தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ் ஜே சூர்யா.
இதனைத் தொடர்ந்து அவரே நாயகனாகவும் படங்களில் நடித்து வந்தார்.
அண்மையில் வெளியான இறைவி படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது.
எனவே இனி நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தலாம் என முடிவு செய்துள்ளாராம்.
இதன் விளைவாக, பவன்கல்யாண் நடிக்கவிருந்த குஷி 2 படத்தை இயக்க முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பவன்கல்யானுடன் பேசி, குஷி 2 படத்தின் இயக்கத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இப்படத்தை டோலி இயக்கவுள்ளதாகவும் தயாரிப்பாளர் சரத் மர்ரார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.