EXCLUSIVE கதாநாயகனாக களமிறங்கும் காமெடி நடிகரும் இயக்குனருமான சரவணசக்தி

EXCLUSIVE கதாநாயகனாக களமிறங்கும் காமெடி நடிகரும் இயக்குனருமான சரவணசக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல படங்களில் காமெடி நடிகராக நடித்து பெயர் பெற்றவர் இயக்குனர் சரவணசக்தி.

இவர் தற்போது மீண்டும் இயக்குனராக தன் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

சரவணா சக்தி இயக்கியுள்ள ‘குலசாமி’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படம் ஒரு சீரியஸ் கதை எனவும் இதில் விமல் நாயகனாக நடித்துள்ளார் எனவும் நம்மிடம் தெரிவித்தார்.

மேலும் மற்றொரு படத்தில் தானே கதையின் நாயகனாக நடித்து படத்தை இயக்கி இருக்கிறார் சரவணன் சக்தி.

இந்த படத்திற்கு கிளாஸ்மேட் (GLASSMATE) என்று பெயரிட்டுள்ளார்.

இந்த படப்பிடிப்பு 90% முடிவடைந்த நிலையில் தற்போது சில காட்சிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மயில்சாமி நடிக்கும் காட்சிகளை படமாக்கியவுடன் இந்த படப்பிடிப்பு நிறைவுபெறும் என சரவணா சக்தி நம்மிடம் FILMISTREET தெரிவித்தார்.

Director Saravana shakti is playing hero role

துணிவு அப்டேட்டால் ஃபயர் விடும் அஜீத் ரசிகர்கள்

துணிவு அப்டேட்டால் ஃபயர் விடும் அஜீத் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிப்ரான் இசையமைத்து அனிருத் பாடிய ‘துனிவு’ படத்தின் முதல் சிங்கிளான ‘சில்லா சில்லா’ ரசிகர்கள் மற்றும் நடுநிலை இசை ஆர்வலர்களிடம் இருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

லிரிக் வீடியோ வெளியான மூன்றே நாட்களில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில், இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக ஊடகத்தில் படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘காசேதான் கடவுளடா’ விரைவில் ரிலீஸ் என்று அறிவித்துள்ளார்.

இது ஹிப் ஹாப் ஆதி பாடிய தத்துவ பாடலாக இருப்பதால், அஜித்தின் தனித்துவமான பாணியை வெளிப்படுத்தும் பல மாஸ் தருணங்களை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது

இயக்குனராக களம் இறங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் . முழு தகவல்கள் இங்கே

இயக்குனராக களம் இறங்கும் நடிகர் சிவகார்த்திகேயன் . முழு தகவல்கள் இங்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .

தமிழ்நாட்டின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்ததும் தனது வாழ்க்கை வரலாறு எடுக்கப்படும் என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் தனது கேரக்டரில் நடிப்பது மட்டுமின்றி இயக்குவார் என்றும் அவர் உறுதி செய்துள்ளார்.

நடராஜன் ஐபிஎல் 2023 இல் சிறப்பாக செயல்படுவார் என்றும் தேசிய இந்திய அணியில் மீண்டும் தனது இடத்தைப் பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

JUST IN உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி.; அமீர் அதிரடி பதில்

JUST IN உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி.; அமீர் அதிரடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அமீர் நாயகனாக நடித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’.

ஆதம்பாவா இயக்கியுள்ள இந்த படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.

ஆனந்தராஜ் இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் வெளியாகியுள்ள நிலையில் தற்போது சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அப்போது நாளை நடிகர் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்கிறார்? இது குறித்து கேள்வி அமீரிடம் கேட்கப்பட்டது.

அதற்கான பதில் அளிக்கும் போது..

“இது அவர்களின் கட்சி சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். ஒரு துறையை மேம்படுத்த ஒருவருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுப்பது வழக்கமான ஒன்றுதான்.

இதில் நான் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. இது அவர்கள் கட்சி சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்” என தெரிவித்தார் அமீர்.

ஹீரோவ காதலிக்க வச்சாரு. இப்போ அண்ணே காதலிக்கிறாரு – Subramaniya Siva l உயிர் தமிழுக்கு l Ameer அமீர் l filmistreet

https://youtube.com/shorts/MBvaiFnxNyM?feature=share

Actor Rajkapoor talks about Paruthi Veeran & Vadachennai l Uyir Tamizhuku l உயிர் தமிழுக்கு l Ameer l filmistreet

https://youtube.com/shorts/fEEFBoCyj4o?feature=share

என்ன ரஜினி இதை வாய்ல வைக்கிறீங்க?- Anandaraj l Uyir Tamizhuku l Ameer Suresh Kamatchi l Rajinikanth l filmistreet

https://youtube.com/shorts/Mo4–X7wnnk?feature=share

Press Meetல Suriya கடுப்பாகி கிளம்பிட்டாரு – அமீர் l Uyir Tamizhuku l Ameer Imman Annachi Adam Bava l filmistreet l

https://youtube.com/shorts/ikUl8fMTwsc?feature=share

ராஜ் மோகனின் ‘பாபா பிளாக் ஷீப்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

ராஜ் மோகனின் ‘பாபா பிளாக் ஷீப்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘பாபா பிளாக் ஷீப்’.

இப்படத்தில் RJ விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்படிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

பாபா பிளாக் ஷீப்

இந்த படத்தில், சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படம் பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ளது.

மேலும், இப்படத்தை 2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினரால் திட்டமிடப்பட்டுள்ளது.

பாபா பிளாக் ஷீப்

The shooting of ‘Baba Black Sheep’ started with pooja

விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பை முடித்தார் கணேஷ் வெங்கட்ராம்..!

விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பை முடித்தார் கணேஷ் வெங்கட்ராம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யுடன், ரஷ்மிகா மந்தனா, கணேஷ் வெங்கட்ராம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம், யோகி பாபு, ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தை 2023 பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் ஒரு அங்கமான நடிகர் கணேஷ் வெங்கட்ராம் படத்தில் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை முடித்துள்ளார்.

மேலும், இயக்குனர் வம்சியுடன் ஒரு புகைப்படத்தைக் கொண்ட கணேஷ் வெங்கட்ராம் தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Ganesh Venkatram has completed shooting of vijay’s ‘Varisu’

More Articles
Follows