‘தமிழருவி மணியன் அரசியலில் ஈடுபட்டு இதுவரை என்ன செய்தார்?’
என்பது ஒரு வாசகரின்
விவரமறியாத விடலைக்
கேள்வி.

கடந்த கால அரசியல் வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையில்கூடப்
பார்க்கத் தெரியாத கழுகார் ‘ இதே கேள்வி அவருக்கும்
எழுந்ததாலோ என்னமோ
போகிறேன்.. வரமாட்டேன்
என்று சொல்லிவிட்டுப்
போய்விட்டார்’ என்று
எள்ளல் தன்மையோடு பதில்
அளித்திருக்கிறார்.

ஐம்பதாண்டுகளுக்கு மேல் சில மேலான இலட்சியங்களுக்காக ஒரு முழு வாழ்க்கையையும்
வீணாக்கிவிட்டவனின் வலி கழுகறிய வாய்ப்பில்லை.

வானத்தில் வட்டமிட்டாலும் கழுகின் பார்வை மண்ணில்
கிடக்கும் அழுகிப்போன
மாமிசத்தின் மீதுதான் படிந்து கிடக்கும்.

ஐம்பதாண்டுகளுக்கு மேல் அரசியலில் தமிழருவி மணியன் என்ன செய்தான்?

கல்லூரிப் பருவத்திலேயே
படிப்பில் சிந்தை செலுத்தாமல் இந்தி எதிர்ப்பு வேள்வியில் மிகத் தீவிரமாகக் களமாடியவன்
தமிழருவி மணியன்.

இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தபோது இளம் பருவத்தில் மாநிலம் முழுவதும் ஒற்றை மனிதனாக நெருக்கடி காலக் கொடுமைகளை
எதிர்த்து நான்கு சுவர்களுக்கு நடுவில் எந்த அச்சமுமின்றி நாக்கு யாகம்
நடத்தியவன் தமிழருவி மணியன்.

ஜனநாயகம்
பெற்றுத் தந்த அடிப்படை
உரிமைகள் அனைத்தையும்
42வது சட்ட திருத்தத்தின்
மூலம் இந்திராகாந்தி
பறித்தெடுத்தபோது அதை எதிர்க்க அனைவரும்
தயங்கியநிலையில் , ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’
என்று ஆண்மையுடன் கருத்தரங்கத் தலைமையேற்று மிகக்
கடுமையாகப் போர்க்குரல்
கொடுத்தவன் தமிழருவி
மணியன்.

அப்போது கேள்வி
கேட்ட வாசகரும், நையாண்டி செய்த கழுகாரும் பிறந்திருக்க
வாய்ப்பில்லை.

அண்ணாவின் மறைவுக்குப்
பின்பு சுயநலத்தில் சுருங்கி,
பொதுவாழ்க்கைப் பண்பு
நலன்களைப் பாழ்படுத்தி,
எவ்வித சமூகக் கூச்சமுமின்றி மக்கள்
சொத்தைக் கொள்ளை
அடிப்பதையே வாழ்வியலாகக் கொண்டு வலம் வரும் இரண்டு திராவிட கட்சிகளின் சுயமுகங்களைத்
தொடர்ந்து தோலுரித்துக் காட்டி மக்களை விழிப்படையச் செய்ய முயன்று பார்ப்பதே
அரசியலில் ஆக்கபூர்வமான
பங்களிப்பு இல்லையா?

வாழ்வை வளமாக்கிக்
கொள்வதற்கு ஒரு நாள்
தி.மு.கவிலும் மறுநாள்
அ.தி.மு.க. விலும் மாறிமாறிப் பயணிக்காமல்
ஐம்பதாண்டுகளுக்கு மேல் சுதர்மத்தையும், சுயாபிமானத்தையும் இழந்துவிடாமல் ஒரு சிறிய வாடகை வீட்டில் வறுமையோடு வாழ்க்கை
நடத்துவது மக்கள் நலன்
சார்ந்த அரசியல் தவம்
இல்லையா?

உண்மையும் நேர்மையும் ஒழுக்கமும் எள்ளளவும் பழுதுபடாமல் சேற்றில் மலர்ந்தாலும் அந்தச் சேறுபடாமல் தன்னைக் காத்துக்கொள்ளும் தாமரையைப்போல் வாழ்வதே அரசியலில் ஒரு பெருமைக்குரிய சிறப்பில்லையா?

இலக்கிய மேடைகளில் பேசுவதற்கு வழங்கப்படும் பணத்தைத் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளின் கல்விக்கும்,
வறுமையில் வாடும் இளம்பெண்களின் திருமணத்திற்கும் பயன்படுத்துவது ஓர் உயரிய சமூகப் பங்களிப்பில்லையா?

மதுவிலக்கிற்காக மாநிலம் முழுவதும் என்னுடைய
காந்திய மக்கள் இயக்கம்
நடத்திய போராட்டங்கள்,
கருத்தரங்கங்கள்,
மாநாடுகள், வருவாய் இழப்பை ஈடு
செய்ய முதல்வர் ஜெயலலிதாவிடம் சமர்ப்பித்த நிதியாதாரம்
பெருக்கும் மாற்றுத் திட்டம் பற்றி ஏதாவது உங்கள்
இருவருக்கும் தெரியுமா?

மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்ற கொள்கைப்
பதாகைகளைச் சுமந்தபடி
நாங்கள் தொடர்ந்து நடத்திய வேள்வியை அறியாமல் நீங்கள் இதுவரை
வானத்துத் தேவர்களாய்
வாழ்ந்து வந்தீர்களா?

இப்போதைய கழுகார்
விகடன் குழுமத்திற்குப்
புதியவரா? உங்கள் இதழில் ‘எங்கே போகிறோம் நாம்?’
என்று தொடர் கட்டுரைகளையும், அரசியல் திறனாய்வுக் கட்டுரைகளையும், ஒவ்வொரு தலைவர்களின்
முரண்பாடுகளையும் பகிரங்க மடல்களின் வடிவில் அறச்சீற்றத்துடன் வெளிப்படுத்திய கட்டுரைகளையும்
தமிழருவி மணியன் எழுதியதெல்லாம் நேரிய
அரசியலுக்கான பங்களிப்பு
இல்லையா?

கஜா புயலில் கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்ட போது ஒற்றை மனிதனாய்க் கல்லூரிகளில் பேசித்
துண்டேந்தி 16 லட்சம்
ரூபாய்க்குமேல் ஆனந்த
விகடன் அறக்கட்டளைக்கு
வழங்கிய தமிழருவி மணியனைப் பற்றி உங்களுக்கு என்னதான்
தெரியும்?

கலைஞரின் அழைப்பை
ஏற்றுத் திட்டக் குழுவில்
பணியாற்றியதும், வைகோவை ஆதரித்ததும்,
2014இல் நாடாளுமன்றத்
தேர்தலில் இரு திராவிட
கட்சிகளுக்கு எதிராகக்
கூட்டணியமைத்ததும்
விமர்சிக்கப்படலாம்.

ரஜினியைத் தேர்தல் களத்தில் முன் நிறுத்த முயன்றது கொச்சைப் படுத்தப்படலாம்.
ஆனால், இவற்றின் மூலம் பழியையும் பகையையும் அன்றி வேறெந்தப் பயனையும் தமிழருவி மணியன் பெற்றுவிடவில்லை.
சுய ஆதாயத்திற்காக எந்த நிலையிலும் செயற்பட்டவனில்லை தமிழருவி மணியன்.

உங்கள் இருவர் அகராதியில் அமைச்சர்களாக
வலம் வருவதும், சாதியைச் சொல்லிக் கட்டப் பஞ்சாயத்து செய்வதும்,
மதத்தைக் காட்டி மக்களைப் பிரிப்பதும், இனம், மொழி என்று
இளைஞர்களை ஏமாற்றுவதும்,கொள்கை
பேசிக் கொள்ளை
அடிப்பதும் மட்டுமே அரசியல் பங்களிப்பு
என்றால் அதைத் தமிழருவி மணியன் எந்நாளும் செயததில்லை என்பது
உண்மைதான்.

தமிழருவி மணியன்.

Tamilaruvi Manian reply to Ananda Vikatan

ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் படத்தில் அனிமல்ஸ்..; புத்தாண்டை வரவேற்கும் J படத்தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன்

ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் படத்தில் அனிமல்ஸ்..; புத்தாண்டை வரவேற்கும் J படத்தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெ ( J A MYSTIC)
இந்த புதிய திரைப்படத்தில்
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பளர் சங்கத் தேர்தலில் பெருவெற்றி
பெற்ற தயாரிப்பாளர்.

சங்க செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் அவர்கள் மாருதி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் 6வது தயாரிப்பாக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார்.

திரு ஞானசேகர் .(TOUCH SCEEN ENTERTAINENT) திரு எம்.எஸ். முரளி.. (ஓம் ஷீரி சாய் இன்வென்ஷன்ஸ்) .. இணை தயாரிப்பாளர்களாக இத்திரைப்படத்தில் பங்கேற்கிறார்கள்.

மனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவுள்ள இத்திரைப்படத்தில் கிஷோர் (பொல்லாதவன்) ஹாரிஷ் பெராடே (மெர்சல்) இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க ‘பொம்மு லக்‌ஷ்மி, நேகா, மற்றும் பலர் நடிக்கின்றனர்.

விலங்குகளும் பங்கேற்க உள்ள இத்திரைப்படம் ஒரு ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக உள்ளது.

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்குமார் இயக்கவுள்ளார்.

பாலா ஒளிப்பதிவில், இசை இயக்குனர் LV கணேஷ் இசையில், கலை இயக்கத்தை முருகன் ஏற்றுள்ளார்..

இப்படக் குழுவினர் அடுத்த கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இரண்டாம் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிடும் பணியில் படக்குழு விறுவிறுப்பாக செயல் பட்டு வருகிறது.

மேலும் இத்திரைப்படம் திரில்லர் பாணியில் வெளிவரவிருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய படமாக உள்ளது.

J A MYSTIC திரைப்படக்குழுவினர் புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்கின்றனர்.

மேலும் இத்திரைப்படம் புது விதமான அனுபவத்தை நிச்சயமாக தரும் என திரைப்படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

J movie producer Radha Krishnan welcomes this new year with At-Most Happiness

தயாரிப்பாளர் ‘ராக் போர்ட்’ முருகானந்தத்தின் அடுத்தடுத்த அதிரடி படைப்புகள்

தயாரிப்பாளர் ‘ராக் போர்ட்’ முருகானந்தத்தின் அடுத்தடுத்த அதிரடி படைப்புகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rockfort Murugananthamகொரோனாவின் கோரத்தாண்டவத்தால் “சினிமா” துறை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது… ஊரடங்கு முடிந்து வரும் நிலையில் படபிடிப்புகளும், நின்று போன படங்களும் துவங்கப்பட்டுள்ளன..

இந்நிலையில்
“ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் ” திரு. முருகானந்தம், 2021-2022 சினிமா துறைக்கு சிறந்த ஆண்டாக அமையும். என புதுப் படங்களுடன் புத்தாண்டை வரவேற்க களமிறங்கியுள்ளார்.

மேலும் தற்போது ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் கைவசம் “குருதியாட்டம்” படத்தை தயாராக வைத்துள்ளது, அதோடு “பிளாக் ஷீப்” ல் ஒரு படம் தயாராகி வருகிறது.

அது மட்டுமின்றி இயக்குனர் மிஷ்கின் அவர்களின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக பிசாசு2 தயாராகி வருகிறது.

ஏப்ரல் அல்லது மே ல் இது திறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைத்துறை கொரோனா காலத்தால் பெரும் அளவில் சோர்ந்து போயுள்ளது .

ஆனால் திரையரங்கங்கள் மீண்டும் திறக்கப்படும் போது, தேக்கி வைக்கப்பட்டுள்ள படைப்புகள் வெளியாகும், சிறந்த படங்கள், எதிர்பார்த்த படங்கள் வெளிவரும் போது சினிமா துறை மீண்டும் புத்துயிர் அடையும், என முருகானந்தம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Rockfort Muruganantham’s upcoming projects

வாழ வைத்த டாக்டர் தெய்வங்களுக்கு மட்டும் புத்தாண்டு வாழ்த்து..; ரசிக தெய்வங்களை மறந்துட்டீங்களே ரஜினி.!? (வீடியோ)

வாழ வைத்த டாக்டர் தெய்வங்களுக்கு மட்டும் புத்தாண்டு வாழ்த்து..; ரசிக தெய்வங்களை மறந்துட்டீங்களே ரஜினி.!? (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் அதாவது 2020 டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் ரத்த அழுத்தம் அதிகம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.

அங்கு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ரஜினி.

கொரோனா சூழலில் சிக்காமல் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என் டாக்டர்கள் அட்வைஸ் கொடுத்தனர்.

இதனையடுத்து … நீண்ட விளக்கம் கொடுத்து டிசம்பர் 29ஆம் தேதி அன்று… “தான் அரசியலுக்கு வரமாட்டேன்” என ட்விட்டரில் அறிவித்தார்.

இந்த நிலையில் ஹைதராபாத் அப்பல்லோ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி பேசியுள்ளார்.

அதில்… அப்பல்லோ ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கடவுள் அருளால் நன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்கள் சேவை சிறப்பானதாக இருந்தது” என தெரிவித்துள்ளார்.

எந்த மேடைகளில் ரஜினி ஏறினாலும்..”என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே” என்பார்.

ஆனால் தன்னை காப்பாற்றிய டாக்டர் தெய்வங்களுக்கு மட்டும் புத்தாண்டு வாழ்த்துக்களை சொன்ன ரஜினி… ரசிக தெய்வங்களுக்கும் மக்களுக்கும் ஒரு புத்தாண்டு வாழ்த்து ட்வீட் கூட போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா வருடமும் வாழ்த்து சொன்ன ரஜினி… இவ்வருடம் 2021 கட்சி ஆரம்பம் என்று கூறி பின்னர் அரசியல் கிடையாது என அறிவித்து ரசிகர்களை ஏமாற்றிவிட்டதால் வாழ்த்து சொல்லவில்லை என கூறப்படுகிறது.

Rajinikanth new year wishes creates controversy

கார் இன்சூரன்ஸ் கட்டியாச்சா.? நான்_கேட்பேன் கமல்… நெட்டிசன்கள் கிண்டல்.; மநீம விளக்கம்

கார் இன்சூரன்ஸ் கட்டியாச்சா.? நான்_கேட்பேன் கமல்… நெட்டிசன்கள் கிண்டல்.; மநீம விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆளும் கட்சிகள் மற்றும் ஆண்ட கட்சிகளை … “நான் கேட்பேன், நான் கேட்பேன்” என்ற பாணியில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தினம் மேடைகளில் பேசி வருகிறார்.

இதனிடையில் காரில் பிரச்சாரம் செய்து வரும் கமல் தனது காருக்கான இன்சூரன்ஸை இன்னும் கட்டவில்லை என தகவல் வெளியானது.

இதனால் “நான் கேட்பேன் கமல் சார்” என்று ட்விட்டரில் நெட்டிசன்கள் கிண்டலாக பதிவிட்டனர்.

தற்போது கமல் தரப்பில் ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்துள்ளனர்.

கமல் படத்தை பார்த்தால் குடும்பமே காலி..; ‘பிக்பாஸ்’ பார்ப்பவர்கள் கெட்டுப் போவார்கள்… – கமல் மீது பாய்ந்த CM பழனிச்சாமி

அதில் 2022 வரை கார் இன்சூரன்ஸ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MNM reacts on Kamal Haasan’s car insurance issue

Kamal Haasan

புத்தாண்டு விருந்தாக பிரசாந்த் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தியாகராஜன்

புத்தாண்டு விருந்தாக பிரசாந்த் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தியாகராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Andhagan2018ல் ஹிந்தியில் வெளியான படம் ‘அந்தாதுன்’.

ஸ்ரீராம் ராகவன் இயக்கிய இப்படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அப்பட ரீமேக் உரிமையை பெரும் தொகை கொடுத்து வாங்கியிருந்தார்.

பிரசாந்த் & சிம்ரன் & கார்த்திக் நடிக்கின்றனர்.

ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் இசையமைக்கிறார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக்கை 2021 ஜனவரி 1-ம் தேதி அறிவிக்கிறோம் என தெரிவித்திருந்தனர்.

அதன்படி இந்த படத்திற்கு ‘அந்தகன்’ என்று பெயரிட்டு அதன் டைட்டில் லுக்கை புத்தாண்டு விருந்தாக வெளியிட்டுள்ளனர்.

Andhadhun Tamil remake tilted as Andhagan

More Articles
Follows