விஜய்-ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் இணையும் சன் பிக்சர்ஸ்.?

விஜய்-ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் இணையும் சன் பிக்சர்ஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay AR Murugadossஅட்லி இயக்கும் விஜய் 61 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதனையடுத்து அவர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பார் என்பதை பார்த்தோம்.

தற்போது அந்த கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், இப்படத்தை தயாரிக்கும் நிறுவனமும் உறுதியாகியுள்ளது.

பிரபல நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜய் நடித்த வேட்டைக்காரன் மற்றும் சுறா உள்ளிட்ட படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்திருந்தது.

தற்போது 3வது முறையாக விஜய்யுடன் இந்நிறுவனம் இணைகிறது.

இதன் பட்ஜெட் ரூ. 120 கோடி என்பதால் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கத்தி மற்றும் துப்பாக்கி படங்களை தொடர்ந்து விஜய்யுடன் ஏஆர் முருகதாஸ் 3வது இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sun Pictures is likely to fund Vijay 62 directed by AR Murugadoss

Sunpictures

நாளையும் நாளை மறுநாளும் நயன்தாராவின் விருந்து

நாளையும் நாளை மறுநாளும் நயன்தாராவின் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayantharaடிமாண்டி காலனி படத்தை தொடர்ந்து, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து.

இப்படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க, இவருடன் அதர்வாவும் நடித்துள்ளார்.

இவர்களுடன் அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை மே 17ஆம் தேதி, இரவு 7 மணிக்கும், மே 18ஆம் தேதி இரவு 7 மணிக்கு டீசரையும் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Nayantharas Imaikkaa Nodigal first look and teaser release updates

 

nayan

‘கர்நாடகாவை எதிர்க்கனும்; மக்களிடம் ஜாக்கிரதை..’ ரஜினிக்கு சேரன் அட்வைஸ்

‘கர்நாடகாவை எதிர்க்கனும்; மக்களிடம் ஜாக்கிரதை..’ ரஜினிக்கு சேரன் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director cum Actor Cheran advice to Rajinikanth regarding Politics entryமீண்டும் ரஜினியின் வாய்ஸ் தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது என்று கூறிவிடலாம்.

அந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் ரஜினியின் பேசிய அரசியல் பேச்சு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சித் தலைவர் மற்றும் திரையுலக பிரபலங்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனரும் நடிருகருமான சேரன் தன் கருத்துக்களை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்ட நான்கு பதிவுகளை அப்படியே இங்கே தெரிவித்துள்ளோம்.

Cheran Pandian‏ @cherandreams
#Rajinikanth வணக்கம் சார்.உங்களை முதல்வர் ஆக்கியே தீருவார்கள். அரசியல் சூழல் அதை உருவாக்கும்.. மக்களிடமும் நேர்மை குறைந்துள்ளதால் ஜாக்கிரதை.

Cheran Pandian‏ @cherandreams
#rajinikanthகளவும் ஊழலும் லஞ்சமும் சுயநலமும் நேர்மையின்மையும் சூழ்ந்த இந்த அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா.. உங்களுக்கு பொய்யே பேசவராதே.

Cheran Pandian‏ @cherandreams
#rajinikanthகர்நாடகாவை எதிர்க்க வேண்டும் இந்தி திணிப்பை ஆதரிக்ககூடாது இலவசங்கள் கொடுத்தே ஆகவேண்டும் மதுக்கடைகள் மூடக்கூடாது.. சவால்கள் நிறைய

Cheran Pandian‏ @cherandreams
#rajinikanthநீங்கள் நினைப்பது நடக்கவேண்டுமெனில் மக்களோடு களம்இறங்குங்கள் கலந்துபேசுங்கள் ஏரியாவாரியாக ப்ரச்னைகளை தெரிந்துகொள்ளுங்கள்

Director cum Actor Cheran advice to Rajinikanth regarding Politics entry

‘தமிழர்களை ஏமாற்ற முடியாது; ரஜினி வந்தால் நல்லது…’ மாதவன்

‘தமிழர்களை ஏமாற்ற முடியாது; ரஜினி வந்தால் நல்லது…’ மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madhavanரசிகர்கள் சந்திப்பின் போது அரசியல் குறித்து ரஜினியின் பேச்சு தமிழக முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை, அடையாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் மாதவன் கலந்து கொண்டார்.

அப்போது ரஜினியின் அரசியல் பேச்சு மற்றும் அவரது அரசியல் எண்ட்ரீ குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து மாதவன் கூறியதாவது…

தமிழக மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு நல்லது எதுவென்று தெரியும்.

அவர்களுக்கு பிடித்துவிட்டால், ஏற்றுக் கொள்வார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது நல்லது. இந்த மாநிலம் நன்றாக இருக்கும். அந்த பொறுப்புடன் அவர் நடந்து கொள்வார் என்று தெரிவித்தார்.

Actor Madhavan statement about Rajinis entry in politics

லிங்கா-ஜனா வரிசையில் இணையும் விஐபி2

லிங்கா-ஜனா வரிசையில் இணையும் விஐபி2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VIP2 movie release date connect with Linga and Jana movie release datesவெள்ளிக்கிழமை அன்று படங்கள் ரிலீஸானால் வார இறுதி நாட்களில் லாபம் பார்த்து விடலாம் என்பதாலேயே அன்றைய தினத்தில் படத்தை தயாரிப்பாளர்கள் வெளியிடுகின்றனர்.

பண்டிகை மற்றும் விடுமுறை நாட்கள் இதற்கு விதிவிலக்கு.

என்னதான் ஒரு சில டாப் நடிகர்களுக்கு மார்க்கெட் இருந்தாலும், அவர்களின் பிறந்தநாளில் படங்களை வெளியிட மாட்டார்கள் தயாரிப்பாளர்கள்.

இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாள் (12.12.2014) அன்று லிங்கா படத்தை வெளியிட்டனர்.

இதற்குமுன் ரஜினியின் எந்த படங்களும் அவரின் பிறந்தநாளில் வெளியானதில்லை என சொல்லப்பட்டது.

இதுபோல் சில வருடங்களுக்கு முன்பு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வாலி படத்தை 1999ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதியிலும், 2004ஆம் ஆண்டில் மே 1ஆம் தேதியில் ஜனா படத்தையும் ரிலீஸ் செய்தனர்.

இவர்களைத் தொடர்ந்து, முதன்முறையாக தனுஷ் பிறந்தநாளில் வேலையில்லா பட்டதாரி படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIP2 movie release date connect with Linga and Jana movie release dates

ரஜினிக்கு ஸ்டாலின் ஆதரவு… சுப்ரமணிய ஸ்வாமி எதிர்ப்பு

ரஜினிக்கு ஸ்டாலின் ஆதரவு… சுப்ரமணிய ஸ்வாமி எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த 20 வருடங்களாக ஆண்டவன் ஆசைப்பட்டால்… எப்போ வருவேன்..? எப்படி வருவேன்? என பல புதிர்களை போட்டு தன் அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்து வந்தார் ரஜினிகாந்த்.

நேற்று ரசிகர்கள் சந்திப்பின் இடையே பேசும்போதும் ஆண்டவன் நினைத்தால் வருவேன் என தான் தெரிவித்து இருந்தார்.

ஆனால் நேற்றை பேச்சில் மட்டும் ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது.

நான் அரசியலுக்கு வந்தால் உண்மையாக இருப்பேன், நேர்மையாக நடந்துக் கொள்வேன். பணத்தாசை பிடித்தவர்களை நெருங்க விட மாட்டேன் என சூசகமாக தன் அரசியல் எண்ட்ரீயை கிட்டதட்ட உறுதி செய்திருந்தார்.

அவரது இந்த பேச்சு அரசியல்வாதிகளிடையே பல்வேறு கருத்துக்களை எழுப்பியுள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும் அவர் இஷ்டம். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால், அதனை வரவேற்பேன் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவர் விருப்பம்.

பாஜக அவரை வைத்து தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. ரஜினி அரசியலுக்கு வந்தால் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அதை வரவேற்கும். என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் பேச்சின் மூலம் அவர் அரசியலுக்கு வருவார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது.

நல்ல கட்டமைப்போடும், நல்ல மனிதர்களுடன் வந்தால் அரசியலில் வெற்றி பெறுவார் என்று பாஜக தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் ரஜினியின் அரசியல் வருகைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கென ஒரு கொள்கை கிடையாது. அவரால் அரசியலில் வெற்றி பெற முடியாது’ என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

More Articles
Follows