சிவாஜி பிறந்தநாள் இனி திரையுலகின் விடுமுறை நாள்; விஷால் முடிவு

சிவாஜி பிறந்தநாள் இனி திரையுலகின் விடுமுறை நாள்; விஷால் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivaji Ganesan Birthday will be holiday for Tamil Cinema says Vishalதென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளராக பதவி வகிக்கும் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவரானது முதல் பல அதிரடியான செயல்களை செய்து வருகிறார்.

இரும்புத்திரை படத்தை தொடர்ந்து தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தில் நடித்து வருகிறார்.

இதன் சூட்டிங் தற்போது திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே நடைபெற்று வருகிறது.

அப்போது அங்கு அளித்துள்ள பேட்டியில்…

செவாலியர் சிவாஜிகணேசன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி.

அதுபோல செவாலியர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை நாங்கள் தமிழ்த்திரையுலகின் விடுமுறை நாளாக அறிவிக்க உள்ளோம்.

மேலும் தமிழ் திரையுலகினருக்கு ஒவ்வொரு மாதமும் 2-ம் சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்கவுள்ளோம்.

Sivaji Ganesan Birthday will be holiday for Tamil Cinema says Vishal

நிதின் சத்யா-ஜெய் இணையும் ஜருகண்டி பட டிரைலர் ரிலீஸ் தேதி

நிதின் சத்யா-ஜெய் இணையும் ஜருகண்டி பட டிரைலர் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jarugandi movie trailer release date updatesநடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஜருகண்டி’.

பத்ரி கஸ்தூரி என்பவரும் இப்படத்தை இணைந்து தயாரித்து வருகிறார்.

வெங்கட் பிரபுவின் முன்னாள் உதவியாளர் பிச்சுமணி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஜெய்யுடன் ரேபா மோனிகா ஜான், ரோபோ ஷங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு செய்ய, போபோ சஷியின் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்பட டிரைலரை நாளை ஜூலை 6ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Jarugandi movie trailer release date updates

நடிகை அமலாபாலை டைவர்ஸ் செய்த விஜய்க்கு 2வது திருமணம்

நடிகை அமலாபாலை டைவர்ஸ் செய்த விஜய்க்கு 2வது திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Vijay getting ready for his 2nd marriageஇயக்குனர் விஜய்க்கும் நடிகை அமலாபாலுக்கும் காதல் மலர்ந்து 2014-ல் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

ஆனால் இரண்டு வருடங்கள் முடிவதற்குள்ளேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

விவாகரத்துக்கு பின்னர் படங்களில் பிசியாகி விட்டார் அமலாபால்.

இதுநாள் வரை இரண்டாவது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த விஜய் தற்போது சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம்.

அவருக்கான பெண்ணை அவரின் பெற்றோர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

எனவே விஜய்க்கு விரைவில் 2-வது திருமணம் நடக்கவுள்ளது.

Director Vijay getting ready for his 2nd marriage

பட்டைய கிளப்பும் விஜய்யின் சர்கார் பட வியாபாரம்

பட்டைய கிளப்பும் விஜய்யின் சர்கார் பட வியாபாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த்தி, துப்பாக்கி ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து சர்கார் படத்திற்காக விஜய்யும் ஏஆர். முருகதாசும் இணைந்துள்ளனர்.

எனவே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது.

இதனால் இப்பட வியாபாரமும் வேகம் எடுத்துள்ளது.

தற்போதே ரூ 105 கோடி வரை இதன் வியாபாரம் பேசப்பட்டு வருகிறதாம்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

Vijay Sarkar movie trade updates

•சஞ்சு• பட வசூலை ரஜினி முறியடிப்பார் என ராஜு மகாலிங்கம் சவால்

•சஞ்சு• பட வசூலை ரஜினி முறியடிப்பார் என ராஜு மகாலிங்கம் சவால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis 2point0 movie will break Sanju record says Raju Mahalingamஇந்திய சினிமாவே வியக்கும் அளவுக்கு வசூல் சாதனை படைத்த படம் பாகுபலி 2.

இப்படத்தின் முதல் நாள் வசூலை அண்மையில் வெளியான சஞ்சு என்ற ஹிந்தி திரைப்படம் ஒரு நாள் வசூல் சாதனையை செய்துள்ளது.

ஆம், சஞ்சு கடந்த ஞாயிறு அன்று மட்டும் ரூ 46.7 கோடி வசூல் செய்துள்ளது.

இதை ட்விட்டரில் ஒருவர் பகிர, அதை டேக் செய்து அதற்கு பதில் அளித்துள்ளார் ராஜு மகாலிங்கம்.

ரஜினி நடித்துள்ள 2.0 படத்திற்கு காத்திருங்கள். அது முறியடிக்கும் என பதிவிட்டுள்ளார்.

ராஜு மகாலிங்கம் தற்போது ரஜினி மக்கள் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinis 2point0 movie will break Sanju record says Raju Mahalingam

அஜித்-விஷாலை அடுத்து சூர்யா உடன் இணையும் ஆர்யா

அஜித்-விஷாலை அடுத்து சூர்யா உடன் இணையும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya suriyaஅஜித்துடன் ஆரம்பம், விஷாலுடன் அவன் இவன் ஆகிய படங்களில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்தார் ஆர்யா.

தற்போது சூர்யா உடன் நடிக்கிறார். அதுபற்றிய விவரம் வருமாறு…

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட சூட்டிங் அண்மையில் லண்டனில் தொடங்கியது.

சூர்யாவின் 37-வது இப்படத்தில் சாயிஷா, மோகன்லால், அல்லு சிரிஷ், பாலிவுட் நடிகர் பொம்மி இரானி முதலானோருடன் ஆர்யாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை வெளியிட்டிருந்தோம்.

இப்போது, ‘சூர்யா-37’ல் ஆர்யா நடிக்க இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் கே.வி.ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார்.

More Articles
Follows