சிவாஜியின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழும் சிவாஜியும் விழா

சிவாஜியின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழும் சிவாஜியும் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivaji Ganesan 90th Birthday Celebrationsஅகமதாபாத் தமிழ் சங்கம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜியின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு ”சிவாஜியும் தமிழும்” என்ற தலைப்பில் மாபெரும் விழா சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது.

விழாவில் அகமதாபாத் தமிழ் சங்க தலைவர் முனைவர். எஸ். கவிதாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமங்களின் நிறுவன வேந்தர் தா.இரா. பாரிவேந்தர் தலைமை வகித்தார்.

விழாவில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, வி.ஜி.பி. குழும தலைவர் வி.ஜி.பி. சந்தோஷம், வசந்த் அன்ட் கோ தலைவரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ., புதுவை தமிழ் சங்க தலைவர் வி.முத்து, நக்கீரன் தமிழ் சங்க பொதுச்செயலாளர் மீடியா பாஸ்கர் மற்றும் கவிஞர் இன்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட இயக்குனர் கே. பாக்யராஜ் கலந்து கொண்டார். ”தேசியத்திற்கு சிவாஜி” என்ற தலைப்பில் எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

அந்த காலத்தில் சிறந்த நடிகர்கள் இருந்தனர். அவர்கள் கதாப்பாத்திரமாக நடித்தனர். ஆனால் அந்த கதாப்பாத்திரமாகவே மாறி நடித்தவர் சிவாஜி.

பெருந்தலைவர் காமராஜரின் உண்மைத் தொண்டர். காமராஜரின் பொற்கால ஆட்சியை அவர் சினிமாவில் காட்ட தயங்கியதில்லை.

வீரபாண்டிய கட்டபொம்மன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. சிதம்பரம் பிள்ளை உள்ளிட்டோரின் வரலாற்றை நம் கண்முன்னே கொண்டு வந்தார்.

ஒவ்வொரு படத்திலும் மக்களுக்கு தேசிய உணர்வை ஊட்டினார். நாட்டுப்பற்றை கொடுத்தார். இவ்வாறு எச். வசந்தகுமார் கூறினார்.

நாயகன் அறிமுகம்

இந்த விழாவில் மராட்டிய மாநிலத்தில், 30&க்கும் மேற்பட்ட நடன பள்ளிகள் அமைத்து தமிழ் கலாச்சாரம் மற்றும் நடன பயிற்சி அளித்து வரும் மேக் மோகன் பால், அவரின் மனைவி மேரி மேக்மோகன் பால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேக் மோகனின் மகன், லாபி நடன கலைஞர் ஆவார். இவர் ஏற்கனவே இந்தியில் ஆல்பம் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி 2 இந்தி படங்களிலும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் புது படத்தில் அறிமுகமாகவும் உள்ளார். இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

விழா குறித்து லாபி கூறும்போது, ”என் பெயர் லாபி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பை தாங்க. ஆனா நான் தமிழ் பையன். கோயம்புத்தூர் தாங்க என் சொந்த மாவட்டம்.

அப்பா, அம்மா எல்லோரும் ரொம்ப நாளுக்கு முன்னாலே மும்பை வந்துட்டாங்க. நடன போட்டியில் சர்வதேச அளவில் பங்கு பெற்று உள்ளேன். நடன போட்டிக்கு 7 நாடுகளுக்கு மேல் சென்றிருக்கிறேன்.

தற்போது இந்தியில் முன்னணி கதாப்பாத்திரத்தில் 2 படங்கள் பண்றேன். தமிழ் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கு.

தமிழ்நாட்டிற்கு வந்து சிவாஜி சார் விழாவுல கலந்துகிட்டது ரொம்ப பெருமையா இருக்கு.

அவர் மிகப்பெரிய மனிதர். அவர் போல நானும் வரணும். தமிழ் மக்களாகிய உங்களின் ஆதரவும், ஆசிர்வாதமும் எனக்கு தேவை.” என்றார்.

சிவாஜியும், தமிழும் விழாவிற்கான ஏற்பாடுகளை அகமதாபாத் தமிழ் சங்கம், சென்னை தமிழ் சங்க தலைவர் டாக்டர். டி. இளங்கோவன், வி.ஜி.பி. உலக தமிழ் சங்கம், நக்கீரன் தமிழ் சங்கம், டெல்லி தமிழ் சங்க பொதுச்செயலாளர் முனைவர். இரா. முகுந்தன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பாரிவேந்தர் தமிழ் மன்றம், செஞ்சி தமிழ் சங்கம், சிவாஜி நலப் பேரவை மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவில் அகமதாபாத் தமிழ் சங்க துணை தலைவர் ஆர். திருநாவுக்கரசு நன்றியுரை கூறினார். மீடியா பாஸ்கரன் மற்றும் செழியன் ஆகியோர் விழா ஒருங்கிணைப்பாளராக இருந்தனர். செய்தி தொடர்பு பணிகளை செல்வரகு கவனித்தார்.

Sivaji Ganesan 90th Birthday Celebrations

sivaji function

கோலாவை எதிர்க்கும் ஹீரோதான் அந்த விளம்பரத்திலும் நடிக்கிறார்… சுரேஷ் காமாட்சி

கோலாவை எதிர்க்கும் ஹீரோதான் அந்த விளம்பரத்திலும் நடிக்கிறார்… சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

6 Athiyayam Movie Audio & Trailer Launch Photos (51)‘6 அத்தியாயம்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…

சேரன் கொண்டு வந்த சி2எச் ஏன் தோல்வி அடைந்தது என்று பார்த்திபன் தான் பதில் சொல்லவேண்டும். அவர்தான் தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர்.

அவரை என்றாவது அழைத்து பேசியிருக்கிறீர்களா..? அவரிடம் 3000 சப்ஸ்ரைபர்கள் இருக்கிறார்கள்.

தமிழ் சினிமா டிஜிட்டல் என்று தெரிந்துவிட்டது. சேரனை ஆதரிக்காதது தமிழர் என்ற காழ்ப்புணர்ச்சி தான். சேரனை அழைத்து ஏன் பேச மறுக்கிறீர்கள்?

பெரிய தயாரிப்பாளர்கள் 10 பேருக்காகத் தான் சங்கம் நடக்கிறது.

விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு தண்ணீர் வேண்டும் என கோக்க கோலாவை எதிர்த்து வசனம் பேசுகிறார் ஒரு ஹீரோ.

அவரேதான் அந்த கோக்க கோலா விளம்பரத்திலும் நடிக்கிறார்.” என்று பேசினார் சுரேஷ் காமாட்சி.

The hero who oppose Coke is also acting in brand advt says Suresh Kamatchi

விஷாலை எப்போதும் திட்ட காரணம் என்ன.? சுரேஷ் காமாட்சி விளக்கம்

விஷாலை எப்போதும் திட்ட காரணம் என்ன.? சுரேஷ் காமாட்சி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal suresh kamatchi‘6 அத்தியாயம்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது…

சினிமா வியாபாரத்தை பற்றி பேசுகிறோம், படிக்கிறோம். ஆனால் அது அழிந்துபோய்க்கொண்டிருக்கிறது. பர்மா பஜாரில் பத்து டிவிடி வாங்கினால் படம் பண்ணிவிடலாம்.

படம் பண்ணிவிட்டால் அதன்பின் கருத்து சுதந்திரம் என்று சமாளிக்கலாம். கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. காமராஜர் தோற்றதற்கு காரணம் சினிமா.

மக்களிடம் நேர்மையாக ஒரு விஷயத்தை சொல்வது இல்லை. தவறான விஷயத்தை சொல்லிவிட்டு பின்னர் கருத்து சுதந்திரம் என்று சொல்வது. இது எல்லாம் தவறான ஒன்று.

கதாசிரியர்களை மதிப்பதில்லை. காம்பினேஷனுக்கு தான் இங்கே மதிப்பு. இந்த படத்துக்கு எடுத்த முயற்சியை புரமோஷனிலும் எடுத்து சரியாக கொண்டு சேர்க்க வேண்டும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

தமிழ் சினிமாவுக்கு இரண்டு புதிய பிஆர்.ஓக்கள் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் கொண்டு சென்றால் போதும்.
பைரசியை தடுத்துவிட்டதாக பொய் சொல்கிறார்கள். தமிழ் ராக்கர்ஸை பிடிக்கவே முடியாது. நடிகர்கள்தான்

அதற்கு காரணமாக இருப்பார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது.

ஒன்பது மாதங்களாக என்னென்ன வேலைகள் செய்திருக்கிறீர்கள்? ஸ்ட்ரைக்கை அறிவித்து பின்னர் முடித்தீர்கள். ஜிஎஸ்டிக்கு ஸ்ட்ரைக் அறிவித்தீர்கள். ஆனால் 2 சதவீதம் குறைத்தவுடன் வாபஸ் வாங்கினீர்கள்?

ஆன்லைன் வியாபாரத்தை எல்லா தயாரிப்பாளர்களுக்கு விளக்கி இருக்கிறீர்களா? அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டாமா? எங்கள் தலைவர் க்யூப் கட்டணத்தை குறைக்க இருப்பதாக சொன்னார்.

ஆனால் அதிகமாகத் தான் ஆகியிருக்கிறது. 32 ஆயிரமாக ஏறிவிட்டது. கேபிள் டிவியில் ஒன்றரை கோடி எப்படி வரும்? ஒரிஜினல் சிடி மார்க்கெட்டை திறந்துவிட்டால் தான் திருட்டு டிவிடி ஒழியும். அரசாங்கம் போலத் தான் இவர்களும் நம்மை ஏமாற்றுகிறார்கள்.

தியேட்டர்காரர்கள் மூன்று மாதங்கள் கழித்துதான் வசூல் விபரம் வருகிறது. இது உடனே கிடைக்க ஆவண செய்தால் என்ன? இதுப்போன்ற என்னுடைய ஆதங்கத்தை பார்த்திபன் அவர்கள் தான் சங்கத்திற்கு எடுத்து செல்ல வெண்டும்.

தீபாவளிக்கு பத்தாயிரம் கொடுக்கவும் பொங்கலுக்கு வேட்டி சேலை கொடுக்கவும் தான் சங்கமா? விஷாலுக்கு எதிராக ஏன் எப்போது பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு விஷால் உள்பட அனைத்து ஹீரோக்களுமே நண்பர்கள்தான்.

இன்னும் ஒரு வாரத்தில் தமிழ் ராக்கர்ஸை பிடித்துவிடுவேன். அப்படி செய்வேன் இப்படி செய்வேன் என்பதை விட, அதை செய்து முடித்துவிட்டேன் என விஷால் தெரிவித்தால் நாங்களும் பாராட்டுவோம்” என்று பேசினார் சுரேஷ் காமாட்சி.

Suresh Kamatchi clarifies Why he always scolding Vishal

6 Athiyayam Movie Audio & Trailer Launch Photos (23)

 

இனி சினிமாவைத் தேடி ரசிகன் வரமாட்டான்… மீரா கதிரவன் பேச்சு

இனி சினிமாவைத் தேடி ரசிகன் வரமாட்டான்… மீரா கதிரவன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

6 Athiyayam Movie Audio & Trailer Launch Photos (43)‘6 அத்தியாயம்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ வெங்கடேஷ், தாமிரா, தயாரிப்பாளர் இயக்குனர் சுரேஷ் காமாட்சி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘6 அத்தியாயம்’ படத்தின் இசைத்தகட்டை இந்த படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் அவர்களின் தாயார் பிரேமாவதி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.

விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பேசியவை…

இயக்குநர் எஸ் எஸ் ஸ்டான்லி

இதே தியேட்டரில் ஒரு ஷோ முடிந்தபிறகு கேபிள் சங்கரும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் ஒரு கதை சொல்லி என்னை நடிக்க சொன்னார்.

பிரமாதமான கதை. சங்கர் தியாகராஜனுக்கு பெரிய நன்றியை சொல்லவேண்டும். எல்லா வெள்ளிக்கிழமையும் காலை முதல் நாள் முதல் ஷோ பார்க்கும்போது எங்களுக்குள் விவாதங்கள் நடக்கும்.

வாராவாரம் கூடி பேசுவோம். மிக சரியாக திட்டமிட்டு இதனை செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். முக்கியமாக அஜயன்பாலா, பொன் காசிராஜன் இருவருமே பெரிய திறமைசாலிகள். இருவரும் இதில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இயக்குநர் சேரன்

கேபிள் சங்கர், சங்கர் தியாகராஜன் இருவருக்கும் நன்றி. ஒரே படத்தில் 6 டீம்களை அறிமுகப்படுத்தியிருப்பதற்கு தான் அந்த நன்றிகள். 60 பேருக்கு வாழ்க்கை அமைத்துக்கொடுத்திருக்கிறீர்கள்.

இதுபோன்ற முயற்சிகள் நிறைய வரவேண்டும். இதுதான் நல்ல மாற்றம். புதிய இயக்குநர்கள் எல்லோருக்கும் ஹீரோக்களை நினைத்து பயம் இருக்கிறது.

ஆனால் விரைவில் அவர்களுக்கு நல்ல காலம் வரவிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சினிமா அடுத்த கட்டத்துக்கு செல்லும். தியேட்டர்களை விட வீடுகளுக்குள் நம் படங்கள் உள்ளே செல்லும்.

அப்போது இந்த இளைஞர்களுக்கு தான் எதிர்காலம். இனி சினிமாவை நினைத்து பயப்பட வேண்டியதில்லை. இணையம் அதற்கான பெரிய ப்ளாட்ஃபார்மாக மாறும்.

தயாரிப்பாளர் தனஞ்செயன்

எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இதை சரியான முறையில் புரமோஷன் செய்து வியாபாரத்திலும் லாபம் பார்க்க வேண்டும். சேரன் சொன்னதுபோல இணையத்தில் வெளியிட்டும் பெரிய லாபம் பார்க்க வேண்டும்.

அஜயன்பாலா இயக்குநராகி இருப்பது சந்தோஷம் அளிக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘பாஃப்டா’ சார்பாக இதேபோல் வண்ணச்சிறகுகள் என்று ரிலீஸ் ஆகவிருக்கிறது. எனவே இந்த படத்தின் ரிசல்ட்டை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம்

வித்தியாசத்துக்கு பார்த்திபனும் ஆக்ரோஷமாக பேச சுரேஷ் காமாட்சியும் இருக்கிறார்கள். சேரன் உணர்ச்சிமயமாக பேசுபவர். ஆனால் உண்மையைத் தான் பேசுவார்.

கில்டு சார்பில் சில முயற்சிகள் நடக்கின்றன. அவை நடைமுறைக்கு வந்தால் பட ரிலீஸ் அன்றே தயாரிப்பாளர்கள் கைகளில் ஒன்றரை கோடி இருக்கும். இன்னும் ஆறு மாதங்களில் நல்ல காலம் பிறக்கும். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும்.

இயக்குநர் மீரா கதிரவன்

இந்த நிகழ்வு என் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. என்னை வழி நடத்திய அஜயன்பாலா இயக்குநர் ஆகியிருக்கிறார். கேபிள் சங்கர் சினிமா வியாபாரத்தை பற்றி எழுதியவர்.

ரசிகர்களின் கணக்கும் நம் கணக்கும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்தால் தான் வெற்றியை பார்க்க வேண்டும். ரசிகர்கள் என்று பொதுவாக சொல்கிறோம்.

ஆனால் ரசிகர்களில் வெவ்வேறு வகை உண்டு. ஆனால் இன்றைய நாளில் மூன்றே நாளில் படத்தின் ஆயுள் முடிந்துவிடுகிறது.

இனி சினிமாவைத் தேடி ரசிகன் வரமாட்டான். அவனைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும். சினிமாவுக்கான இன்னொரு தளமாக இணையம் உருவாகிக்கொண்டிருக்கிறது.

என் படம் ரிலீஸ் தள்ளிப்போனபோது எனக்காக பார்த்திபன் குரல் கொடுத்திருந்தார். அது எனக்கு பெரிய ஆறுதல் தந்தது. பார்த்திபன் அவர்களுக்கு நன்றிகள்.

ஒரு படத்தின் புரமோஷனுக்கு ஆர்ட்டிஸ்ட் வரவேண்டும் என்பதை சங்கங்கள் கட்டாயமாக்க வேண்டும்.

இயக்குநர் ஏ வெங்கடேஷ்

கேபிள் சங்கர் எனக்கு நல்ல நண்பர். நான் ஒரு படத்துக்கு அஜயன்பாலாவை வசனம் எழுத அழைத்தேன். அவர் யோசித்தார்.

கமர்ஷியல் தான் கஷ்டம் என்று சொல்லி எழுத வைத்திருக்கிறேன். இந்த படம் தான் எதிர்கால சினிமா. டீம் டீமாக சேர்ந்து படம் பண்ணுவது இனி அதிகரிக்கும்.

இந்த படம் அதற்கு தொடக்கமாக அமையும். மாஸ் ஹீரோவுக்கு நிகரான பேய் இந்த படத்தில் இருக்கிறது. அது நிச்சயம் ஹிட்டை தரும். சேரனின் சி2எச்சுக்கு இந்த திரையுலகம் உதவி புரியவில்லை ஏன் என்பதை சுரேஷ் காமாட்சி விளக்க வேண்டும்.

இயக்குநர் தாமிரா

இந்த மேடையை பார்க்கும்போது எனக்குள் பேய் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இந்த படம் தொடங்கியது முதல் கூடவே இருந்தேன்.

ஆனால் எனக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பளிக்கவில்லை. தாமதமாகத் தான் கேபிள் சங்கரிடம் கேட்டார். என்னிடம் முன்பே கேட்டிருந்தால் இது 7 அத்தியாயமாக மாறி இருக்கும். வெகு விரைவில் அஜயன்பாலா பெரிய படம் ஒன்றை இயக்குவார். அதற்கான வேலைகள் நடக்கின்றன.

இயக்குநர் வெற்றிமாறன்

இந்த மாதிரியான முயற்சிகள் உலகம் முழுக்கவே நிகழ்ந்திருக்கின்றன. தமிழிலுல் மிகச்சில நடந்தன. இந்த முயற்சி நாம் ஊக்குவிக்க வேண்டியது. நாங்கள் முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை.

இது மிகவும் சிரமமான வேலை. எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டும். ஆனால் பேயை கையில் எடுத்திருப்பது வியாபாரத்துக்கு எளிதாக இருக்கும்.

அஜயன்பாலாவை என்னுடைய குரு பாலு மகேந்திரா தான் அறிமுகம் செய்து வைத்தார். சிறந்த எழுத்தாளர். நேர்மையான விமர்சகர். அவர் மீது நம்பிக்கை உள்ளது.

Hereafter fans wont come to Cinema it must go to his home says Meera Kathiravan

6 Athiyayam Movie Audio & Trailer Launch Photos

6 கதைகளை 6 பேர் இயக்கி ஒரே க்ளைமாக்ஸ் படம் 6 அத்தியாயம்

6 கதைகளை 6 பேர் இயக்கி ஒரே க்ளைமாக்ஸ் படம் 6 அத்தியாயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

6 Directors directed 6 stories but has 1 climax titled 6 Athiyayamதமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும் படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள்.

ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் சமீபத்திய ஹிட் ட்ரெண்டான ஹாரர் பாணியில் அமைந்திருப்பது படத்தின் வெற்றியை பறை சாற்றுகிறது. ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார்.

இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் மீதி நான்கு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத்,பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

படத்தின் ப்ரோமோ சாங்கை ‘விக்ரம் வேதா’புகழ் சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். இந்தப்பாடலை விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

‘6 அத்தியாயம்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ வெங்கடேஷ், தாமிரா, தயாரிப்பாளர் இயக்குனர் சுரேஷ் காமாட்சி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘6 அத்தியாயம்’ படத்தின் இசைத்தகட்டை இந்த படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் அவர்களின் தாயார் பிரேமாவதி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.

படத்தின் டெக்னிஷியன்கள் பேசியவை…

படத்தின் தயாரிப்பாளரும் படத்தில் இடம்பெற்ற ஒரு குறும்படத்தின் இயக்குநருமான சங்கர் தியாகராஜன்

இதழ்களில் சிறு சிறு துணுக்குகள் எழுதியது என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. 12 ஆண்டுகள் அமெரிக்காவில் பணிபுரிந்தவன் சினிமா மீதான காதலால் மீண்டும் வந்தேன்.

கேபிள் சங்கருடன் பேசியபோது குறும்படம் எடுக்க ஐடியா கொடுத்தார்.

பின்னர் அது அந்தாலஜி படமாக மாறியது. 6 வெவ்வேறு வகையான குறும்படங்களை இணைப்பது என்றும் அந்த ஆறையும் ஆறு டீம்களை வைத்து எடுப்பது என்றும் திட்டமிட்டோம்.

அனைத்தையும் ஒரு அமானுஷ்ய விஷயத்தால் இணைப்பது என்று முடிவானது.

ஒவ்வொரு அத்தியாயத்துக்குமான க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியோடு நிற்கும். எல்லா படங்களுக்குமான ஒரே க்ளைமாக்ஸாக முடியும். இவர்களில் கேபிள் சங்கர் தவிர மற்ற அனைவருமே அறிமுக இயக்குநர்கள்.

இந்த படத்தில் இடம்பெற்ற மூவருமே இங்கே வந்து கலந்துகொள்ள முடியவில்லை. என் கதையின் ஹீரோ ஒளிப்பதிவாளர் சிஜே.ராஜ்குமார் தான்.

ராஜ்குமார் எனக்கு நீண்டகால நண்பர். இந்த படத்தை ஒளிப்பதிவு செய்ததை விட கலர் கரெக்‌ஷன் செய்தது தான் பெரிய சவால். வெவ்வேறு ஒளிப்பதிவுகளை ஒரே படமாக்குவது என்பது எவ்வளவு சிரமம் என்று எல்லோருக்கும் தெரியும். என்றார்

இயக்குனர் கேபிள் சங்கர்

இந்த படத்தில் முதல் குறும்படம் என்னுடையதாக வருகிறது. சிறந்த இயக்குநரான எஸ் எஸ் ஸ்டான்லியை இயக்கியது மகிழ்ச்சி.

என்னுடைய முதல் பட ஹீரோ தமன் குமார், எனது ஒளிப்பதிவாளர் சிஜே ராஜ்குமார் இருவருமே இதில் முக்கிய பங்கு வகித்தனர்.

இந்த படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவருமே சம்பளத்தை எதிர்பார்க்காமல் ஒரு வாய்ப்பாக எண்ணி பணிபுரிந்தனர். நீங்கள் பார்த்த இந்த பாடலின் வீடியோ அனிமேஷன் மட்டுமல்ல.

முதலில் டான்ஸ் பண்ணி வீடியோ எடுத்து பின்னர் மனிதர்களை அனிமேஷன்களாக மாற்றினார். இந்த சிங்கிளுக்கு இசையமைத்தது ‘விக்ரம் வேதா’ புகழ் சி எஸ் சாம். அவரால் வரமுடியாத சூழல். பாடல் எழுதியது கார்க்கி பவா.

இயக்குனர் EAV சுரேஷ்

என்னுடைய குரு கேபிள் சங்கருக்கு நன்றிகள். தாம்பரம் தாண்டி ஒரு குடிசைக்குள் எடுத்தோம். முதல் நாள் காலை 7 மணி முதல் மறுநாள் மதியம் 11 மணி வரை தொடர்ந்து எடுத்தோம்.

தாஜ்நூர் எனக்காக இசையமைக்க ஒப்புக்கொண்டதோடு அருமையான பின்னணி இசையை தந்தார். நான் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர். சினிமாவில் முயற்சி எடுத்தபோது ஊரே திட்டியது. ஆனால் எனக்கு பக்கபலமாக இருந்தது என் தந்தை தான். அவருக்கு என் நன்றிகள்.

இயக்குனர் லோகேஷ் ராஜேந்திரன்

இந்த படத்தில் கமிட் ஆனபோது மகிழ்ச்சியை விட ஆச்சர்யமாக தான் இருந்தது. 6 இயக்குநர்கள் எப்படி ஒரு படத்தை இயக்கப்போகிறோம் என்று. 50 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து 20 ஓவர் கிரிக்கெட் வந்தது போன்றது தான் இந்த படம்.

இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன்

நான் உதவி இயக்குநராக இருந்ததில்லை. குறும்படங்கள் தான் இயக்கியிருந்தேன். என்னை நம்பி இந்த பொறுப்பை கொடுத்ததற்கு நன்றிகள். என் அம்மாவுக்காக இன்னும் ஐடி துறையில் வேலை பார்த்துக்கொண்டே தான் படத்தை இயக்கினேன்.

6 Directors directed 6 stories but has 1 climax titled 6 Athiyayam

6 Athiyayam Movie Audio & Trailer Launch Photos (3)

திட்டிவாசல் படத்தை பார்த்தாவது அரசு அதிகாரிகள் திருந்துவார்களா?

திட்டிவாசல் படத்தை பார்த்தாவது அரசு அதிகாரிகள் திருந்துவார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thittivasal movie making awareness in Suicide issuesசமூகத்துக்கு எதிரான கோபமே தற்கொலை என்பது. அண்மையில் நடந்து வரும் தற்கொலைகள், தொடர் தீக்குளிப்புகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ன செய்வது,?

சராசரி மனிதர்கள் நீதியை தேடி காவல்துறை வருகின்றனர்.அங்கு அவர்களுக்குண்டான நீதியும் குறைந்தபட்ச மரியாதையும் கிடைப்பதில்லை.

பிறகு வேறு வழியின்றி கலெக்டர் அலுவலகம் சென்று மனு தருகின்றனர்.

தமது பிரச்சனைக்கு தீர்வு எட்டவில்லை என வருந்துகின்றனர். சிலர் விரக்தியடைகின்றனர்.

ஒரு ஜனநாயக நாட்டில் நீதி கிடைக்காத சாமானிய மக்கள் வாழ்வை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் விரக்தியின் உச்சத்திற்கு சென்று விடுகின்றனர் வேறு வழியின்றியும் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து இறக்கின்றனர்.

அரசும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும் அதி தீவிரமாக செயல்படுவதுபோல பாவ்லா காட்டி அச்சம்பவத்தை மூடி மறைத்துவிடுகின்றனர்.

கண்ணெதிரில் சிறுவர்கள் எரிந்து கொண்டிருப்பதைப் பல கோணங்களில் புகைப்படமும் வீடியோவும் எடுத்து தனது திறமையை நிரூபித்துக்கொள்கிறது மனிதநேயமில்லா ஒரு கூட்டம்.

இப்படிப்பட்ட சாமானிய மக்களின் பிரச்சனைக்காக கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு பெண் இறந்துவிடுகிறாள்.

இறந்த பெண் யார்?.அவளின் பிரச்சனைகள் என்ன? அதன் தீர்வு என்ன? என்பதே ‘திட்டிவாசல் ‘படத்தின் மையக்கதை.

சமூக யதார்த்தமும் மக்கள் வாழ்க்கையும் பிரதிபலிக்கும் இக்கதை பிடித்துப் போய் நாசர் முக்கிய வேடமேற்று நடித்துள்ளார்.

வருகின்ற நவம்பர் 3 ம் தேதி இந்த திட்டி வாசல் வெளியாகிறது.

K3 சினி கிரயேஷன்ஸ் வழங்க.சீனிவாசப்பா தயாரித்துள்ளார்.பிரதாப் முரளி என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார்.

அண்மையில் தமிழகத்தில் நடந்த தற்கொலைகள் பிரதிபலிக்கும் படமாக ‘திட்டி வாசல் ‘உருவாகியிருக்கிறது .

இதுபோன்ற படங்களை பார்த்த பிறகாவது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் திருந்துவார்களா?

Thittivasal movie making awareness in Suicide issues

More Articles
Follows