கருணாஸ் இனியா ரித்விகா இணைந்த ‘ஆதார்’ பட சென்சார் அப்டேட்

கருணாஸ் இனியா ரித்விகா இணைந்த ‘ஆதார்’ பட சென்சார் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான ‘ஆதார்‘ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘யு/ஏ ‘சான்றிதழை பெற்றிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஆதார்’.

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் உருவான ‘ஆதார்’ திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக நடிகர் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ராமர் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்திருக்கிறார்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இணையத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டத்தை மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. தற்போது இப்படம் தணிக்கை செய்யப்பட்டு, யு /ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எளிய மனிதர்களின் வலியை டிஜிட்டல் செல்லுலாய்டில் யதார்த்தமாக உணர்த்தியிருக்கும் ‘ஆதார்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Aadhaar Tamil Movie censored with U/A

ரஜினிக்கு வாழ்த்து.. ரூ 30 கோடி தேவை.. சென்னையின் அடையாளமாகும் பில்டிங்.; நடிகர் சங்க பொதுக்குழு சுவாரஸ்யங்கள்

ரஜினிக்கு வாழ்த்து.. ரூ 30 கோடி தேவை.. சென்னையின் அடையாளமாகும் பில்டிங்.; நடிகர் சங்க பொதுக்குழு சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது:

நடிகர் நாசர் பேசும்போது,

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66 வது பொதுக்குழு கூட்டம் மிக மிக சிறப்பாக இன்று நடைபெற்றது. சௌகார் ஜானகி அம்மாவிற்கு மரியாதை கொடுத்த நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் இருந்தது.

இரண்டு வருடங்கள் காத்திருந்தாலும் அதைவிட வேகமாக செயல்படுவதற்கு இந்த பொதுக்குழு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இன்றுடன் பேச்சைக் குறைத்து நாளை முதல் முழுமூச்சாக செயலில் இறங்குவோம்” என்றார்.

நடிகர் விஷால் பேசும்போது…

“நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நட்சத்திர இரவு விழா நடத்துவதா? அல்லது வங்கியில் கடன் வாங்குவதா? என்று பொதுக்குழுவில் ஒப்புதல் வாங்கியிருக்கிறோம். அதன்படி செயல்படுவோம். இதுவரை 70 சதவீத கட்டிடம் முடிக்கப்பட்டுள்ளது. உள் வடிவமைப்பையும் சேர்த்து இன்னும் 40 சதவிகித வேலை உள்ளது.

இதை முடிப்பதற்கு இன்னும் 30 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கான நிதியை எப்படி திரட்டலாம் என்று ஆலோசனை செய்துள்ளோம்.

இது ஒருபுறமிருக்க, தனிப்பட்ட முறையிலும் நடிகர் நடிகைகளிடம் கேட்டு, அவர்களிடமும் நிதியை திரட்ட உள்ளோம். நடிகர் சங்க கட்டிடம் என்பதால் நடிகர் நடிகைகளிடம் தனிப்பட்ட முறையில் கேட்பதற்கு நாங்கள் வெட்கப்படவில்லை.

அதேபோல், வங்கியிலும் கடன் வாங்க ஒப்புதல் வாங்கி விட்டோம். எல்லா வகையிலும் இத்திட்டத்திற்கு தேவையான நிதியை வசூல் செய்து எந்தளவுக்கு விரைந்து முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிப்போம்.

மேலும், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த அணி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற செயல்படும். பொதுக்குழு சிறப்பாக நடந்து முடிந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தாதாசாகேப் பால்கே விருது வாங்கியதற்காக வாழ்த்து தெரிவித்தோம். அதேபோல் , பத்மஶ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகி அம்மாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப் பட்டது.

பாரதி விஷ்ணுவர்த்தன், ராதிகா சரத்குமார் ஆகியோரும் கவுரவிக்கப் பட்டார்கள்.

நேர்மறையாக தொடங்க இருக்கிறோம். இதன்பிறகு, கட்டடம் கட்டுவதற்கு எந்த தடங்களும், தடைகளும், சச்சரவுகளும் வராது என்று நம்புகிறோம். இது சாதாரண கட்டிடமாக இருக்காது.

சென்னையில் ஒரு அடையாளமாகவே இருக்கும். வெளியூரில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் அனைவரும் ஒருமுறையாவது நடிகர் சங்க கட்டிடத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடும் வர வேண்டும். அதற்கும் சேர்த்து தான் இந்தக் கட்டிடத்தைக் கட்டுகிறோம்” என்றார்.

கார்த்தி பேசும்போது…

நடிகர் சங்க கட்டிடத்தின் மூலம் EMI, காப்பீடு, ஓய்வுதியம், மருத்துவ செலவுகள், ஈமச்சடங்கு உதவி போன்ற செலவுகள் போக குறைந்தபட்சம் ஒன்றரை கோடியில் இருந்து இரண்டரை கோடி வரை மீதம் இருக்கும். இந்த வருமானம் போதுமானதாக இருக்கும் என்றார்.

Nadigar Sangam press meet highlights

சந்தோஷ்சிவன் இயக்கத்தில் இணைந்த மஞ்சுவாரியர் & யோகிபாபு படத்தின் நியூ அப்டேட்

சந்தோஷ்சிவன் இயக்கத்தில் இணைந்த மஞ்சுவாரியர் & யோகிபாபு படத்தின் நியூ அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்டிமீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

இதனை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். அத்துடன் பிரத்யேக காணொளி ஒன்றையும் மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘சென்டிமீட்டர்’. இதில் ‘அசுரன்’ பட புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

அவருடன் நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள்.

படத்தின் பின்னணி இசையை ஜேக்ஸ் பிஜாய் கவனித்திருக்கிறார். சந்தோஷ் சிவன் மற்றும் அஜில் இணைந்து திரைக்கதை எழுத, சசிகுமரன் சிவகுரு வசனம் எழுதியிருக்கிறார்.

படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொண்டிருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் அவர்களும், ஷிவாஸ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் தயாரிப்பாளர் எம். பிரசாந்த் தாஸ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ‘சென்டிமீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இதனை இந்தியாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார்.

இதற்காக பிரத்யேக காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

‘அசுரன்’ படத்திற்கு பிறகு நடிகை மஞ்சு வாரியாரின் நடிப்பில் உருவாகி இருப்பதாலும், படத்தின் தலைப்பு ‘சென்டிமீட்டர்’ என வித்தியாசமாக இருப்பதாலும், ஃபர்ஸ்ட் லுக்கில் யோகி பாபு மற்றும் காளிதாஸ் ஜெயராமின் தோற்றம் கவனத்தைக் கவரும் வகையில் இருப்பதாலும், ‘சென்டிமீட்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

centimeter

New update on manju warrier & Yogibabu starrer centimeter

‘தளபதி 66’ அப்டேட்..; விஜய்யுடன் இணையும் கோலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள்

‘தளபதி 66’ அப்டேட்..; விஜய்யுடன் இணையும் கோலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

படத்தில் நடிக்கும் பிரபல நட்சத்திரங்கள் குறித்த தளபதி 66 அப்டேட் அதிகாரபூர்வமாக வெளியானது .

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார் தமிழ் நடிகர் விஜய்.

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 66’ என பெயரிடப்பட்டுள்ளனர்.

இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இப்படத்தில் ஷ்யாம் மற்றும் யோகிபாபு முக்கிய வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

காதலுக்கும் குடும்ப உறவுகளுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.

தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ‘தளபதி 66’ படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன் படி சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் அடுத்தாண்டு 2023-ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாகவுள்ளது. மேலும் தளபதி 66 அப்டேட் வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் .

Famous stars of Kollywood joins Thalapathy 66

வித்தியாசமான படைப்பு ‘விசித்திரன்’..; ஆர்கே. சுரேஷை பாராட்டும் பிக்பாஸ் பிரபலங்கள்

வித்தியாசமான படைப்பு ‘விசித்திரன்’..; ஆர்கே. சுரேஷை பாராட்டும் பிக்பாஸ் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பாலா தயாரிப்பில், ஆர் கே சுரேஷ், பூர்ணா, பக்ஸ், மாரிமுத்து, இளவரசு, மதுஷாலினி மற்றும் பலரின் நடிப்பில் ஜி வி பிரகாஷ் இசையில் எம். பத்மகுமார் இயக்கத்தில் உருவான படம் “விசித்திரன்”.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பிரபலங்களுக்கான சிறப்பு காட்சி நடைபெற்றது. அப்போது பிரபலங்கள் படம் பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர்.

பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் பேசியபோது,

இப்படி பட்ட ஒரு கதையை நான் ஆர் கே சுரேஷ் அண்ணனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. நானே திரைப்படத்திற்குள் பயணிப்பது போல் உணர்ந்தேன். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத விதத்தில் இருந்தது. ஆர் கே சுரேஷ் அண்ணன் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டியதில்லை பிரமாதமாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் சமூக பிரச்சனையை பற்றி பேசியுள்ளார்கள். தற்போதய கால கட்டத்திற்கு தேவையான ஒரு படமாக இதை பார்க்கிறேன். படக்குழுவினர் அனைவர்க்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் என்றார்.

பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் பேசியபோது,

நான் எந்த எதிர்பார்ப்புடனும் வரவில்லை. ஆனால் இப்போது நான் பல சுவாரஸ்யமான தருணங்களுடன் செல்கிறேன் ஆர் கே சுரேஷ் அண்ணன் மிக சிறப்பாக நடித்துள்ளார். செண்டிமெண்ட் காட்சிகளில் அவரின் கண் மட்டும் ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதை கண்டு வியப்படைந்தேன். அதே போல் நடிகை பூர்ணாவும் சிறப்பாகவே நடித்துள்ளார், என்றார்.

பிக் பாஸ் பிரபலம் தாமரை பேசியபோது,

மிகவும் மன வேதனையுடன் நான் இப்படத்தை பார்த்தேன். கிளைமாக்ஸ் காட்சிகள் கண்கலங்க செய்தது. மக்கள் அனைவரும் இப்படத்தை திரையில் வந்து பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். படத்தில் நடித்த அனைவரும் மிக சிறப்பாக நடித்துள்ளனர், என்றார்.

விஜய் டிவி பிரபலம் சரத் பேசியபோது,

எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஆர் கே சுரேஷ் அண்ணனின் நிறைய படங்கள் பார்த்துள்ளேன். இப்போது ஒரு படத்தில் அவருடன் இனைந்து நடித்திருக்கிறேன். அவர் இதுவரை நடித்த படங்களில் முரட்டு தனமாகவும், வில்லனாகவும் தான் நடித்துள்ளார். ஆனால் இப்படத்தில் சாந்தமாகவும், பொறுமையாகவும் நடித்திருப்பது வியப்பாக இருக்கிறது.

நடிப்பை கண்டபோது படத்தை நான் என்னையே மெய்மறந்தது பார்த்தேன். இச்சமயத்தில், இயக்குனர் பாலா அவர்களுக்கும் நன்றி. இப்படிப்பட்ட ஒரு படைப்பை தமிழ் சினிமாவிற்கு வழங்கியதாக. மேலும் இது போன்ற நல்ல படங்கள் தமிழ் சினிமாவில் வரவேண்டும் என நினைக்கிறன், என்றார்.

விஜய் டிவி பிரபலம் பாலா பேசியபோது,

அண்ணன் ஆர் கே சுரேஷ் என்னுடன் நடித்ததை விட என்னை அடித்ததே அதிகம். இப்படத்தின் கிளைமாக்ஸ்காக ஐமேக்ஸில் 5 முறை இந்த படத்தை பார்க்கலாம். “ஸ்க்ரீன் பிலே பேஸ்ட்டு படம் முழுக்க ட்விஸ்ட்டு” அனைவரும் விசித்திரன் திரைப்படத்தை கண்டு மகிழுங்கள் என்றார்.

பிக் பாஸ் பிரபலம் ஜூலி பேசியபோது,

இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஆர் கே சுரேஷ் மற்றும் பூர்ணா இருவரையும் வித்யாசமான பரிமாணத்தில், எதார்த்த கதையுடன் திரையில் பார்க்கலாம். சில படங்கள் தான் நம் மனதில் நிற்கும் அப்படியான படம் தான் “விசித்திரன்”. ஆர் கே சுரேஷுக்குள் இப்படி பட்ட நடிகன் இருப்பார் என்று எனக்கு தெரியாது. அவர் அட்டகாசமாக நடித்துள்ளார். பூர்ணா மிகவும் அழகாக இருக்கிறார், என்றார்.

நடிகர் ஷா ரா பேசியபோது,

மலையாளத்தில் வெளியான “ஜோசப்” படத்தை நான் 4 முறை பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படம் அது. அதே போல் நடிகர் ஜோஜு ஜார்ஜ் அவர்களையும் எனக்கு பிடிக்கும். அந்த படத்தின் ரீமேக் என்பதாலே நான் இப்படத்தை பார்க்க வந்தேன். அந்த படத்தின் அழகை அப்படியே படமாகியுள்ளார்கள்.

ஆர் கே சுரேஷ் அவர்களை இது வரை முரட்டு தனமான வில்லனாகவே பார்த்து பழகிவிட்டோம். ஆனால், இப்படத்தில் அவர் அழகா நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அவரின் கண்களை நடிக்க வைத்திருக்கிறார். என்றார்.

நடிகை இந்திரஜா ரோபோ ஷங்கர் பேசுயபோது,

முன்பெல்லாம், ஆர் கே சுரேஷ் அண்ணனை பார்க்கும் போது பயமாக இருக்கும். வில்லனாகவே பார்த்து பழகிப்போன ஒருவர். அவர் இப்படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வயதான கதாபாத்திரத்தில் கூட பூர்ணா அவர்கள் இவ்வளவு அழகாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குனர் பாலா அவர்களுக்கு இப்படத்தை தயாரித்ததற்கு நன்றி.

இப்படி பட்ட ஒரு படைப்பை எடுத்ததற்கு இயக்குனர் எம். பத்மகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . காவல் துறையில் இருக்கும் ஒரு காவலாளியின் கதை இது. காவலர் அனைவர்க்கும் இப்படம் சமர்ப்பணமாகும். என்றார்.

நடிகை ஆர்த்தி கணேஷ் அவர்கள் பேசியபோது,

மிக சிறந்த படம் இது, ஆர் கே சுரேஷ் தனித்துவமான ஒரு நடிப்பை நடித்திருக்கிறார். பூர்ணா அவர்கள் அழகாக இருக்கிறார். இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மலையாளத்தில் இருந்த ஒரு படத்தை தமிழுக்கு ஏற்ற வாறு ரீமேக் செய்துள்ளார். இது படம் அல்ல பாடம் என்றே சொல்லாம். அனைவரும் “விசித்திரன்” படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நடிகர் கணேஷ் பேசியபோது,

இப்படி பட்ட ஒரு உன்னதமான படைப்பில் நான் நடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.ஆர் கே சுரேஷ், பூர்ணா என அனைவரும் நடிக்கவில்லை, கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். கண்டிப்பாக அனைவரும் இந்த படத்தை திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அனைவரின் கண்களையும் கலங்கச் செய்யும் வெற்றி படம் இது என்றார்.

நடிகர் ஆர் கே சுரேஷ் பேசியபோது,

தயவு செய்து மலையாளம் மற்றும் தமிழ் படத்தை ஒப்பிட வேண்டாம். ஜோஜு ஜார்ஜ் தனது உட்சபட்ச நடிப்பை கொடுத்துள்ளார், நான் முயற்சி செய்திருக்குறேன். என் இயக்குனர் எம்.பத்மகுமாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மோகன்லால் சார் மற்றும் மம்முட்டி சார் ஆகியோரை இயக்கிய ஒரு சிறந்த இயக்குனர். அவர் என்னிடம் முகபாவனைகளைக் கொண்டு நடிக்கச் சொன்னார், கடவுளின் கிருபையால் அனைத்தும் நல்ல படியாக அமைந்துள்ளது. ஜி வி பிரகாஷ் இசையில் அவரின் முழு உழைப்பையும் போட்டிருக்கிறார். அடுத்ததாக எனது சக நடிகை பூர்ணாவுக்கு எனது வாழ்த்துகள்.

மேலும் அவர் தமிழில் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவள் நயன்தாராவைப் போல் பிறப்பின் மூலமே ஒரு கலைஞன் தான். மேலும், என் குருநாதர் பாலாவிற்கு பாலாவிற்கு என்னை வைத்து ஒரு படம் தயாரித்ததற்காக நன்றி தெரிவிக்க வேண்டும், என்றார்.

நடிகை பூர்ணா பேசியபோது,

ஒரு படத்தை மீண்டும் உருவாக்குவதற்கு இரட்டை பதற்றம் இருக்கும். ஆனால் அவர்கள் அதை ஒரு புத்திசாலித்தனமான வழியில் கையாண்டுள்ளனர். ஜோசப் ஒரு ஹீரோ படம், அதையே விசித்திரனிலும் உணர முடிந்தது. ஆர் கே சுரேஷ் அதிகபட்சமாக நடித்துள்ளார். பல காட்சிகளில் நான் இருந்ததால் அவருடைய நடிப்பையும் பார்த்திருக்கிறேன். சில சென்டிமென்ட் காட்சிகளில் நான் மிகவும் அழுதேன். அவரது நடிப்பு இந்த படத்திற்கு ஒரு பெரிய முதுகெலும்பாக இருந்தது.

இயக்குனர் எம். பத்மகுமார் படத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளார். அவரைத் தவிர வேறு எந்த இயக்குனரும் இந்தப் படத்தை சிறப்பாக இயக்க முடியாது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்ற எண்ணத்துடனே இதனை நாட்கள் காத்திருந்தோம்.

இந்த படம் ஓடிடி தலத்தில் செல்வதற்கு நாங்கள் விரும்பவில்லை. எங்கள் காத்திருப்புக்கு பலன் கிடைத்தது போல் உள்ளது. அனைவரும் இந்த படத்தை பார்த்து உங்களின் கருத்துக்களை சொல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி என்றார்.

Bigg Boss celebrities appreciates RK Suresh and Visithiran movie

KGF படங்களில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்..; அதிர்ச்சியில் திரையுலகம்

KGF படங்களில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்..; அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யாஷ் நடிப்பில் சமீபத்தில் ‘கே ஜி எஃப் 2‘ படம் வெளியானது.

இதில் நாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடிக்க இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

இந்த படம் தான் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் சாதனையை படைத்து வருகிறது. இதுவரை ரூ 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் மோகன் ஜுனேஜா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இவர் கே ஜி எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்தவர்.

கேங்க கூட்டிட்டு வர்ரவன் கேங்ஸ்டர், ஒத்தைய வர்ரவன் மான்ஸ்டர் என்ற ஒத்த டயலாக் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இவர்.

இவர் கன்னட திரையுலகில் மிக பிரபலமான நடிகராம்.

பெரும்பாலும் இவர் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

KGF 2 actor Mohan Juneja passes away

More Articles
Follows