ரெமோ விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய முழுவிவரம்..!

Sivakarthikeyan Speech at RemoFirstLook Launchரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது…

“என் அசிஸ்டென்ட் பாக்யராஜ் ஒருவரிடம் ஒரு கதை இருக்கு கேள் என்றார் அட்லி. அது பெண் வேடம் என்றார்.

என்னெயெல்லாம் பையனாக பார்ப்பதே பெருசு. இதுல பெண் வேஷமா என மறுத்துவிட்டேன்.

மறுபடியும் அட்லி சொல்வே பாக்யராஜ் கண்ணனை அழைத்து கதை கேட்டேன்.

ஒரு க்யூட்டான காமெடி கதை. ஆனால் லேடி கெட்டப் என்பதால் பலமுறை யோசித்தேன்.

கிட்டதட்ட 10 மாதத்தில் 8 முறை கதை கேட்டேன். சார் நீங்கதான் இப்படத்தை செய்யனும் என்றார் பாக்யராஜ்.

ஒருவேளை பில்டப் கொடுக்கிறாரே? என கூட நினைத்தேன். இறுதியாக ஓகே சொல்லிவிட்டேன்.

இதுபோல கேரக்டருக்கு எருமையை விட பொறுமை அவசியமாக என முடிவு செய்தேன்.

மேக்கப் போடும் போது தலையில் மட்டும் 50 ஹேர்பின்கள் இருக்கும். எவனோ பின்னாடி இருந்து குத்துற போல இருக்கும்.

10 மாதம் எனக்காக வெயிட் செய்தார். எனவே பாக்யராஜிக்காக 1 வருடத்தை ஒதுக்கி கொடுத்தேன்.

பி.சி.ஸ்ரீராம் சார் ஒளிப்பதிவின் பிதாமகன். அவர் இந்த கதைக்குள் வந்தபின்தான் சின்ன ரொமோவாக இருந்த இப்படம் ஷங்கர் சார் படம் போன்ற பெரிய ரெமோவாக மாறிவிட்டது.

என் கண்களுக்கு கூட சிறிய லைட்டிங் வைத்தார். நானே என்னை பார்த்து சைட் அடித்து காதலித்தேன். “அட சே..நீதான்டா அது” என்று அடித்துக் கொண்டேன்.

நிறைய பெண் வேடங்களை போட்டு பார்த்தோம். கடைசியாக நிக்கி, ரேச்சல், அனு மேடம் மூவரும்தான் சரியான மேக்கப் போட்டு என்னை தயார் செய்தார்கள்.

 

 

பெண்கள் பாவம். எப்படிதான் THREADING, WAXING எல்லாம் பண்றாங்க தெரியல.

புருவத்துல ஒவ்வொரு முடியா புடுறாங்க. வலி தாங்கல.

செட்டுக்கு கூப்பிடும்போது வாம்மா.. வாம்மா கூப்பிடுவாங்க… யோவ் அப்படியெல்லாம் கூப்பிடாதீங்க. சொல்வேன்.

ஸ்ரீராம் சார் முதல் ஷாட் வைச்ச பிறகுமான் என் ப்ரேமில் எனக்கே நம்பிக்கை வந்தது.

கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் நாயகி என்று சொன்ன உடனே நான்தான் முதல் ஆளாக வேண்டாம் என்று சொன்னேன்.

தொடர்ச்சியாக 2 படங்கள் இணைந்து செய்தால் கிசுகிசு வந்துவிடும். மேலும் அடுத்தடுத்து படங்கள் என்பதால் மறுத்தேன்.

நானே அவரிடம் நல்ல ஹீரோயின் இருந்தா சொல்லுங்கள் அப்படின்னு கேட்டேன். ஆனால் நிறைய பேர் மறுத்துவிட்டனர்.

இதில் நாயகியாக நடிக்க முடியாது என்று சொன்ன அந்த நாயகிகளுஙக்கு தேங்க்ஸ். ஏனென்றால் கீர்த்தி சுரேஷின் நடிப்பு அழகாக இருந்தது.

 

 

‘3’ படத்தின் போது அனிருத் எப்படி இருந்தாரோ, அப்படியே இருக்கிறார். ஒரு நலம் விரும்பியாக, நண்பராக, சகோதரனாக இருக்கிறார்.

அவருடைய பணத்துக்கும் புகழுக்கும் அவர் இந்த படத்தை செய்யாமல் இருந்திருக்கலாம்.

நான் எப்போது கேட்டாலும், கதையே கேட்காமல் இசையமைக்க ஓகே சொல்லிடுவார்.

நானும் அந்த நம்பிக்கையில் அவரிடம் நல்ல படங்களை கொடுத்து வருகிறேன்.

சினிமாவுக்கு நீ சின்சியராக இல்லேன்னா சினிமா உன்னை தூக்கி போட்டுடும் அப்படின்னு ஷங்கர் சார் சொல்லியிருக்கிறார்.

அந்த மந்திரத்தைதான் தயாரிப்பாளர் ராஜா பின்பற்றி வருகிறார்.

 

 

என் படத்தைப் நம்பி பார்க்க வரும் மக்கள், ரசிகர்களால்தான் நான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன்.

எனக்கு பின்னால் யாரும் கிடையாது. எனக்கு முன்னால் இருக்கும் நீங்கள்தான் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

நான் ஒரு நடிகராக ஆகிவிட்டேனா என்பது இதுவரை தெரியாது. ஆனால் நடிகராக ஆவதற்கு முதல் அடியை இப்போ எடுத்து வைச்சிட்டேன்.

இதுவரை நான் எந்த இடத்திலும் சொன்னது இல்லை. இப்போது சொல்கிறேன்.

நான் கிட்டதட்ட 18 மணி நேரம் உழைத்துவிட்டு வருவேன். 5 மணிநேரம் மட்டும்தான் உறங்குவேன்.

அந்த நேரத்திலும் எந்தவித தொந்தரவு கொடுக்காமல் என்னை பார்த்துக் கொள்வார். என் மனைவி ஆர்த்திக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு பேசினார் சிவகார்த்திகேயன்.

Overall Rating : Not available

Related News

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க 'ரெமோ, வேலைக்காரன்,…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்…
...Read More
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் வரிசையில்…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் என்ற படம்…
...Read More

Latest Post