ஆளாக்கி அழகு பார்த்த அன்னை..; வடிவேலு தாய் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்

ஆளாக்கி அழகு பார்த்த அன்னை..; வடிவேலு தாய் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில காலங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்து தற்போது மீண்டும் நாயகனாகவும் காமெடியனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார் வடிவேலு.

இந்த நிலையில் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்ற பாப்பா காலமானார்.

மதுரை மாவட்டம் விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார்.

நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் அவர்கள் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்.. நடிகர் வடிவேலுவின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். ‘வைகைப் புயல்’ திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tamil Nadu Chief Minister condoles death of Vadivelu’s mother

வடிவேலு என்ற காமெடி கலைஞனை பெற்றெடுத்த தாய் காலமானார்

வடிவேலு என்ற காமெடி கலைஞனை பெற்றெடுத்த தாய் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமா தொடங்கிய காலம் முதல் நாம் பல காமெடி நடிகர்களை பார்த்திருக்கிறோம்.

தற்போது டிஜிட்டல் உலகமயமாகிவிட்ட இந்த காலத்தில் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் டெக்னாலஜி பெருமளவில் வளர்ந்துள்ளது.

இதனால் நிறைய மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் வலம் வருகின்றன. இதற்கான நிறைய மொபைல் ஆப்ஸ் உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த மீம்ஸ் கிரியேட்டர்களின் கடவுளாக பார்க்கப்படுபவர் நடிகர் வடிவேலு.

அவரது காமெடி காட்சிகள் இன்றளவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில காலங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் நாயகனாகவும் காமெடியனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்ற பாப்பா காலமானார்.

மதுரை மாவட்டம் விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார்.

Vadivelus mother Sarojini Pappa passes away

அஜித் சூர்யா போல.?!.; சூப்பர் ஸ்டார் ரஜினி.? விஜய்.?.; ஆனந்த்ராஜ் அதிரடி பதில்

அஜித் சூர்யா போல.?!.; சூப்பர் ஸ்டார் ரஜினி.? விஜய்.?.; ஆனந்த்ராஜ் அதிரடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

இதில் நாயகியாக சிம்ரன் குப்தா என்பவர் நடிக்க முக்கிய வேடத்தில் ஆனந்தராஜ் நடிக்கிறார்.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வெங்கி என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தின் பூஜையை முடித்து பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு ஆனந்தராஜ் பதில் அளித்தார்.

அதில்.. ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் விஜய்க்கா? சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வியை கேட்டனர்.

அதற்கு ஆனந்தராஜ் பதில் அளிக்கும் போது…

மக்கள் திலகம் என்றால் அது எம்ஜிஆர் ஒருவர் தான்.. நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி ஒருவர் தான்.. தற்போது இருவரும் மறைந்து விட்டனர்.. அந்த பட்டம் அப்படியேதான் இருக்கிறது. அது ஒரு அடையாளம் ஆகிவிட்டது.

அந்த பட்டத்தை யாருக்கும் கொடுக்கவில்லை.. யாரும் எடுத்துக் கொள்ளவும் இல்லை.. அது போல தான் சூப்பர் ஸ்டார்.. தம்பி விஜய்யும் அதை விரும்ப மாட்டார் என்றே நம்புகிறேன்.

நண்பர் அஜித் தனக்கு பட்டம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.. அதுபோல சூர்யாவும் பட்டம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்..

மற்றவரின் பட்டத்தை தேடாமல் தங்களுக்கு ஓர் அடையாளத்தை அனைவரும் உருவாக்கிக் கொள்ளலாம்.” என ஆனந்தராஜ் தெரிவித்தார்.

Actor Anandaraj talks about super star title

ரிலீசாகி 100 நாள் ஓகே.; ரிலீசுக்கே 100 நாள்.; லைக்காவின் PS2 புதிய புரோமோ

ரிலீசாகி 100 நாள் ஓகே.; ரிலீசுக்கே 100 நாள்.; லைக்காவின் PS2 புதிய புரோமோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியானது.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்திருந்தது.

இந்த படத்தில் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி ஐஸ்வர்யாராய் த்ரிஷா சரத்குமார் பிரபு பார்த்திபன் ரகுமான் அசோக் செல்வன் ஆதேஷ் பாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்த படம் உலக அளவில் ரூ 400 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் PS2 இந்த ஆண்டு 2023 ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகயுள்ளது.

இந்த நிலையில் இன்று ஜனவரி 18ஆம் தேதி இந்த படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் உள்ளதாக ஒரு புதிய புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பொதுவாக ஒரு படம் ரிலீஸ் ஆகி 100 நாட்களைக் கடந்து ஓடி இருந்தால் 100வது நாள் என போஸ்டர் ஒட்டுவார்கள்.. வீடியோ வெளியிடுவார்கள்.. அது தொடர்பான ப்ரோமோவை வெளியிடுவார்கள்.

ஆனால் PS2 படம் ரிலீசாக 100 நாட்கள் இருப்பதை (100 DAYS TO GO) ஒரு புதிய ப்ரோமோ வீடியோவாக லைக்கா வெளியிட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The throne. The vengeance. The love. The war. Witness it all, in 100 days!

Mark your calendars – #PS2 releasing worldwide on April 28th ⚔

#PonniyinSelvan #CholasAreBack #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial

https://t.co/G0mgGj8RUO

தனுஷின் 50வது படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்.; மீண்டும் வெற்றி கூட்டணி

தனுஷின் 50வது படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்.; மீண்டும் வெற்றி கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’.

இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு அடுத்த மாதம் பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

அந்த படம் சூப்பர் ஹிட்டானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது மீண்டும் சன் பிக்சர்ஸ் – தனுஷ் கூட்டணி இணையவுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

Dhanush 50 to be produced by sun pictures

சென்னை திரும்பும் ‘பிச்சைக்காரன் 2’ படக்குழு.; விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி் எப்படி இருக்கிறார்.?

சென்னை திரும்பும் ‘பிச்சைக்காரன் 2’ படக்குழு.; விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி் எப்படி இருக்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாபெரும் வெற்றிப் பெற்ற ‘பிச்சைக்காரன்’ படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கி தயாரித்து இசையமைத்து நாயகனாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

நாயகியாக காவ்யா தாப்பர் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கான பாடல் காட்சியை மலேசியா லங்காவி தீவில் படமாக்கும் போது பெரும் விபத்து ஏற்ப்பட்டது.

இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

விபத்தானது… “கடலுக்குள் ‘ஜெட் ஸ்கை’ எனப்படும் பைக்கில் நாயகன் நாயகி செல்லும்போது எதிர்பாராத விதமாக மற்றொரு, ‘ஜெட் ஸ்கை’ வாகனத்தின்மீது, பயங்கரமாக மோதியது.

இதில் நாயகி காயமின்றி தப்பிக்க விஜய் ஆண்டனிக்கு பெரும் காயம் ஏற்பட்டது.

எனவே உடனடியாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது மனைவி பாத்திமா உள்ளிட்டோர் நேற்று கோலாலம்பூர் சென்றிருந்த நிலையில் தற்போது மேற் சிகிச்சைக்காக சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் ‘பிச்சைக்காரன் 2’ படக்குழுவினரும் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.

‘Pichaikaran 2’ film crew returns to Chennai.; How is Vijay Antony?

More Articles
Follows