நயன்தாராவை அம்மா என்றே அழைக்கும் காமெடி நடிகரின் மகள்

நயன்தாராவை அம்மா என்றே அழைக்கும் காமெடி நடிகரின் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

naynathara and manasviவிவேக் உடன் பல படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் கொட்டாச்சி. இவரின் மகள் மானஷ்விதான் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார்.

தன் அம்மா நயன்தாராவை கொடுமைப்படுத்த வரும் ஒரு போலீஸ்காரரிடம் மானஸ்வி ‘சொட்ட சொருகிடுவேன்’ என்று பேசுவாரே அந்த பெண் தான்.

இவர் தற்போது சதுரங்க வேட்டை 2 படத்தில் திரிஷாவின் மகளாக நடிக்கிறார்.

மேலும் கும்கி 2, பரமபதம் விளையாட்டு, இருட்டு, கண்மணி பாப்பா, சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்பட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறாராம்.

இதுகுறித்து மானஸ்வியின் தந்தை நடிகர் கொட்டாச்சி கூறியதாவது…

நான் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து வந்தேன். ஆனால் என் மகள் பெரிய நடிகையாகி இருப்பது மகிழ்ச்சி.

நயன்தாரா அடிக்கடி மானஸ்வியுடன் பேசுவார். நயன்தாராவை மானஸ்வி அம்மா என்றுதான் அழைக்கிறார்’ என்றார்.

பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டி ரஞ்சித்துக்கு சீமான் முத்தம்

பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டி ரஞ்சித்துக்கு சீமான் முத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanஇந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது “பரியேறும் பெருமாள்” திரைப்படம். “நீலம் புரொடக்சன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்காக சென்னையில் பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாகடர்.தொல் திருமாவளவன் மற்றும் வன்னி அரசு, “நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் தமிழன் பிரசன்னா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப. வீரபாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி, மதிமுக-வின் துணை பொதுச் செயலாளர் மல்லை. சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு திரைப்படத்தினை பார்த்து உணர்ச்சிவசப் பட்டவர்களாக மாறிப்போனார்கள். அவர்களில் “நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருபடி முன்னே சென்று தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குநர் மாரி செல்வராஜையும் கட்டித் தழுவி, முத்தமிட்டு தனது பாராட்டுகளை வெளிப்படுத்தினார்.

“பரியேறும் பெருமாள்” படத்தினைப் பற்றி தலைவர்கள் பேசியது..

திரு.டாக்டர்.தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி),

“இந்த “பரியேறும் பெருமாள்” ஒரு உலகத்தரம் வாய்ந்த கிளாசிக்கல் சினிமா. ஒவ்வொரு வசனமும், காட்சியும் மிக இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

அதீதமான கற்பனையோ, அதீதமான காட்சிப் பதிவுகளோ இல்லாமல் உண்மைத்தன்மையுடன் இருக்கிறது இந்தப் படம். சாதீய ஒடுக்குமுறைகள் என்பது ஆண்டாண்டு காலமாக நிலைத்திருக்கும் ஒன்று.

இது எவ்வளவு கடுமையான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது என்பதையும் நாமறிவோம். அந்த சிக்கலை மிக இலகுவாக, முதிர்ச்சியாக, பக்குவமாக எடுத்துரைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். எவர் மனதும் புண்படாத வகையில், சாதியவாதிகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் இத்திரைப்படத்தை எடுத்து தமிழ்ச் சமூகத்திற்கு கொடையாக அளித்திருக்கிறார்கள் நம்முடைய மாரி செல்வராஜ் அவர்களும், பா.இரஞ்சித் அவர்களும்.

கலைத்துறையின் வாயிலாக இவர்களால் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். “பரியேறும் பெருமாள்” அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வெற்றித் திரைப்படமாக மாறியிருக்கிறது”.

திரு.சீமான் (நாம் தமிழர் கட்சி),

“நிறைய படம் பார்த்து விட்டு இது படமல்ல பாடம் என்று சொல்வோம். ஆனால், இந்த “பரியேறும் பெருமாள்” படம் பார்க்கும் போது, அவையெல்லாம் எவ்வளவு பொய்யான வார்த்தைகள் என்பது புரிகிறது. உண்மையிலேயே அப்படி சொல்ல வேண்டுமெனில் இந்த படத்தை சொல்லலாம்.

இன்னும் சொல்லப்போனால் திரையில் ஒரு புரட்சியை இந்தப் படம் செய்திருக்கிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய வயது, அனுபவம் இவற்றையெல்லாம் தாண்டி ஒரு ஆகச்சிறந்த படைப்பை தமிழ்ச் சமூகத்திற்கு தந்திருக்கிறார்.

மிகப்பெரிய பெரிய தாக்கத்தையும், வலியையும் இந்தப்படம் கடத்தி இருக்கிறது. ஒரு படைப்பாளியாக மாரி செல்வராஜும், ஒரு தயாரிப்பாளராக பா.இரஞ்சித்தும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நம் தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறை பிள்ளைகள் நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்”.

திரு.ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி),

“உண்மையில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு இது முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை. இப்படி ஒரு அபூர்வமான திரைப்படத்தை தயாரித்த தோழர் பா.இரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தப் படத்தின் கடைசிக் காட்சியைத் தவிர, முதல் காட்சியிலிருந்து சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதிய வன்மங்களை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். சாதி மறுப்புத் திருமணங்கள் செய்தவர்களின் மரணங்களை ஒரு பாடலின் வழியே காட்டிவிட்டு, இறுதியில் சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் உண்மையில் பாராட்டிற்குரியது. திரைப்படம் தயாரிப்பது என்பது முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குள் சென்றுவிட்ட இந்த காலத்தில், இதுபோன்ற நேர்த்தியான படைப்பைத் தந்த இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் பா.இரஞ்சித் ஆகியோரை பாராட்டுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்”.

திரு.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி),

“தமிழ்ச் சமூகம் முற்போக்கு பேசக்கூடியதாக இருந்தாலும், அது எப்படிப்பட்ட சாதிய சமூகமாக இருக்கிறது என்பதை இந்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம் மிக எதார்த்தமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது. திரைப்படங்கள் வாயிலாக எது எதையோ சமூகத்தில் திணித்துக் கொண்டிருக்கிற இந்த சூழலில், இந்தப் படம் மிக முக்கியமான கருத்தினைத் தாங்கி வந்துள்ளது. இதனை துணிந்து தயாரித்த இயக்குநர் பா. இரஞ்சித் அவர்களுக்கும், தன் மண்ணில் நடந்த சாதிய கொடுமைகளை பதிவு செய்த அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும் வாழ்த்துகள். இந்தப் படத்தின் வாயிலாக மனிதம் காக்கப்பட வேண்டும், மனிதம் போற்றப்பட வேண்டும்”.

ஆக மொத்தத்தில் தமிழ் சமூகத்தின் மனசாட்சியை
அனைத்து தளத்திலும் உலுக்கியிருக்கிறான், பரியேறும் பெருமாள்.

ரஜினிக்கு அடுத்து விஜய் தான்…; சர்கார் விழாவில் கலாநிதிமாறன் ஓபன் டாக்

ரஜினிக்கு அடுத்து விஜய் தான்…; சர்கார் விழாவில் கலாநிதிமாறன் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay rajiniவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இப்பட தயாரிப்பாளரும், சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதிமாறன் கலந்துக் கொண்டு பேசினார். அவர் பேசியதாவது…

“நடிகர் ரஜினிகாந்துக்கு பிறகு விஜய் தான் மிகவும் எளிமையானவர். அவர் திரைத்துறையில் பல சாதனைகளைப் படைத்துவிட்டார்.

அவர் இன்னும் ஒன்றை செய்ய வேண்டும். (சில நிமிடங்கள் ரசிகர்களைப் பார்த்துக் கொண்டே அமைதியாக இருந்தார்).

ரஜினிகாந்த் போல் விஜய்யும் 3டி தொழில்நுட்ப படத்தில் நடிக்க வேண்டும்

ஒரு நடிகர் பொது இடத்திற்கு சென்றால், அவருடன் 10 பேராவது உடன் செல்வார்கள். மேலும் கேமராக்களும் பத்திரிகையாளர்களும் கூடவே செல்வார்கள்.

ஆனால் அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கு விஜய் சென்றது யாருக்கும் தெரியாது. ரசிகர்கள் படத்தை வெளியிட்ட பின்புதான் நான் தெரிந்துக் கொண்டேன்” என்றார் கலாநிதிமாறன்.

அஜித் கூட நடிச்சிட்டேன்.. ஆனால் விஜய் வேற லெவல்.. : யோகிபாபு

அஜித் கூட நடிச்சிட்டேன்.. ஆனால் விஜய் வேற லெவல்.. : யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and yogi babuஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏஆர். ரஹ்மான், சன் டிவி கலாநிதிமாறன், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

விழாவினை நடிகர் பிரசன்னா கலந்துக் கொண்டார்.

விழாவிற்கு தாமதமாக வந்த காமெடி நகடிர் யோகிபாபு பேசியதாவது…

‘ நான் இப்போதுதான் ஒரு பட சூட்டிங் முடித்துவிட்டு வந்திதேன்.

சர்கார் போன்ற பெரிய படத்தில் வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயம்.

விஜய் அண்ணாவுடன் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி.

என்னுடைய மூளை எனக்கு சோறு போடல. முடிதான் சோறு போடுது.

மெர்சல் படத்தில் விஜய் அண்ணாவுடன் நடித்தேன். சில காட்சிகளில் தயங்கினேன். தொழில் என்று வந்துவிட்டால் சரியாகச் செய்ய வேண்டும் தயங்க கூடாது என்று விஜய் அண்ணன் தான் அட்வைஸ் செய்தார்.

பல நடிகர்களுடன் நடித்துவிட்டேன். விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடித்து விட்டேன். ஆனால் விஜய் அண்ணா வேற லெவல் என்று பேசினார் யோகிபாபு.

அவர் பேசி முடிக்கும்போது ரசிகர்களின் ஆர்பரிப்பு அடங்க வெகு நேரமானது.

அடுத்து என்ன என ரசிகர்களை யூகிக்க வைத்து கொண்டே இருப்பான் *ராட்சசன்*.. : டில்லிபாபு

அடுத்து என்ன என ரசிகர்களை யூகிக்க வைத்து கொண்டே இருப்பான் *ராட்சசன்*.. : டில்லிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ratsasanசமகாலத்திய சூழலில், பல தயாரிப்பாளர்கள் நட்சத்திர நடிகர்களையும், இயக்குனர்களையும் கண்மூடித்தனமாக நம்பி படம் தயாரிக்கும் நிலையில், அபூர்வமாக ஒரு சிலர் மட்டுமே கதையை நம்பி படம் எடுத்து வெற்றிப் பாதையில் பயணிக்கிறார்கள். அப்படி ஒரு தயாரிப்பாளர் தான் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி.டில்லிபாபு. வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் அவரின் ‘ராட்சசன்’ படத்தை பற்றிய நல்ல செய்திகள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.

இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு கூறும்போது, “ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி எப்போழுதும் நடிகர்களை தேர்வு செய்வதற்கு முன்னரே, வலுவான கதைகளை தேர்வு செய்து வருகிறது. அதே வகையில் தான் ராட்சசன் படத்தையும் தேர்வு செய்தோம். நான் ஒரு தீவிர கிரைம் நாவல் வாசகர் என்பதால், ராம்குமார் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர் சொன்னதை விட, படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்திருக்கிறார். ராட்சசன் யதார்த்த அணுகுமுறையில் உருவாகியுள்ள ஒரு கமெர்சியல் திரைப்படம், அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்களை யூகிக்க வைத்துக் கொண்டே இருக்கும். எங்களுக்கு நெருக்கமான சிலருக்கு படத்தை திரையிட்டு காண்பித்தபோது, ஒரே குரலாக அனைவருக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “ராட்சசனின் அற்புதமான திரைக்கதையை பாராட்டுவதற்கு முன்பு இயக்குனர் ராம்குமாரிடம், ‘முண்டாசுப்பட்டி’ போன்ற நகைச்சுவை படத்துக்கு பிறகு எப்படி இந்த மாதிரி ஒரு திரில்லர் கதையை எழுத முடிந்தது என்று கேட்டேன். அவர் அதற்கு, ‘இந்த கதையை எழுதி முடித்த பிறகு பலரும், இந்த படம் வேண்டாம் என்று சொன்னதோடு ஒரு காமெடி படத்தை இயக்கச் சொன்னார்கள். ராட்சசன் ஒரு வழக்கமான கிரைம்-த்ரில்லர் படம் அல்ல. படத்தில் நிறையவே எமோஷன் உண்டு என்று நான் உறுதியாக கூறுவேன்’ என்றார்.

தனது படக்குழுவினரைப் பற்றி பாராட்டி பேசும்போது, “படக்குழுவை பற்றி பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை. நாயகன் விஷ்ணு விஷால் தனது கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்ய, நிறைய உழைத்தார். ஆராய்ச்சி செய்தார். தனது கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்க, அவரது தந்தையிடம் நிறைய விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டார். அமலா பால் இதுவரை நடித்த படங்களை தாண்டி, அவரது சிறந்த படமாக இந்த படம் இருக்கும். மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். காளி வெங்கட், முனீஷ்காந்த், சுசானே ஜார்ஜ் ஆகியோர் இந்த படத்தில் இணையற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். ஜிப்ரான் இசை படத்துக்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறது. அவருக்கு ஒலி மற்றும் ஒலியை இசையுடன் கலப்பதில் நல்ல அறிவாற்றல் இருப்பதால் அது திரைப்படத்திற்கு மேலும் உயிர் சேர்க்கிறது” என்றார்.

Breaking ஊழல் முதல் சர்கார் தேர்தல் வரை..; விஜய் ஓபன் பேச்சு

Breaking ஊழல் முதல் சர்கார் தேர்தல் வரை..; விஜய் ஓபன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay talks about Politics in Sarkar Audio launchசர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தமிழக அரசியல் நிலவரம் பற்றி பரபரப்பாக பேசினார்.

கலாநிதி மாறன் பெயரிலேயே நிதி இருப்பதால் இந்த படத்துக்கு நிறைய செலவு செய்திருக்கிறார்.

நாங்க சர்கார் அமைச்சிட்டு தேர்தல்ல நிக்கிறோம். தீபாவளிக்கு வர்றோம். அப்போ ஓட்டு போடுங்க.

இங்க உள்ள பெரியவங்க அமைச்சர்கள் நல்லவங்களா இருந்தா எல்லாம் நல்ல படியா நடக்கும். பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை எல்லாத்துக்கும் பணம் தேவைப்படுது. ஒரு தலைவனை இந்த நாடு எதிர்பார்க்கிறது.

எப்போதும் தர்மம் தான் ஜெயிக்கும். நியாயம்தான் ஜெயிக்கும். ஆனால் கொஞ்சம் லேட் ஆகும் அவ்வளவுதான்.

ஒரு நாட்ல மன்னன் நல்லா இருந்தால்தான் நாடு நல்லா இருக்கும். எங்க இருந்து அந்த ஒருத்தன் வருவாங்கன்னு பாருங்க. அவன் வந்து நடத்துவான் பாருங்க..” என்று விஜய் பேசினார்.

Vijay talks about Politics in Sarkar Audio launch

More Articles
Follows