3 தோற்றங்களில் அதர்வா நடித்துள்ள *பூமராங்* படம் டிசம்பர் 28ல் ரிலீஸ்

3 தோற்றங்களில் அதர்வா நடித்துள்ள *பூமராங்* படம் டிசம்பர் 28ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atharva and Megha Akash starrer Boomerang release on 28th Dec 2018இயக்குனர் கண்ணன் மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் ‘பூமராங்’ படம் டிசம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்துதல் தான் மொத்த குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இயக்குனர் கண்ணன் கூறுகையில், “டிசம்பர் 28ஆம் தேதி பூமராங் படம் வெளியாக இருப்பதால் ஒட்டு மொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கடந்த ஒரு ஆண்டாகவே குழுவில் அனைவருக்கும் சவாலாக இருந்தது, குறிப்பாக இந்த படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க மிகவும் துல்லியமான முயற்சிகள் எடுத்த அதர்வா முரளிக்கு.

இந்த படம் மிகச்சிறப்பாக உருவாக எனக்கு மொத்த குழுவும் பக்க பலமாக இருந்தது ஒரு திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

எங்கள் முடிவில்லாத கடின உழைப்புக்கு இது புத்தாண்டு பரிசாக இருக்கும் என்று நான் உறுதியாக இருக்கிறேன். மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோரின் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என்றார்.

மேலும், நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “சிறந்த காட்சிகளை வழங்குவதில் உபென் படேல் சமரசமே செய்ய விரும்பவில்லை. வேறு ஒருவர் அவருக்கு டப்பிங் பேசினாலும், தமிழ் கற்றுக் கொள்ள அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார்.

படப்பிடிப்பின் போது அவரது குறைபாடற்ற பங்களிப்பை வழங்குவதற்கும் ஆர்வமாக இருந்தார். சுஹாசினி மணிரத்னம் மேடம் ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தில், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சதீஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகிய இருவருக்குமே சமமான முக்கியத்துவம் இருக்கும். வெறும் காமெடி மட்டுமல்லாமல், கதையில் முக்கிய பங்காகவும் இருப்பார்கள்.

‘அர்ஜுன் ரெட்டி’ மூலம் புகழ் பெற்ற ரதன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் கண்ணன் தனது மசாலா பிக்ஸ் மூலம் படத்தை தயாரித்திருக்கிறார்.

Atharva and Megha Akash starrer Boomerang release on 28th Dec 2018

சபாஷ் சரியான போட்டி; தனுஷ்-சிவகார்த்திகேயன் நேரடி மோதல்

சபாஷ் சரியான போட்டி; தனுஷ்-சிவகார்த்திகேயன் நேரடி மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and skநடிகராக ஜொலித்த தனுஷ் அண்மைக்காலமாக படங்களை தயாரித்தும் வருகிறார். இதில் சில படங்களில் அவரே நடித்தும் வருகிறார்.
அவர் தயாரித்து நடித்துள்ள மாரி2 படம் வருகிற டிசம்பர் 21ல் வெளியாகும் என இன்று காலை ஒரு போஸ்டரை வெளியிட்டார்.

இப்படத்தை பாலாஜி மோகன் இயக்க, சாய்பல்லவி மற்றும் வரலட்சுமி இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த போஸ்டர் வந்த சில மணி நேரங்களில் இன்று மாலை சிவகார்த்திகேயனும் தன் படம் வெளியீட்டை அதே நாளில் அறிவித்துள்ளார்.

கனா படம் டிசம்பர் 21ல் வெளியாகும் என அறிவித்துள்ளார். இந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரித்து சின்ன வேடத்திலும் நடித்துள்ளார்.

இப்படத்தை அருண்ராஜா காமராஜா இயக்க, ஐஸ்வர்யா நாயகியாக நடித்துள்ளார்.

இவையில்லாமல் விஜய்சேதுபதியின் சீதக்காதி (டிசம்பர் 20), ஜெயம் ரவியின் அடங்கமறு, அதர்வாவின் பூமராங், விஷ்னு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களும் டிசம்பர் 21ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

ரஜினி படம் போல செம மாஸா இருக்கனும்..; அட்லிக்கு விஜய் கன்டிசன்.?

ரஜினி படம் போல செம மாஸா இருக்கனும்..; அட்லிக்கு விஜய் கன்டிசன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay condition to director Atlee in Thalapathy 63 movieவிஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மெர்சல் மற்றும் இந்த வருடம் வெளியான சர்கார் ஆகிய 2 படங்களும் அரசியல் பிரச்சினைக்கு உள்ளானது.

இதனால் விஜய் ரொம்பவே அப்செட் ஆகி விட்டாராம்.

அடுத்த படமும் அப்படியிருந்தால் இன்றைய நிலைமைக்கு சரிவராது என்பதால் அட்லி இயக்கவுள்ள தளபதி 63 படத்திற்கு விஜய் சில நிபந்தனைகள் விதித்துள்ளாராம்.

அரசியல் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் படம் ரஜினி பட பாணியில் செம கமர்சியல் மாஸாக இருக்க வேண்டும் என கன்டிசன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Vijay condition to director Atlee in Thalapathy 63 movie

மாரி 2 ரிலீஸ்; தனுஷ் செய்த பிரச்சினையால் அவசர கூட்டத்திற்கு விஷால் ஏற்பாடு

மாரி 2 ரிலீஸ்; தனுஷ் செய்த பிரச்சினையால் அவசர கூட்டத்திற்கு விஷால் ஏற்பாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush vishalகடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் என இரண்டு மாதங்கள் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே போராட்டத்தில் ஈடுப்பட்டது.

அதனையடுத்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தயாரிப்பாளர்கள் சங்கம் ரிலீஸ் தேதிக்கான கடிதம் கொடுத்த பின்னரே அந்த தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என அறிவித்தனர்.

பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இந்த நடைமுறையை கடைப்பிடித்தாலும் சில தயாரிப்பாளர்கள் இதை பின்பற்றுவது இல்லை.

அண்மையில் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் மற்றும் விஜய்சேதுபதியின் சீதக்காதி ஆகிய படங்கள் தயாரிப்பாளர்கள் சங்க கடிதம் இல்லாலே படத்தின் வெளியிட்டு தேதியை அறிவித்தனர்.

இதில் சீதக்காதி படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனையடுத்து டிசம்பர் 21ல் ஜெயம் ரவி நடித்துள்ள “அடங்கமறு, அதர்வா நடித்துள்ள பூமராங், விஷ்னு விஷால் நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் வெளிவரும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று வெளியான மாரி 2 போஸ்டரில் டிசம்பர் 21ல் படம் வெளியாகும் என அறிவித்துள்ளார் தனுஷ்.

சங்கம் அனுமதியில்லாமல் திடீரென தனுஷ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் இது குறித்து ஆலோசிக்க விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் நாளை சந்தித்து பேசவுள்ளனர்.

ரஜினி-அஜித் மோதல்..; தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் சூர்யா

ரஜினி-அஜித் மோதல்..; தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith rajini suryaசில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சூர்யாவின் என்ஜிகே படத்தின் சூட்டிங்கை மறுபடியும் தொடங்கியுள்ளார் செல்வராகவன்.

இந்த மாத இறுதிக்குள் சூட்டிங்கை முடித்துவிட்டாலும் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளுக்கு போதுமான காலம் இல்லை என்பதாலும் பொங்கல் சமயத்தில் நிறைய போட்டி இருப்பதாலும் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்து இருக்கிறார்களாம்.

2019 பொங்கலை முன்னிட்டு ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் மோதுகின்றன.

இத்துடன் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படமும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இதன் பின்னர் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு கார்த்தி நடித்துள்ள தேவ் திரைப்படம் வெளியாகவுள்ளது.

எனவே இந்த படங்கள் வெளியாகும் சமயத்தில் நம் படம் வந்தால் சரியாக இருக்காது என்பதால் தன் நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படத்தை 2019 கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம் சூர்யா.

டிசம்பர் 18-25 வரை *சென்னையில் திருவையாறு*; முதல்வர் பங்கேற்கிறார்

டிசம்பர் 18-25 வரை *சென்னையில் திருவையாறு*; முதல்வர் பங்கேற்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

CM Edappadi Palanisamy will participate in Chennaiyil Thiruvaiyaru eventமனம் மகிழ்ச்சியடைவதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், தெய்வ வழிபாட்டுக்கும், தேச பக்திக்கும், கொள்கை முழக்கத்துக்கும், மக்களின் மனங்களை இணைப்பதற்கும் ஒரு பாலமாகவே இசை பயன்பட்டு வருகிறது.

அந்த இசையைப் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அயராது பாடுபடும் இசைக் கலைஞர்களை கெளரவிக்கவும், அப்பணியை சிறப்புடன் செய்யும் பெரியோர்களை பெருமைப்படுத்தவும் ஒரு மிகச் சிறந்த மேடையை “சென்னையில் திருவையாறு” சங்கீத நாட்டிய விழா அமைத்துத் தந்திருக்கிறது.

அதனால் தான், ஆண்டுதோறும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான மைல்களைக் கடந்து வேடந்தாங்கலை முற்றுகையிடும் பறவைகளைப் போல, இசை ரசிகர்களும் மார்கழி மாதத்தில் சென்னையை நோக்கிக் குவிந்து வருகிறார்கள்.

உறவினர்களையும் நண்பர்களையும் பார்த்து மகிழ்வதுடன் இந்த தெய்வீக அனுபவத்தையும் பெற வேண்டும் என்ற வேட்கையுடன் குடும்பம் குடும்பமாக நம் தேசத்திற்கு வருவதை வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கர்நாடக இசை என்றால் அது நமக்கில்லை என காததூரம் சென்ற காலம் மலையேறி, இன்று வீட்டுக்கு வீடு தங்கள் குழந்தைகளை சாஸ்திரீய சங்கீதப் பயிற்சியில் சேர்த்து விடுவதைப் பார்க்க முடிகிறது.

இல்லங்கள்தோறும் ஏதாவதொரு இசைக் கருவியை அலங்கார கலைப் பொருளாய் வைப்பதைப் பெருமையாக நினைக்கத் தொடங்கும் அளவுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் பட்டி தொட்டியெல்லாம் பிரம்மாண்ட சுவரொட்டி விளம்பரங்களில் கர்நாடக சங்கீதக் கலைஞர்களின் படங்கள் புன்னகைப்பதை இன்று பார்க்க முடிகிறது.

நமது பாரம்பரிய இசை, நடனம், தெய்வீகப் பிரசங்க மரபுகள் மீது இளைஞர்களுக்கு ஆர்வம் குறைந்து, இந்த அற்புதமான கலை வடிவங்கள் கொஞ்சம், கொஞ்சமாக மங்கி வழக்கொழிந்து போய்விடுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில் தான், புது ரத்தமாய் புத்தொளியாய் வந்து, பெரும் இசைப் புரட்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றன இந்நிகழ்ச்சிகள்.

இசை மனித குலத்துக்கு கிடைத்த மகத்தான வரப்பிரசாதம். வாழ்க்கையின் அத்தனை நிலைகளிலும் அது இரண்டறக் கலந்திருக்கிறது என்றால் மிகையல்ல. அதில் எத்தனை வகை. இருந்தாலும்… நாடு, இனம், மொழி என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் கவர்ந்து ஒருங்கிணைக்கும் சக்தி கொண்டதாக அது விளங்குகிறது.

மழையைத் தருவிக்கவும், நோய் தீர்க்கும் அருமருந்தாக அமையவும் இசையால் முடியும் என்பது வெறும் வார்த்தை ஜாலமல்ல, சத்தியமான சாத்தியமான உண்மை என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தொன்மையான நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும், கலைகளிலும் உலகத்திற்கே முன்னோடியான நமது இந்திய தேசத்தில் எண்ணற்ற அரிய கலைகள் தோன்றி மக்களை மகிழ்வித்து சென்றிருக்கின்றன.

அவ்வாறாக தோன்றிய அருங்கலைகளில் இன்றும் உயிர்ப்போடு காண்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்துகின்ற ஒன்று என்று சொன்னால் தென்னிந்தியாவின் “கர்நாடக சங்கீதம்” என்பதை யாரும் மறுக்க இயலாது.

அவ்வரிய கலைகளில் முக்கியமானதும் முதன்மையானதுமான கர்நாடக சங்கீதத்திற்கென்று அனைத்து தரப்பு ரசிகர்களுடன் இளம் தலைமுறையினரும் ஆவலோடு கலந்து கொள்ளக்கூடிய வகையில், புதிய பரிமாணத்தில் கடந்த பதிமூன்று வருடங்களாக “சென்னையில் திருவையாறு” என்கிற விழா “லஷ்மன் ஸ்ருதி இசையகம்” சார்பாக வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு, இசைத்துறையில் வித்வத்தன்மை கொண்டோரையும், வித்தியாசமான ரசிப்புத்தன்மை கொண்டோரையும், சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோரையும், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றுவோரையும், அறிவுசார் ஆலோசனை வழங்குவோரையும், அருவியாய் கலை நுணுக்கங்களை அளிப்போரையும் தேர்வுக்குழுவாய் அமைத்து, எண்ணற்ற ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் கலைஞர்களைத் தேர்வு செய்து காண்போரையும் கேட்போரையும் கனவுலகிற்கே அழைத்துச் செல்லும் கடும் முயற்சிதான் “சென்னையில் திருவையாறு” விழா!

எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொடங்குவது சுலபம், அதைத் தொடர்வது சிரமம்.

அதிலும் வெற்றிகரமாக 13 ஆண்டுகளை நிறைவு செய்து, சிறிதும் தொய்வின்றி 14 வது ஆண்டில் அடி வைத்திருப்பது மிகப் பெரிய சாதனை என்பதில் சந்தேகமில்லை. சகாப்த சாதனை மைல்கல்களை கடந்து உற்சாகமாக பயணிக்கிறது ”சென்னையில் திருவையாறு” என்ற இந்த சங்கீத நாட்டிய விழா.

ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில் நிகழக்கூடிய தரமான, அழகான, முழுமையான இசை விழாவாகவும், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் “சென்னையில் திருவையாறு” இசை விழா திகழ்கின்றது.

இவ்வினிய விழா வருகிற டிசம்பர் 18ஆம் தேதி காலை 11 மணிக்கு மணிக்கு ”எஸ்.ஜெயராமன்” அவர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

ஸ்ரீ தியாகராஜர்

“எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு” என்ற மிகப்பிரபலமான தெலுங்கு பாடலுக்குச் சொந்தக்கார் தியாகராஜர். எத்தனையோ சங்கீத கர்த்தாக்கள், சங்கீத லக்ஷண கிரந்த கர்த்தாக்கள், சாஸ்திரீய சம்பிரதாயப்படி சங்கீத உருப்படிகளை கர்நாடக சங்கீதத்தில் இயற்றியுள்ளார்கள். இவர்களில் முதன்மையானவராக “ஸ்ரீ தியாகராஜர்” திகழ்கின்றார்.

இவர் இயற்றிய சங்கீத உருப்படிகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது “பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்” ஆகும். கர்நாடக இசையில் கன ராகங்களாகக் கருதப்படும் நாட்டை, கவுளை, ஆரபி, வராளி மற்றும் ஸ்ரீ ஆகிய ஐந்து ராகங்களில் தியாகபிரும்மம் அவர்கள், தான் வணங்கிய ஸ்ரீராமபிரானைப் போற்றி இயற்றிய ஐந்து பாடல்கள் உலகமெங்கும் இசைக்கலைஞர்களால் இன்றும் பாடப்பட்டு வருகிறது.

எண் திசையிலிருந்தும் வந்து பண்பாடும் கலைஞர்களின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை செவி மடுத்துக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள கர்நாடக இசை ஆர்வலர்கள் மட்டுமின்றி அயல்நாட்டவரும் கூட தியாகராஜரின் கீர்த்தனைகளினால் கவரப்பட்டு “தியாக ப்ரம்ஹ ஆராதனை” விழாவில் கலந்துகொண்டு வருகின்றனர்.

எல்லோரும் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் கலந்து கொள்வது என்பது இயலாத ஒன்று.

அப்படியொரு இசைவிழாவினை சென்னையில் உள்ளோரும் கண்டு, கேட்டு, களிக்கும் வகையில் லஷ்மன் ஸ்ருதியின் சார்பாக உங்கள் பேராதரவுடன் சென்னையில்-திருவையாறு என்ற வடிவத்தில் பதினான்காவது முறையாக இவ்வாண்டு அரங்கேற்றுகின்றோம்.

மும்மூர்த்திகளின் ஆசியுடன் தமிழ்த்திருநாட்டின் தலைநகரமாம் சென்னையில் வாழும் இசை உள்ளங்கள் மட்டுமல்லாமல் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய எல்லைகள் கடந்து இசை வேட்கையோடு வருகை தரும் ரசிகர்களுக்காக தஞ்சை மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலைநாட்டவரும் நிகழ்வே “சென்னையில் திருவையாறு”.

பாரத தேசத்தின் பாரம்பரிய இசையைப் போற்றிக் காக்கும் வகையிலும் எதிர்கால சந்ததியினருக்கும் களம் அமைத்துக்கொடுக்கும் வகையிலும் கரை புரண்டுவரும் ஒர் அற்புத சங்கமம்தான் “சென்னையில் திருவையாறு”
சென்னையில் திருவையாறு” துவக்க நாளான டிசம்பர் 18 ஆம் தேதி மதியம் 3.00 மணிக்கு திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை விழாபோல் ஸ்ரீராமர், ஸ்ரீலஷ்மணர், ஸ்ரீசீதாபிராட்டியர், ஸ்ரீஅனுமன் ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் விக்ரகங்கள் மேடையில் அமைக்கப்பட்டு சிறப்பு சாஸ்த்ரிய சம்பிரதாய பூஜையுடன் காண்பதற்கரிய வைபவமாக துவங்குகிறது.

ஒரே மேடையில் ஐநூறுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒன்றாகச் சேர்ந்து பாடுகின்றனர். பெரியவர், சிறியவர் என்ற வயது பேதமின்றி, புகழ் பெற்ற மற்றும் வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரும், ஆண், பெண் வித்தியாசமின்றி அனைத்து கர்நாடக சங்கீத இசைக் கலைஞர்களும் தங்கள் இசைக்கருவிகள் சகிதம் ஒன்றிணைந்து பாடி, தஞ்சை திருவையாறு ஆராதனை விழாவை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள்.

இந்நிகழ்வில் பங்கேற்கும் இசைக் கலைஞர்கள், பார்வையாளர்கள் உட்பட அனைவருக்கும் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பார்த்துப் பாடுவதற்காக, தியாகராஜரின் ஐந்து கீர்த்தனைகள் அடங்கிய புத்தகம், விழா துவங்கும் முன் வழங்கப்படும். பஞ்சரத்ன கீர்த்தனைகளை துல்லியமாக பாடும் குரல்வளம் பெற்றோரையும், இசைக்கும் திறமை பெற்றோரையும் இதில் கலந்து கொண்டு பாடுவதற்கு அன்போடு அழைக்கின்றோம்.

திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழாவுக்கு நேரில் சென்று காண இயலாத இசை ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் “சென்னையில் திருவையாறு” துவக்க விழா நிகழ்வில் கலந்து கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனைகளைக் கேட்டு இறைவனருள் பெற வேண்டுகிறோம்.

பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடும் வைபவம் நிறைவுற்றதும் சரியாக மாலை 4.45 மணிக்கு “சென்னையில் திருவையாறு” சங்கீத வைபவத்தின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெறும்.

விழாவை மரியாதைக்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தங்களது பொற்கரங்களால் துவக்கி வைக்கிறார்.

துவக்க விழாவின் சிறப்பம்சமாக ஒவ்வொரு ஆண்டும் ”சென்னையில் திருவையாறு” அமைப்பின் சார்பாக கர்நாடக சங்கீத மற்றும் நாட்டிய உலகின் தலைசிறந்த சாதனைக்கலைஞர் ஒருவருக்கு அவரது கலையுலக வாழ்நாள் சேவையையும் சாதனையையும் பாராட்டும் விதமாக “இசை ஆழ்வார்” என்ற கெளரவ விருதை தங்கப்பதக்கத்துடன் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

தவில் இசை என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கர்நாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் மங்கள இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

தவில் இசையில் சாதனைகள் பல செய்தவரும், இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னணிக் இசைக் கலைஞர்களுடன் இணைந்து ‘ஒருங்கிணைந்த வாத்திய இசை’ நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ள “பத்மஸ்ரீ ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல்” அவர்களின் இசைச்சேவையைப் பாராட்டும் முகமாக “இசை ஆழ்வார்” பட்டம் வழங்கி கெளரவம் செய்யப்பட உள்ளது.

சென்னையில் திருவையாறு துவக்கவிழாவில் தனது மெல்லிசையால் நம் அனைவரது உள்ளங்களையும் ஆட்கொண்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை கெளரவிக்கும் வகையில் லண்டன் வேக்ஸ் மியூசியத்தில் உள்ளதைப்போல் தத்ரூபமான மெழுகுச்சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட உள்ளது.

”பத்மபூஷண் அபிநய சரஸ்வதி திருமதி சரோஜாதேவி” அவர்கள் அன்னாரது சிலையை திறந்து வைக்கிறார்
உலகத்தரம் வாய்ந்த சிற்பக் கலைஞர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்படும் இந்த மெழுகுச்சிலை பார்ப்பவர்களை பரவசப்படுத்தி வியப்பில் ஆழ்த்த உள்ளது.

வளரும் இளம் கலைஞர்கள் மட்டுமல்லாது, தமிழ் இசையுலகில் இன்று நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கும் பிரபலங்களும் தங்களின் மானசீக குருவாக போற்றி வணங்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் திருவுருவ மெழுகுச் சிலையுடன் பொதுமக்களும், இசை ரசிகர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ள காமராஜர் அரங்கின் நுழைவு மண்டபத்தில் வசதி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் “பாரத ரத்னா” ஏ.பி.ஜே.அப்துல்கலாம், “பாரத ரத்னா” எம்.எஸ்.சுப்புலட்சுமி, “பாரத ரத்னா” எம்.ஜி.ஆர் மற்றும் ”பத்மவிபூஷண்” டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

துவக்க விழாவினைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கர்நாடக இசைக் கலைஞர் சுதா ராஜா, பியானோ அனில் ஸ்ரீனிவாசன், புல்லாங்குழல் சஷாங் குழவினரின் இசை நிகழ்ச்சியோடு சென்னையில் திருவையாறு இசை நிகழ்வுகள் துவங்குகின்றன.

தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் வாய்ப்பாட்டிசையுடன் முதல்நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.

CM Edappadi Palanisamy will participate in Chennaiyil Thiruvaiyaru event

Chennaiyil thiruvaiyaru

More Articles
Follows