லைகா தயாரிப்பில் இணைந்த சூர்யா-கேவி.ஆனந்த்-ஹாரிஸ்

லைகா தயாரிப்பில் இணைந்த சூர்யா-கேவி.ஆனந்த்-ஹாரிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya KV Anand Harris Jayaraj teams up for Lyca Productionசூர்யா நடித்த அயன் மற்றும் மாற்றான் ஆகிய படங்களை இயக்கியவர் கே. வி.ஆனந்த்.

இந்த இரு படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையைமத்திருந்தார்.

இப்போது இந்த மூவரும் ஒரு புதிய படத்திற்காக இணையவுள்ளனர்.

இப்படத்தை பிரபல நிறுவனமான லைக்கா தயாரிக்கிறது.

இப்படத்தின் வசனங்களை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதவிருக்கிறார்.

கேவ்மைக் யு ஆரி ஒளிப்பதிவு செய்த, கிரண் கலை பணிகளை கவனிக்கிறார்.

இது குறித்த தகவல்களை லைகா நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Suriya KV Anand Harris Jayaraj teams up for Lyca Production

தன் மகளுக்கு பர்கர்-பீட்சா கூட வாங்கி கொடுக்காத சிவகார்த்திகேயன்; ஏன்?

தன் மகளுக்கு பர்கர்-பீட்சா கூட வாங்கி கொடுக்காத சிவகார்த்திகேயன்; ஏன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan wont buy Pizza for his daughter Aaradhanaதமிழக விவசாயிகள் பிரச்சினைக்காக நடிகர்கள் ஜிவி. பிரகாஷ், ஆரி, அபி சரவணன் ஆகியோர் தங்களால் இயன்ற வரை போராடி வருகின்றனர்.

அண்மையில் விவசாயிகள் சம்பந்தமாக ஒரு விழாவினை நடிகர் ஆரி நடத்தினார்.

அதில் கலந்துக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது…

“இங்கே விவசாயம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

எனவே எனக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

என் வீட்டில் கொய்யா, சப்போட்டா, வாழை போன்ற மரங்களை வளர்த்து வருகிறேன்.

வருங்காலத்தில் விவசாயம் செய்ய முற்படுவேன்.” என்று பேசினார்.

வேலைக்காரன் படத்தின் போது இனி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என பகிரங்கமாக தெரிவித்தார் சிவகார்த்திகேயன்.

குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உணவுகளை வாங்கி கொடுக்காதீர்கள் எனவும் கூறியிருந்தார்.

அதனை தன் வீட்டிலும் கடைப்பிடித்து வருகிறார்.

இதுவரை தனது மகள் ஆராதனாவுக்கு சிக்கன் பர்கர், பீட்சா போன்ற உணவுகளை அவர் வாங்கி கொடுத்தது இல்லையாம்.

Sivakarthikeyan wont buy Pizza for his daughter Aaradhana

விக்ரம் மகனுடன் சுபுலட்சுமி நடிப்பது உண்மையா? கௌதமி விளக்கம்

விக்ரம் மகனுடன் சுபுலட்சுமி நடிப்பது உண்மையா? கௌதமி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gauthami clarifies her daughter Subbulakshmi in Varma movieதெலுங்கில் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் பாலா.

இப்படத்திற்கு வர்மா என பெயரிட்டு, நடிகர் விக்ரம் மகன் துருவ் அவர்களை இதன் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகம் செய்கிறார்.

துருவ் ஜோடியாக கவுதமியின் மகள் சுபுலட்சுமி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது.

தற்போது அந்த தகவல் குறித்து கவுதமி தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில்…

எனது மகள் சுபுலட்சுமி, சினிமாவில் அறிமுகமாகவதாக வந்த செய்திகள் உண்மை இல்லை. அவளது மேற்படிப்பில் பிசியாகிவிட்டார். எனவே தற்போது படங்களில் நடிக்கவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி” இவ்வாறு கௌதமி பதிவிட்டுள்ளார்.

Gauthami clarifies her daughter Subbulakshmi in Varma movie

Taken aback to see news about my daughter’s acting debut. Subhalaxmi is committed to her studies and has no plans for acting now. Thank you all for your blessings on her.

ரிலீஸ் இல்லை; VPF பிரச்னை; என்னதான் நடக்கிறது.? எஸ்ஆர். பிரபு சொல்லும் நிஜம்

ரிலீஸ் இல்லை; VPF பிரச்னை; என்னதான் நடக்கிறது.? எஸ்ஆர். பிரபு சொல்லும் நிஜம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer SR Prabu reveals Whats happening in Tamil Cinema in VPF issueகடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் எந்தவொரு புதிய படமும் ரிலீஸ் ஆகவில்லை.

டிஜிட்டல் புரொஜக்டர் சம்பந்தப்பட்ட VPF கட்டணத்தை இனி தயாரிப்பாளர்கள் ஏற்க மாட்டோம் என தயாரிப்பாளர்கள் அறிவித்துவிட்டனர்.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள தியேட்டர்களும் காலவரையின்றி மூடப்பட உள்ளன.

மேலும் மார்ச் 16ஆம் தேதி எந்த படத்தின் சூட்டிங்கையும் நடத்தக்கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஒட்டு மொத்த சினிமா உலகமே இதனால் ஸ்தம்பித்து நிற்கிறது.

இந்நிலையில் திரைப்பட வெளியீடு நிறுத்தம் சம்பந்தமாக பொறுமை/ ஆர்வம் கொண்டவர்களுக்காக தயாரிப்பாளர் S.R.பிரபு அவர்களின் கருத்து பதிவு:

திரையரங்குகள்:
திரையரங்குகள் ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒரு திரையரங்கம் என்பது எப்படி இருக்கைகள், கழிப்பறை, parking மற்றும் இதர வசதிகளை உள்ளடக்கியதோ அதே போல் projector வசதியும் அதனுள்ளயே அடங்கும்.

Film projector – கள் மூலம் படங்கள் ஒளிபரப்பப்பட்ட வரை எந்த குளறுபடிகளும் இல்லாமல் இருந்தது. ஒரு திரையரங்கத்திற்கு டிக்கெட் விலையில் ஒரு குறிப்பிட்ட பங்கும் அதனுடன் சேர்த்து விளம்பரம், பார்க்கிங் மற்றும் கேன்டீன் வருவாயும் வந்துகொண்டிருக்கிறது.

Analog Format முறை :
ஒரு படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கும் பொழுது ஒரு area உரிமம் வாங்கும் விநியோகஸ்தர் அவர் வெளியிடும் திரையரங்க எண்ணிக்கைக்கு தகுந்தவாறு print copy -கள் (படப்பெட்டி) வாங்கி வெளியிடுவார்.
அந்த செலவுகள் விநியோக உரிமத்துடன் கூடுதலாக ஒரு print – ற்கு சுமார் ரூ. 40000 ஆக இருந்தது. தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் உள்ள புரிதலில் இந்த செலவு இருவரில் எவரேனும் ஒருவர் அல்லது இருவருக்கும் பொதுவாகவும் இருந்து வந்தது.

திரையரங்கத்திற்கு படம் உறுதி ஆனவுடன் பெட்டி அனுப்பி வைக்கப்படும். அதை திரையரங்க operator திரையரங்கிற்கு சொந்தமான projector – ல் படத்தை ஓட்டுவார்.

Film சார்ந்த செலவுகள் :
இந்த தொழில் ஓரளவு சுமூகமாக நடந்து வந்த ஒரு கட்டத்தில் film விலை அதிகரிக்க ஒரு print ரூ. 50000 -ஐ தாண்ட ஆரம்பித்தது, இதனால் 100 திரையரங்கில் ஒரு படத்தை வெளியிட ரூ. 50 லட்சம் வரை செல்லானது.

மேலும் ஒரு படத்திற்கு சுமார் ரூ. 50 லட்சம் film camera – வில் படம்பிடிக்க ( film cost +Negative development ) செலவானது. படம் எடுப்பதும் அதிக முதலீடு கொண்ட ஒரு துறையாக இருந்து வந்தது.

Digital Format அறிமுகம்:
இந்நிலையில் digital projection முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் இதற்கு Film camera மூலம் எடுக்கப்பட்ட படங்கள் film negative -ல் இருந்து digital ஆக scan செய்து மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. Digital camera வந்தவுடன் film cost / development cost குறைந்து அனைவரும் digital முறையே விரும்ப ஆரம்பித்தனர்.

இதில் ஒரு print – ற்கு வெறும் ரூ. 25000 மட்டுமே செல்லானது. தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் சந்தோசமாக Digital -ஐ விரும்ப ஆரம்பித்தனர். முற்றிலும் Digital மயம் ஆனது. திரைப்படம் எடுப்பதற்கு ஆகும் செலவு குறைந்து நிறைய தயாரிப்பாளர்கள் உருவானார்கள்.

நிற்க!

முன்பு தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் செய்த செலவை விட இன்று குறைவாக தானே செலவாகிறது?
டிஜிட்டல் டெக்னாலஜியால் நிறைய படங்கள் தயாரிக்கப்பட்டும் / வெளியிடப்பட்டும் வருகிறதே?
பின் எதற்கு இந்த போராட்டம்?

பொறுமையுடன் கீழே படியுங்கள். இதில் மறைந்து உள்ள முழு பூசணிக்காயை அடையாளம் காட்டுகிறேன்!

தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் /திரையரங்க உரிமையாளர் ஆகிய இந்த மூன்று வர்க்கத்தினரின் அறியாமை DIgital வசதி வழங்க வந்த சில நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு இந்த 10 வருடத்தில் சுமார் 1500 கோடிகளை முதலீடு செய்தும், 90% திரையரங்குகள் இன்று சொந்த projector இல்லாமலும், காலம்காலமாக சம்பாதித்து வந்த விளம்பர வருவாயை இழந்தும் உள்ளனர்.

இதை திரைத்துறையில் சமீபத்தில் நடந்த ஒரு மிகப்பெரும் ஊழலாகவே நான் பார்க்கிறேன்.

VPF – Visual Projection Fee :
Digital தான் வருங்காலத்திற்கான தொழில்நுட்பம் என்பதால் வெளிநாடுகளில் sony போன்ற பன்னாட்டு தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனங்கள் திரையரங்குகளை Digital முறைக்கு மாற்ற கூறிய பொழுது ஒரு திரையரங்கத்திற்கு டிஜிட்டல் ப்ரொஜெக்டர் மற்றும் அதன் player அடங்கிய server இவற்றை install செய்ய சுமார் 20 லட்சம் முதல் 60 லட்சம் வரை செலவானது.

இதனால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் செலவுகளை குறைக்க நாங்கள் எதற்கு இவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என திரையரங்குகள் மறுத்தனர்.

இந்த சிக்கலை தீர்க்க டிஜிட்டல் உபகரண நிறுவனங்கள் மற்றும் திரை துறையினர் ஒரு வழி கண்டனர். அப்பொழுது உருவானது தான் VPF ( Visual Projection Fee ) முறை.

அதாவது இந்த Projector மற்றும் server – ஐ Digital Service Providers நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டு ஒரு படத்திற்கு சுமார் ரூ.20000 வீதம் 5 வருடங்களுக்கு படம் வெளியிடுபவரிடம் பெற்றுக்கொள்வது எனவும் இந்த equipments + process செலவுகள் மீட்டெடுத்த பின்னர் projector அந்த திரையரங்கத்திற்கு சொந்தம் எனவும், Digital Service Providers அதற்கு பின்னர் வெறும் Service Fee மட்டும் பெற்றுக்கொள்வது எனவும் உலகளாவிய முறையில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த முறையில் உலகம் முழுக்க 2018 -க்குப் பின் VPF இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் தான் இங்கு 5 வருடத்திற்கு மேல் ஆன திரையரங்குகளுக்கு ஆங்கில படங்களுக்கு vpf இல்லை.

வெறும் service charges மட்டும் வசூலிக்கப்படுகிறது. இதில் ஏமாந்தது வழக்கம் போல் இந்தியர்கள் தான்.

இந்திய திரையுலகம் ஏமாந்த முறை:

இங்கு Digital மாற்றம் ஆரம்பித்த காலத்தில் ஒரு சில திரையரங்குகள் Digital Projector -ஐ சொந்தமாக வாங்கினர்.

திரையரங்குகள் projector வாங்க தயக்கம் காட்டிய பொழுது, DSP நிறுவனங்கள் நாங்களே உங்களுக்கு projector இலவசமாக தருகிறோம் என்றனர்.

மேலும் print செலவில் பாதி செலவு தான் ஆகும் என்ற பொழுது, அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க இந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டால் போதும், கூடவே விளம்பர வருவாயை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என்றனர்.

projector பணம் வசூல் ஆனவுடன் விளம்பர வருவாயை நாம் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் சொல்லப்பட்டது. அப்பொழுது விளம்பர வருவாய் அதிகம் இல்லாத காலத்தில் திரையரங்கு உரிமையாளருக்கு அது ஒன்றும் பெரியதாக தெரியவில்லை.

இன்றைய சூழ்நிலையில் ஒரு projector திரையரங்கில் பொருத்தப்பட்டு அதற்கான முதலீடு VPF மற்றும் விளம்பர வருவாய் மூலம் ஈட்டப்பட்டு 10 வருடங்கள் கடந்தும் இன்னும் VPF முன்பை விட அதிகம் கேட்கப்படுகிறது.

தயாரிப்பாளர் / விநியோகஸ்தர், இந்நேரம் projector சொந்தம் ஆகி இருக்க வேண்டுமே என கேட்க ஆரம்பித்த பின்னர் தான் அனைவருக்கும் பேரதிர்ச்சியான செய்தி வருகிறது.

இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் வெறும் சேவை ஒப்பந்தகள் உங்களுக்கு இந்த projector எதுவும் சொந்தம் இல்லை.

நீங்கள் வேண்டுமானால் வேறு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் 6 மாதத்தில் இருந்து 1.5 வருடம் முன்பாக இதை தெரிவிக்க வேண்டும், ஒப்பந்தம் முறித்தால் நீங்கள் கையெழுத்திட்ட காலம் முடியும் வரை வருடம் 10 லட்சம் வரை ( E- Cinema projector விலையே வெறும் 6 லட்சம் தான் ) எங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்பன போன்ற கழுத்தை நெறிக்கும் ஒப்பந்தங்களில் திரையரங்கு உரிமையாளர்கள் கையெழுத்திட்டு இருப்பது வெளிச்சம் ஆகி உள்ளது.

நிறைய பேரது ஒப்பந்தங்கள் முடிந்த பொழுது வேறு பழைய / புது ப்ரொஜெக்டர், பல்பு, சவுண்ட் சிஸ்டம் என ஏதாவது ஒன்று இலவசமாக தரப்பட்டு அவர்களிடம் முற்றிலும் ஒருதலைப் பட்சமான ஒப்பந்தங்களில் திரையரங்கு உரிமையாளர்கள் கையெழுத்து போட்டு உள்ளனர்.

தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பல முறை VPF பற்றிய விஷயங்களை பேச முற்படும் போதெல்லாம் அசிங்கப்பட்டதற்கு அவர்கள் போட்டுள்ள இந்த கிடுக்குப்புடி ஒப்பந்தங்கள் தான் காரணம்.

இந்த ஏமாற்று விஷயங்கள் தெரிந்த சில திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்த்து கேட்ட பொழுதெல்லாம் அவர்களுக்கு தயாரிப்பாளர் , விநியோகஸ்தர்களிடம் வசூலிக்கும் VPF அல்லது விளம்பரத்தில் பங்கீடு அதிகமாக தந்தோ, இன்னும் hitech உபகரணங்கள் இலவசமாக தந்தோ வாயடைக்கப்பட்டனர்.

அதுமட்டும் இல்லாமல் முந்தைய நஷ்டங்களால், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் மீதுள்ள கோபத்தினாலும் சில முக்கிய திரையரங்கு உரிமையாளர்கள் DSP -க்கு எதிராக பேசாமல் மௌனம் காக்கின்றனர்.

இவர்கள் தவிர்த்து பல திரையரங்கு உரிமையாளர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் குழம்பி நிற்கின்றனர்.

ஒரு தொழில்நுட்ப மாற்றம் நடைபெற தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் முதலீடு செய்தது இன்று திரை துறையினர் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அடிமையாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இரண்டு மணி நேர படம் பார்க்க 20 நிமிடங்கள் விளம்பரம் மக்கள் பார்க்க வேண்டியுள்ளது. இது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தின் விளம்பரம் அவர்கள் படத்துடன் இணைக்கவே காசு கொடுத்து அதுவும் இவர்கள் நினைத்தால் தான் போட முடியும் எனும் கொடூரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

விநியோகஸ்தர் சங்கம் இது தயாரிப்பாளர் – திரையரங்க உரிமையாளர் பிரச்சினை என்று நினைக்கிறது போலும், நடுநிலை காப்போம் என்று இருக்கிறது.

காலம் காலமாக ஏமாந்து வந்த தயாரிப்பாளர்கள் இனிமேலும் ஏமாற முடியாது எனும் நிலை வருகையில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.

ஒரு வருடத்தில் படம் தயாரிப்பவர்களில் 70%- 80% புது தயாரிப்பாளர்களே, இவர்களில் 90% மேல் மொத்த முதலீட்டையும் இழந்து வெளியேறி விடுகின்றனர்.

மொத்தம் இழக்கும் ஒரு தயாரிப்பாளருக்கு இந்த VPF 3% கண்ணுக்கே புலப்படாத ஒன்றாகும். ஒட்டு மொத்தமாக ஒரு வருடத்தில் 40 கோடிக்கும் மேல் VPF மூலம் தயாரிப்பாளர்கள் இழக்கின்றனர்.

திரும்பி படம் எடுக்கவே கஷ்டமான சூழ்நிலையில் இந்த விஷயத்தை பார்க்க தனி தயாரிப்பாளரால் முடியாது. ஆகவே தான் இந்த மொத்த போராட்டமும் தயாரிப்பாளர் சங்கத்தின் தோள்களில் உள்ளது.

ஆனால் யார் என்னமோ ஆகட்டும் என் படம் வெளியானால் போதும் என்ற ஒரு தயாரிப்பாளரின் சுயநலம் போதும் அனைத்து தரப்பினரும் வருமான இழப்புகள் சந்திக்க நேரிடும். கடந்த 20 வருடங்களாக தமிழ் திரைதுறை ஒற்றை இலக்க வெற்றி சதவீதத்தை மட்டுமே கொண்டு இயங்கி வந்தாலும் சினிமா மீதுள்ள அதீத பிரியத்தினாலே தான் இந்த துறை இன்னும் தாக்குப் பிடித்து வருகிறது.

சுயநலம் மட்டுமே நோக்கமாக இருந்தால் இதற்கு மேலும் இந்த துறை தாங்குமா என்பது சந்தேகமே.

போராடுவதே நம் கடமை ஆகட்டும், அதற்கு…காலம் பதில் சொல்லட்டும்!

– S.R. பிரபு

Producer SR Prabu reveals Whats happening in Tamil Cinema in VPF issue

சீக்கு வந்த சினிமாவை முதல்ல காப்பாத்துங்க; ரஜினி-கமலுக்கு ஜேஎஸ்கே கோரிக்கை

சீக்கு வந்த சினிமாவை முதல்ல காப்பாத்துங்க; ரஜினி-கமலுக்கு ஜேஎஸ்கே கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer JSKஏற்கெனவே டீசர் லீக், மோசமான விமர்சனம், திருட்டு விசிடி, இணையங்களில் படங்களில் வெளியாவது என பல்வேறு பிரச்சினைகள் திரையுலகம் சந்தித்து வருகிறது.

இதனிடையில் கடந்த இரண்டு வாரங்களாக எந்த தமிழ் படங்களும் வெளியாகவில்லை.

இதனால் தியேட்டர்கள் மூடப்படும் சூழ்நிலை உருவாகிவிட்டது. மேலும் கேளிக்கை வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16-ந் தேதி முதல் திரையரங்குகளை மூடுகிறார்கள்.

இனி 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நடைபெறாது என தயாரிப்பாளர்கள் சங்கமும் அறிவித்துவிட்டது.

இதுவரை இல்லாத மோசமான சூழ்நிலையை சினிமா சந்தித்து வருகிறது.

பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த போதிலும் இதற்கு நிரந்தர தீர்வு இதுவரை ஏற்படவில்லை.

இதனால், சூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் நடிகர்-நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பெப்சி தொழிலாளர்களும் வேலை இழக்கும் வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தரமணி உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ஜே.எஸ்.கே. அவர்கள் ரஜினி, கமலுக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது…

‘அரசியலுக்கு உயர்த்திக் கொண்ட உச்ச நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள். ஏற்றி விட்ட ஏணி இப்போது சீக்கு வந்த யானையாக தவிக்கிறது.

நீங்கள் இருவரும் ஆண்டு அனுபவித்து ஆஸ்தி சேர்க்க அனைத்துமாக இருந்த திரைப்படத் துறையின் இன்றைய இன்னல்களை உங்கள் சேவையால், பார்வையால் காப்பாற்ற ஏதேனும் செய்து விட்டு உங்கள் அரசியல் பயணத்தை துவங்குங்கள்.

நாங்களும் உடன் இருப்போம். யோசித்து உடனே வாருங்கள். கவலையோடு அல்லாடிக்கொண்டிருக்கிறது கலைக்குடும்பம்… கோடம்பாக்க சேவையே இப்போதைய தேவை. என பதிவிட்டுள்ளார்.

ரஜினி கமல் இருவரும் இந்த கருத்தை ஏற்று ஏதாவது செய்வார்களா? என ஒட்டு மொத்த திரையுலகமே காத்திருக்கிறது.

அம்சமாக இருந்த அஞ்சலி-ஹன்சிகா இப்படி ஆயிட்டாங்களே…

அம்சமாக இருந்த அஞ்சலி-ஹன்சிகா இப்படி ஆயிட்டாங்களே…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anjali and hansikaதமிழ் சினிமாவில் அழகுடன் நடிக்கவும் தெரியும் என சில நாயகிகளே நிரூபித்து உள்ளனர்.

அவர்களில் நடிகை அஞ்சலியும் ஒருவர். கற்றது தமிழ், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களில் ஸ்லிம் ஆக இருந்த இவர், அண்மைக் காலமாக கொஞ்சம் குண்டாகி விட்டார்.

இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

எனவே மீண்டும் தனது உடலை எடையை குறைத்து தனது ஸ்லிம் பாடியை போட்டோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இவரைப் போல ஹன்சிகாவும் தன் உடல் எடையை குறைத்து உள்ளார்.

அவரும் தன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதற்கு சில ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சின்ன குஷ்பூவாக இருந்த ஹன்சிகா இப்படி ஒல்லியாகிட்டாங்களே.. உங்களுக்கு அழகே குண்டுதான் என்றும் சிலர் வர்ணித்து வருகின்றனர்.

தற்போது இந்த இரண்டு படங்களும் இணையத்தில் வைராகி வருகிறது.

More Articles
Follows