ரஜினி – தனுஷை தொடர்ந்து சத்யராஜை இயக்கும் சௌந்தர்யா

ரஜினி – தனுஷை தொடர்ந்து சத்யராஜை இயக்கும் சௌந்தர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா, இவர் ரஜினி, தீபிகா படுகோன் நடித்த ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி இருந்தார்.

இதை தொடர்ந்து, தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். இப்படத்தில் தனுஷுடன் இந்தி நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா தற்போது வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார்.

இந்த வெப் தொடரில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சவுந்தர்யா இயக்கும் வெப் தொடர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

soundarya rajinikanth to direct web series starring sathyaraj

ஒரு ஊர்ல ஒரு ராஜா சூர்யா.; சினிமாவில் என்ட்ரீயாகும் ‘சின்ன சிவகார்த்திகேயன்’

ஒரு ஊர்ல ஒரு ராஜா சூர்யா.; சினிமாவில் என்ட்ரீயாகும் ‘சின்ன சிவகார்த்திகேயன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ எனும் டிவி சீரியல் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகர் ராஜா சூர்யா.

வசீகரிக்கும் புன்னகை.. தனித்துவமான நடிப்பு.. என திறமையை வெளிப்படுத்தி இன்று முன்னணி சின்னத்திரை நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் இவர், ‘மேதகு 2’ எனும் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகராகவும் தன் பயணத்தை விரிவுப்படுத்தியவர்.

சின்னத்திரை.. வண்ணத்திரை.. டிஜிட்டல் திரை.. என எந்த திரை வடிவமாக இருந்தாலும் தன் கடின உழைப்பை வழங்கி, ரசிகர்களின் பேரன்பை சம்பாதித்து, அவர்களிடத்தில் ‘சின்ன சிவகார்த்திகேயன்’ என்ற பட்டத்தை வென்றிருக்கிறார்.

‘ஈடாட்டம்’ எனும் திரைப்படத்தின் இறுதி கட்ட பணியில் ஈடுபட்டிருக்கும் போது அவரைச் சந்தித்து உரையாடினோம்.

தினமும் வளர்ச்சி அடைந்து வரும் நவீன தொழில்நுட்பங்களால் மாற்றம் பெற்று வரும் திரைப்படத்தில், முதன்மையான வேடத்தில் நடிக்கும் நடிகர்களின் பொறுப்புணர்வு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து…?

முதன்மையான வேடத்தில் நடிக்கும் நடிகர்களின் பங்களிப்பும், பொறுப்பும் கடந்த காலங்களை விட தற்போது கூடுதலாகி இருக்கிறது. தற்போது நான் ஒரு வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறேன் என்றால், அதுவும் குடும்பத்துடன் ஈடுபட்டிருக்கிறேன் என்றால்.. அதனால் ஏற்படும் லாப நஷ்டம் என் குடும்பத்தை மட்டுமே சார்ந்திருக்கும்.

ஆனால் வளர்ச்சி அடைந்து வரும் நவீன தொழில்நுட்பங்களால் சினிமா என்பது நூறு குடும்பங்களை கூட்டு உழைப்பு என்பதை கடந்து, ஆயிரம் குடும்பங்களின் கூட்டு முயற்சியாக விரிவடைந்து இருக்கிறது. இதனால் முன்னணி வேடத்தில் நடிக்கும் நடிகர்களின் பொறுப்புணர்வும் அதிகரித்திருக்கிறது.

சினிமாவில் அறிமுகமாவதும், அதில் தொடர்ந்து பணியாற்றுவதும் பெரிய சவால்தான். திரைத்துறையில் இருக்கும் அரசியலை எதிர்கொண்டு இங்கு முன்னேறுவது அதைவிட பெரிய சவால் தான்.

தற்போதைய சூழலில் திரைத்துறையில் பணியாற்றும் நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், தங்களது வாரிசுகளை எளிதாக அறிமுகப்படுத்த இயலும்.

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற நட்சத்திர நடிகர்கள் எந்த திரைத்துறை பின்புலமும் இல்லாமல், கடினமாக உழைத்து, இன்று திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என கனவு காணும் பல இளைஞர்களுக்கு முன்னுதாரண நாயகர்களாக வலம் வருகிறார்கள்.

சினிமாவில் உங்களை அதிகம் கவர்ந்தது எது நடிப்பா? நாட்டியமா? சண்டைக் காட்சிகளா?

அனைத்தும் பிடிக்கும். இருப்பினும் நடனத்தின் மீது தனி ஈர்ப்பு உண்டு. நான் சிறிய வயதில் மேடை நாடகத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி, அவர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறேன். என் ஆரோக்கியமும் இதில் இருப்பதால் நடனத்தை மிகவும் நேசிக்கிறேன்.

உங்களது வெற்றியின் சூத்திரம் என்ன?

பொறுமையும், விடாமுயற்சியும் தான் வெற்றிக்கான ரகசிய சூத்திரம். எந்த குழந்தையும் பிறந்தவுடன் நடப்பதில்லை. அதற்கான காலம் வரும்போது தான் நடக்கத் தொடங்குகிறது.

நம்முடைய எண்ணங்கள்தான் வாழ்க்கை என்பதால், நல்ல எண்ணங்கள் தான் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அடித்தளம்.

வளர்ச்சி என்பது இயல்பாகவும், மெதுவாகவும் தான் இருக்க வேண்டும். அதுதான் நிலையானதாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை மரணத்தை தழுவுவதற்கு முன்பு கூட ஒரு முறை வெற்றி பெற்றால் போதும். அந்த வெற்றி நம் சரித்திரத்தை அடுத்து வரும் தலைமுறைக்கு அடையாளமாக இருக்கும்.

உங்களுடைய எதிர்கால இலக்கு என்ன..?

இலக்கு என்று எதையும் பெரிதாக நிர்ணயித்துக் கொள்வதில்லை. என்னுடைய தலைமுறையில் இருப்பவர்களையும், அடுத்து வரும் தலைமுறையினருக்கும் ஏதேனும் ஒரு வகையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஏனெனில் சினிமாவின் மட்டும் தான் நல்ல கருத்துகளையும், நல்ல விசயங்களை தொடர்ந்து சொல்ல முடியும். அரசியல் – சினிமாவை விட பெரிய கடல் என்பதால், அதனைத் தவிர்த்து விட்டு, சினிமாவிற்குள்… சினிமா மூலமாக தொடர்ந்து மக்களுக்கு தேவையான விசயங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். சினிமாவில் மட்டும்தான் நாம் இறந்த பிறகும், நாம் திரையில் சொல்லிய கருத்துக்கள் குறித்த விவாதங்கள் மக்களிடத்தில் இருக்கும்.

ஏதோ ஒரு வேலையில் சேர்ந்தோம். சம்பாதித்தோம். திருமணம் செய்து கொண்டோம். குழந்தையை பெற்றுக் கொண்டோம். வீடு கட்டினோம். இறந்து விட்டோம்… என்று இருப்பதைவிட, மக்களின் மனதில் எப்போதும் வாழ வேண்டும். நமக்கான அடையாளங்கள் காலம் கடந்தும் பேசப்பட வேண்டும்.

சரித்திர திரைப்படங்களில் நடிக்கும் விருப்பம் உண்டா..?

நான் இதுவரை சின்னத்திரைகளிலும், பெரிய திரையிலும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். இருப்பினும் ‘பொன்னியின் செல்வன்’, ‘யாத்திசை’ போன்ற சரித்திர திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மறுக்காமல் ஒப்புக் கொள்வேன்.

நடிகைகளுடன் படப்பிடிப்பு தளத்தில் ஏதேனும் மறக்க இயலாத அனுபவம் குறித்து..

படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளுடன் கசப்பான எந்த அனுபவமும் இதுவரை ஏற்பட்டதில்லை. சின்னத்திரையாக இருந்தாலும்.. பெரிய திரையாக இருந்தாலும்.. படப்பிடிப்பு தளத்தில் சக கலைஞர்களுடனும், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இயல்பாக பழகுபவன். அனைவரிடத்திலும் பிரத்யேக திறமை இருக்கிறது என்ற நம்பிக்கை கொண்டவன். அதனால் படபிடிப்பு தளத்தில் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கிறேன்.

ஈடாட்டம் குறித்து..?

இன்றைய சூழலில் இளம் தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ற திரைப்படம். இதில் விக்கி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். குடிப்பழக்கம் -நட்பு- காதல்.. என இன்றைய இளைய தலைமுறையின் எண்ணங்களை திரையில் பிரதிபலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறேன்.

ரசிகர்கள் என்னுடைய விக்கி கதாபாத்திரத்தை விட, திரைப்படம் சொல்ல வரும் விசயத்தை ரசிப்பார்கள். புரிந்து கொள்வார்கள். தங்களது தவறுகளை திருத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன். இயக்குநர் ஈசன் நேர்த்தியாக ‘ஈடாட்டம்’ படைப்பை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படம் வெளியான பிறகு என்னுடைய திரையுலக பயணத்தில் திருப்புமுனை ஏற்படும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

Serial actor Raja Suriya entry in kollywood

இமான் இசையில் பிரபுதேவா ஆடும் ‘பேட்ட ராப்’.; இயக்குநர் இவரா.?

இமான் இசையில் பிரபுதேவா ஆடும் ‘பேட்ட ராப்’.; இயக்குநர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்-நடன இயக்குநர்-இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் ‘பேட்ட ராப்’ என்று பெயரிடப்பட்டுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படத்திற்காக இணைந்துள்ளார்.

புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

ஜூன் 15, 2023 அன்று புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்படத்தில் பிரபல நடிகை வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

‘தேரு’ (2023) மற்றும் ‘ஜிபூட்டி’ (2021) போன்ற மலையாளப் படங்களை எஸ் ஜே சினு இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காதல், சண்டைக் காட்சிகள், இசை, நடனம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘பேட்ட ராப்’ உருவாக உள்ளது. இதற்கேற்ற வகையில் “பாட்டு, அடி, ஆட்டம் – ரிபீட்” என்ற சுவாரசியமான டேக்லைன் இப்படத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

பிரபுதேவாவை அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிடித்த வகையில் இப்படம் காட்டும் என்று படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

கதை மற்றும் திரைக்கதையை டினில் பிகே எழுதியுள்ளார். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் இத்திரைப்படம் படமாக்கப்படவுள்ளது. புதுச்சேரி மற்றும் சென்னையில் முக்கிய காட்சிகள் பதிவு செய்யப்பட உள்ளன.

டி இமான் இசையமைக்க, ஐந்துக்கும் அதிகமான பாடல்களோடு வண்ணமயமாக ‘பேட்ட ராப்’ உருவாகிறது. படத்தொகுப்பாளராக சான் லோகேஷ் மற்றும் கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் பணியாற்றுகின்றனர்.

விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ராஜீவ் பிள்ளை, கலாபவன் ஷாஜோன், மைம் கோபி மற்றும் ரியாஸ் கான் ஆகியோர் படத்தின் மற்ற நடிகர்கள் ஆவர்.

தொழில்நுட்ப குழுவினர்:

தலைமை இணை இயக்குநர் – சோழன், தயாரிப்பு நிர்வாகி – எம்.எஸ்.ஆனந்த், சசிகுமார் என், பாடல்கள் – விவேகா, மதன் கார்க்கி, ப்ராஜெக்ட் டிசைனர் – துஷார் எஸ், கிரியேட்டிவ் பங்களிப்பு – சஞ்சய் கசல், ஆடை வடிவமைப்பு – அருண் மனோகர், ஒப்பனை – அமல் சந்திரன், ஸ்டில்ஸ் – சாய் சந்தோஷ், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், பிரதிஷ் சேகர், வி எஃப் எக்ஸ் – விபின் விஜயன், டிசைன்ஸ் – மனு டாவின்சி.

புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 15 அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

Prabhudeva joins forces with director SJ Sinu for Petta Rap

5G படம் : இளையராஜா இசையில் விஜயகாந்த் பட இயக்குநருடன் இணைந்த ஷாம்

5G படம் : இளையராஜா இசையில் விஜயகாந்த் பட இயக்குநருடன் இணைந்த ஷாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

5E கிரியேசன்ஸ் சார்பில் சுஜன் சாமுவேல் ராய், ஹரிஷ் முத்தால செட்டி மற்றும் சமீர் அமர்தீன் ஆகியோர் தயாரிப்பில் ‘நம்பர் 1 புரொடக்சன்’ ஆக உருவாகி வரும் இந்தப்படத்தின் டைட்டிலை வெகு விரைவில் வெளியிட உள்ளனர்.

சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் சமீபத்தில் வெளியான ‘வாரிசு’ படத்தில் நடித்த ஷாம் நடிக்க உள்ளார்.

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய எம்.பாரதி கணேஷ் இந்த படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை எம்.எஸ்.பிரபு கவனிக்க, படத்தொகுப்பை நாகூர் ராமச்சந்திரன் மேற்கொள்கிறார்.

இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ராதாரவி, சந்தானபாரதி, திரு குமரன் (மகாலட்சுமி பெண்கள் கல்லூரி MD), அஜய் (ஜமீலா A.K), ஆஷிகா யாஷ் (Dada) பெங்களூரு ஈஸ்வரி அம்மா, ஜாஸ்பர், மணிரத்னம், மானஸ்வி கொட்டாச்சி, விஷ்வநாதன் பிரபாகரன், ஆவடி லயன் செந்தில் அரசு, ஷிவானி ஹரிகுமார், ராக்ஸ்டார் கமலேஷ், ஆர்வன் வெற்றி இளங்கோ, முகுந்தன் மற்றும் நிஜய் என்ற திண்டுக்கல் நஷிர் ஆகியோர் நடிக்கின்றனர்.

இன்றைய 5G ஜெனேரேஷன் காலகட்டத்தில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை, அறிவு, ஆற்றல் செயல்பாடுகள் மற்றும் இன்றைய சமூக சூழ்நிலைகள், வாழ்வியலின் பார்வை பற்றிய உணர்வுப்பூர்வமான கருத்தினை விளக்கும் ஒரு பதிவாக சென்னை சிட்டியில் நடக்கும் ஒரு நல்ல கதையம்சத்துடன் இந்தப்படம் தயாராகி வருகிறது.

வரும் ஜூன்-2ஆம் தேதி இசைஞானியின் 80வது பிறந்தநாளன்று இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது..

*தயாரிப்பாளர்* ; சுஜன் சாமுவேல் ராய், ஹரிஷ் முத்தால செட்டி, சமீர் அமர்தீன்

*இணை தயாரிப்பு* ; சிட்டி கிளப் இராஜேந்திரன். S.S.அன்பு‌ தெட்சிணாமூர்த்தி

*தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்*

இசை ; இசைஞானி இளையராஜா

ஒளிப்பதிவு ; எம்.எஸ்.பிரபு DF Tech

படத்தொகுப்பு ; நாகூர் ராமச்சந்திரன் DF Tech

மக்கள் தொடர்பு ; A.ஜான்

இணை இயக்குனர் ; V.ராமச்சந்திரன்

இணை இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ; பவித்ரா தேவராஜன் BE

தயாரிப்பு மேற்பார்வை ; A.V.பழனிச்சாமி

கதை திரைக்கதை, வசனம், இயக்கம் ; எம். பாரதி கணேஷ் MA, DFTech

Shaam teamed up with director of Vijayakanth film in the music of Ilayaraja

வீட்டுக்கே விரட்டி வந்து சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுத்தார் – பழ.கருப்பையா

வீட்டுக்கே விரட்டி வந்து சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுத்தார் – பழ.கருப்பையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பாடகி ராஜலட்சுமி செந்தில் முதன்முறையாக நாயகியாக நடித்துள்ள படம் ‘லைசென்ஸ்’.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் மூத்த அரசியல்வாதியும் நடிகருமான பழ.கருப்பையா பேசும்போது,…

“ஒரு பெண்ணின் உரிமைக்காக, பெண்ணின் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்ட படம் இது. ராஜலட்சுமி தான் கதையின் தலைவி என்று சொன்னபோது வியப்பாக இருந்தது.

இளம் வயது நடிகையை கதாநாயகியாக போட்டிருந்தால் இந்த படத்தில் அந்த பெண் போராடும்போது தனக்காக போராடுவது போல இருக்கும். ஆனால் ராஜலட்சுமி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது தான் ஒரு பெண் சமூகத்திற்காக போராடுவதை நம்பும்படியாக இருக்கும்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வீட்டிற்கு திரும்பி வந்த கொஞ்ச நேரத்திலேயே, படத்தின் மேனேஜரும் பின் தொடர்ந்து வந்து விட்டார்.

ஏதாவது காட்சி எடுக்கப்படாமல் விடுபட்டு போய்விட்டதா என்று கேட்டபோது, அதெல்லாம் இல்லை.. உங்களுக்கு செக் கொடுக்க வந்திருக்கிறேன் என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். இப்படி வீட்டுக்கே விரட்டி வந்து சம்பளத்தை கொடுத்தது இந்த தயாரிப்பு நிறுவனமாக தான் இருக்கும்” என்றார்.

இயக்குனர் கணபதி பாலமுருகன் பேசும்போது…

“எனது முதல் பட தயாரிப்பாளர் தெய்வம் என்றால் ஏழு வருடங்கள் கழித்து எனக்கு இரண்டாவது பட வாய்ப்பு தந்த இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜீவானந்தத்தை தெய்வத்தின் தெய்வம் என்று சொல்லலாம். இங்கே அவரது நட்புக்கு மரியாதை கொடுத்து அவரது நண்பர்கள் 40 பேர் வந்துள்ளனர். என்னுடைய உதவி இயக்குனர்களிடம் இங்கே வந்திருப்பது 40 தயாரிப்பாளர்கள்.. எதிர்காலத்தில் உங்களுக்காக இருக்கிறார்கள் என்று கூறினேன்.

படத்தின் டிரைலரிலேயே முழு கதையையும் சொல்லிவிட்டேன். கிளைமாக்ஸையும் கூட டிரைலரிலேயே சொல்லிவிடலாம் என்று தான் நினைத்தேன். காரணம் அந்த அளவிற்கு கதை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் திரைக்கதை.

இந்த படத்தில் பல நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ராட்சசர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். இந்த படத்தில் பாடல்களை எழுதியுள்ள ரமணிகாந்தன் வரும் காலத்தில் பாடலாசிரியர் யுகபாரதிக்கு டப் கொடுப்பார். சரஸ்வதி மற்றும் லட்சுமி இரண்டும் இணைந்த கடாட்சம் கொண்டவர் தான் ராஜலட்சுமி. ஒரு பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நபராக அவர் இருந்தார்.

மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் உள்ளிட்ட படங்களில் நடித்த தன்யா அனன்யா இந்த படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் N.ஜீவானந்தம் பேசும்போது,…

“இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து மாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில் இயக்குனர் இப்படி பேசி நான் பார்த்ததில்லை. இன்று தான் இவ்வளவு பேசியுள்ளார். ஒரு தன்னம்பிக்கை பேச்சாளராக உலகம் முழுக்க சென்று பேசியுள்ளேன். ஆனால் இன்று நான் தயாரித்துள்ள படத்தின் விழா மேடையில் நின்று பேசுவது புதிதாக இருக்கிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பழ.கருப்பையா நடித்துள்ளார் படப்பிடிப்பு சமயத்தில் என்னை தான் புதிதாக துவங்கிய கட்சியில் சேர்வதற்காக கூட அழைத்தார். இந்த படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எனது தந்தை நாடக நடிகராக இருந்தவர்.. மூன்று படங்களில் நடித்துள்ளார்.. அவரை தொடர்ந்து நானும் சினிமாவிலேயே பயணிக்க துவங்கியுள்ளேன்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ராஜலட்சுமி கூச்சம் இல்லாத நடிகை அவர் மிகப்பெரிய கூட்டங்களில் கலந்துகொண்டு அங்கு இருப்பவர்களை கையாளும் விதத்தைப் பார்த்து அவர் இந்த படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என நான் ஒப்புக் கொண்டேன். அபி நட்சத்திரா நடித்திருக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது நான் அழுதேன்.

நானும் அடிப்படையில் ஒரு கவிஞன் என்றாலும் இந்த படத்தில் பாடல் எதுவும் எழுதாமல் மூன்று பாடல்களையும் ரமணி காந்தனையே எழுத சொல்லிவிட்டேன். அவருக்கு சீக்கிரம் ரசிகர் கிளப்பும் ஆரம்பிக்க இருக்கிறேன்.

இந்த நிகழ்வில் எனது இரண்டாவது படம் குறித்து அறிவிப்பையும் வெளியிடுகிறேன். மன்னார்குடி பின்னணியில் கால்பந்தாட்ட கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு கோல் என்று டைட்டில் வைத்துள்ளோம்.

ஒரு கிராமம் எப்படி கால்பந்து விளையாட்டால் பிரிகிறது, பின் எப்படி கால்பந்து விளையாட்டால் ஒன்று சேர்கிறது என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. ஏவிஎம் நிறுவனத்தின் 175வது படத்தை இயக்கிய குமரன் என்பவர் தான் இந்த படத்தை இயக்குகிறார்” என்று கூறி தனது அடுத்த படத்தின் இயக்குனர் குமரனையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

The producer chased home came and gave the salary says Pala. Karuppiah

நிஜ வாழ்க்கையில் இப்படி கூட நடக்குமா? ; கோவையில் சுனைனா பேச்சு

நிஜ வாழ்க்கையில் இப்படி கூட நடக்குமா? ; கோவையில் சுனைனா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.

மலையாளத்தில் ‘பைப்பின் சுவற்றிலே பிரணயம்’ மற்றும் ‘ஸ்டார்’ ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்.. இவர் ஏற்கனவே “SN Musicals” மூலம் பல சுயாதீன பாடல்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ரெஜினா’ படத்தின் இசை உரிமையை டைம்ஸ் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில் (மே-30) ‘ரெஜினா’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் உள்ள புரோஷன் மாலில் மாலை 6 மணி அளவில் பிரமாண்டமாக நடைபெற்றது.

*கோவை மக்கள் திரளாக கூடியிருந்த இந்த அரங்கத்தில் விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ‘ரெஜினா’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

அதேசமயத்தில் சோஷியல் மீடியா மூலமாக நடிகர் ஆர்யா இந்தப்படத்தின் டீசரை வெளியிட்டார்.*

இந்த நிகழ்வில் நாயகி சுனைனா பேசும்போது…

“கோவை எப்போதும் எனக்கு பிடித்த நகரம். இப்போது வரும்போது கூட அன்னபூர்ணாவுக்கு சென்று இட்லி, காபி சாப்பிட விரும்பினேன். கோவையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர்.

சிறுவயதிலேயே நான் நிறைய மேடை நாடகங்களில் நடித்துள்ளேன். அதனால் எனக்கு எப்போதுமே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். இதை நான் முதலில் இருந்தே சொல்லி வந்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் அதை பலரும் கவனிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

நீர்ப்பறவை, வம்சம், சில்லுக்கருப்பட்டி மற்றும் சில வெப் சீரிஸ்கள் என எதை தேர்வு செய்தாலும் கதை வித்தியாசமாக இருக்க வேண்டும், அதே சமயம் மக்களுக்கு பிடித்ததாக, பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம்.

ஒரு சாதாரண பெண் எப்படி அசாதாரணமாக பெண்ணாக மாறுகிறாள், கடினமான சூழல்களை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதுதான் ‘ரெஜினா’ படத்தின் கதை. அந்தவகையில் ‘ரெஜினா’ முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இருக்கும். இது போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

தினசரி செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தில் அவ்வப்போது சில வித்தியாசமான நிகழ்வுகள், வித்தியாசமான மனிதர்களை நாம் பார்க்க முடியும்.

இயக்குனருடன் இந்த கதை பற்றி விவாதிக்கும்போது கூட, இதுபோன்று நிஜ வாழ்க்கையில் நடக்குமா என்று கேட்டேன். நடக்கும் என்று சொன்னார்.

மனிதர்களின் வாழ்க்கையில் பெரும்பாலானவர்கள் நகைச்சுவை, சென்டிமென்ட் என இருந்தாலும் ஒரு சிலர் அதைத்தாண்டி விசித்திரமாக நடந்து கொள்வார்கள்.

அவர்கள் வாழ்க்கையில் ஏதேனும் கடினமான சம்பவங்கள் நடந்திருந்தால் அதன் அடிப்படையில் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களை மையப்படுத்தி தான் இந்தப்படம் உருவாகியுள்ளது” என்று கூறினார்.

*இந்த நிகழ்வை விஜய் டிவி புகழ் பாலா சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கினார்.*

இந்தப்படத்திற்கு பவன் K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் மேற்கொள்கிறார்.

பன்மொழி படமாக தமிழில் தயாராகியுள்ள ‘ரெஜினா’ இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் இசை மற்றும் டிரைய்லர் வெளியீட்டு விழா சென்னையில் வருகிற 5ம் தேதி நடை பெறுகிறது.

Sunainaa speech at Regina teaser launch event

More Articles
Follows