நயன்தாரா – சன்னி லியோன் தொடங்கி..; சினிமா ஏணிப்படியில் எடிட்டர் அருள் இ சித்தார்த்

நயன்தாரா – சன்னி லியோன் தொடங்கி..; சினிமா ஏணிப்படியில் எடிட்டர் அருள் இ சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சினிமாவை நாம் பார்த்துவிட்டு எளிதாக விமர்சனம் செய்து விடுவோம்.. ஒருவேளை படத்தின் நீளம் பெரியதாக இருந்தால் எடிட்டர் தூங்கிவிட்டாரா.? இந்த காட்சிகளை கட்டிங் போட்டிருக்கலாம் என சொல்வதுண்டு.

இதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். ஏனென்றால் ஒரு எடிட்டர் என்பவர் ஒரு படத்திற்கு மிக முக்கியமானவர்.

எந்த காட்சிகள் சோர்வை தருகின்றன.. எந்த காட்சிகள் படத்திற்கு ஹைலைட் ஆக இருக்கிறது என்பதை நுட்பமாக கணித்து அதை சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும்.

இந்த வரிசையில் எடிட்டராக தன் பயணத்தை தொடங்கி இருக்கிறார் அருள் இ சித்தார்த்.

இவர் ‘வலிமை – துணிவு’ ஆகிய படங்களின் எடிட்டர் விஜய் வேலு குட்டி இடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

சூர்யாவின் ‘சிங்கம் 3’ படத்தின் டிரைலரின் எடிட்டராக பணியாற்றியிருக்கிறார். அந்த ட்ரெய்லர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் குலேபகாவலி, அறம், ஐரா சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட படங்களில் அசோசியேட் எடிட்டராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.

அருள்நிதி நடித்த ‘தேஜாவு’ படத்தின் மூலம் முழு எடிட்டராக தன்னுடைய இலட்சிய பயணத்தை தொடங்கிவிட்டார்.

இதனையடுத்து சன்னி லியோன் நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்திலும் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.

தற்போது இவரது கைவசம்.. தேஜாவு இயக்குனரின் அடுத்த படம், நடிகர் சதீஷ் நடிக்கும் ‘வித்தைக்காரன்’, ட்ரீம் வாரியஸ் நிறுவனத்திற்காக ஒரு படம், நடிகர் ஜீவாவின் புதிய படம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத எடிட்டராக அருள் இ சித்தார்த் வளர நாம் வாழ்த்துவோம்.

Editor Arul E siddharth life journey and his films

வித்தைக்காரனாக மாறிய சதீஷ்.; இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாராட்டு

வித்தைக்காரனாக மாறிய சதீஷ்.; இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயனின் நண்பனாக நிஜத்திலும் படத்திலும் திகழ்பவர் நடிகர் சதீஷ்.

பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த சதீஷ் ஏஜிஎஸ் என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரித்த ‘நாய் சேகர்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார்.

இதன் பின்னர் சன்னி லியோன் நடித்த ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கதையின் நாயகனாக ‘வித்தைக்காரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜன் உதவியாளர் வெங்கி என்பவர் இயக்கியுள்ளார்

இந்தப் படத்துக்கு யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, விபிஆர் இசையமைக்க அருள் இ சித்தார்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

“என்னுடைய உதவி இயக்குநர் வெங்கிக்கு வாழ்த்துகள். இவரது முதல் படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன். சதிஷ் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Lokesh Kanagaraj praised Sathish in Vithaikkaran movie poster

Vithaikkaaran – Motion Poster

https://t.co/QpeeogQNih

#Vithaikkaaran #Vithaikkaaranmotionposter #Sathish #Venki #SimranGupta @actorsathish @Venki_dir #SimranGupta @WCF2021 @vijaywcf @Vbrcomposer @iamyuvakarthick @editorsiddharth @Gdurairaj10 @Muralikris1001 @R_chandru

என் தலைவர் கமல்ஹாசன்.. அவரது வழி இதுவே.; மாஸ் காட்டும் ஜெயம் ரவி

என் தலைவர் கமல்ஹாசன்.. அவரது வழி இதுவே.; மாஸ் காட்டும் ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சப்தமில்லாமல் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி.

குடும்பத்தில் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் படமாக இவரது படங்கள் உருவாகி வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஜெயம், பேராண்மை, சந்தோஷ் சுப்பிரமணியம், நிமிர்ந்து நில், தனி ஒருவன், மிருதன், போகன், அகிலன் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ என தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இதில் படத்துக்கு படம் வித்தியாசமான வேடங்கள் ஏற்று முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜெயம் ரவி திகழ்ந்து வருவதை நாம் அறிந்திருக்கிறோம்.

நாளை ‘பொன்னியின் செல்வன் பாகம் 2’ வெளிவரும் நிலையில் தற்போது அந்தப் படத்தில் ப்ரமோஷன் பணியில் ஜெயம் ரவி விதவிதமான ஆடைகள் அணிந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் மாஸ் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அத்துடன்.. “என்னுடைய தலைவர் கமல்ஹாசன் பாணியில் கதர் ஆடைகளை அணிந்து இருக்கிறேன்” என கோட் சூட் போட்டு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

.@actor_jayamravi on insta : This is special 🤩 honoured to be wearing “My Thalaivar” @ikamalhaasan’s @kh_khaddar clothing line.. #filmistreet

#FanboyForever
#PonniyinSelvan2 https://t.co/kWBu1U268A
Add this jayam Ravi news

Jayam Ravi wears Khaddar clothing like Kamal Haasan

உலகமெங்கும் 3200+ தியேட்டர்களில் PS2.; கேரளா – கர்நாடகாவில் சிறப்பு காட்சிக்கு அனுமதி

உலகமெங்கும் 3200+ தியேட்டர்களில் PS2.; கேரளா – கர்நாடகாவில் சிறப்பு காட்சிக்கு அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் ‘பொன்னியின் செல்வன் 2’.

இப்படம் உலகம் முழுவதும் நாளை ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் FDFS காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்து விட்டது.

இப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது.

இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் காட்சி அமெரிக்காவில் ஏப்ரல் 28 ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 1:30 மணி அளவில் திரையிடப்பட உள்ளது.

கேரளாவில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் காட்சி காலை 5மணிக்கும் மற்றும் கர்நாடகாவில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் காட்சி காலை 6 மணிக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 3200 திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ponniyin selvan releasing on over 3200 screens worldwide

விஜய்யின் ‘லியோ’ சூட் அப்டேட்.; த்ரிஷா – சஞ்சய் தத் மீண்டும் கூட்டணி.!

விஜய்யின் ‘லியோ’ சூட் அப்டேட்.; த்ரிஷா – சஞ்சய் தத் மீண்டும் கூட்டணி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் ‘லியோ’.

இப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் காஷ்மீரில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தது.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பு செட்டில் விஜய் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகை த்ரிஷாவும், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் மே மாதம் ‘லியோ’ படத்தின் செட்டில் மீண்டும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் இப்படத்தில் தங்கள் பாகங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.

மேலும், மன்சூர் அலிகான், அர்ஜுன் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோரும் விரைவில் ‘லியோ’ படத்தின் நடிகர்களுடன் இணைய உள்ளனர்.

நடிகை த்ரிஷா தற்போது ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் விளம்பரப் பணிகளை ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sanjay Dutt and Trisha to join the sets of ‘Leo’ in May

மெகா ஹிட்டான ‘பரியேறும் பெருமாள்’ ஹிந்தி ரீமேக் அப்டேட்ஸ்

மெகா ஹிட்டான ‘பரியேறும் பெருமாள்’ ஹிந்தி ரீமேக் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘பரியேறும் பெருமாள்’.

இதில் கதிர் மற்றும் ‘கயல்’ ஆனந்தி முக்கிய வேடங்களில் நடித்தனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் 28 செப்டம்பர் 2018 இல் திரையரங்குகளில் வெளியானது.

தமிழ் சினிமாவின் வசூல் சாதனைகளில் இப்படமும் ஒன்று.

ஜாதி ஒடுக்குமுறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாரி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமானது.

இந்நிலையில், தற்போது கரண் ஜோஹர் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் திட்டத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் சித்தார்த் சதுர்வேதி மற்றும் திரிப்தி டிம்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு ‘தடக் 2’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘Paraiyerum Perumal’ Hindi remake updates

More Articles
Follows