அஜித்தின் மங்காத்தா மேஜிக் எனக்கும் நடக்கும்… ஷாம்

அஜித்தின் மங்காத்தா மேஜிக் எனக்கும் நடக்கும்… ஷாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Shaamகமல், விக்ரமிற்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க அதிகமாக மெனக்கிட்டவர், ரிஸ்க் எடுத்தவர்.

’6 மெழுகுவர்த்திகள்’ படத்தில் மெலிந்தார். கண்களை வீங்கச் செய்தார். தனது மெனக்கிடலை அற்புதமான நடிப்பால் படத்தை மெருகேற்றியவர்.

’புறம்போக்கு’ படத்தில் மெக்காலேவாக அசத்தியவர். ஆனால் எந்த விருதுகளாலும் கண்டுகொள்ளப்படவில்லை இதுவரை.

இப்படி புறக்கணிக்கப்பட்டதாக நீங்கள் வருத்தப்பட்டதில்லையா? என்றால் மெல்ல சிரிக்கிறார். இல்லை. வருத்தம் விருது கிடைக்காததில் இல்லை.

ஒரு தோல்வியில் இருக்கும் நடிகன் நல்ல படம் கொடுக்க முடியாது என்ற மக்களின் நம்பிக்கைதான் வருத்தமளித்தது.

6 படத்தில் அதிக உழைப்பை போட்டேன். ஷாமால் இதுவும் செய்ய முடியும் என நிருபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக்கொண்டேன்.

மக்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்? என்பதை படமாக்கியிருந்தோம். அந்த கருத்தும் பயமும் அவர்களைச் சென்றடைந்திருக்கவேண்டும். அது தியேட்டர் மூலமாக நடக்கவில்லை.

ஆனால் ஜீ தமிழ் மூலம் மிக தாமதமாக சென்றடைந்தது. வெற்றி பெற்றவர்கள், தோல்வியானவர்கள் என்று படம் பார்க்காமல் நல்ல படமா பார்ப்போம் என்ற மன நிலை இருந்திருந்தால் அந்த படம் மிகப்பெரிய வெற்றியைக் கொண்டாடியிருக்கும்.

இப்போது அந்த மன நிலை மக்கள் மத்தியில் வந்திருக்குன்னு நினைக்கிறேன். படம் வெற்றிபெறுவதும், அடுத்த நல்ல கதையில் நடிப்பதும்தான் உண்மையான விருது என்பது என் நம்பிக்கை.

அப்படி பார்த்தால் என் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப நாட்களிலிருந்தே நான் விருதுகளால் மகிழ்விக்கப்பட்டவன்தான்.

இன்னொன்று, ஒன்று கிடைத்தால் நல்லது. கிடைக்கலைன்னா ரொம்ப நல்லதுன்னு நினைப்பதால் இந்த வருத்தம் இருப்பதில்லை. இன்னும் நிறைய படஙள் நடிக்கப்போகிறோம். காலங்கள் இருக்கு.

கிடைக்காமலா போகும்? அதுதானே யதார்த்தம் என்றவர், ஒன்று மட்டும் சொல்வதாக இருந்தால், விருது வழங்குபவர்களும் பெரிய படங்கள் என்று பாராமல் முக்கியமான படங்கள் என்ன பேசியிருக்கிறது என பார்க்க வேண்டும் என்றார்.

சத்யராஜ், அரவிந்தசாமி, மாதவனுக்கு ஜாக்பாட் அடித்த மாதிரி ‘பார்ட்டி’ படத்தின் மூலம் உங்களுக்கும் அடிக்க வாய்ப்பு இருக்கா?

நல்ல இயக்குநர்களால் மட்டுமே அது முடிவு செய்யப்படுகிறது. சரியாகச் சொல்லப்போனால் அந்த படம் மக்களை பார்க்க வைக்கக் கூடிய தயாரிப்பு நிறுவனத்திலிருந்து வெளியே வரவேண்டும்.

இப்போது ஃபிஜியில் ’பார்ட்டி’ பண்ணிக்கொண்டிருக்கிறேன். வெங்கட் பிரபு அண்ணன் இயக்கும் படம். அம்மா கிரியேசன்ஸ் சிவா அண்ணன் தயாரிப்பு. இதில் ஒரு அழகான, ஸ்டைலிஷ் கேங்ஸ்டர். நீங்கள் எதிர்பார்ப்பது இந்த பார்ட்டி படத்தின் மூலமும் நடக்கலாம்.

வெங்கட் அண்ணன் இயக்கிய மங்காத்தா அஜித் சாருக்கு ஏகப்பட்ட இளைஞர்களை ரசிகர்களாக இழுத்து வந்தது. எனக்கும் ஏதோ மாற்றம் நடக்கும்னு நம்பிக்கை இருக்கு.

சிவா அண்ணன் ஒரு நாள் போனில் கூப்பிட்டு கிளம்புங்க ஃபிஜிக்குன்னார். கிளம்பி வந்துவிட்டேன். என் மீது அவருக்கு ஒரு சொந்த சகோதரன் போல அன்பு உண்டு. அதனால் மறு கேள்வி கேட்காமல் கிளம்பிவிட்டேன்.

பார்ட்டி படத்துல பிரச்சனை பண்ணக்கூடிய மனதில் பதியக்கூடிய ரோல் பண்ணிக்கிட்டிருக்கேன். அவ்வளவு இளமையான, ஜாலியான டீம் இது. இருப்பதே பார்ட்டி பண்ற மாதிரிதான் இருக்கு.

ஸோ, இதிலேயே என் இன்னொரு இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கலாம்.

தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் நடிப்பதுமில்லாமல், சமயத்தில் ஜெயம் ரவி, அர்ஜூனுக்கு வில்லனா ஹீரோ இமேஜ் பார்க்காமல் இறங்கிவிடுகிறீர்களே?

எங்கே வேணா யார்கூட வேணா நடிக்கலாம். என்னவா நடிக்கிறோம்கிறது முக்கியம். நண்பர் ஒருவர் சொன்னார் கடைசி வரைக்கும் நல்லவனாகாம செம வில்லனா ஒரு படம் நடிங்க.

அது உங்களை மக்கள் மத்தியில் நெருக்கமாக்கும்னார். நானும் ஏகப்பட்ட கதை கேட்டேன். சரியா ஹெவியா இல்லை எதுவும்.

இது அவர் சொன்னது, தனியொருவனுக்கு முன்னாடியே. ஆனால் அரவிந்த் சாமிக்கு மாட்டிச்சி பாருங்க. மனுஷன் பிரிச்சி மேய்ஞ்சிட்டார்.

பண்ணலாம். ஆனா செம வில்லன் ரோலா இருக்கணும். அது மாதிரி நினைத்து எதிர்பார்த்து பண்ணிய படங்கள் அவை. ’தில்லாலங்கடி’ தெலுங்கில் ’கிக்’ ஆக வந்து எனக்கு பெரிய பேர் வாங்கிக் கொடுத்த படம். தமிழில் எதிர்பார்த்த அளவில் அமையாதது வருத்தம்தான்.

காவியன் படம் எப்படி?

முடிந்துவிட்டது. யு எஸ்ஸில் சூட் பண்ணிய கார் ரேஸ் பற்றிய படம். வழக்கம் போல கடின உழைப்பை போட்டிருக்கிறோம்.

விரைவில் வெளியாக இருக்கிறது என்றார் நடிகர் ஷாம்.

Mankatha Magic will happen to me shaam says with Confident

shaam and siva at party shooting

கமலுக்கு அப்புறம் அனிமல் ஸ்டார் சாம்பார் ராசன்; அவரே சொன்னாரு!

கமலுக்கு அப்புறம் அனிமல் ஸ்டார் சாம்பார் ராசன்; அவரே சொன்னாரு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Animal Star Sambaar Raasan starring Maattukku Naan Adimai‘அனிமல் ஸ்டார்’ என்கிற அடைமொழியுடன் களமிறங்கியிருக்கிறார் ‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன்.
இவர் தயாரித்து நடிக்கும் படம்தான் ‘மாட்டுக்கு நான் அடிமை’.

மாட்டுக்காகவே வாழ்ந்து மாட்டுக்காகவே உயிரை விட தயாரான ஒருவனின் கதை தான் இந்தப்படம். அந்த கேரக்டரில் தான் சாம்பார் ராசன் நடித்துள்ளார். இந்தப்படத்தில் இரண்டு நாயகிகள்.

அதில் கோலிசோடா சீதா ஒருவர்.. இன்னொரு நாயகியாக சௌந்தர்யா என்பவர் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இளையகுமார் பி.கே என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் நம்ம நாட்டுல மாடு நல்லா இருந்தா விவசாயம் நல்லா இருக்கும் என்கிற கருத்தை வலியுறுத்துவதாக எடுக்கப்பட்டுள்ளதாம்.

இப்படத்தில் நாயகன் சாம்பார் ராசன் கோவணம் அணிந்தபடி இருக்கும் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
ஆனால் இதை பப்ளிசிட்டிக்காக பண்ணவில்லை.. தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்து கோவணம் கட்டி நடித்தது நான் மட்டுமே!

கோவணம் தான் தமிழனின் பாரம்பரிய உடை.. அதை அணிவதில் என்ன கூச்சமும் வெட்கமும் என்கிறார் சாம்பார் ராசன்.

சரி அது என்ன சாம்பார் ராசன்..? மக்கள் ஒவ்வொருத்தர் வீட்டிலும் சாம்பார் தவறாம இடம்பெறும் இல்லையா.. அந்தமாதிரி எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பதற்காக தனது பெயரையே ‘சாம்பார் ராசன் ‘என மாற்றி, அதை கெஜட்டிலும் பதிந்துவிட்டேன் என ஆச்சர்யப்படுத்துகிறார் சாம்பார் ராசன். இவரது பூர்விகம் கோவை..

என்னை மாதிரி யாராலும் படம் எடுக்க முடியாது என்று அடித்து சொல்கிற சாம்பார் ராசன் வேறு நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க மாட்டேன் என்கிறார் நடிச்சா ஹீரோவா மட்டும் தான் என்பதில் தெளிவாக இருக்கும் இவர்,

உங்களுக்கு எந்த நடிகையுடன் நடிக்க ஆசை என்றவுடன்.. எனக்கு யார் கூடவும் நடிக்க ஆசை இல்லை, வருங்காலத்தில் என் கூட எல்லா ஹீரோயின்களும் நடிக்க ஆசைப்படுவாங்க என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

சிரிப்புக்காக சொல்கிறாரா இல்லை சீரியஸாக சொல்கிறாரா என அவரிடம் கேட்டால் மக்கள் எல்லோரும் என்னைப்பார்த்து சிரிக்கணும்.. அதுதான் என் லட்சியம் என்கிறார்.

கோவில்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் தான் இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.. மாட்டை பற்றிய படத்தில் ஜல்லிக்கட்டு இல்லாமலா..? “படத்தில் ஜல்லிக்கட்டு வச்சிருக்கேன்.

படங்களில் பாட்டு பாடி மாட்டை அடக்கறது அந்த காலம்.. நான் இந்த படத்தில் மாட்டு விஞ்ஞானி என்பதால் ஒவ்வொரு மாட்டுக்கும் தனித்தனியா பாஸ்வேர்டு கொடுத்து வச்சிருக்கேன்..” என இன்னொரு குண்டை தூக்கிப்போடுகிறார்.

ஆக, நிறைய அதிர்ச்சிகளையும், ஆச்சர்யங்களையும் ரசிகர்களுக்கு தர தயாராகி வருகிறார் இந்த ‘அனிமல் ஸ்டார்’ சாம்பார் ராசன்.

விரைவில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறதாம்.

அப்போ பாட்டு பாடி மாட்டுக்கு பால் கறக்கிறாரா? என்பதை பார்ப்போம்.

Animal Star Sambaar Raasan starring Maattukku Naan Adimai

Maattukku Naan Adimai stills

மக்களே… டிக்-டிக்-டிக் டீசர் ரிலீஸ் நேரத்தை டிக் பண்ணிக்குங்க!

மக்களே… டிக்-டிக்-டிக் டீசர் ரிலீஸ் நேரத்தை டிக் பண்ணிக்குங்க!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tik tik tik 2nd look posterநாணயம், நாய்கள் ஜாக்கிரதை மற்றும் மிருதன் ஆகிய படங்களைத் தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் ‘டிக் டிக் டிக்’.

இப்படத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் மூலம் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

இமான் இசையமைக்கும் இப்படத்தை ஹித்தேஷ் ஜபக் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் முன்பே வெளியான நிலையில், இதன் செகன்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் இணையத்தில் வெளியானது.

இதனையடுத்து இப்படத்தின் டீசரை வருகிற ஆகஸ்ட் 14ஆம் மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Jayam Ravis Tik Tik Tik teaser will be released on 14th August at 5pm

tik tik tik 2nd look poster

தமிழாலே ஒன்னானோம் மாறாது எந்நாளும்… மெர்சல் சாங் டீசர் வெளியானது

தமிழாலே ஒன்னானோம் மாறாது எந்நாளும்… மெர்சல் சாங் டீசர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijay stillsஏஆர். ரஹ்மான் இசையமைப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மெர்சல்.

விஜய் 3 வேடம் ஏற்று நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் சாங் டீசரை மட்டும் சற்றுமுன் இணையத்தில் வெளியிட்டனர்.

ஆளப்போறான் தமிழன் என்ற இந்த பாடலின் டீசர் தமிழாலே ஒன்னானோம் மாறாது எந்நாளும் என்ற தொடங்குகிறது.

மேலும் இதில் விஜய்யுடன் நடனமாடும் கலைஞர்கள் ஜல்லிட்டுக்கடுடு காளையைப் போல் தங்கள் கைகளை காளை மாட்டின் கொம்பு போல வைத்துள்ளனர்.

ஆன இது முழுக்க முழுக்க தமிழரையும் அவர்களின் கலாச்சாரத்தையும் குறிக்கும் பாடலாக இருக்கும் என நம்பலாம்.

இது முதல் பாடல் வரிகள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அந்தபாடலின் டீசரிலேயே தெரிவித்துள்ளனர்.

Mersal single track teaser released

ஏஆர்.ரஹ்மானின் இசையை இன்ச் இன்ச்சாக சொல்லும் ஒன் ஹார்ட்

ஏஆர்.ரஹ்மானின் இசையை இன்ச் இன்ச்சாக சொல்லும் ஒன் ஹார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahmans concert film One Heartஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகளை மையமாக கொண்டு கான்சர்ட் ஜேனரில் உருவாகியுள்ள ‘ஒன் ஹார்ட்’ திரைப்படம்.

தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

கான்சர்ட் ஜேனர் என்றால், ஒரு இசைகலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிக்கரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் படமே தான் கான்சர்ட் ஃபிலிம்.

ஏ.ஆர். ரஹ்மான் அமெரிக்காவில் மேற்கொண்டஇசைப்பயணம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த இசைப்பயணத்தின் போது பதினாறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த பதினாறு இசை நிகழ்ச்சிகளையும் தொகுத்து ஒரே படமாக உருவாக்குவதின் முதல் முயற்சி தான் ஒன் ஹார்ட்.

இப்படத்தை கனடாவில் ஒரு முறை ப்ரீமியர் ஷோவாக திரையிடப்பட்டபோது ஏராளமான வரவேற்பும் பாராட்டும் கிடைத்திருக்கிறது.

இத்தகைய சிறப்பைப் பெற்ற ஒன் ஹார்ட் படம் உலகமெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த ஒன்ஹார்ட் படத்தில் பதினாறு பாடல்கள் இருந்தாலும் தமிழ் பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன.

“இது வரை நீங்கள் ஏ ஆர் ரஹ்மான், மேடையில் பாடியிருப்பதை கண்டு ரசித்திருப்பீர்கள். அவர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துவதைப் பார்த்து ரசித்திருப்பீர்கள்.

ஆஸ்கார் விருது வாங்கியதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு இசை நிகழ்ச்சிக்கான முன் தயாரிப்பு குறித்தோ, அதற்கான பணிகளில் எப்படி தன்னுடைய குழுவினருடன் ஈடுபடுகிறார் என்பது குறித்தோ, மேடைகளில் பாடவேண்டிய மற்றும் இடம்பெற வேண்டிய நிகழ்வுகளின் வரிசை பட்டியல் குறித்தோ அதற்கான பின்னணி குறித்தோ அறிந்திருக்கமாட்டீர்கள்.

அதனை சுவைப்பட சொல்வது தான் இந்த படம்” என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AR Rahmans concert film One Heart

AR Rahmans concert film One Heart

விமர்சிக்கலாம்; பெண்கள் மனதை காயப்படுத்த வேண்டாம்… விஜய் வேண்டுகோள்

விமர்சிக்கலாம்; பெண்கள் மனதை காயப்படுத்த வேண்டாம்… விஜய் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vijay request everyone to respect womenபிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன், சில தினங்களுக்கு முன்பு, விஜய் நடித்து வெளிவந்த ‘சுறா’ படம் குறித்து ஒரு கருத்தை அவருடைய ட்விட்டரில் பதிவிட்டார்.

‘தான் சுறா படத்திற்கு பிறகு சமீபத்தில் வெளிவந்த ஷாருக்கான் படத்திற்கு தான் பாதியில் எழுந்து வந்தேன்’ என்று கூறியிருந்தார்.

விஜய் படம் குறித்து அவர் எப்படி அப்படி சொல்லலாம் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த பெண் பத்திரிகையாளர் குறித்து தரக் குறைவான கமெண்ட்டுகளைப் பதிவு செய்தனர்.

அதன் பின் அவர் சென்னை காவல் துறையில், தன்னை தரக் குறைவாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

தன்யா ராஜேந்திரனுக்கு ஆதரவாக பல பத்திரிகையாளர்கள் அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் சற்றுமுன் சில நிமிடங்களுக்கு முன் ஓர் அறிக்கையை விஜய் வெளியிட்டார். அதில்…

“சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்.

யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு.

எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும்..

அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும்..

யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

vijay statement

More Articles
Follows