சீனுராமசாமி – ஜிவி பிரகாஷ் கூட்டணியில் ஆக்‌ஷன் திரில்லர் படம்

சீனுராமசாமி – ஜிவி பிரகாஷ் கூட்டணியில் ஆக்‌ஷன் திரில்லர் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் அடுத்த படம் குறித்த தகவலை இயக்குனர் சீனுராமசாமியே வெளியிட்டுள்ளார்.

அதில்..

மக்கள் செல்வன்
விஜய்சேதுபதி காயத்ரி நடிப்பில் இசைஞானி இளையராஜா & யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும்
‘மாமனிதன்’ திரைப்படத்தின் பணிகள் முடிந்து அடுத்து ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறேன்.

இது இதுவரை வந்த என் படங்களில் சற்று மாறுதலாக ஆக்‌ஷன் திரில்லர்
கிராமத்து பின்புலத்தில் அமைந்துள்ள படமாகும்.

இதன் படப்பிடிப்பை அடுத்தமாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

இந்த படத்தை ஸ்கைமேன் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில்
கலைமகன் முபாரக் தயாரிக்கிறார்.

Seenu Ramasamy and GV Prakash joins for a new film

gv prakash

‘நாரப்பா’ பற்றி பதிவு போட்ட ஸ்ரீரெட்டி; கடுப்பில் வெங்கடேஷ் ரசிகர்கள்..; கப்சிப்பான தனுஷ் ரசிகர்கள்

‘நாரப்பா’ பற்றி பதிவு போட்ட ஸ்ரீரெட்டி; கடுப்பில் வெங்கடேஷ் ரசிகர்கள்..; கப்சிப்பான தனுஷ் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

narappaஸ்ரீ ரெட்டி சினிமாவில் சான்ஸ் வேண்டும் என்பதற்காக பலருடன் படுக்கையை பகிர்ந்தேன் என ஓபனாக பேசியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

அதில் பலர் தன்னை ஏமாற்றிவிட்டதாக பல நடிகர்கள் இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டை எழுப்பினார்.

தமிழில் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் & இயக்குனர் முருகதாஸ் வரை என பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறினார்.

எனவே அவரை தமிழக ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்த நிலையில் இவரின் சமூக வலைத்தள பக்கத்தில்…

“நாரப்பா படத்தை பார்த்தேன், அற்புதமான படம். வெங்கடேஸும் நல்லா நடிச்சிருக்காரு.

ஆனால், தனுஷுடன் ஒப்பிடும் தனுஷ் நடிப்பு தான் சூப்பர்” என் பதிவிட்டுள்ளார்.

இதனால் வெங்கடேஷ் ரசிகர்கள் பலரும் ஸ்ரீரெட்டியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

தனுஷ் ரசிகர்கள் கப் சிப் ஆகி உள்ளனர்.

Venkatesh fans slams Actress Sri Reddy

பத்து வருடங்களுக்கு பிறகு கூட்டணி.; சூர்யா பிறந்த நாளில் பாலாவின் சர்ப்ரைஸ்

பத்து வருடங்களுக்கு பிறகு கூட்டணி.; சூர்யா பிறந்த நாளில் பாலாவின் சர்ப்ரைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா இசையில் விக்ரம் நடித்த ‘சேது’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா.

இதனை தெடர்ந்து நந்தா, பிதாமகன், நான் பக்ககடவுள் உள்ளிட்ட அதிரடி படங்களை இயக்கி ரசிகர்களையும் கோலிவுட் நடிகர்களையும் கவர்ந்தவர் பாலா.

சூர்யாவுக்குள் ஒளிந்து கிடந்த நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்து பட்டை தீட்டீயவர் இவர் தான்.

அதன் பிறகு அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை போன்ற படங்களை இயக்கினார்.

இதில் நடிப்பு பேசப்பட்டாலும் படங்கள் சரியாக போகவில்லை.

(2011ல் ரிலீசான அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோலில். நடித்திருந்தார் சூர்யா.)

அதுவரை ரீமேக் படங்களை தொடாத பாலா தன் நண்பர் விக்ரமுக்காக அவரது மகன் துருவ் அறிமுகமாகவிருந்த அர்ஜூன் ரெட்டி என்ற படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார்

ஆனால் இந்த படம் தாங்கள் எதிர்பார்த்த மாதிரி தயாராகவில்லை என கூறி படத்தின் தயாரிப்பாளர் படத்தை ரிலீஸ் செய்யவில்லை.

இதனால் பாலா கடும் அப்செட்டில் இருந்தார். (சில மாதங்களுக்கு பிறகு ஓடிடியில் ‘வர்மா’ படம் வெளியானது வேறுகதை)

இந்த நிலையில் தன்னை சிறந்த நடிகராக்கிய பாலாவுக்காக அவரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் சூர்யா.

சூர்யாவே தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பை சூர்யா பிறந்தநாளில் (23 ஜூலை) வெளியிடவிருக்கிறாராம் பாலா.

Suriya and Director Bala joins for a new film

அனிருத்தை அடுத்து தமனுக்கு இசையமைக்கும் வாய்ப்பளித்த ஷங்கர்..; ரஹ்மான் கூட்டணி முறிவு.?

அனிருத்தை அடுத்து தமனுக்கு இசையமைக்கும் வாய்ப்பளித்த ஷங்கர்..; ரஹ்மான் கூட்டணி முறிவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேடி. குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஷங்கர்.

இந்த படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அந்த படம் முதல் ஷங்கரின் 95% படங்களுக்கு ரஹ்மான் தான் இசை.

இடையில் அந்நியன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார்.

தற்போது தயாரிப்பில் இருக்கும் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

அப்போதே ஷங்கர் ரஹ்மான் கூட்டணி முறிவா? என சலசலப்பு உருவானது.

தற்போது தனது அடுத்த படத்திற்கும் இசையமைப்பாளரை மாற்றியிருக்கிறார் ஷங்கர்.

தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோரின் இரு படங்களை இயக்கவுள்ளார் ஷங்கர்.

‘அந்நியன்’ பட ஹிந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார்.

ஷங்கர் – ராம் சரண் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகுகிறது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த நிலையில் ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தில் நடித்த தமன், தற்போது ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷங்கர் படத்தில் பணியாற்றுவது குறித்த தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் தமன்.

Thaman to compose music for director Shankar’s next

17 சர்வதேச விருதுகளை குவித்த ஒற்றைப் பனைமரத்தை ஓடிடி-க்கு விற்கும் தயாரிப்பாளர்

17 சர்வதேச விருதுகளை குவித்த ஒற்றைப் பனைமரத்தை ஓடிடி-க்கு விற்கும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ‘ஒற்றைப் பனைமரம்’.

இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.

ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது.

சிறந்த இயக்குனர் விருது பெற்ற ‘மண்’ பட இயக்குனர் புதியவன் ராசையாவின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக ‘ஒற்றைப் பனைமரம்’ உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைக்க, தேசிய விருது பெற்ற சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.

புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படம், அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளத்திலும் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Award winning film Ottrai Panaimaram gets a OTT release

மாரி செல்வராஜ் படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசை.; புது கூட்டணியில் இணையும் புது எம்எல்ஏ

மாரி செல்வராஜ் படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசை.; புது கூட்டணியில் இணையும் புது எம்எல்ஏ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mari selvaraj ar rahman‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு தன்னுடைய ‘கர்ணன்’ பட வாய்ப்பை மாரி செல்வராஜுக்கு வழங்கினார் தனுஷ்.

‘கர்ணன்’ படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்து பணியாற்றவிருப்பதாக, நடிகர் தனுஷ் ட்விட்டரில் அறிவித்து இருந்தார்.

தனுஷின் கால்ஷீட் டைரி 2 ஆண்டுகளுக்கு பிஸியாக இருப்பதால் மாரி செல்வராஜ் வேறு ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இந்த படத்தில் உதயநிதி நடிக்கவுள்ளார். இவர் எம்எல்ஏ ஆன பிறகு ஒப்புக் கொண்ட முதல் படம் இதுதான்.

(கர்ணன் பட வெற்றிக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.)

இதற்கு முன்பே துருவ் விக்ரமை இயக்கவிருக்கிறார் மாரி செல்வராஜ் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

மாரி & உதயநிதி இணையும் படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘பரியேறும் பெருமாள்’ & ‘கர்ணன்’ ஆகிய இரு படங்களின் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கவுள்ள படம் இது.

இரு படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஹாட்ரிக் வெற்றி அடிப்பார் மாரி என நம்பலாம். காத்திருப்போம்..

கூடுதல் தகவல்.. : மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படம், மாறன் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’, அருண்ராஜா இயக்கத்தில் ‘ஆர்டிகள் 15’ ஹிந்தி ரீமேக் ஆகிய படங்கள் உதயநிதி கைவசம் உள்ளன.

AR Rahman to score music for Mari Selvaraj’s next

More Articles
Follows