அமெரிக்காவின் சூதாட்ட நகரத்தில் போட்டி போடும் சர்கார்-காவியன்

அமெரிக்காவின் சூதாட்ட நகரத்தில் போட்டி போடும் சர்கார்-காவியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar and Kaaviyan movie shooting happens at Las Vegas2 M சினிமாஸ் K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் ஷ்யாம் மோகன் இசையமைப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘காவியன்’.

இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரத்தில்தான் முழுக்க முழுக்க நடைபெற்றது. அந்நகரம் ‘அமெரிக்காவின் சூதாட்ட நகரம்’ என்று அழைக்கப்படும் ஒரு நரகமாகும்.

இரவு நேரங்கள் கூட பகல் நேரம் போல அவ்வளவு பிஸியாக இருக்கும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரம்.

எந்த இடத்தில் காமிராவை வைத்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும். அந்த நகரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி ‘காவியன்’ படத்திற்கான படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

அதனாலேயே ‘காவியன்’ படத்தைப் பார்ப்பதற்கு ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வு ஏற்படும் என்கிறார்கள். படத்தில் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘காவியன்’ படப்பிடிப்பு நடந்த அந்த லாஸ்வேகாஸ் நகரத்தில்தான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காவியன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

ஒளிப்பதிவு – N.S.ராஜேஷ் குமார்
இசை – ஷ்யாம் மோகன்
பாடல்கள் – மோகன்ராஜ்
கலை – T.N கபிலன்
நடனம் – விஷ்ணுதேவா
எடிட்டிங் – அருண்தாமஸ்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – 2M cinemas ” K.V. சபரீஷ்
இயக்கம் – சாரதி

Sarkar and Kaaviyan movie shooting happens at Las Vegas

Kaaviyan news stills

திருப்புமுனையால் ஏற்படும் மாற்றத்தைச் சொல்ல வரும் *சீமத்துரை*

திருப்புமுனையால் ஏற்படும் மாற்றத்தைச் சொல்ல வரும் *சீமத்துரை*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Geethan Varsha Bollamma starring Seemathurai movie updatesபுவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”.

கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

“ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலில் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் ஏதாவது ஒரு தருணத்தில், புரட்டிப் போடும்படியான திருப்புமுனையை ஏற்படுத்தும்.

அதிலிருந்து அவன் எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்கிறான் என்பதிலிருந்தே அவனது வாழ்வின் வெற்றியும், தோல்வியும் அமையும்.

அப்படி ஒருவனுடைய வாழ்க்கையில், அவன் கொண்ட “கர்வம்” ஏற்படுத்துகிற திருப்புமுனையும், அதன் விளைவுகளும் தான் “சீமத்துரை” படத்தின் கதை என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.

மேலும், “கிராமப் பின்னணி கொண்ட இப்படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும், எளிய மனிதர்களின் வாழ்வியலை இயல்பு சிதையாமல் பிரதிபலிக்கும்” எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர்.

ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையில் பாடல்களை அண்ணாமலை, வீணை மைந்தன், ஹரி கிருஷ்ணதேவன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

D திருஞான சம்பந்தம் ஒளிப்பதிவு செய்ய, “மேயாதமான்” படத்தின் “தங்கச்சி” பாடலுக்கு நடனம் அமைத்த சந்தோஷ் முருகன் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை, “பிச்சைக்காரன்” படத்தின் படத்தொகுப்பாளரான T வீர செந்தில்ராஜூம், கலை இயக்கத்தை “மரகத நாணயம்” படத்தின் கலை இயக்குநர் N K ராகுலும் மேற்கொண்டுள்ளனர்.

Geethan Varsha Bollamma starring Seemathurai movie updates

மங்காத்தா ஸ்டைலில் சிம்பு கேரக்டரை டிசைன் செய்த வெங்கட் பிரபு

மங்காத்தா ஸ்டைலில் சிம்பு கேரக்டரை டிசைன் செய்த வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu plays negative role in Venkat Prabus Maanaduசுரேஷ் காமாட்சி தயாரிப்பில் டைரக்டர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் சிம்பு இணையும் படம் மாநாடு.

இந்த படம் முழுக்க முழுக்க அரசியல படம் என்பதை பர்ஸ்ட் லுக் மூலம் அறிவித்துவிட்டனர்.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இதில், சிம்புவுக்கு நெகட்டிவ் கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது மங்காத்தா படத்தில் அஜித்தான் நாயகன் என்றாலும் அவர் கிட்டதட்ட நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார்.
சில ஆண்டுகளுக்கு முன் தேவயாணி, பிரகாஷ் ராஜ் நடித்த ‘சொர்ணமுகி’ படத்திலும் பார்த்திபன் முழுக்க நெகட்டிவ் கேரக்டர் செய்திருப்பார்.

அதுபோன்ற கேரக்டர் என கூறப்படுகிறது. எனவே நிச்சயம் இது சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

Simbu plays negative role in Venkat Prabus Maanadu

விஜய்யின் சர்கார் சாங் இணையத்தில் வைரல்; படக்குழு அதிர்ச்சி

விஜய்யின் சர்கார் சாங் இணையத்தில் வைரல்; படக்குழு அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkar song shootசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘சர்கார்’.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் நடிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

கலைஞர் கருணாநிதியின் மறைவையொட்டி ஓரிரு தினங்களுக்கு சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் தொடங்கி, லாஸ் வேகாஸில் நடைபெற்று வருகிறது.

படத்தில் இடம்பெறும் ஓப்பனிங் பாடலை அங்கு படமாக்கி வருகின்றனர். நடன இயக்குநர் ஷோபி இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இந்நிலையில், ஓப்பனிங் பாடலுக்கு விஜய் நடனமாடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் லீக்காகி, வைரலாகியுள்ளது.

அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்த யாரோ ஒருவர் படப்பிடிப்பை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது.

இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

ஆனால் இதில் விஜய்யின் முகம் தெளிவாகத் தெரியவில்லை.

குழந்தைகளை கவர்ந்த *சிண்ட்ரல்லா* படத்தலைப்பில் நடிக்கும் லட்சுமி ராய்

குழந்தைகளை கவர்ந்த *சிண்ட்ரல்லா* படத்தலைப்பில் நடிக்கும் லட்சுமி ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raai Laxmis next fantasy horror thriller titled Cinderellaஉலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட் ரல்லா.

இப்பாத்திரம் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட சிண்ட் ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது.

லட்சுமி ராய் பிரதான பாத்திரம் ஏற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர் எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது.

படத்தை இயக்குபவர் எஸ்.ஜே சூர்யாவின் மாணவர் வினோ வெங்கடேஷ். படத்தைத் தயாரிப்பது எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ்.

இவர்கள் திரையரங்கு, 100க்கும் மேற்பட்ட திரைப்பட விநியோகம் திரை அனுபவம் பெற்றவர்கள்.

படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் கூறும் போது…

“இது வழக்கமான ஹாரர் காமெடி படமல்ல. பார்க்க புதுசாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும்.

படம் பற்றிப் பேச ஆரம்பித்ததுமே தலைப்பு தான் எல்லாருக்கும் பிடித்தது. அதன் மீது ஈர்ப்பு வந்தது. தயாரிப்பாளர் தயாரிக்க முன் வந்தார். அவரும் தலைப்பு பிடித்து தான் கதை கேட்டார்.

நடிகை லட்சுமிராய்க்கு படம் பற்றிய குறிப்புகளை அனுப்பினோம். பிறகு படப்பிடிப்பிலிருந்த அவரை மதிய உணவு இடைவேளையில்தான் போய்ப் பார்த்தோம். சாப்பிடாமல் அரை மணி நேரம் கதை கேட்டார்.

நாங்கள் அனுப்பியிருந்த கதைச் சுருக்கம், குறிப்புகளைப் பார்த்துவிட்டு ஏற்கெனவே ஓர் இணக்கமான புரிதலோடுதான் இருந்தார், கதையைக் கேட்டு விட்டு சம்மதம் கூறினார்.

மேலும் ஒரு வார அவகாசத்தில் சில விளக்கங்கள் கேட்டார். தெளிவு பெற்றார்.

இப்போது முழுமையாக ‘சிண்ட் ரல்லா’வுக்குள் புகுந்து விட்டார் ” என்று கூறினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Raai Laxmis next fantasy horror thriller titled Cinderella

cinderella director vino

வாட்ஸ் அப் & பாலியல் தொல்லையால் தலைகுனிந்த தமிழகம். :- விஜய்

வாட்ஸ் அப் & பாலியல் தொல்லையால் தலைகுனிந்த தமிழகம். :- விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Actor Pa Vijay speaks about Child abuse in Aaruthra audio launchபாடலாசிரியரும் கவிஞருமான பா.விஜய் எழுதி இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் ‘ஆருத்ரா’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இப்படத்தில் நடித்துள்ள இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பாக்யராஜ், பேராசிரியர் ஞானசம்பந்தம் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

விழாவில் பா.விஜய் பேசியதாவது…

“இன்றைய சூழலில் படம் எடுப்பதை விட அதை வெளியிடுவது தான் மிகவும் சவாலானது. அந்த சவாலை ஏற்றுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் ஹேமா ருக்மணிக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களால் இன்று இந்த விழாவுக்கு வரமுடியவில்லை. எனவே அவர்களின் பிஆர்ஓ.க்களை அனுப்பி வைத்துள்ளனர்.

ஹாசினி வழக்கு முதல் ஆசிபா வழக்கு வரை நாட்டில் எத்தனையோ பாலியல் பலாத்காரங்கள் நடைப்பெற்றுக் கொண்டே இருக்கிறது.

நிர்பயா பலாத்கார சம்பவத்தின் தாக்கத்தினாலேயே இப்படத்தை அப்போதே உருவாக்க ஆரம்பித்து விட்டேன்.

குழந்தைகளை அதுவும் பெண் குழந்தைகள் பாதுகாப்பது அவரது பெற்றோர்களின் பொறுப்பு.

இந்தியாவிற்கு வரவே வெளிநாட்டினர் பயப்படுகிறார்கள். அந்தளவு சிறுமிகள் இங்கே பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பெற்றோர்கள், குழந்தைகளைப் பார்க்காமல் செல்போனைப் பார்த்தபடியே இருக்கிறார்கள்.

தமிழகமே தலை குனிந்தபடி வாட்ஸ் அப் பார்த்தபடி உள்ளது. இவற்றிற்கு எல்லாம் தீர்வு சொல்லும் வகையில், பெற்றோர்கள் குழந்தைகளை எவ்வாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த ஆருத்ரா படத்தை சொல்லியுள்ளேன்.” என பேசினார்.

Lyricist Actor Pa Vijay speaks about Child abuse in Aaruthra audio launch

AARUTHRA Press Meet Event Resized stills

More Articles
Follows