காவியன் படக்குழுவினரை பாராட்டிய சரத்குமார்

காவியன் படக்குழுவினரை பாராட்டிய சரத்குமார்

Sarathkumar praises Kaaviyan motion posterசாரதி இயக்கத்தில் ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவிகுமார், ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காவியன்.

2M சினிமாஸ் K.V.சபரீஷ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது.

முழுக்க முழுக்க அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இதை படமாக்கியுள்னர்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சரத்குமார் பார்த்து படக்குழுவினரை வெகுவாக பாராட்டினாராம்.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

விரைவில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

Sarathkumar praises Kaaviyan motion poster

kaaviyan first look poster

தன் ஷுவை கழட்டாத உதவியாளரை அறைந்த பாலகிருஷ்ணா

தன் ஷுவை கழட்டாத உதவியாளரை அறைந்த பாலகிருஷ்ணா

balakrishna slapls his assistantதெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான பாலகிருஷ்ணாவின் 102வது படத்தை இயக்குகிறார் கேஎஸ். ரவிக்குமார்.

இவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மச்சான் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் பூஜை மற்றும் சூட்டிங் அண்மையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள தன் மேக்கப் மேன் உடன் வந்தார் பாலகிருஷ்ணா.

அப்போது பூஜை இடத்திற்கு அருகில் செல்ல நினைத்த போது, தன் கால் ஷீவை கழட்ட விரும்பினார்.

ஆனால் தன் உதவியாளர் அவர் ஷீவை கழட்ட அருகில் வராதால் அவரை அழைத்து கழட்ட சொல்லி, கன்னத்தில் அறைந்தார்.

பின்னர் உதவியாளர் கழட்டிவிடவே, பூஜைக்கு சென்றார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியானது.

பாலகிருஷ்ணாவின் இச்செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்பே, சூட்டிங் தளத்தில் சக நடிகர்கள், நடிகைகளை கிண்டல் செய்வது, அவமரியாதையாக நடந்து கொள்வது என பல்வேறு சர்ச்சைகளில் பாலகிருஷ்ணா சிக்கியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Actor Nandamuri Balakrishna slaps assistant video goes viral

kr ravikumar balakrishna

விலை உயர்ந்த காரை வாங்கினார் விஜய்சேதுபதி

விலை உயர்ந்த காரை வாங்கினார் விஜய்சேதுபதி

vijay sethupathiவருடத்திற்கு அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் முன்னணி ஹீரோ விஜய்சேதுபதி.

பல படங்களில் இவர் கமிட் ஆனாலும் தன் சம்பளத்தை இவர் கணிசமாகவே உயர்த்தி வருகிறார்.

இதனால் இவரது கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் படப்பிடிப்புகளுக்கு சாதாரண கார்களில் வந்த விஜய்சேதுபதி தற்போது விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ -7 வது சீரிஸ் வெள்ளை நிறக்காரை வாங்கி இருக்கிறாராம்.

இந்தக்காரின் மதிப்பு 1கோடி ரூபாய்க்கும் மேல் எனக் கூறப்படுகிறது.

Vijay Sethupathi bought new BMW 7 Series Car

ஆரவ்விடம் காதல் முறிவு; தற்கொலைக்கு முயற்சித்த ஓவியா வெளியேற்றம்

ஆரவ்விடம் காதல் முறிவு; தற்கொலைக்கு முயற்சித்த ஓவியா வெளியேற்றம்

Oviya bigg bossபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்குமா? என கமல் மற்றும் விஜய்டிவியே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

சிட்டி முதல் பட்டி தொட்டி வரை பிக்பாஸ் பற்றியும் அதில் பங்கேற்றுள்ள ஓவியா பற்றியும் பலரும் விவாதித்து வருகின்றனர்.

இதில் சக பங்கேற்பாளரான ஆரவ் என்பவரிடம் காதல் வயப்பட்ட ஓவியா அவரிம் வெளிப்படுத்தினார்.

ஆனால், ஆரவ் ஓவியாவின் காதலை மறுத்து, அவரை ஒதுக்க தொடங்கினார்.

ஆனாலும் ஆரவ்வுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். இதனால் சக போட்டியாளர்களே மத்தியில் அவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.

ஆனாலும் ரசிகர்கள் ஓவியாவை ஆதரித்து வந்தனர்.

இதனிடையில் கடந்த சில தினங்களாக கடும் மனவுளைச்சலுக்கு உள்ளான ஓவியா, பித்து பிடித்தவர் போல நடந்துக் கொண்டார்.

இதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற ஓவியா திடீரென பிக்பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

சக பங்கேற்பாளர்கள் உடனே சென்று அவரை காப்பாற்றி மீட்டனர்.

இதையடுத்து மனநல மருத்துவர்களால் அவர் பரிசோதனை செய்யப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து காரில் வெளியேறுவது போன்ற ஒரு புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை பிக் பாஸ் அரங்கில் இருந்து ஓவியா வெளியேறி விட்டதாக செய்திகள் வந்தன.

இதனை தொடர்ந்து ஓவியாவின் ரசிகர்கள் ஓவியா இல்லையென்றால், பிக்பாஸ் இல்லை, அந்த நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மைத்தான் என்றும் நிகழ்ச்சிக்கு மீண்டும் செல்ல பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஓவியா தெரிவித்துள்ளார்.

இன்று இரவு 8.30 மணிக்கு ரசிகர்கள் முன்னிலையில் ஓவியாவுடன் கமல் பேச உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Oviya attempted Suicide Bigg Boss House Controversay goes viral

Bigg boss oviya in car

2018ஆம் ஆண்டில் ரஜினியை இயக்கும் வெற்றிமாறன்

2018ஆம் ஆண்டில் ரஜினியை இயக்கும் வெற்றிமாறன்

rajini vetrimaaranதனுஷின் ஆஸ்தான இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் வெற்றிமாறன்.

இவர் தற்போது தனுஷ், சமுத்திரக்கனி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர் ஆகியோர் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தை மூன்று பாகங்களாக இயக்கி வருகிறார்.

இதில் முதல்பாகத்தைன் சூட்டிங்கை மட்டும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், காலா சூட்டிங்கில் இருந்த ரஜினியை இரண்டு முறை சந்தித்து, கதை விவாத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார்.

வெற்றிமாறன் கூறிய ஒன்லைன் ரஜினிக்கு பிடித்துவிட்டதாம்.

எனவே இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் சூழல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போதுள்ள படங்களையும் இருவரும் முடித்துவிட்டு அடுத்த 2018ஆம் ஆண்டில் ரஜினியை இயக்குவார் வெற்றிமாறன் என எதிர்பார்க்கலாம்.

Vetrimaran going to direct Rajinikanth in 2018

ரசிகர்களுக்கும் பகத்பாசிலுக்கும் வேலைக்காரன் தந்த இன்ப அதிர்ச்சி

ரசிகர்களுக்கும் பகத்பாசிலுக்கும் வேலைக்காரன் தந்த இன்ப அதிர்ச்சி

sivakarthikeyan fahad fazilமோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் வேலைக்காரன்.

இப்படத்தில் நயன்தாரா, சிநேகா, பகத்பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் வெளியாகி பலரின் பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்ட்டரை வருகிற ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

அன்றைய தினம் பகத்பாசில் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மேலும் ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 6 மணிக்க வேலைக்காரன் பட டீசரை வெளியிடவுள்ளனர்.

இந்த இரண்டு செய்திகளும் பகத்பாசிலுக்கு ரசிகர்களுக்கும் இன்பஅதிர்ச்சி அளிப்பதாக இருக்கும் என நம்பலாம்.

Velaikkaran Second Look Poster on Fahad Fazil Birthday and Teaser on 14th August

24AM STUDIOS™‏Verified account @24AMSTUDIOS
#Velaikkaran2ndLook #8thAugustFahadhFaasilBirthday & #VelaikkaranTeaser 14Aug6pm @jayam_mohanraja @Siva_Kartikeyan @anirudhofficial #gif4u

More Articles
Follows