தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த படம் ‘விக்ரம்’.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.
இந்த படம் ஜூன் 3-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கமல் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.
முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் “விக்ரம்” பட வெற்றிக்கு வாழ்த்து கூறி, தனது குடும்பத்துடன் குரு கமலஹாசனிடம் ஆசி பெற்றுள்ளனர் நடன இயக்குநர்கள் ஷோபி மற்றும் லலிதா ஷோபி
கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நட்சத்திரங்களை ஆட்டுவிக்கும் பிரபல நடன இயக்குநர் ஷோபி மற்றும் அவரது மனைவி நடன இயக்குநர் லலிதா ஷோபி ஆகிய இருவரும் தங்களது மகள் ஸ்யமந்தகமணி அஷ்விகா ஷோபி உடன் தனது குருவான உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து “விக்ரம்” படத்திற்கு வாழ்த்து கூறியதுடன், அவரிடம் ஆசி பெற்றிருக்கிறார்.
நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர்.
அவர் தனது கர்ப்பமாக உள்ள தனது மனைவி லலிதா ஷோபியுடன், திரைத்துறையில் அவர்களது குருவாகவும், வழிகாட்டியாகவும் விளங்கும் கமல்ஹாசன் அவர்களை, “விக்ரம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, சந்தித்து வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், நடன இயக்குநர் லலிதா ஷோபி அவர்களை அக்கறையுடன் உடல்நலம் விசாரித்து அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.
Shobi and his pregnant wife Lalita received blessings from Kamal