பிறந்த நாளில் ரஜினியை சந்தித்த இசையமைப்பாளர் தரண் !

பிறந்த நாளில் ரஜினியை சந்தித்த இசையமைப்பாளர் தரண் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music director Dharanதமிழ் சினிமாவின் இளம் திறமைகளுள் ஒருவராக வளர்ந்து வருபவர் இசையமைப்பாளர் தரண். இவர் சமீபத்தில் தன் பிறந்த நாளை கொண்டாடினார். ஆனால் ஆச்சர்யமாக அவருக்கு கிடைத்த ஒரு பிறந்த நாள் பரிசு அவர் வாழ்வில் மறக்கமுடியாத பேரின்பமாக அமைந்தது. இன்னும் அந்த சந்தோஷ அதிர்ச்சியிலிருந்து மீளாதவராக அதனை கொண்டாடி வருகிறார். இசையமைப்பாளர் தரண் தமிழகத்தின் சூப்பர்ஸடார் ரஜினிகாந்தை பிறந்த நாளில் சந்தித்த நிகழ்வு தான் அது.

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த நிகழ்வு குறித்து இசையமைப்பாளர் தரண் பகிர்ந்துகொண்டது…

இப்போது என்னுள் பரவும் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இன்னும் பிரமை பிடித்த நிலையில் தான் இருக்கிறேன். சூப்பர்ஸ்டாரை சந்திக்க வேண்டுமென்பது என் சிறு வயதுமுதலான கனவு. நானும் என் மனைவியும் அவரது தீவிர ரசிகர்கள். கடந்த 25 வருடங்களாக அவரது படங்களை முதல் நாள், முதல் ஷோ பார்க்கத் தவறியதில்லை. அவரைச் சந்தித்த தருணம் வாழ்வின் உன்னதமான ஒன்றாக அமைந்தது. அவர் வீட்டில் எங்களை உபசரித்த விதம் மறக்க முடியாதது. லதா ரஜினிகாந்த் மேடம் என்னை தங்களின் மகன் போலவே பாவித்தார்கள். வீட்டில் கொலு நடக்கும் மிக முக்கியமான தொடர் வேலைகளிலும், அனைவரிடமும் மறக்காமல் என்னை அறிமுகப்படுத்தினார்கள். 15 வருடங்கள் முன்பாக எனது முதல் ஆல்பமான பாரிஜாதத்தை சூப்பர்ஸ்டார் அறிமுகப்படுத்தினார். இப்போது மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவருடன் அவர் வீட்டில் கிடைத்த நெருக்கமான சந்திப்பு, அவருடன் கழித்த தருணங்கள், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் என் வாழ்வின் மறக்கமுடியாத பொன்னான நினைவுகள் என்றார்.

இசையமைப்பாளர் தரண் சமீபத்திய ஹிட் மற்றும் , இளைஞர்களின் ஃபேவரைட் ஆல்பமான “பப்பி” படத்திற்க்கு இசையமைத்துள்ளார். இதில் தமிழ் சினிமாவின் பெரும் பிரபலங்கள் யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஆர் ஜே பாலாஜி, கௌதம் மேனன் ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளார்கள். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷன்ல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படம் வருண், சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் நாளை (11-10-2019) வெளியாகிறது.

இறுதிக்கட்டத்தில் “தனுஷு ராசி நேயர்களே” !

இறுதிக்கட்டத்தில் “தனுஷு ராசி நேயர்களே” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Harish Kalyanசரியாக திட்டமிடுதலும் அதை தெளிவாக நடைமுறைப்படுத்துவதுமே குறிப்பிட்ட நேரத்தில் எந்தக் காரியத்தையும் முடிக்கும் மந்திரம் ஆகும். சினிமா படப்பிடிப்பும் அப்படியே. ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் தனுஷு ராசி நேயர்களே படக்குழு இந்த திட்டமிடுதலுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. அவர்கள் திட்டமிட்டபடியே படப்பிடிப்பை மிக விரைவாக முடித்து, தற்போது படப்பின்னணி வேலைகளை ஆரம்பித்துவிட்டது. படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

படம் பற்றி இயக்குநர் சஞ்சய் பாரதி கூறியதாவது….

நாங்கள் திட்டமிட்டபடியே, படக்குழுவின் அயராத உழைப்பில் சூட்டிங்கை முடிதிருக்கிறோம். புதுமுக இயக்குநரான எனக்கு கோகுலம் கோபலன் சார் மாதிரியான தயாரிப்பாளர் கிடைத்தது வரமென்பேன். படத்தின் சூட்டிங்கிற்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் முன்னதாகவே தயார் செய்து தந்து, கேட்ட அனைத்தையும் கொடுத்து சூட்டிங் மிக விரைவாக, தடையற நடந்ததற்கு முழுமுதல் காரணம் அவர் தான். நாங்கள் இப்போது படத்தின் டப்பிங் வேலைகளை துவக்கி உள்ளோம். படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளையும் முன்னதாகவே துவக்கிவிட்டோம். இப்படத்தில் முற்றிலும் புதிதான ஹரீஷ் கல்யாணை அவரது ரசிகர்கள் காணலாம். முரட்டுதனம் மிகுந்த மற்றும் காதல் பொங்கும் இளைஞனாக வந்த அவரது முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு, இப்படத்தில் முழுக்க காமெடியில் இறங்கி கலக்கியிருக்கிறார். குடும்பத்துடன் கொண்டாடும் வகையிலான இக்காமெடிப்படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவம்சி ஆகிய இரு நாயகிகளுக் மிளிரும் நடிப்பை வழங்கியுள்ளார்கள்.

ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். “தனுஷு ராசி நேயர்களே” படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால ஏற்படும் பிரச்சனையும் அதன் தொடர்ந்த அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

லவ் பிரேக் அப்.; நெக்ஸ்ட் லவ்வுக்கு வெயிட்டிங்… ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்

லவ் பிரேக் அப்.; நெக்ஸ்ட் லவ்வுக்கு வெயிட்டிங்… ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shruti haasanதெலுங்கில் பிரபலமான நடிகை லட்சுமி மஞ்சு சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.

நடிகை பாடகி என பன்முக திறமை கொண்ட ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் காதல் மற்றும் திருமணம் பற்றி கூறியிருக்கிறார்.

அடிதல்…

நான் இதுவரை ஒருவரை தான் காதலித்துள்ளேன். ஆனால் அது திருமணம் வரை செல்லவில்லை.

ஆனால் காதலில் இருந்து நல்ல அனுபவம் கிடைத்துள்ளது.

எனவே மீண்டும் காதலிக்க விரும்புகிறேன். சிறந்த நேசத்துக்காகவும் காதலுக்காகவும் காத்திருக்கிறேன். “ என கூறியிருக்கிறார்.

என்னப்பா நடக்குது… சிம்பு மீது புகார் அளிக்கவில்லை என ஞானவேல் ராஜா மறுப்பு

என்னப்பா நடக்குது… சிம்பு மீது புகார் அளிக்கவில்லை என ஞானவேல் ராஜா மறுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR - Gnanavel rajaஇயக்குனர், பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் சிம்பு.

சிம்பு என்பதை விட இவர் வம்பு நாயகன் என்றே அழைக்கிறார்கள்.

கால்ஷிட் சொதப்பல், காதல் முறிவு என பல சர்ச்சைகள் இவர் மீது உள்ளன.

இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் சார்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிம்பு நடிக்கும் ‘மப்டி’ என்னும் கன்னட படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.

இதனையடுத்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சங்கத்தில் புகார் அளித்துள்ளார் என கூறப்பட்டது.

ஆனால், ஞானவேல் ராஜா தரப்பில் இந்த செய்திகள் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் மப்டி ரீமேக் சூட்டிங் விரைவில் நடக்க இருப்பதாக ஞானவேல் ராஜா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கும்கி நாயகிக்கு கல்யாணம்..; மாப்பிள்ளை யாரோ.?

கும்கி நாயகிக்கு கல்யாணம்..; மாப்பிள்ளை யாரோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress lakshmi menonமலையாளத்தில் பிரபலமான லட்சுமி மேனன் ‘கும்கி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அடுத்ததாக சசிகுமாருககு ஜோடியாக ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் நடித்தார்.

அதன்பின்னர் பல படங்களில் நடித்து வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார்.

சில காலம் நடிப்பை விட்டு படிக்க போவதாக அறிவித்தார்.

தற்போது அவருக்கு 22 வயதாகும் நிலையில், திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்து இருக்கிறார்களாம்.

எனவே மாப்பிள்ளை யார்? என்ற விவரம் விரைவில் தெரிய வரும்.

புட்பால் போட்டி.. பிகில் புரோமோசன் பட்டைய கிளப்புது

புட்பால் போட்டி.. பிகில் புரோமோசன் பட்டைய கிளப்புது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigil Vijayஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

எனவே படத்தை புரோமோட் செய்யும் வகையில் கால்பந்தாட்டம் போட்டி நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த போட்டி, அக்டோபர் 19-20ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளனர்.

More Articles
Follows