கமல்-மணிரத்னம் சந்தித்த பிரச்சினைகள்; *பூமராங்* இசை விழாவில் சுஹாசினி பேச்சு

கமல்-மணிரத்னம் சந்தித்த பிரச்சினைகள்; *பூமராங்* இசை விழாவில் சுஹாசினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suhasiniமசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. ரதன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் இசை தகட்டினை கலைப்புலி எஸ் தாணு, சத்யஜோதி தியாகராஜன் வெளியிட, சுஹாசினி மணிரத்னம் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முன்னதாக இயக்குனர் மணிரத்னம் படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை வாழ்த்தினார்.

கண்ணன் மணிரத்னம் என்ற பள்ளியில் இருந்து வந்தவர், நன்கு கலையை கற்றவர். அவரே சொந்தமாக தயாரித்து இவ்வளவு பிரமாண்டமாக ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அவரை வைத்து கூடிய விரைவில் ஒரு படம் தயாரிப்பேன் என்றார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

நான் அறிமுகப்படுத்திய இரண்டு பேர் இந்த படத்தில் இருக்கிறார்கள். முரளி வீட்டுக்கு போகும்போது அதர்வா சின்ன வயதில் இருந்தே எனக்கு நன்றாக தெரியும். இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ஒரு கதை சொன்னபோது, அவர் தான் அதர்வாவை நடிக்க வைக்கலாம் என சொன்னார். அப்படி உருவான படம் தான் பாணா காத்தாடி. ஒவ்வொரு படத்திலும் திறமைகளை மெருகேற்றிக் கொண்டே வருகிறார். இயக்குனர் கண்ணன் முதலில் மனோபாலாவிடம் இணை இயக்குனராக வேலை பார்த்தார். அந்த நேரத்திலேயே நல்ல திறமைசாலி. அதன் பிறகு மணிரத்னம் சாரிடம் வேலை பார்த்தார். பின் தன்னம்பிக்கையோடு என்னிடம் வந்து ஒரு கதை சொல்லி, நான் அந்த படத்தை தயாரிக்க வேண்டும் என விரும்பினார். என் பேனரில் அவர் அறிமுகமானது மகிழ்ச்சி. அவர் தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்றார் சத்யஜோதி தியாகராஜன்.

கடந்த ஆண்டு இவன் தந்திரன் படத்தை நானும், கண்ணனும் சேர்ந்து தயாரித்திருந்தோம். பெரிய வெற்றி பெற வேண்டிய படம், ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படத்தின் வெற்றி கை நழுவி போனது. ஒரு சில மாதங்கள் நாங்கள் கஷ்டத்தில் இருந்தோம். அந்த நேரத்தில் அதர்வா கொடுத்த வாய்ப்பு தான் இந்த பூமராங். இயக்குனருக்கு நடிகர்களின் ஆதரவு மிக முக்கியமானது. சரியான காலகட்டத்தில் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

மூன்றாம் பிறை படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நான் பெங்களூர் போனபோது, சத்யஜோதி தியாகராஜன் சாரை பார்த்த நினைவுகள் இந்த நேரத்தில், இந்த மேடையில் ஞாபகம் வருகிறது.திட்டமிட்ட படி, நேர்த்தியான முறையில் படப்பிடிப்பு நடக்கும். மெட்ராஸ் டாக்கீஸின் செல்லப்பிள்ளை கண்ணன். எங்கள் கம்பெனியில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கு தான் அதிகம் இருக்கும். அவருக்கு நகைச்சுவை உணர்வும் ரொம்ப அதிகம். நீங்கள் உங்களுக்கு பிடித்த இயக்குனராக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் முதல் 25 ஆண்டுகள் கமல் உடனும், அடுத்த 30 ஆண்டுகள் மணிரத்னம் உடனும் கழித்திருக்கிறேன். அவர்கள் சந்திக்காத பிரச்சினைகளே இல்லை. இன்றும் கமல் விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்து வருகிறார். அதர்வா உங்கள் திறமைகள் உங்களுக்கு தெரியும், யாருக்கும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, படத்தின் ட்ரைலரை பார்த்த பிறகு கூட, மணிரத்னத்துக்கு இது என்ன மாதிரி படம் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவே படத்தின் முதல் வெற்றி என்றார் சுஹாசினி மணிரத்னம்.

நானும் கண்ணனும் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் தான் மணி சாரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தோம். அப்போது நான் தான் சீனியர் என கண்ணன் சொல்வார், ஆனால் அது தான் உண்மையாகி இருக்கிறது. எனக்கு முன்பே படம் இயக்கினார், நான் இயக்குனராகும் போது அவர் அடுத்த கட்டமாக தயாரிப்பாகி இருக்கிறார், அவரின் உண்மையாம உழைப்புக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார் இயக்குனர் மிலிந்த் ராவ்.

கண்ணன் என் நண்பன், உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இருந்தே எங்கள் நட்பு தொடர்ந்து வருகிறது. கடந்த படத்தில் கிடைக்க வேண்டிய வெற்றி கிடைக்காமல் போனது, அது இந்த படத்தில் கிடைக்க வேண்டும் என்றார் இயக்குனர் சமுத்திரகனி.

கண்ணன் ரொம்ப ஷார்ப். எல்லாத்துலயும் ரொம்ப ஃபஸ்ட். மேகி கண்ணன் என்று அவரை சொல்லலாம். நான் 15 படத்தில் நடித்து வருகிறேன், அதில் கொஞ்சம் கூட பந்தாவே இல்லாமல் இருந்த ஹீரோ அதர்வா தான். கண்ணன், நீங்கள் உங்களுக்கு பிடித்த இயக்குனராக இருப்பது தான் முக்கியம், நினைத்ததை தயங்காமல் செய்யுங்கள் என்றார் நடிகர் ரவி மரியா.

கண்ணன் சார் இவன் தந்திரன் படத்தின் போது எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்று எனக்கு தெரியும், அதற்கும் சேர்த்து இந்த படத்தில் அவருக்கு வெற்றி கிடைக்கணும். ஒரு இயக்குனருக்கு நாயகனின் ஆதரவு நிச்சயம் தேவை. எனக்கு வனமகன் படத்தில் ஜெயம் ரவி கொடுத்த ஆதரவை போல, இங்கு அதர்வா மிகவும் ஆதரவாக இருந்திருக்கிறார் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் இயக்குனர் விஜய்.

கண்ணன் எத்தனை படம் எடுத்தாலும் அதில் நான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன், பாடல் வரிகளையும், பாடலாசிரியரையும் மதிக்க தெரிந்த ஒரு இசையமைப்பாளர் ரதன். எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் மணிரத்னம் சார். நான் இந்த படத்துக்கு எழுதிய பாடல்களில் எனக்கு தேசமே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். விவசாய பிரச்சினை மட்டும் பேசாமல் மற்ற பிரச்சினைகளையும் பற்றி பாடலில் சொல்ல நினைத்தேன், அதற்கு வாய்ப்பு கொடுத்த கண்ணன் சாருக்கு நன்றி என்றார் பாடலாசிரியர் விவேக்.

தற்போதைய மிக முக்கியமான பிரச்சினையை பேசியிருக்கிறது இந்த பூமராங். ஆயுத எழுத்து படத்தில் வந்த ஜன கன மண பாடலை போன்ற ஒரு பாடல் தான் இந்த ‘தேசம்’ பாடலும். எல்லா வேலையையும் தன் தோள்களில் போட்டுக் கொண்டும் கூட, மிகச்சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார். தண்ணீர் சேமிப்பை நாம் வீட்டில் இருந்தே தொடங்கலாம். நீரை வீணாக்காதீர்கள், இன்னும் கொஞ்ச காலத்துக்கு அப்புறம் தண்ணீர் பஞ்சம் வரும். மீம்ஸ் போடறவங்க எல்லாம் கொஞ்சம் பொறுப்பா இருக்கணும், மக்களும் கண்ட கண்ட மீம்ஸ் ஷேர் பண்ணாதீங்க என்றார் நடிகர் சதீஷ்.

கண்ணன் அவர்களின் இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம். ரொம்ப புத்திசாலி இயக்குனர். நடிகர்களுக்கு மிகவும் சுதந்திரம் கொடுக்கும் ஒரு இயக்குனர். நான் இன்று எல்கேஜி படம் நடிக்க மிக முக்கிய காரணம் அதர்வா தான். அவர் தான் நீ இப்படி ஒரு படம் நடிக்கலாமே என சொல்லி என்னை நடிக்க உந்தினார். சமுத்திரக்கனி மாதிரி ஒரு நண்பன் இருந்தால் வாழ்க்கை சுபம். நடிகர்கள் எல்லாம் என்ன பெருசா கருத்து சொல்ல வர்றீங்கனு கேட்குறாங்க, இன்றைய காலத்தில் எல்லோரும் நிச்சயம் கருத்து சொல்லணும் என்றார் ஆர்ஜே பாலாஜி.

மேயாத மான் படத்தில் தங்கச்சியா நடிக்கிறப்போ எனக்கு அவ்வளவா தெரியாது, அது தான் நம்மை நல்ல இடத்துக்கு கொண்டு போகும் என்று. நீங்க நல்லா, அழகா இருக்கீங்கனு சொல்றத விட, நல்லா நடிக்கிறீஙகனு சொல்றது தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்றார் நாயகி இந்துஜா.

நானும் ஒரு தமிழ் பையன் தான். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நான் இசையமைக்க முடியாத சூழல். ஆனாலும் கண்ணன் சார் தான் நான் வெயிட் பண்றேன், நீ தான் இசையமைக்கணும் என சொல்லி என் மீது நம்பிக்கை வைத்தார். நான் இசையமைப்பாளர் ஆக மிக முக்கியமான காரணம் ஏ ஆர் ரகுமான் தான். ரோஜா பாடல்களை நான் குழந்தையாக இருக்கும்போது கேட்டேன், அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றார் இசையமைப்பாளர் ரதன்.

நாம் நல்லதோ, கெட்டதோ எது செய்தாலும் அது ஒரு நாள் நம்மை வந்து சேரும் என்பது தான் பூமராங். கண்ணன் தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்பது உண்மை தான். 50 நாளில் படத்தை முடிப்பேன் என சொல்லி, 43 நாட்களில் மிக வேகமாக படத்தை முடித்து விட்டார். மொத்த குழுவின் உழைப்பு அபரிமிதமானது. எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தார். தயாரிப்பாளராகவும் முழு கவனத்துடன் இருப்பார். ரதன் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்பதில் உறுதியாக இருந்தார் கண்ணன். நம்ம ஊரு இசையமைப்பாளர் ரதன் தெலுங்கில் ஒரு கலக்கு கலக்கி விட்டு வந்திருக்கிறார் என்பதில் எனக்கு சந்தோஷம். சுஹாசினி அவர்களுடன் நடிப்பது எனக்கு பெருமை என்றார் நாயகன் அதர்வா முரளி.

2008ல் ஜெயங்கொண்டான் ரிலீஸ் ஆகியது, 2018ல் இன்று பூமராங். இதுவரை மொத்தம் 7 படங்கள் இயக்கியிருக்கிறேன். என் குரு மணிரத்னம் அவர்களை அறிமுகப்படுத்திய சத்யஜோதி தியாகராஜன், எனக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்தது பெருமையான விஷயம். சுஹாசினி அவர்களை சந்தித்தது தான் என் வாழ்வின் திருப்புமுனை. கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு பிறகு விவசாயத்தை பற்றிய ஒரு படம் பூமராங். 130 கோடி மக்கள் இருந்தும் நஷ்டத்தில் போகிற ஒரு துறை விவசாய துறை தான். அதை படம் பேசும். நட்புக்கு மரியாதை கொடுக்கும் மனிதர் சமுத்திரகனி. அவருடன் என் நட்பு வாழ்நாள் முழுக்க தொடர ஆசை. வழக்கமான பாம்பே நாயகியாக இல்லாமல் சென்னை அண்ணா நகர் பெண்ணை நாயகியாக நடிக்க வைத்திருக்கிறோம். இசையமைப்பாளர் ரதன் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார். இது கமெர்சியல் படமாகவும், நல்ல கருத்தை சொல்லும் படமாகவும் இருக்கும் என்றார் இயக்குனர் கண்ணன்.

விழாவில் நாயகி மேகா ஆகாஷ், தயாரிப்பாளர் கதிரேசன், ஞானவேல்ராஜா, ராம் பிரசாத், இயக்குனர் ஆர் கே சரவணன், முருகேசன், ஈரோடு கலெக்டர் அழகிரி, ஒளிப்பதிவாளர் பிரசன்ன எஸ் குமார், கலை இயக்குனர் சிவ யாதவ், எடிட்டர் செல்வா, வெங்கட் சுபா ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

ஜுங்காவை அடுத்து *ஜாங்கோ* என்ற பெயரில் படம்; சீ.வி.குமார் தயாரிக்கிறார்!

ஜுங்காவை அடுத்து *ஜாங்கோ* என்ற பெயரில் படம்; சீ.வி.குமார் தயாரிக்கிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jangoதமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று விளங்கும் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக “ஜாங்கோ” எனும் புதிய படத்தை தயாரிக்கின்றார்.

இப்படத்தின் படப்பூஜை இன்று இனிதே நடைபெற்றது. “ஜாங்கோ” படத்தின் படப்பிடிப்பை பாரதிய ஜனதா கட்சி தமிழக இளைஞர் அணி தலைவரும், மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான திரு. சதிஷ் குமார் போன்ஸ்லே துவங்கி வைத்தார்.

இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுப்பட்டி படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய மனோ கார்த்திக்கேயன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

சதிஷ் என்ற புதுமுகம் இப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கருணாகரன், ராம்தாஸ், RJ ரமேஷ், ஹரிஷ் பெராடி, துளிசி, சந்தான பாரதி, சிவாஜி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – சீ.வி.குமார் (திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்)

இயக்கம் – மனோ கார்த்திக்கேயன்

ஒளிப்பதிவு – கார்த்திக் K தில்லை

இசை – நிவாஸ் பிரசன்னா

படத்தொகுப்பு – ராதாகிருஷ்ணன் தனபால்

கலை – கோபி ஆனந்த்

காஸ்ட்யும் டிசைனர் – மீனாக்ஷி ஷ்ரிதரன்

சண்டைப்பயிற்சி – ஹரி திணேஷ்

மக்கள் தொடர்பு – நிகில்

கமலின் *விஸ்வரூபம் 2* படத்துக்கு தடையாக வந்த மர்மயோகி

கமலின் *விஸ்வரூபம் 2* படத்துக்கு தடையாக வந்த மர்மயோகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

marmayogi kamalகமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸாகிறது.

கமல் படங்கள் என்றாலே இறுதிக்கட்டத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வரும். இதுநாள் வரை இப்படத்திற்கு வராத பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இப்படத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரமீட் சாய் மீரா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில்…

மர்மயோகி படத்தில் கமல் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. படம் உருவாகவே இல்லை. மேலும் வாங்கிய சம்பளத்தையும் கமல் திருப்பித் தரவில்லை.

எனவே வட்டியுடன் சேர்த்து ரூ.5.44 கோடியை கமல் திருப்பி தர வேண்டும், அதுவரை விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட இருக்கிறது. எனவே விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீசில் பிரச்சினை உருவாகும் எனத் தெரிகிறது.

அரசியலில் இருந்தாலும் சினிமாவில் பயணிக்க கமலின் மெகா ப்ளான்

அரசியலில் இருந்தாலும் சினிமாவில் பயணிக்க கமலின் மெகா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalசினிமாவில் இருந்தபோதே அதன் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தியவர் கமல்ஹாசன்.

நடிப்பு, இயக்கம், நடனம், பாடல், தயாரிப்பு என எந்த துறையாக இருந்தாலும் அதில் தன் திறமையை பளிச்சிட செய்தவர் அவர்.

தற்போது சினிமாவை தாண்டி அரசியல் உலகிலும் பயணித்து வருகிறார்.

தற்போது கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்து விட்ட பின் மெதுவாக சினிமாவில் இருந்து விலகி, அரசியல் பயணம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் தனக்கு வாழ்வளித்த சினிமாவில் தொடர்ந்து நீடிக்க ஒரு திட்டம் ஒன்றை தீட்டியுள்ளாராம்.

சென்னையில் உலகத் தரத்தில் ஒரு திரைப்பட பள்ளி தொடங்க வேண்டும் என்பதுதானாம் அது.

திறமையான கலைஞர்களுக்கு தரமான பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் எனவும், அதில் அவர் ஆசிரியராக இல்லாவிட்டாலும் அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என அவர் விரும்புவதாக தகவல்கள் வந்துள்ளன.

அஜித் படத்தை இயக்கியவர் மரணம்; அழுகிய நிலையில் உடல் கிடந்தது.

அஜித் படத்தை இயக்கியவர் மரணம்; அழுகிய நிலையில் உடல் கிடந்தது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director siva kumarஅர்ஜூன் ரோஜா நடித்த ஆயுத பூஜை மற்றும் அஜித், மந்த்ரா நடித்த ரெட்டை ஜடை வயசு ஆகிய படங்களை இயக்கியவர் சிவகுமார்.

இவர் இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா அபார்ட்மென்ட் ஒன்றில் இவர் சில வருடங்களாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அரவது வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இவர் எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை. கொலையா,? தற்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் பிக்பாஸ்2; கமல் மீது வக்கீல் புகார்

ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் பிக்பாஸ்2; கமல் மீது வக்கீல் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanவிஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி வெற்றி பெற, அதன் இரண்டாம் பாகத்தையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது இந்த நிகழ்ச்சி மீது போலீசில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இநத் வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு சர்வாதிகாரி டாஸ்க் என்று ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பது போன்று உள்ளது என்று கூறி சென்னையை சேர்ந்த வக்கில் லூயிசாள் ரமேஷ் என்பவர், கமல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரியும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் லூயிசாள் ரமேஷ் கூறியிருப்பதாவது…

விஜய் டிவியில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக ஒளிப்பரப்பாகி வருகிறது. கமல் தனது மக்கள் நீதி மையத்தின் கட்சியை வளர்க்க எடுத்துள்ள யுக்தி தான் இந்த நிகழ்ச்சி.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறார்.

இவருடைய ஏற்பாட்டின் படி இந்தவாரம் சர்வாதிகாரி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா, சர்வாதிகாரியாக நடிக்கிறார்.

இவர் போட்டியில் பங்கேற்றுள்ளவர்களை கொடுமைப்படுத்தும் பல்வேறு செயல்களை செய்கிறார். இந்த டாஸ்க்கில் என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என முன்கூட்டியே இந்த தொடரை நடத்தும் எண்டாமல்சைன் இந்தியா நிறுவனமும், கமலும் கூறுகின்றனர்.

அதைத்தான் இவர்கள் நடித்து காட்டுகின்றனர்.

ஜூலை 31 அன்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் ரித்விகா என்ற போட்டியாளர், “இந்த டாஸ்க் வடநாட்டிலிருந்து வந்த ஐஸ்வர்யாவிற்கு தெரியாது, தமிழ்நாட்டில் இதற்கு முன் சர்வாதிகாரி ஆட்சி செய்தவர்களின் நிலைமை என்ன ஆச்சு என இவர்களுக்கு தெரியாது” என கூறுகிறார்.

இந்த டாஸ்க் முடிந்தவுடன் கமலும், சனிக்கிழமை அன்று, தமிழகத்தில் சர்வாதிகாரி போன்று ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்பது போல பேசுவார்.

தமிழகத்தை அமைதி பூங்காவாக ஆட்சி நடத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக, சர்வாதிகாரி போன்று சித்தரித்து நடத்தி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தடை செய்வதோடு, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் எண்டாமல்சைன் இந்தியா நிறுவனத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

More Articles
Follows