சூர்யா – மோகன்லால் பட விழாவில் ரஜினி-ஷங்கர் பங்கேற்பு

சூர்யா – மோகன்லால் பட விழாவில் ரஜினி-ஷங்கர் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி மற்றும் பொம்மன் இரானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

’அயன்’, ‘மாற்றான்’ ஆகியப் படங்களை தொடர்ந்து சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகும் 3வது படம் இது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆகஸ்ட் 30-ம் தேதி படம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இதன் ஆடியோ வரும், 21-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த இசை விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் கலந்துக் கொள்ளவுள்ளனர் என்பதை அறிவித்துள்ளனர்.

இப்பட சேட்டிலைட் உரிமையை சன் டி.வி நிறுவனம் வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியாவுக்கு போட்டியாக சீரியல் நடிகை

பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியாவுக்கு போட்டியாக சீரியல் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)கமல் நடத்தி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நான்காவது வாரத்தை எட்டியுள்ளது.

இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது வரை பாத்திமா பாபு மற்றும் வனிதா உள்ளிட்ட 2 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த முறை 17 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என நிகழ்ச்சி தொடங்கும்போது கமல் அறிவித்திருந்தார்.

எனவே அவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகை ஸ்ரீரெட்டி அல்லது டாக்டர்.சீனிவாசன் கலந்துக் கொள்வார் என கூறப்பட்டது.

ஆனால் ஸ்ரீரெட்டி தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொள்ளவிருக்கிறாராம்.

எனவே சீரியல் நடிகை ஆல்யா மானஸா கலந்துக் கொள்வார் என தெரிய வந்துள்ளது.

ஆல்யாவுக்கு சின்னத்திரையில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் லொஸ்லியாவுக்கு இவர் தான் சரியான போட்டியாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

புதிய கல்வி கொள்கை பேச்சு: சூர்யாவுக்கு ஆதரவாக கமல்-ரஞ்சித்

புதிய கல்வி கொள்கை பேச்சு: சூர்யாவுக்கு ஆதரவாக கமல்-ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)சிவகுமார் கல்வி அறக்கட்டளை (அகரம் அறக்கட்டளை) நடத்திய விழாவில் நடிகர் சூர்யா கலந்துக் கொண்டார்.

அப்போது மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்தித்திருந்தார்.

இதற்கு தமிழக பா.ஜ., மற்றும் அதிமுக தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் சூர்யாவுக்கு கமல் தன் ஆதரவை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான தகுதி சூர்யாவுக்கு உண்டு.

புதிய கல்வி கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு. மக்கள் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்க போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

மேலும் கபாலி மற்றும் காலா இயக்குனர் ரஞ்சித்தும் சூர்யாவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

ரஜினி-கமல்-விஜய்-அஜித் ஆகியோரின் அரசியல் பற்றி ஜோதிடர் பாலாஜிஹாசன்

ரஜினி-கமல்-விஜய்-அஜித் ஆகியோரின் அரசியல் பற்றி ஜோதிடர் பாலாஜிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectதமிழ் சினிமாவிலும் சரி அரசியல் உலகிலும் சரி ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ளவர்களே உள்ளனர்.

இதனால் பெரும்பாலான ஜோதிடர்கள் காட்டில் நல்ல மழை.

சேலம் மாவட்டம் செவ்வாய்ப் பேட்டையைச் சேர்ந்தவர் ஜோதிடர் பாலாஜிஹாசன். இவர் தான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக் ஜோசியர்.

சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து இவர் கூறியது கிட்டதட்ட பலித்துள்ளது.

அரை இறுதிக்கு இந்தியா – நியூசிலாந்து தகுதி பெறும், இறுதி போட்டிக்கு இந்தியா செல்லாது என்று ஒரு பேட்டியில் முன்பே கூறியிருந்தார். அதுபோலவே நடந்தது. ஆனால் உலக்கோப்பையை நியூசிலாந்து வெல்லாது எனவும் ஒரு புதிய அணி முதன்முறையாக வெல்லும் என கூறியிருந்தார்.

அதன்படியே நடந்துள்ளதால் தற்போது இவரது வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

அவர் மேலும் தன் குறிப்பில் ரஜினி, கமல், விஜய், அஜித்தின் அரசியல் பிரவேசம் குறித்து கூறியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வருவார். ஆனால் பெருவாரியான மக்கள் ஆதரவு அவருக்கு இருக்காது. கமல் தவறுகளை சுட்டிக்காட்டும் அரசியல் தலைவராக இருப்பார்.

விஜய், அஜித் அரசியலுக்கு வரமாட்டார்கள். அஜித் சர்வதேச அளவில் படங்களை கொடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டுதான் நிர்வாணமா நடிச்சேன்.. – அமலாபால்

அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டுதான் நிர்வாணமா நடிச்சேன்.. – அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amala Paul reveals how she acted as Nude in Aadai movieகதையின் நாயகியாக அமலா பால் நடித்துள்ள ஆடை படம் வருகிற ஜீலை 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் போஸ்டர்கள் வெளியானபோதே பரபரப்பை உண்டாக்கியது. இதற்கு காரணம் இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நிர்வாணமாக அமலா பால் நடித்துள்ளார் என்பதுதான்.

இது குறித்து அமலா பால் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

நிறைய படங்களில் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க சொல்வார்கள்.

அப்போது தான் தர்மசங்கடம் ஏற்படும்.

ஆனால் இந்த படத்தில் நிர்வாண காட்சியில் நடித்த போது தர்ம சங்கடம் ஏற்படவில்லை. கவர்ச்சியோ ஆபாசமோ இல்லை.

ரசிகர்கள் இதை இப்படியே எடுத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அம்மாவிடம் நிர்வாண காட்சியில் நடிப்பதை கூறினேன். அதிர்ச்சி ஆன போதும் நல்ல கதையா? என்று கேட்டார்.

நியாயமான கதை என்றதும் சம்மதித்தார்.

நான் நடிக்க வரும்போதே என் அப்பா அனுமதி கேட்டபோது ‘நாய் வேடம் போட்டால் குரைத்து தான் ஆகவேண்டும். எனவே எந்த வேடத்திலும் நடிக்க தயங்காதே’ என சொன்னவர் அவர்.

நிர்வாண காட்சியில் நடித்த பின்னர், நான் பலம் மிக்கவளாகவும் உணர்ந்தேன். முதல் நாள் படப்பிடிப்பில் பயம், பாதுகாப்பின்மை இருந்தது. காட்சி முடிந்த பின் அவை எல்லாமே என்னை விட்டு போனது.

தற்போது நான் என்னை பவர்புல் உமனாக உணர்ந்தேன்.” என தெரிவித்துள்ளார்.

Amala Paul reveals how she acted as Nude in Aadai movie

‘சாஹோ’ படத்தின் ‘காதல் சைக்கோ’ பாடல் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்த அனிருத் ரவிச்சந்தர்

‘சாஹோ’ படத்தின் ‘காதல் சைக்கோ’ பாடல் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்த அனிருத் ரவிச்சந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)அனிருத் ரவிச்சந்தர் தனது இசை மூலம் மட்டுமல்லாமல், அவரது குரலாலும் ரசிகர்கள் கூட்டத்தை கவர்வதில் மிகவும் சிறப்பானவர். இது ஒரு தனித்துவமான சாராம்சமாக பாராட்டப்பட்டது, அவரது இசையில் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பிறகும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் காதல் பாடல்களில் ஒன்றான ‘துஹிரே’ (டேவிட்) மூலம் முந்தைய சாதனையான உலகப் புகழ்பெற்ற ‘கொலவெறி’ பாடலின் சாதனையை முறிடித்தார். அவரது குரல் மொழி தடைகளைத் தாண்டி அபரிமிதமான ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் நடித்துள்ள ‘சாஹோ’ படத்தில் அனிருத் பாடிய ‘காதல் சைக்கோ’ பாடல் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்திருப்பதால், இந்தி பேசும் பிரதேசங்களிலும் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்துள்ளது. வட இந்திய கலைஞர்களுடன் அனிருத் இணைந்த பாடல்கள் எப்போதும் மிகப்பெரிய வெற்றியையே பெற்றுள்ளன. இந்த முறை, அவர் நாட்டின் மிகவும் பிரபலமான இசைக் கலைஞர்களில் ஒருவரான த்வானி பானுஷலியுடன் இணைந்திருப்பது இரட்டிப்பு விருந்தாக அமைந்துள்ளது. அனிருத்தின் குரல் பிரபாஸுக்கு மிகப்பொருத்தமாக அமைந்திருப்பது வட இந்தியர்களை ‘சாஹோ’ நேரடியாக தமிழில் உருவாக்கப்பட்டதா? என்று கேள்வியை எழுப்பியுள்ளது. அத்தகைய அற்புதமான வரவேற்புடன், பாடல் யூடியூப் மற்றும் பிற இசைத்தளங்களில் பெரிய அளவில் பரவியிருக்கிறது. குறிப்பாக, பிரபாஸுக்கும், ஸ்ரத்தா கபூருக்கும் இடையிலான அனல் தகிக்கும் கெமிஸ்ட்ரி ‘காதல் சைக்கோ’ பாடலுக்கு கூடுதல் சுவையை கூட்டியுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் மற்றும் த்வானி பானுஷாலி ஆகியோருடன் இணைந்து பாடலை பாடியதோடு தனிஷ்க் பக்சி இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டின் மிகப் பிரமாண்டமான படங்களில் ஒன்றான “சாஹோ” படத்தை யு.வி.கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் தயாரிக்கின்றனர். சுஜீத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், லால், முரளி ஷர்மா, வெண்ணிலா கிஷோர், பிரகாஷ் பெலவாடி, ஈவ்லின் ஷர்மா, சுப்ரீத், சங்கி பாண்டே, மந்திரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேகர் மற்றும் டினு ஆனந்த் போன்ற அகில இந்திய அளவிலான நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தின் டீசர் அதன் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுக்காக ஏற்கனவே அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. கென்னி பேட்ஸ், பெங் ஜாங், திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா, ஸ்டீபன், பாப் பிரவுன் மற்றும் ராம் – லக்ஷ்மன் போன்ற உலகம் முழுக்க இருந்து வந்திருக்கும் மிகச்சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்கள் சண்டைக் காட்சிகளை வடிவைத்துள்ளனர். மதி (ஒளிப்பதிவு), சாபு சிரில் (தயாரிப்பு வடிவமைப்பாளர்), ஸ்ரீகர் பிரசாத் (படத்தொகுப்பு), ஆர்.சி. கமலகண்ணன் (விஷுவல் எஃபெக்ட்ஸ்), வைபவி மெர்ச்சண்ட் & ராஜு சுந்தரம் (நடனம்), ஜிப்ரான் (பின்னணி இசை) மற்றும் சிங்க் சினிமா (ஒலி) என தங்கள் துறைகளில் தங்களின் மகத்தான பங்களிப்பு மூலம் பாரட்டப்பட்ட கலைஞர்கள் இந்த படத்துக்கு கூடுதல் மதிப்பை வழங்கியுள்ளனர்.

உலகளவில் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் ஆகஸ்ட் 15, 2019 அன்று வெளியாகிறது ‘சாஹோ’.

More Articles
Follows