தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவா இயக்கத்தில் 10 கெட்டப்பில் சூர்யா நடித்து வரும் படம் ‘கங்குவா’. இந்த படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.
இதில் திஷா பதானி, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், கேஎஸ் ரவிகுமார் உள்ளிட்டோரும் உண்டு.
சூர்யா நடிப்பில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக தயாரித்து வருகிறார் ஞானவேல் ராஜா.
தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும்
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஜூலை 23ஆம் தேதி வரவிருக்கும் நிலையில் ’கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகலாம் என தகவல்கள் வந்துள்ளன.
Siva Ganguva treat for Actor Suriya fans