சமுத்திரக்கனி-ரம்யா இணையும் படத்திற்கு இப்படி ஒரு பெயரா?

சமுத்திரக்கனி-ரம்யா இணையும் படத்திற்கு இப்படி ஒரு பெயரா?

aandevadhaiபொதுவாக பெண்களைத்தான் தேவதை என்பார்கள். ஆனால் ஆண் தேவதை என்ற பெயரில் என ஒரு படம் தயாராக உள்ளது.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட சமுத்திரக்கனி, இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக ஜோக்கர் படத்தில் அருமையான நடிப்பை வழங்கிய ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.

தாமிரா இப்படத்தை இயக்குகிறார். இவர் பாலச்சந்தர்-பாரதிராஜா இணைந்து நடித்த ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கியவர்.

கவின், கஸ்தூரி, ‘பூ’ ராமு, இளவரசு, ஸ்ரீநிகா, பிரகதீஷ், விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா, யாழ் நிலா, மயில்சாமி, அருண்மொழி, திலீபன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

‘சிகரம் சினிமாஸ்’ என்று தன் நிறுவனத்திற்குப் பெயர் வைத்து பக்ருதீன் என்பவர் இணைந்து இப்படத்தை இயக்குனர் தாமிராவே தயாரிக்கிறார்.

ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன மாதிரியான வேறுபாடுகள் இருக்கும் என்பதை உணர்த்த இப்படம் வருகிறது.

கௌரவ் டைரக்ஷனில் உதயநிதி நடிக்கும் படம் ஆரம்பமானது

கௌரவ் டைரக்ஷனில் உதயநிதி நடிக்கும் படம் ஆரம்பமானது

udayanithi manjima mohan and rk suresh joins in director Gaurav movieஇதுவரை தன் சொந்த தயாரிப்பிலே நடித்து வந்த உதயநிதி, தற்போது மற்றவர்களின் பேனர்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

இவர் நடிக்கவுள்ள படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

தூங்கா நகரம், சிகரம் தொடு ஆகிய வெற்றி படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்குகிறார்.

வில்லன் வேடத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்க, நாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.

டிமான்டி காலனியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அரவிந்த் சிங் இதில் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் பூஜை போடப்பட்டதை தொடர்ந்து சூட்டிங் தொடங்கியுள்ளது.

தனுஷ் படத்தில் ரஜினி பட தயாரிப்பாளருடன் அமலாபால்

தனுஷ் படத்தில் ரஜினி பட தயாரிப்பாளருடன் அமலாபால்

amala paulதனுஷின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய படம் ‘வேலையில்லா பட்டதாரி’.

2014ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை தனுஷ் தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார். நாயகியாக அமலா பால் நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் கன்னட ரீமேக் உரிமையை ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியிருக்கிறாராம்.

இதில் கன்னட ஹீரோ மனோரஞ்சன் நாயகனாக நடிக்க, அமலா பாலே அங்கும் நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.

இதனிடையில் மலையாள இயக்குநர் ஜோஷி இயக்கத்தில் சத்யராஜ் இரண்டு கேரக்டரில் ‘முருகவேல்’ படத்திலும் அமலாபால் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தல-தளபதியை போல் விஷாலுக்கும் மாஸ் ஓப்பனிங்

தல-தளபதியை போல் விஷாலுக்கும் மாஸ் ஓப்பனிங்

vishalஒரு படத்தில் எத்தனை பாடல்கள் இருந்தாலும் ஹீரோவின் இன்ட்ரோ சாங்குக்கு (அறிமுக பாடல்) மாபெரும் வரவேற்பு இருக்கும்.

ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட நட்சத்திரங்களின் படங்களில் பெரும்பாலும் இது போன்ற ஓப்பனிங் சாங் இருக்கும்.

இந்நிலையில் இவர்களின் வரிசையில் விஷாலின் கத்தி சண்டை படத்திலும் இப்படியான ஒரு பாடலை படமாக்கி இருக்கிறார்களாம்.

‘எவன் நெனச்சாலும் என்னை புடிக்க முடியாது’ என்ற வரிகளோடு இப்பாடல் தொடங்குகிறதாம்.

இப்பாடலை அண்மையில் வெளிநாட்டில் படமாக்கிவிட்டு சென்னை திரும்பியுள்ளது படக்குழு.

தீபாவளிக்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மீண்டும் விஜய்-அட்லி கூட்டணியில் ஜிவி. பிரகாஷ்

மீண்டும் விஜய்-அட்லி கூட்டணியில் ஜிவி. பிரகாஷ்

vijay atlee gv prakashஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரியில் நடைபெறும் பைரவா படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து கொண்டிருக்கிறார் விஜய்.

இதனையடுத்து விஜய், தன் அடுத்த படத்தினையும் முடிவு செய்திருப்பதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, அட்லி இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களின் கூட்டணியில் வெளியான ‘தெறி’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

எனவே இப்படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகும் எனத் தெரிகிறது.

ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிக்கு கிடைத்த கௌரவம்

ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிக்கு கிடைத்த கௌரவம்

rajini family photoரஜினிகாந்தை தொடர்ந்து அவரது இரு மகள்களும் சினிமா துறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிப்பு துறையை விட்டு இயக்கத்திலும் தயாரிப்பிலும் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் ரஜினிகாந்தின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா அவர்கள், ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து, தற்போது சௌந்தர்யா ரஜினிக்கும் ஒரு துறையில் கௌரவ பதவி கிடைத்துள்ளது.

அதாவது இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் அமைப்பின் ப்ராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

 

soundarya animal welfare

More Articles
Follows