தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க பொதுச்செயலாளராக பதவி வகிக்கும் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவரானது முதல் பல அதிரடியான செயல்களை செய்து வருகிறார்.
இரும்புத்திரை படத்தை தொடர்ந்து தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தில் நடித்து வருகிறார்.
இதன் சூட்டிங் தற்போது திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே நடைபெற்று வருகிறது.
அப்போது அங்கு அளித்துள்ள பேட்டியில்…
செவாலியர் சிவாஜிகணேசன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி.
அதுபோல செவாலியர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை நாங்கள் தமிழ்த்திரையுலகின் விடுமுறை நாளாக அறிவிக்க உள்ளோம்.
மேலும் தமிழ் திரையுலகினருக்கு ஒவ்வொரு மாதமும் 2-ம் சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்கவுள்ளோம்.
Sivaji Ganesan Birthday will be holiday for Tamil Cinema says Vishal