தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘லியோ’ படத்தை அடுத்து ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் இசையமைக்க வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.
இந்தப் படத்தில் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடிக்க உள்ளார். அப்பா விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும் மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட்டுக்காக சமீபத்தில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் அமெரிக்கா சென்றிருந்தனர்.
இந்த நிலையில் அங்கு உள்ள பிரபல தியேட்டரில் ‘ஈக்யுலைசர் 3’ என்ற படத்தை பார்த்துள்ளனர்.
அதில் டென்சில் வாசிங்டன் திரையில் தோன்றிய போது விஜய் ஒரு ரசிகராகவே மாறிவிட்டார். அப்போது விஜய் எழுந்து நின்று கைதட்டிய போட்டோவை இணையத்தில் பகிர்ந்து உள்ளார் வெங்கட் பிரபு.
இது தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
Actor Vijays fan boy moment at America