ரஜினி-விக்ரம் பட நடிகைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விஜய் பட இயக்குனர்

Sadha and Riythvika as prostitute in Torch light movieவிஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கியவர் மஜீத். இவர் தற்போது இயக்கியுள்ள படத்திற்கு டார்ச் லைட் என பெயரிட்டுள்ளார்.

இப்படத்தில் அந்நியன் பட நடிகை சதா மற்றும் கபாலி பட புகழ் ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த ‘டார்ச் லைட்’ படம் பற்றி இயக்குநர் மஜீத் கூறும் போது…

“இது ஒரு பீரியட் பிலிம். 90களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

இது நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்கள் பற்றிய கதை.

இந்தப் படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கினார்கள். ஆனால் நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்தார்.

வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்து படமாக்கினேன், மும்பையில் சென்சார் ஆபிஸர்கள் படம் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே படமாக்கி உள்ளேன் படம் சிறப்பாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கு பிடித்த படமாக இருக்கும், படத்தில் சதா, ரித்விகா இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

படத்தில், புதுமுகம் உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா. ரங்கநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சென்சார் சென்றபோது இங்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தார்கள். இங்குப்போராடிப் பார்த்து வேறு வழியில்லாமல் பிறகு நான் மும்பை சென்று ஏ சான்றிதழ் பெற்றுள்ளேன். ” என்றார்

‘டார்ச் லைட் ‘படத்துக்கு ஒளிப்பதிவு – சக்திவேல், இசை – ஜேவி, பாடல்கள்- வைரமுத்து, எடிட்டிங் – மாரீஸ், கலை -சேகர், நடனம் – சிவராகவ், ஷெரீப். தயாரிப்பு அப்துல் மஜீத், எம். அந்தோனி எட்வர்ட், ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர்.

விரைவில் ஒளி வீச வருகிறது இந்த ‘டார்ச் லைட்’.

Sadha and Riythvika as prostitute in Torch light movie

Overall Rating : Not available

Related News

“சூப்பர் ஸ்டார்” யாருன்னா கேட்டா சின்னக்…
...Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான…
...Read More

Latest Post