சர்கார் விஜய்யின் அறிமுக பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபலம்

shobi masterசன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘சர்கார்’.

இந்தியாவில் சில பகுதிகளில் இதன் சூட்டிங்கை முடித்த கையோடு சில காட்சிகளையும், பாடலையும் படம் பிடிக்க ‘சர்கார்’ படக்குழுவினர் அமெரிக்காவிலுள்ள லாஸ்வேகாஸ் பயணமாகியுள்ளனர்.

இதில் கலந்துக் கொள்வதற்காக வரலட்சுமியும் அமெரிக்கா பயணமாகியுள்ளார்.

அமெரிக்காவில் ‘சர்கார்’ படத்தின் அறிமுக பாடலை படம் பிடிக்க, இந்த பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் இடம் பெற்ற ‘பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…’ என்று துவங்கும் பாடலுக்கு ஷோபி மாஸ்டர் தான் நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0…
...Read More

Latest Post