அதர்வா-ஹன்சிகா நடிக்கும் 100 பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

அதர்வா-ஹன்சிகா நடிக்கும் 100 பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharvaaஅதர்வா நடிப்பில் தற்போது ‘செம போத ஆகாத’, ‘பூமராங்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் செம போத ஆகாத திரைப்படம் ஜீன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து அதர்வா நடிக்கும் ‘100’ என்று தலைப்பிடப்பட்ட படத்தை `டார்லிங்’ பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கி வருகிறார்.

இதில் நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார்.

இந்த படத்தில் அதர்வா போலீசாக நடிக்கிறார். 100 என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

சூர்யா-ஜோதிகாவின் மகன் பெயரில் கார்த்தி நடிக்கும் பிரம்மாண்ட படம்

சூர்யா-ஜோதிகாவின் மகன் பெயரில் கார்த்தி நடிக்கும் பிரம்மாண்ட படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi in devகடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ்“

கார்த்தியின் அண்ணன் சூர்யாவின் மகன் பெயரும் தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது.

அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் , “ சிங்கம் -2 “ , த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “ மோகினி “ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது .

முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் S. லக்ஷ்மன் எந்தவித சமரசமுமின்றி 55 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

ஆக்சன் , காமெடி , அட்வென்ஜர் கலந்து உருவாகும் இப்படத்தின் அடுத்தகட்டப்படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்க உள்ளது.

இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெறவுள்ளது. விறுவிறுப்பான கார் சேசிங் மற்றும் பாடல் காட்சிகள் இங்கே படமாக்கப்படவுள்ளன.

இதை தொடர்ந்து அதிரடி சண்டை காட்சிகள் இமாலய மலைகளிலும் , மும்பை மற்றும் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன. மேலும் அமெரிக்காவில் உள்ள மிகவும் அழகான லொகேஷன்களில் இப்படம் படமாக்கப்படவுள்ளது.

கார்த்தியின் ஸ்டைலிஷான லுக் மற்றும் மாஸான தோற்றம் படத்தில் புதுமையான ஒரு விஷயமாக இருக்கும்.

ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ் ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , அம்ருதா , விக்னேஷ் , டெம்பர் ( தெலுங்கு ) வில்லன் வம்சி ரவி , ரவி மற்றும் சிறப்பு வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

நடிகை கௌதமி உள்ளிட்ட 7 பெண்கள் பார்த்து பாராட்டிய X Videos

நடிகை கௌதமி உள்ளிட்ட 7 பெண்கள் பார்த்து பாராட்டிய X Videos

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Gautami praises X Videos tamil moviesஇயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சஜோ சுந்தர் ‘x வீடியோஸ்’ என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கதையின் இயல்பு தன்மைக்காக அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் என முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.

படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது. தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது.

இன்று ஜூன்-1ஆம் தேதி படம் வெளியாவதை முன்னிட்டு இந்தப்படம் பற்றிய தகவல்களையும் படம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கான பதில்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் இயக்குனர் சஜோ சுந்தர்.

“இன்று இணையதளத்தில் நிர்வாணப்படங்களை வெளியிட்டு சமூகத்தை சீரழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ‘x வீடியோஸ்’ என்கிற இணையதளம்.. இந்த இணையதளம் மூலம் மக்களின் வாழ்க்கையில் எப்படி இவர்கள் விளையாடுகிறார்கள் என்பதைத்தான் இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறோம்.

அந்தவகையில் இது முழுக்க முழுக்க ‘x வீடியோஸ்’ என்கிற இணையத்தளத்திற்கு எதிரான படம்.. ரசிகர்களை ஈர்க்கும் விதமான தலைப்பாக இருக்கட்டும் என இந்த டைட்டிலை வைத்திருந்தாலும் கூட, ‘x’ என்றால் தவறு என்கிற கருத்தைத்தான் இதில் சொல்லியிருக்கிறோம்.

இது முழுக்க பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்தப்படத்தில் நிர்வாண கடசிகள் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுவது முற்றிலும் தவறு.. அரை நிர்வாண காடசிகள் இடம்பெற்றுள்ளன என்றாலும், அவை கூட கதையின் தேவை கருதி தானே தவிர, எதுவும் வலிந்து திணிக்கப்படவில்லை.

இந்தப்படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் யாரும் இரண்டாந்தர படங்களில் நடிக்கும் நடிகர்கள் அல்ல.

எல்லோருமே கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்..அவர்களுக்கும் நடிக்கும்போது ஆரம்பகட்ட சங்கோஜங்கள் இருந்தன.

ஆனால் மக்களுக்கெதிராக நடக்கும் இதுபோன்ற தவறுகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தினால் கதைக்காக மட்டுமே அவர்கள் இந்தப்படத்தில் முழு மனதுடன் ஒப்புக்கொண்டு நடித்துள்ளார்கள்.

இந்த படத்தை சென்சார் போர்டிலுள்ள 7 பெண் உறுப்பினர்களும் பார்த்தார்கள். குறிப்பாக சென்சாரில் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகை கௌதமி இந்தப்படத்தை பாராட்டியதோடு, இதுபோன்ற படம் வெளிவரவேண்டும் என வாழ்த்து சொல்லி இந்தப்படத்தை அனுமதித்தார்கள்.

இன்னும் நிறைய தகவல்களுடன் இந்தப்படத்தின் 2ஆம் பாகத்தையும் நீங்கள் எடுக்கவேண்டும் என ஊக்கமும் கொடுத்தார். இந்தப்படத்தை இந்த அளவிற்கு மக்கள் பார்த்தல் போதுமானது என கூறி, ஒரு சில காட்சிகளை மட்டும் சென்சாரில் விதிகளுக்கு உட்பட்டு நீக்கினார்கள்.

மற்றபடி இன்றைய சூழலில் அவசியம் சொல்லப்படவேண்டிய கருத்துள்ள முக்கியமான படம் இது என்று பாராட்டினார்கள்.

கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட சைபர் உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம் தான். நம் வீட்டில் குளியல் அறையிலோ படுக்கையறையிலோ நம் ஸ்மார்ட் போனை வைத்து விட்டால் போதும் அதிலுள்ள வசதி மூலம் எங்கிருந்தோ ஒருவன் உங்கள் கேமராவை இயக்க முடியும். படம் பிடிக்க முடியும்.

இந்த அதீத தொழில்நுட்ப பயங்கரம் யாருக்கும் தெரிவதில்லை. இதற்கெல்லாம் பின்னணியில் இந்த ‘x வீடியோஸ்’ என்கிற இணையத்தளத்திற்கு பக்கபலமாக செயல்படுவை மொபைல் ‘ஆப்’கள் (Apps ) தான்.

இன்று தொட்டதற்கெல்லாம் ஆப் உபயோகப்படுத்துகிறார்கள். அவற்றை உங்கள் மொபைல் போனில் உள்ளீடு செய்யும்போதே உங்கள் போனில் உள்ள உங்களது அனைத்து தகவல்களையும் எடுத்துக்கொள்வோம் என கூறி உங்கள் அனுமதியுடன் தான் அவர்கள் உங்கள் அந்தரங்கத்தில் கால் வைக்கிறார்கள்.

மிகப்பயங்கரமான தகவல் திருட்டை உங்கள் அனுமதியுடனேயே அவர்கள் செய்கிறார்கள் என்பதுதான் இதில் வேதனையான விஷயம்.. இதன் பின்னணியில் கோடிக்கணக்கில் வர்த்தகம் இருக்கிறது.

இன்று தொண்ணூறு சதவீதம் மொபைல் ‘ஆப்’கள் (Apps ) பின்னணியில் இந்த ‘x வீடியோஸ்’ என்கிற இணையதளம் முக்கிய கருவியாக இருக்கிறது.

பொத்தாம் பொதுவாக இந்த குற்றச்சாட்டை நான் வைக்கவில்லை.. இல்லை, நான் சொல்வது தவறு என சொல்லிக்கொண்டு யாரையாவது வரச்சொல்லுங்கள் பார்ப்போம்.. அப்படி இதுவரை இந்த கருத்தை எதிர்த்து ஒருவரும் வரவில்லை. வரவும் மாட்டார்கள்.. காரணம் அதுதான் உண்மை.

இயக்குனராக எனக்கு இது முதல் படம்.. இந்தப்படத்தின் மூலம் வருமானம் சம்பாதிக்கவேண்டும் என்பது என் நோக்கம் கிடையாது.. இந்தப்படத்திற்கு நான் செலவழித்த பணம் திரும்ப வந்தாலே, அதுவே போதுமானது.

இந்தப்படத்தை பார்க்கும் மக்கள் இதன்பின்னராவது கொஞ்சம் உஷாராகி விடுவார்கள் என்றால் அதுதான் எனக்கு லாபம்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்துடன் இதனை ஒப்பிட வேண்டாம்.. அந்தப்படத்தை பார்ப்பதால் சும்மா சிரித்துவிட்டு போவதை தவிர வேறு என்ன லாபம் இருக்கிறது..?

ஆனால் இந்த ‘x வீடியோஸ்’ படத்தை பார்க்கிற ரசிகர்களுக்கு இதில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு தகவலும் லாபம்.

இது ஆபாசப்படம் அல்ல.. ஆபாசத்தை பற்றிய படம்.. அசிங்கங்களை பேசுவது அசிங்கம் என் நாம் நினைத்துக்கொள்வதால் தான் நாட்டில் பல அசிங்கங்கள் நடக்கின்றன என்பதை குறிப்பிடுகிற படம் இது.

இதுவரை படம் பார்த்த அனைவரிடமும் இருந்து பாராட்டுக்கள் மட்டுமே குவிந்துள்ளன. இனி படத்திற்கான வரவேற்பு மக்கள் கையில் தான் இருக்கிறது.. அவர்கள் என் மீது கல்லெறிகிறார்களா இல்லை பூக்களை வீசுகிறார்களா என்பதை அறிந்துகொள்ள காத்திருக்கிறேன்.

Actress Gautami praises X Videos tamil movies

சாம்பியன் ஆட்டத்தில் யுவனை சேர்க்க முடியவில்லை; சுசீந்திரன் கடிதம்

சாம்பியன் ஆட்டத்தில் யுவனை சேர்க்க முடியவில்லை; சுசீந்திரன் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director suseenthiranகால்பந்தாட்டத்தை மையப்படுத்தி சுசீந்திரன் `சாம்பியன்’ என்ற படத்தை இயக்குகிறார்.

இதன் சூட்டிங் அண்மையில் துவங்கியது.

இந்த நிலையில், இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாதது குறித்து இயக்குநர் சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து ஒரு கடித்த்தை வழக்கம்போல பதிவிட்டுள்ளார்.

அதில் யுவன் ஷங்கர் – உடன் சாம்பியன் படத்தில் நான் பணியாற்ற முடியவில்லை… யுவன் ரசிகர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

யுவனுடன் நான் பணியாற்ற முடியாத சூழ்நிலைக்கு காரணம் இப்பொழுது யுவனை சுற்றியுள்ள நண்பர்கள் தான் (புதிய நண்பர்கள்) காரணம்… இந்த தகவலை கூட நான் யுவனிடம் கூற முடியவில்லை. எதிர்காலத்தின் உறுதியாக நான் யுவனுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்.

இவ்வாறு கூறியிருக்கிறார்.

மக்கள் வேண்டாம் என முடிவெடுத்தால் காலா-வை ரிலீஸ் செய்ய மாட்டோம்…: முதல்வர் உறுதி

மக்கள் வேண்டாம் என முடிவெடுத்தால் காலா-வை ரிலீஸ் செய்ய மாட்டோம்…: முதல்வர் உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

HD Kumarasamyரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஜீன் 7ல் வெளியாகவுள்ளது.

அண்மையில் காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகத்திற்கு எதிராக ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

எனவே கர்நாடகாவில் காலா திரைப்படத்தை வெளியிட விடமாட்டோம் என சமீபத்தில் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்தார்.

அதைத்தொடர்ந்து, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையும் காலா திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என முடிவு செய்து அறிவித்தது.

இச்சம்பவம் தொடர்பாக பேசிய ரஜினி, கர்நாடகத்தில் திரைப்படத்தை வெளியிடும் விவகாரத்தை தென்னிந்திய வர்த்தகசபை பார்த்துக்கொள்ளும் என தெரிவித்திருந்தார்.

அதற்கான பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் முதல்வர் குமாரசாமிக்கு மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், ரஜினியின் காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவது குறித்து அரசு முடிவு எடுக்கவில்லை எனவும், மக்கள் வேண்டாம் என முடிவு செய்துவிட்டால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

சமூக விரோதிகள் பற்றி ரஜினி சொன்னது சரிதான்.; ஆதாரம் தருகிறார் லிங்கா நஷ்ட புகழ் சிங்காரவேலன்

சமூக விரோதிகள் பற்றி ரஜினி சொன்னது சரிதான்.; ஆதாரம் தருகிறார் லிங்கா நஷ்ட புகழ் சிங்காரவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lingaa fame Distributor Singaravelan reaction to Rajini speech about Tuticorin Sterlite issueரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தின் மூலம் திரைப்பட விநியோகஸ்தராக பலராலும் அறியப்பட்டவர் சிங்காரவேலன்.

லிங்கா நஷ்டத்தை ரஜினி திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும் என பல மேடைகளில் பேசி பாப்புலர் ஆனவர் இவர்.

அன்று ரஜினியை எதிர்த்து பேசியவர் இன்று ரஜினிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

அடிப்படையில் சிங்காரவேலன் ஒரு கப்பல் பொறியாளர். இவருடைய நிறுவனம் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டின் கெமிக்கல் டேங்கர் கப்பலை பராமரித்து வருகிறது.

அவர் ஸ்டெர்லைட் குறித்தும், ரஜினிகாந்த் பேசியது குறித்தும் சில விளக்கங்களை கொடுத்துள்ளார்.

ஸ்டெர்லைட் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் செய்திகளும், அரசியல் பிரமுகர்கள் சிலரால் கூறப்படும் தகவல்களும் திரித்து, மிகைப்படுத்தி கூறப்பட்டு வருகின்றது.

ஸ்டெர்லைட் ஆலை தாமிர உற்பத்தி செய்யும் போது சல்பர் – டை – ஆக்சைடை வெளியேற்றுவதாகவும், அந்த வாயு கேன்சரை உருவாக்குவதாகவும் ஊடகங்களில் பரப்பப்படுகிறது.

ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம் சல்பர் டை ஆக்சைடை சல் ப்யூரிக் அமிலமாக மாற்றி கப்பல் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் காக்கிநாடா, ஒரிஸ்ஸாவில் பாரதீப், விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள உரத் தொழிற்சாலைகளுக்கு விற்று வருகிறது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்பீக் உரத் தொழிற்சாலைக்கும் சல் ப்யூரிக் அமிலத்தை விற்கிறது.
ஆலையிலிருந்து வெளிவரும் தேவையற்ற வாயுவையும் அமிலமாக மாற்றி, அதனை விற்கிறது ஸ்டெர்லைட். வருமானம் தரக்கூடிய வாயுவை ஸ்டெர்லைட் ஏன் வெளியேற்ற வேண்டும்?

அதனைப் போல ஆலையிலிருந்து வெளிவரும் வாயு முதலில் குளிர்விக்கப்பட்டு, அதனை பின்னர் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு தொட்டிக்குள் செலுத்தப்படுகிறது. கார்பன் உள்ளிட்ட தண்ணீரில் கரையும் பொருட்கள் நீரில் கரைந்த பின்பு, வாயு மட்டும் வெளிவருகிறது.

இதிலிருந்து சல்பர் டை ஆக்சைடு, ஆர்சனிக் போன்றவை தனியாக பிரிக்கப்படுகிறது. எஞ்சிய நஞ்சற்ற வாயு மட்டுமே வெளியேற்றப்படுகிறது.
கார்பன் கலந்த நீர் சுத்திகரிக்கப்பட்டு, தேவைக்கு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

குறைந்த அளவு உள்ள தண்ணீர் கழிவுகள் நீராவி கொண்டு ஆவியாக்கப்படுகிறது.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ஸ்டெர்லைட் எந்த வித நச்சு வாயுவையும் வெளியேற்றவில்லை.

அதே வேளையில் தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையங்கள் நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்துகின்றன. இதிலிருந்து வெளிவரும் வாயுக்களான கார்பன் – டை ஆக்சைடு, கார்பன் மோனாக் ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை சுற்றுப்புறத்திற்கு தீங்கை விளைவிக்கின்றன.

களத்தில் போராடும் மற்றும் போராட்டத்தை தூண்டி விடுபவர்கள் அனைத்து ஆலைகளையும் நேரில் ஆய்வு செய்தால் ஸ்டெர்லைட்டை எவருமே எதிர்க்கமாட்டார்கள்.

தூத்துக்குடியில் வைகுண்டராஜனுக்கு சொந்தமான ஒரு கெமிக்கல் ஆலை உள்ளது. இங்கு டைட்டானியம் – டை – ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து வெளியேற்றப்படும் வாயுக்கள் குறித்து யாரும் கேள்வி கேட்பதில்லை. அரசியல்வாதிகள் போராட கிளம்பினால் ” நியூஸ் 7 ” முகத்திரையை கிழிக்கும் என்ற பயம்.

தமிழ்நாட்டில் தொழில் நடத்தவேண்டுமென்றால் கண்டிப்பாக ஒரு நியூஸ் சேனல் வைத்திருக்க வேண்டும் என்பதை வேதாந்தா நிறுவனம் தற்போது உணர ஆரம்பித்திருக்கிறது.

ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக எழுதியிருக்கிறானே என்று யாரும் என்னை விரோதியாக கருத தேவையில்லை.

ஸ்டெர்லைட் நிறுவனம் சல் ப்யூரிக் அமிலத்தை கப்பலில் அனுப்புகிறார்கள் என்று சொன்னேன் அல்லவா? அந்த கப்பலை என்னுடைய நிறுவனம் தான் பராமரித்து வருகிறது.

அதனால் எனக்கு தெரிந்த விபரங்களை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இதனை குறிப்பிடுகிறேன்.

அதைப்போல, நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமூகவிரோதிகள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று குறிப்பிட்டதை எல்லோரும் எதிர்க்கிறார்கள்.

உண்மையை சொல்ல வேண்டுமானால், ரஜினிகாந்த் கூறியதில் எந்தவித தவறுமில்லை. உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த்.

மார்ச் மாதம் இறுதியில் மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட்டிற்கான உரிமத்தை புதுப்பித்து தரவில்லை.

எனவே ஸ்டெர்லைட் நிர்வாகம் உற்பத்தி எதையும் செய்யவில்லை. இதனால் எங்கள் நிறுவனத்தின் கப்பலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டு நிறுத்தி விட்டோம். நாங்கள் கப்பலை நிறுத்தும் போது மே 30 ஆம் தேதி வரை கப்பலுக்கு தேவையான எரிபொருள், உணவு பொருட்கள், நீர், ஆகியவை இருந்தது.

மே 29 ஆம் தேதி வாக்கில் கப்பலை துறைமுகத்திற்கு கொண்டு சென்று டீசல், நீர், உணவுப்பொருட்கள் வழங்கலாம் என திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் மே 20 ஆம் தேதிக்கு பிறகு தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த சில சமூக விரோதிகள் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ளே புகுந்து பெரிய அளவிலான தாக்குதலை நடத்த உள்ளார்கள் என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அந்த நேரத்தில் தூத்துக்குடி பகுதியில் பிரபலமாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். எனவே போராட்டத்தை பயன்படுத்தி கொள்ள பலர் முயல்வது தூத்துக்குடி முழுவதும் வெளிப்படையாகவே பேசப்பட்டது.

இதனால் தான் ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகி பாதுகாப்பு கேட்டது. எங்கள் நிறுவன கப்பலில் வேலை செய்வோரில் சிலர் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மூலமும் தகவல் உறுதியானது.

இதனால் மே 19 ஆம் தேதியே கப்பலை துறைமுகத்திற்கு வரவழைத்து அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் கொடுத்தனுப்பினோம்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சமூக விரோதிகள் அல்ல. அனைவரையும் சமூக விரோதிகள் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிடவுமில்லை.

மக்களுக்கே தெரியாமல் போராட்டத்தை சமூக விரோதிகள் பயன்படுத்தி கொண்டனர் என்பதே உண்மை.

99 நாட்கள் அமைதியாக போராடினோம் என்று சிலர் கூறுகிறார்கள். இதில் ஒரேயொரு சந்தேகம் மட்டும் எழுகிறது.

மார்ச் இறுதியிலேயே ஆலை மூடப்பட்ட பிறகு எதற்கு மே 22 வரை போராட்டம் என்பது புரியாத புதிராக உள்ளது.

தமிழக மாசு கட்டுப்பட்டு வாரியம் உரிமம் வழங்கியிருந்தால், போராடியிருக்கலாம். மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து மார்ச் இறுதியில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்த பிறகு, மே 22 அன்று நூறாவது நாள் ஆர்ப்பாட்டம் தேவைதானா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

ஸ்டெர்லைட்டின் போட்டியாளர்களால் சிலர் தூண்டி விடப்படுகிறார்கள் என்பதையும், வதந்திகளை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்பதையும் தாழ்மையோடு தெரிவித்து கொள்கிறேன்.

கப்பலில் சல் ப்யூரிக் அமிலம் ஏற்றப்பட்ட டேங்கிலிருந்து சல் பர் ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளிவரும். ஆனால் இதை சுவாசித்த யாருக்கும் கேன்சர் வரவில்லை. நான்கு வருடமாக வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் கப்பலில் வேலை செய்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் யாருக்கும் எந்த தீங்கும் வரவில்லை. எனவே பொதுமக்கள் வதந்தியை நம்பி பயப்பட தேவையில்லை என்பதையும் தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

R. சிங்காரவேலன், முதன்மை கப்பல் பொறியாளர்.

Lingaa fame Distributor Singaravelan reaction to Rajini speech about Tuticorin Sterlite issue

More Articles
Follows