தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் தனது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனாலும், ஒவ்வொரு படத்தையும் விரைவாக முடித்து கொடுத்து வருகிறார்.
விரைவில் தொடரி, கொடி மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் வெளியாகவுள்ளன.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதனிடையில் மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒரு பைக் ரேஸ் கதையை பற்றிய படமாக உருவாகவுள்ளதாம்.
நடிகர் அஜித் ஒரு பைக் ரேஸர் என்பதும், அவரது தல 57 படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.