இனிமே LIC-ன்னா சிவகார்த்திகேயனும் உங்க நினைவுக்கு வருவார்

Sivakarthikeyan and Vignesh Shivan combo movie may titled LICஎம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள படம் ‘மிஸ்டர் லோக்கல்’.

இப்படம் மே 1ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதனையடுத்து ‘இன்று நேற்று நாளை’ ஆர்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவா.

இந்த படங்களை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ என்ற படத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

இவையில்லாமல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் பார்த்தோம்.

லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘எல்.ஐ.சி.,’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அப்படின்னா.. இனிமே எல்ஐசின்னா சிவகார்த்திகேயனும் ரசிகர்கள் நினைவிற்கு வருவார்தானே…

Sivakarthikeyan and Vignesh Shivan combo movie may titled LIC

Overall Rating : Not available

Latest Post