சிறப்பான முறையில் சிவகார்த்திகேயனின் *சீமராஜா* வியாபாரம்!

Sivakarthikeyans SeemaRaja trade news updates24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பாக சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர். டி. ராஜா தயாரித்துள்ள படம் சீமராஜா.

பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தை வருகிற விநாயக சதுர்த்தி பண்டிகை அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாரத்தையும் முடித்துவிட்டனர்.

இதன் சென்னை ஏரியா உரிமையை சத்யம் சினிமாஸின் எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

வட ஆற்காடு, தென்ஆற்காடு ஏரியாக்களை ஜி.ஸ்ரீனிவாசனின் ‘எஸ்.பிக்சர்’ நிறுவனம் வாங்கியுள்ளது.

செங்கல்பட்டு ஏரியாவை மட்டும் செண்பகமூர்த்தியின் எம்.எஸ்.எம்.மூவி டிரேடர்ஸ் உடன் இணைந்து ’24 ஏ.எம்.ஸ்டுடியோ’ நிறுவனம் வெளியிடுகிறது.

சேலம் ஏரியாவை ‘ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ்’ நிறுவனமும், கோயம்பத்தூர் ஏரியாவை மன்னாரின் ‘கந்தசாமி ஆர்ட்ஸ்’ நிறுவனமும் வாங்கியுள்ளன.

மதுரை ஏரியாவை மதுரை அன்புச்செழியனின் தம்பி அழகர் வாங்கியுள்ளார். திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாவை ‘சியோன் பிலிம்ஸ்’ நிறுவனமும், திருச்சி, தஞ்சாவூர் ஏரியாவை ‘பாஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனமும் வாங்கியுள்ளன.

Sivakarthikeyans SeemaRaja trade news updates

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

விஷால் தயாரித்து நடித்து இரும்புத்திரை படத்தை…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படம் கடந்த…
...Read More

Latest Post