இசையை சந்தித்து நன்றி சொன்னேன்..; இளையராஜா படத்தை பகிர்ந்த சூரி

இசையை சந்தித்து நன்றி சொன்னேன்..; இளையராஜா படத்தை பகிர்ந்த சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் நடித்து வெளியான படம் ‘விடுதலை’.

எல்ரெட் குமார் தயாரித்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

‘விடுதலை’ படம் மார்ச் 31 இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.குறிப்பாக சூரியின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு, இப்படம் வெற்றிபெற்றதை அடுத்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூரி தற்போது இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சூரி தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், “இசையை‌ சந்தித்து நன்றி கூறினேன். ஆசி வாங்கினேன். இறைவனுக்கு நன்றி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

soori met to Ilayaraja and thanked him

‘இந்தியன் 2’ படத்தில் ‘விக்ரம்’ பட கூட்டணியை அமைத்த ஷங்கர்

‘இந்தியன் 2’ படத்தில் ‘விக்ரம்’ பட கூட்டணியை அமைத்த ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் கொரோன லாக் டவுன் உள்ளிட்ட பல காரணங்களால் நான்கு வருடங்களுக்கு கமல்ஹாசன் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

இதனால் ஏங்கி இருந்த ரசிகர்களுக்கு மெகா விருந்தளிக்கும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கமல் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் உலகமெங்கும் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர. நடிக்க அனிருத் இசை அமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது காளிதாஸ் மீண்டும் கமலுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் காளிதாஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘இந்தியன் 2’ ஷூட்டிங் தற்போது தைவான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

actor Kalidas Jayaram join to kamal’s indian 2

தமிழ் புத்தாண்டில் யானை முகத்தானாக மாறி வரும் யோகி பாபு

தமிழ் புத்தாண்டில் யானை முகத்தானாக மாறி வரும் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ‘லால் பகதூர் ஷாஸ்த்தி’, ‘வரி குழியிலே கொலபாதகம்’, ‘இன்னு முதல்’ என மூன்று ஹிட் படங்கள் டைரக்ட் செய்தவர் ரெஜிஷ் மிதிலா.

இவர் ‘யானை முகத்தான்’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

இதில் விநாயகர் வேடத்தில் நடிக்கிறார் யோகி பாபு. இவருடன் ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
தயாரிப்பாளர்கள்: ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ்:
தயாரிப்பு நிறுவனம்: தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
ஒளிப்பதிவு : கார்த்திக்Sநாயர்
படத்தொகுப்பு : சைலோ
இசையமைப்பாளர்: பரத் சங்கர்
ஆடை வடிவமைப்பாளர்: குவோச்சாய்.S
ஒப்பனை: கோபால்
நிர்வாக தயாரிப்பு : சுனில் ஜோஸ்
தயாரிப்பு மேற்பார்வை : ஜெயபாரதி

ஓரிரு தினங்களுக்கு முன் ‘ஆளா ஏ ஆளா..’ எனத் தொடங்கும் பாடல் மற்றும் பாடலுக்கான காணொளியும் வெளியாகி இருக்கிறது. பாடலாசிரியர் சி. எம். லோகேஷ் எழுதியிருக்கும் இந்த பாடலை பின்னணி பாடகர் அந்தோணி தாசன் பாடியிருக்கிறார்.

சமூக பக்தி பாணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தி கிரேட் இந்தியன் சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ரஜீஷ் மிதிலா மற்றும் லிஜோ ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த படம் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

YannaiMugathaan releasing worldwide on April 14

JUST IN விஜய் – அருண்விஜய் இணைந்த படத்தை 4 மொழிகளில் வெளியிடும் லைகா

JUST IN விஜய் – அருண்விஜய் இணைந்த படத்தை 4 மொழிகளில் வெளியிடும் லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் உரிமையை பெற்று, உலகம் முழுவதும் வெளியிட உள்ளார் லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன்.

லைகா புரொடக்‌ஷனின் இந்த லீக்கின் சமீபத்திய வரவாக எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரிப்பில், நடிகர் அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ திரைப்படம் இணைந்துள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைப் பார்த்தப் பிறகு, அனைத்துத் தரப்பிலான பார்வையாளர்களையும் கவரும் அம்சங்களைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளது.

மொழிகளைத் தாண்டி, அனைத்து தரப்பினருக்கும் போய் சேரும் வகையிலான கதையம்சத்தைக் கொண்டுள்ளதால், நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட லைகா முடிவு செய்துள்ளது.

படத்தின் ட்ரைய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

பாராட்டும்படியான படைப்புகளை சரியானத் திட்டமிடலுடன் கொடுக்கக்கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது.

அச்சம் என்பது இல்லையே

70 நாட்களில் அவர் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ஏமி ஜாக்சன் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு வருகிறார்.

மலையாளத் திரையுலகில் தனது நடிப்புத் திறனுக்கு பல பாராட்டுகளைப் பெற்ற நடிகை நிமிஷா சஜயனும் இந்தப் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை எம். ராஜசேகர் & எஸ் சுவாதி தயாரித்துள்ளனர் மற்றும் வம்சி, பிரசாத் கோதா மற்றும் ஜீவன் இணைந்து தயாரித்துள்ளனர்.

நடிகர்கள்:

அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

இயக்கம்: விஜய்,
லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்: ஜி.கே.எம். தமிழ் குமரன்,
தயாரிப்பு: சுபாஸ்கரன், எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி,
இணைத்தயாரிப்பு: சூர்யா வம்சி பிரசாத் கோதா- ஜீவன் கோத்தா,
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,
கதை & திரைக்கதை: ஏ.மகாதேவ்,
வசனம்: விஜய்,
ஒளிப்பதிவு: சந்தீப் கே விஜய்,
எடிட்டிங்: அந்தோணி,
ஸ்டண்ட்: ஸ்டண்ட் சில்வா,
கலை இயக்குநர்: சரவணன் வசந்த்,
ஆடை வடிவமைப்பாளர்: ருச்சி முனோத்,
ஒப்பனை: பட்டணம் ரஷீத்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: வி கணேஷ்,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: கே மணி வர்மா,
நிர்வாகத் தயாரிப்பாளர்கள் (யுகே): சிவகுமார், சிவ சரவணன்,
தயாரிப்பு நிர்வாகி – மனோஜ் குமார் கே,
ஆடை வடிவமைப்பாளர்: மொடப்பள்ளி ரமணா,
ஒலி வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,
VFX – D நோட்,
ஸ்டில்ஸ்: ஆர் எஸ் ராஜா,
Promotion & Strategies: ஷியாம் ஜாக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்,
விளம்பர வடிவமைப்பாளர் – பிரதூல் என்.டி

அச்சம் என்பது இல்லையே

Lyca acquires Arun Vijays Achcham Enbathu Illayea

அப்பாடா..ஒரு வழியாக தமிழ் புத்தாண்டில் வருகிறான் ‘தமிழரசன்’

அப்பாடா..ஒரு வழியாக தமிழ் புத்தாண்டில் வருகிறான் ‘தமிழரசன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் ‘தமிழரசன்’.

ரம்யா நம்பீசன், யோகி பாபு, ராதாரவி, ரோபோ சங்கர், சுரேஷ் கோபி, சோனு சூட், முனிஷ்காந்த், கஸ்தூரி, சங்கீதா, மாஸ்டர் பிரணவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பாபு யோகேஸ்வரன் இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் கவனித்துள்ளார்.

கடந்த 2020-ம் ஆண்டிலேயே இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது.

ஆனால், கரோனா லாக் டவுன் காரணமாக தள்ளிப்போனது.

அதன்பின்னர் 2022 நவம்பர் 18-ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் டிசம்பர் 30 ரிலீஸ் என்றனர். அதுவும் தள்ளிப்போனது.

இந்நிலையில் படம் 2023 வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Vijay Antony’s Thamizharasan release date announced

சுசீந்திரன் – மனோஜ் – பாரதிராஜா இணையும் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தனுஷ்

சுசீந்திரன் – மனோஜ் – பாரதிராஜா இணையும் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க உள்ளார்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையும் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜி வி பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும்.

பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

மேற்கண்ட தகவல்களை நம் FILMISTREET தளத்தில் சில தினங்களுக்கு முன்பு பார்த்தோம்.

இந்தப் படத்திற்கு ‘மார்கழி திங்கள்’ என்று தலைப்பிட்டு டைட்டில் போஸ்டரை வெளியிட்ட நிலையில் இன்று ஏப்ரல் 3 தேதி மாலை 5 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

Dhanush released Bharathi raja’s Margazhi Thingal first look poster

Here is the First look of #MargazhiThingal, a debut directional film by @manojkumarb_76.

Produced by @Dir_Susi’s #VennilaProductions

@offBharathiraja @gvprakash @vinoth_kishan #SamyukthaViswanathan @ArSoorya #KasiDinesh @KabilanVai

.@vasukibhaskar @DuraiKv @onlynikil @decoffl

More Articles
Follows