ஜோதிகாவின் கோயில் பேச்சுக்கு SV சேகர் & திரௌபதி இயக்குனர் எதிர்ப்பு

ஜோதிகாவின் கோயில் பேச்சுக்கு SV சேகர் & திரௌபதி இயக்குனர் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SV Sekar and Mohan condemn Jyothikas Controversy Speech about Templeஓரிரு தினங்களுக்கு முன் விருது விழா நிகழ்ச்சி தனியார் டிவியில் ஒளிப்பரப்பானது. அதில் நடிகை ஜோதிகா பேசினார்.

ஜோதிகா பேசியதாவது,… தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் புகழ்பெற்றது, கண்டிப்பாக பார்க்கனும் என்றார்கள். ஏற்கெனவே பார்த்துள்ளேன்.

உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்கு பராமரித்து வருகிறார்கள்.

அடுத்த நாள் என் பட சூட்டிங் மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை என் வாயால் சொல்ல முடியாது.

எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். ‘ராட்சசி’ படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார்.

கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள்.

தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம்” என பேசினார் ஜோதிகா.

ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு நடிகர் எஸ்.வி.சேகர் தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

ஜோதிகா 100 % மெச்சூரிட்டி இல்லாத பேச்சு .கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று.

இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம். உங்கள் மாமனாரிடம் கேளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Jothika 100% immatured speech.கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று. இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம்.

கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம். Ask Ur FATHER IN LAW
இவரை தொடர்ந்து சமீபத்தில் வெளியான திரௌபதி பட இயக்குனர் மோகனும் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில்… அருள்மொழி வர்மன் ஒரு அதிசய பிறவி.. மாமன்னன்.. ராஜராஜ சோழன்.. அவர் தகுதிக்கு ஏற்றாற்போல் கருத்துகளை பேசுங்கள்.. யார் நினைத்தாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இவரின் புகழை, இவர் வழிபட்ட ஈசனை, இவர் உருவாக்கிய இந்த அதிசயத்தை அசைத்து கூட பார்க்க முடியாது.. இவரை தொட்டால் கெடுவார்கள்.. என பதிவிட்டுள்ளார்.

SV Sekar and Mohan condemn Jyothikas Controversy Speech about Temple

சத்தியம் டிவி ஊழியர்களில் 27 பேருக்கு கொரோனா..; டிவி சேனல் மூடல்

சத்தியம் டிவி ஊழியர்களில் 27 பேருக்கு கொரோனா..; டிவி சேனல் மூடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

27 staffs of Sathiyam TV channel test Covid positiveமருத்துவர்களை தாக்கிய கொரோனா தொற்று தற்போது பத்திரிகையாளர்கள் அதிகளவில் தாக்கத் தொடங்கியுள்ளது.

இவர்கள் கொரோனா தொற்று நோயாளிகளிடம் குறைந்த இடைவெளியில் தொடர்பில் இருந்தத்தால் வைரஸ் தாக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தினகரன் நாளிதழ், சத்தியம் டிவி, பாலிமர் டிவி செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் தினசரி 50 பேருக்கு அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சத்தியம் டிவி அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

இதில், மேலும் 27 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினர்களையும் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் தொலைக்காட்சி நிறுவனத்தை மூட உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிறுவனத்தை சுகாதாரத்துறை ஊழியர்கள் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கூடுதல் தகவல்… : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்கள், கொரோனாவால் உயிரிழந்தால் ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

27 staffs of Sathiyam TV channel test Covid positive

கொரோனா நோய் பரப்பிய சீனக்காரன் சிறந்தவனே… – டைரக்டர் பேரரசு

கொரோனா நோய் பரப்பிய சீனக்காரன் சிறந்தவனே… – டைரக்டர் பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Perarasu talks about Dr Simon burial and Corona சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரது உடலை மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க மறுத்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளை தாக்கினர்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் பேரரசு அவர்களும் தன் கண்டனத்தை கவிதையாக தெரிவித்துள்ளார்.

மனித வைரஸ்
————-
இறந்து
தெய்வமானவர்களை
அடக்கம் செய்ய,
இறக்காத
பிணங்கள்
மறுக்கின்றன!

மனசாட்சியை
புதைத்துவிட்டு
மருத்துவரை
புதைக்க,
மனித நோய்கள்
தடுக்கின்றன!

இதயத்தில்
தொற்றுநோய் உள்ளவன்
சொல்கிறான்
பிரேதத்தில்
தொற்று நோயென்று!

நன்றிகெட்ட
உன்னைவிட
நோய் பரப்பிய
சீனக்காரன்
சிறந்தவனே!

கோயில்
மூடப்பட்டுவிட்டது!
தெய்வங்கள்
அடைபட்டுவிட்டது!

இன்று
மருத்துவனே
நடமாடும் தெய்வம்!
அந்த தெய்வத்தையும்
கல்லாக்கி விடாதடா
கலிகால மனிதா!

இப்படி
நன்றிகெட்டு
வாழ்வதற்கு
கொரோனா வந்து
சாவதுமேல்!
*பேரரசு

Director Perarasu talks about Dr Simon burial and Corona

கீழ்த்தரமான காலத்தில் வாழ்கிறோம்.; டாக்டர் உடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் பற்றி ராஜ்கிரண்

கீழ்த்தரமான காலத்தில் வாழ்கிறோம்.; டாக்டர் உடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் பற்றி ராஜ்கிரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Rajkiran condemns disruption of Chennai Dr Simons funeral சென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் டாக்டரின் உடலை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினர் மக்கள்.

அந்த ஓட்டுனரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நடிகர் ராஜ்கிரண் தன் கண்டத்தை தெரிவித்துள்ளார்.

எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில்நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்கும் பொழுது, மிகுந்த வேதனையும், மன உளைச்சலும் ஏற்படுகிறது… தம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர், யாரைப்பற்றியும் கவலைப்படாமல், “தான் படித்தது மக்களை காப்பாற்றுவதற்கே” என்ற ஒரே லட்சியத்தோடு, சமூகப்பொறுப்புணர்வோடு, தம் உயிரையும் பணயம் வைக்கும் புனிதமான மருத்துவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இது தான், என்றால், இஸ்லாமியனாகப்பிறந்த ஒரே காரணத்தால், வெறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த ஒரு மாற்றுத்திறனாளிச் சிறுவனின் உடலை, புதைக்க விடமாட்டோம் என்று அடாவடி பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்தது தான், இந்த நாட்டில் சட்டம், என்றால், உலக நாடுகளின் பார்வையில், நம் நாடும், தேசமும் மிகக்கேவலப்பட்டு நிற்கும்.

இதைப் போன்ற கொடுமைகளுக்கு, கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்காத ஆட்சியாளார்கள், மிகவும் ஈனப்பிறவிகளாக கருதப்படுவர்..” என தெரிவித்துள்ளார் நடிகர் ராஜ்கிரண்.

Actor Rajkiran condemns disruption of Chennai Dr Simons funeral

தமிழ்ச் சமூக தலைகுனிவு.; Dr சைமன் குடும்பத்தினரிடம் வருத்தம் தெரிவித்த கார்த்தி

தமிழ்ச் சமூக தலைகுனிவு.; Dr சைமன் குடும்பத்தினரிடம் வருத்தம் தெரிவித்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi condemns disruption of Dr Simons funeralசென்னை தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் டாக்டரின் உடலை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினர் மக்கள்.

அந்த ஓட்டுனரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நடிகர் கார்த்தி தன் கூறியதாவது…

Actor Karthi

டாக்டர் சைமன் அவர்களின் இறுதிச் சடங்கை இடையூறு செய்தது தமிழ்ச் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். திரு. சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்!

Karthi condemns disruption of Dr Simons funeral

ரீமேக் படத்தில் விஜய் மகனை ஹீரோவாக்கும் விஜய்சேதுபதி.?

ரீமேக் படத்தில் விஜய் மகனை ஹீரோவாக்கும் விஜய்சேதுபதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi plans to produce Vijay son Sanjays debut movieசிரஞ்சீவியின் சகோதரி மகன் வ்வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடித்துள்ள படம் உப்பெனா.

இதில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை புச்சி பாபு சனா என்பவர் இயக்கியுள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ரங்கஸ்தலம் பட இயக்குநர் சுகுமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படம் இன்னும் தெலுங்கில் வெளியாகவில்ல்லை.

ஆனால் அதற்குள் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.

தமிழ் ரீமேக்கில் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை ஹீரோவாக முயற்சித்து வருகிறாராம். இது தொடர்பாக விஜய்யிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

புச்சி பாபுவே தமிழிலும் இயக்கவிருக்கிறாராம்.

கனடா நாட்டில் ஃபிலிம் மேக்கிங் படித்து வருகிறார் விஜய் மகன் சஞ்சய்.

இவரே சில குறும்படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தகக்து.

Vijay Sethupathi plans to produce Vijay son Sanjays debut movie

More Articles
Follows