ஆகஸ்ட் 31ஆம் தேதி 6 படங்கள் ரிலீஸ்; தயாரிப்பாளர் சங்க விதி என்னாச்சு.?

Six Tamil movies plans to release on 31st August 2018தியேட்டர் பற்றாக்குறை, ஒரே நாளில் 10 படங்கள் ரிலீஸ் ஆகிய பிரச்சினைகளால் இனி வாரத்திற்கு 3 அல்லது 4 படங்களை மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்தது.

ஆனால் அவற்றை மீறி வாரத்திற்கு குறைந்தது 5 படங்களாவது ரிலீஸ் ஆகிறது.

இந்த வாரம் ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில் இதுவரை 6 படங்கள் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படம் ஆகஸ்ட் 30ல் வெளியாகிறது.
மற்ற படங்கள் ஆகஸ்ட் 31ல் வெளியாகவுள்ளது.

பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, விக்ரம்பிரபு நடித்துள்ள ‘60 வயது மாநிறம்’ பா.விஜய் நடித்துள்ள ‘ஆருத்ரா’, அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா நடித்துள்ள ‘நரகாசூரன்’, சோமசுந்தரம் நடித்துள்ள ‘வஞ்சகர் உலகம்’, தினேஷ், மஹிமா நம்பியார் நடித்துள்ள ‘அண்ணணுக்கு ஜே’ ஆகிய படங்களும் களத்தில் உள்ளன.

இதில் நரகாசூரன் படம் தள்ளிப் போக வாய்ப்புள்ளது. அதை செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Six Tamil movies plans to release on 31st August 2018

Overall Rating : Not available

Latest Post