இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் அயன்2 அப்டேட்ஸ்

இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் அயன்2 அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ayan suriya posterகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா தமன்னா இணைந்து நடித்த படம் அயன்.

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் சார்ப்பில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இப்படத்தின் வசனங்களை சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் இணைந்து சுபா என்ற பெயரில் எழுதியிருந்தனர்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் அயன்2 படம் உருவாக வாய்ப்புள்ளதாக இவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

Suriya KV Anand combo Ayan movie sequel updates

திமுகவை ஆதரிக்கிறாரா..? உளறியவர்களுக்கு உலகநாயகன் பதிலடி

திமுகவை ஆதரிக்கிறாரா..? உளறியவர்களுக்கு உலகநாயகன் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I am against corruption not support any political party says Kamalhassanஅதிமுக ஆட்சியில் நடைபெற்று வரும் தமிழக அரசின் ஊழல்களை கமல் விமர்சித்திருந்தார்.

எனவே கமல் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தன் ட்விட்டர் பக்கத்தில் கமல் பதிவிட்டுள்ளதாவது…

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
என் பிரகடணத்தில் பிழையிருக்கிறதாம். எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி நட்பு குடும்பபேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்.

மேலும் புரட்சியாளர்கள் தோல்வியையும் மரணத்தையும் கண்டு பயப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

I am against corruption not support any political party says Kamalhassan

அடுத்த படத்தை தலைப்புடன் அறிவித்தார் கமல்ஹாசன்

அடுத்த படத்தை தலைப்புடன் அறிவித்தார் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan next movie titled Thalaivan Irukkiraanபிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் ட்விட்டர் பதிவுகள் என பிஸியாக ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் தன் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன்.

தற்போது சபாஷ் நாயுடு என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்து வருகிறார்.

இப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் உருவாகிவருகிறது.

இதனிடையே விஸ்வரூபம்2 படத்தின் பணிகளையும் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் தலைவன் இருக்கிறான் என்று தலைப்பிடப்பட்ட தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

தலைவன் இருக்கிறான் என்ற டைட்டில் இவரது ராஜ்கமல் நிறுவனம் சார்பில் பல ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்ட தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Kamalhassan next movie titled Thalaivan Irukkiraan

கதிருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்-சமந்தா-நிவின்பாலி

கதிருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்-சமந்தா-நிவின்பாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ssnகிருமி படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பாப்புலர் ஆனவர் கதிர்.

மேலும் சிகை என்ற படத்தில் பெண் வேடமிட்டு நடித்து வருகிறார். இப்படம் ஆகஸ்ட்டில் வெளியாகும் என அவரே தெரிவித்து இருந்தார்.

அண்மையில் வெளியான விக்ரம் வேதா படத்தில் விஜய்சேதுபதியின் தம்பியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் SSN என்ற பெயரில் சில போஸ்டர்கள் இணையத்தில் உலா வந்துக் கொண்டிருந்தன.

தற்போது அதுபற்றிய தகவல்கள் வந்துள்ளது. ஆனால் முழுமையான தகவல்கள் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதில் கதிருடன் சிவகார்த்திகேயன், சமந்தா, நிவின்பாலி ஆகியோர் கை கோர்க்கின்றனர் எனவும் விளம்பரங்களில் தெரிவித்துள்ளனர்.

ஜஸ்ட் 7 மணி நேரம் காத்திருப்போம். என்னவென்று அறிய..?

Sivakarthikeyan Samanth Nivin Pauly join hands for Kathir

மீசைய முறுக்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்

மீசைய முறுக்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Meesaya Murukku fame Hiphop Aadhis next movie updatesதன் இசை ஆல்பங்களால் யூடிப்பில் ஹிட் அடித்து பிரபலமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

அதன் பின்னர் ஆம்பள, தனி ஒருவன் படங்களில் இசைமைத்துத்தார்.

தற்போது அவரே நடிகர், இயக்குனர், பாடல் ஆசிரியர், வசனகர்த்தா என் முக்கிய பொறுப்புகளை எடுத்துக் கொண்டு மீசைய முறுக்கு படத்தை இயக்கினார்.

முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததில் உற்சாகத்தில் இருக்கிறது ஆதி அண்ட் டீம்.

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

மீசைய முறுக்கு படத்தை தயாரித்த சுந்தர்.சி நிறுவனமான ஆவ்னி மூவீஸே இந்தப் படத்தை தயாரிக்கிறதாம்.

Meesaya Murukku fame Hiphop Aadhis next movie updates

வரிவிலக்கு அளிக்க லஞ்சம்; வீட்டுக்கு லஞ்ச் கேட்கிறாங்க… – கே. ராஜன்

வரிவிலக்கு அளிக்க லஞ்சம்; வீட்டுக்கு லஞ்ச் கேட்கிறாங்க… – கே. ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer cum Actor K Rajan slams TN Govt Ministers and Officialsரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துக் கொண்ட தயாரிப்பாளரும் நடிகருமான கே. ராஜன் பேசியதாவது…

“சினிமா மோசமான சூழ்நிலையை அடைந்துள்ளது. தயாரிப்பாளர்கள் பெப்சி தொழிலாளர்களால் அவதிப்படுகிறார்கள்.

பெப்சி தொழிலாளர்கள் உழைக்கும் தோழர்கள்தான். அவர்களும் நன்றாக இருக்க வேண்டும் நாங்களும் நன்றாக இருக்க வேண்டும்.

ஆனால் தற்போது டிராவலிங் பேட்டா கேட்கிறார்கள். அதுவும் 24 மணி நேரம் டிராவல் செய்து சூட்டிங் வந்தால் டபுள் பேட்டா கேட்கிறார்கள்.

அதுவும் ஒரே ஒருவர் இப்படி செய்கிறார். அந்த மீட்டிங் போய்விட்டு வந்தேன். அதான் இங்கு வர நேரம் ஆகிவிட்டது.

இந்த விழாவுக்கு படத்தின் நாயகி இனியா வரவில்லை என்றார்கள். சில நடிகர்கள் நடிகைகள் இப்படிதான் செய்கிறார்கள். அவர்களுக்கு திமிரு.

அதான் தங்கள் படவிழாவுக்கு கூட வராமல் இருக்கிறார்கள். ஒரு நாள் கால்ஷீட் கூட கொடுக்க வேண்டாம். 3 மணி நேரம் வந்தால் போதும்.

எம்ஜிஆர். கலைஞர், ஜெயல்லிதா எல்லாரும் சினிமா துறையை சார்ந்தவர்கள். தமிழகத்தில் ஆட்சி செய்திருக்கிறார்கள்.

ஆனால் கேளிக்கை வரி கொடுக்க, ரூ. 5 லட்சம் லஞ்சமாக கேட்கிறார்கள். சரி அதையும் கொடுத்து தொலைக்கிறோம்.

படம் பார்க்க வந்தால், அவர்கள் வீட்டுக்கு கூட பார்சல் சாப்பாடு வாங்கி செல்கிறார்கள்.

எல்லா மாநிலத்திலும் கேளிக்கை வரியில்லை. அங்கே சினிமா நன்றாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி.

இங்கே அரசியல்வாதிகள் லஞ்சம் பேர்வழிகள்.

அம்மா ஆட்சி என்கிறார்கள். ஆனால் பணத்தாசை பிடித்து இருக்கிறார்கள்” என கடுமையாக பேசினார்.

Producer cum Actor K Rajan slams TN Govt Ministers and Officials

Sadhura-Adi-3500-Audio-Launch-Stills 1

More Articles
Follows