தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி நடித்து வரும் மாமனிதன் படத்தை இயக்கி வருகிறார் சீனுராமசாமி.
அப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் சீனுராமசாமி இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் மலையாள இளம் நடிகரான ஷேன் நிகம் என்பவரை தமிழில் அறிமுகப்படுத்த இருக்கிறாராம்.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷேன் நிகம் அவர்கள் கிஸ்மத் என்ற படத்தில் நாயகனாக நடித்தார்.
அதன்பின்னர் அமலா, மஞ்சுவாரியர் நடித்த ‘கேர் ஆப் சாய்ராபானு’ (2017ல்) என்ற படத்தில் மஞ்சுவாரியர் மகனாக நடித்தார்.
அண்மையில் வெளியான கும்பளாங்கி நைட்ஸ் என்ற படத்தில் பகத் பாசிலுடன் இணைந்து நடித்திருந்தார் ஷேன் நிகம்.
Shane Nigam to make Tamil debut with Seenu Ramasamy