ரஜினி மாதிரி சிவகார்த்திகேயன் இல்லை..; ‘மாவீரன்’ விழாவில் மிஷ்கின் பேச்சு

ரஜினி மாதிரி சிவகார்த்திகேயன் இல்லை..; ‘மாவீரன்’ விழாவில் மிஷ்கின் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி, மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பரத் சங்கர் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவை பிக்பாஸ் புகழ் ராஜுவும், பாவனாவும் தொகுத்து வழங்கினர்.

இந்த விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசும்போது.. ‘நடிகை சரிதா மேடம் சிவகார்த்திகேயனை ரஜினி போல் அடக்கமானவர் என என்னிடம் பேசும்போது தெரிவித்தார்.

சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரி எல்லாம் இல்லை. அவர் ரஜினியேதான் என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்.? என்ற சர்ச்சை அடிக்கடி விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இப்போது சிவகார்த்திகேயன் ரஜினியே தான் என்று மிஷ்கின் பேசியுள்ளது நிச்சயம் சர்ச்சையை உண்டாக்கும் என எதிர்பார்க்கலாம்.

Sivakarthikeyan is Rajini says Mysskin at Maaveeran event

நேற்று நீண்ட தலை முடி தாடி.. இன்று மொட்டை தலையுடன் தனுஷ்..; வேற மாரி.!

நேற்று நீண்ட தலை முடி தாடி.. இன்று மொட்டை தலையுடன் தனுஷ்..; வேற மாரி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இந்த படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே நீண்ட தலைமுடியும் நீண்ட தாடியும் வளர்த்து வேற மாதிரி மாஸாக இருந்து வந்தார்.

தனுஷின் புகைப்படங்கள் வெளியானபோது தனுஷ் ரசிகர்களும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்த நிலையில் திருப்பதிக்கு தன் 2 மகன்கள் யாத்ரா லிங்கா ஆகியோருடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

அப்போது திடீர் என்று மொட்டை அடித்து ஆளே மாறி இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Dhanush With family Had Darshanam at Tirumala tirupathi

இந்த சண்டையில் சட்டை கிழியாது..; இயக்குநர் லோகேஷை முந்த கௌதம் முடிவு

இந்த சண்டையில் சட்டை கிழியாது..; இயக்குநர் லோகேஷை முந்த கௌதம் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடித்து சூப்பர் ஹிட்டான ‘வேட்டையாடு விளையாடு’ படம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம் ரீ ரிலீஸ் ஆனது.

வெள்ளிக்கிழமை வெளியான புதிய படங்களை விட இன்றும் புதிய படம் போல ‘வேட்டையாடு விளையாடு’ வசூல் செய்து வருவதை நாம் செய்திகளாக பார்த்தோம்.

இந்த நிலையில் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், கமலின் தீவிர ரசிகர்களில் கவுதம் மேனன்தான் முதலிடம் பிடிப்பார் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு ரிப்ளை செய்த இயக்குநர் லோகேஷ்… “சந்தேகமே வேண்டாம், கவுதம் வாசுதேவ் மேனன்தான் முதலிடம்” என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள கௌதம் மேனன்… “விக்ரம் படம் வருவதற்கு முன் வரை தான் முதலிடத்தில் இருந்ததாகவும், தற்போது லோகேஷ்தான் முதலிடம் என.. ‘நாயகன் மீண்டும் வர்றார்” குறிப்பிட்டிருந்தார்.

இத்துடன், லோகேஷ் கனகராஜை தாண்ட முயற்சி செய்வதாகவும்… இந்த சண்டையில் சட்டை கிழியாது, அன்புதான் இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.

Gautham and Lokesh fight for Kamal fan boy moment

ஒரு வழியா ‘ஜெயிலர்’ பட சிங்கிள் ட்ராக் ப்ரோமோ அப்டேட் வந்தாச்சு.!

ஒரு வழியா ‘ஜெயிலர்’ பட சிங்கிள் ட்ராக் ப்ரோமோ அப்டேட் வந்தாச்சு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’.

இதில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ளனர்.

அடுத்த மாதம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் ஜெயிலர் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

எனவே ரிலீஸ்க்கு கிட்டத்தட்ட 40 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் எந்த அப்டேட்டும் கிடைக்கவில்லை என ரஜினி ரசிகர்களும் மோகன்லால் ரசிகர்களும் செம டென்ஷனில் இருந்தனர்.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோ நாளை ஜூலை 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

மேலும் அனிருத் வீடியோவையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

Rajinis Jailer single track promo update

எமனே தவறு செய்தாலும் எதிர்ப்பேன்.; ‘மாவீரன்’ ட்ரைலரில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்

எமனே தவறு செய்தாலும் எதிர்ப்பேன்.; ‘மாவீரன்’ ட்ரைலரில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள படம் ‘மாவீரன்’.

‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மிஷ்கின், யோகிபாபு, சரிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள இந்த படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த பட ட்ரெய்லர் விழா தற்போது சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், யோகி பாபு, மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த நிலையில் ‘மாவீரன்’ பட டிரைலர் இன்று இரவு வெளியானது.

இந்த ட்ரெய்லர் கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ளது. ஆக்ஷன் காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக இது உள்ளது.

அரசியல்வாதியாக நடித்துள்ள மிஷ்கின் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கும் சாமானியனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

எமனே தவறு செய்தாலும் எதிர்த்து நிற்பேன் என மாஸ் டயலாக் பேசியுள்ளார்.

நானாக எதுவும் செய்யவில்லை. அதுவாக நடக்கிறது என்கிறார் சிவகார்த்திகேயன்.

என்னை என்ன முட்டாள் நெனச்சியா? என்ன மிஷ்கின் கேள்வி கேட்பதுடன் டிரைலர் முடிகிறது.

https://t.co/aQ1ccuSHaG

Sivakarthikeyan punch dialogue in Maaveeran Trailer

ஜாதி மதம் பேசும் படம்.. ஆனா யாரையும் தாழ்த்தி பேசாது – ஆனந்த்ராஜ்

ஜாதி மதம் பேசும் படம்.. ஆனா யாரையும் தாழ்த்தி பேசாது – ஆனந்த்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம்நாத் இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மனோபாலா ஆகியோர் நடித்துள்ள படம் ‘ராயர் பரம்பரை’.

இப்படம் ஜூலை 7 தேதி வெளியாக உள்ள நிலையில் செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது…

மறைந்த நடிகர் மனோவிற்கு முதலில் என் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப்படம் சிறிய படம் இல்லை, ஒரு நல்ல பெரிய படம் , தயாரிப்பாளர் படத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார்.

இந்தப் படம் ஜாதி மதம் பேசுகிற ஒரு ஜாலியான படம், யாரையும் தாழ்த்தி பேசாத ஒரு நல்ல படம், படத்தில் பல காமெடி கட்சிகளை எடுத்து வைத்துள்ளார் இயக்குநர், படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் மக்களிடம் கொண்டு போய் இதை நீங்கள் தான் சேர்க்க வேண்டும் நன்றி.

தயாரிப்பாளர் சின்னசாமி பேசியதாவது…

நான் நடிக்க ஆசைப்பட்டு வந்தேன், ஆனால் என்னை யாரும் ஆதரிக்கவில்லை. அதனால் 10 வருடம் கஷ்டப்பட்டு உழைத்து இந்தப் படத்தைத் தயாரித்து அதில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

நான் யாருக்கும் சமரசம் செய்யாமல் இந்த படத்திற்கு தேவையானதைச் செய்துள்ளேன், படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். எங்களைப் போன்ற புது குழுவிற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் நன்றி.

Anandraj speech about Rayar Parambarai movie

More Articles
Follows