நடிகர் சங்கத்துக்கு 25 லட்சம் கொடுத்த லாரன்ஸ்; மனமுருகி உதயா நன்றி

நடிகர் சங்கத்துக்கு 25 லட்சம் கொடுத்த லாரன்ஸ்; மனமுருகி உதயா நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence donated Rs 25 Lakhs to Nadigar Sangamமுல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி. வரலாற்றில் நாம் படித்திருக்கிறோம். ஒரு முல்லைக் கொடி படர்வதற்கு வழியில்லாமல் தரையில் தவழ்ந்து வாடிக் கொண்டிருப்பதை கண்டு மனமுருகி அது படர்வதற்கும், உயிர் பிழைப்பதற்கும் தனது தேரையே அதற்கு அர்ப்பணித்தான் முல்லைவேந்தன்.

அதுபோல் இன்று கொரனாவால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கும், நடன கலைஞர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் அமைப்புசாரா மற்ற தொழிலாளர்களுக்கும் ரூபாய் மூன்று கோடியை வாரி வழங்கியது மட்டுமில்லாமல்…

இன்னும் சில திரைத்துறையை சார்ந்தவர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் நிதி உதவி வழங்கிய வள்ளல் .. எங்கள் மாஸ்டர் திரு.ராகவா லாரன்ஸ் அவர்கள், பெப்சி அமைப்பில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அங்கம் இல்லாததால் அவர்களுக்கு தான் செய்த உதவி போய் சேரவில்லை என்று அறிந்து.. மனம் உருகி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நலிந்த நடிகர்கள், நாடக நடிகர்களுக்கு ரூபாய் 25 லட்சத்தை அளித்து.. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள்.

இக்கட்டான சூழ்நிலையில் உதவுவதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது …கொடுக்கும் மனம் இருக்கவேண்டும்..திரைத்துறையை சார்ந்தவர்களின் குடும்பங்களில் விளக்கேற்றி வைத்த.. ஒளிவிளக்கு.. கொடுத்து சிவந்த கை, எங்கள் கருப்பு வைரம் திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள் நீடூழி வாழ்க வாழ்த்துகிறேன்.

அன்பன்,
நடிகர் உதயா.

Raghava Lawrence donated Rs 25 Lakhs to Nadigar Sangam

விஜய் மரணம்; அஜித்துக்கு பாடை.; தமிழர்களை அசிங்கப்படுத்தும் ரசிகர்கள்

விஜய் மரணம்; அஜித்துக்கு பாடை.; தமிழர்களை அசிங்கப்படுத்தும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and Ajith fans worst clash in twitterஒரு பக்கம் கொரோனாவை தடுக்க என்னவெல்லாம் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என உலகமே போராடி வருகிறது.

இந்த வைரஸை தடுக்க மருத்துவர்கள், காவல்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், மீடியா உள்ளிட்ட பலரும் தங்கள் உயிரை பணயம் வைத்து தினம் தினம் போராடி வருகின்றனர்.

இந்த வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் விஜய் ரசிகர்கள் என்ன நடந்தால் என்ன? நாமும் எப்போதும் போல சண்டை போடுவோம் என ட்விட்டரில் கேவலமான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

வருகிற மே 1 ஆம் தேதி அஜித்துக்கு பிறந்தநாள் வருகிறது. இதற்கு எதிராக விஜய் ரசிகர்களோ… அஜித்துக்கு பாடை என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஜீன் 22ஆம் தேதி விஜய்க்கு பிறந்தநாள் வருகிற நிலையில் விஜய்யின் இறந்தநாள் என அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பயத்தால் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்க மக்களின் வேதனையறியாமல் அஜித் விஜய் ரசிகர்கள் இதுபோல் செய்யலாமா? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இதை பார்க்கும் மற்ற மாநிலத்தவர்கள் மற்ற நாட்டினர் தமிழர்களை பற்றி என்ன நினைப்பார்கள்..? அசிங்கமாக நினைக்க மாட்டார்களா? என கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

Vijay and Ajith fans worst clash in twitter

கொரோனாவுக்கு நிதி கொடுங்க என்னோட நடிங்க.; அழைக்கிறார் டைட்டானிக் ஹீரோ

கொரோனாவுக்கு நிதி கொடுங்க என்னோட நடிங்க.; அழைக்கிறார் டைட்டானிக் ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

leonardo dicaprioகொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருவதால் இதன் சிகிச்சைக்காக உலகம் முழுவதும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

மேலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் மக்கள் பெரும்பாலோனோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் டைட்டானிக் படத்தி நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் லியார்னாடே டிகாப்ரியோவும் கொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

மார்ட்டின் ஸ்கோர்செஸி இயக்கும் ‘கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன்’ என்ற படத்தில் நானும், ராபர்ட் டி நிரோவும் இணைந்து நடிக்கிறோம்.

கொரோனா பாதிப்பு நிவாரணத்துக்கு நிதி வழங்குபவர்களுக்கு என்னுடன் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தரப்படும்.”

இவ்வாறு டிகாப்ரியோ கூறியுள்ளார்.

https://www.instagram.com/leonardodicaprio/

நம்பிக்கையில்லை.. தனியா வாழ்ந்துடலாம்.. எக்ஸ் லவ்வர்ஸ் பற்றி நயன்தாரா

நம்பிக்கையில்லை.. தனியா வாழ்ந்துடலாம்.. எக்ஸ் லவ்வர்ஸ் பற்றி நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress nayantharaநடிகை நயன்தாராவின் காதலர்கள் என ஒரு சின்ன பட்டியலே போடலாம்.

நடிகர் சிம்பு உடன் காதல் கொண்டார். சிம்புவை ஆண் தேவதை என்கிற அளவுக்கு புகழ்ந்து தள்ளினார்.

சிம்பு நயன்தாரா லிப் லாக் படங்கள் இணையத்தில் கசியவே பின்னர் இருவருக்கும் பிரச்சினையாகி பிரிந்தனர்.

அதன் பின்னர் நடிகர் பிரபுதேவா உடன் காதல் கொண்டிருந்தார். திருமணம் வரை சென்ற காதல் பின்னர் முறிந்து போனது.

காதலின் போது பிரபு என்ற பெயரை தன் கையில் பச்சை குத்திக் கொண்டார் நயன்தாரா. அது தற்போது வரை உள்ளது.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருக்கிறார். இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

தற்போது தன் பழைய காதல் குறித்து கூறியிருக்கிறார் நயன்தாரா.

அதில், ”நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது. அதுபோல் நம்பிக்கை இல்லாத இடத்தில் சேர்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல் என உணர்ந்து, பழைய காதல்களை கடந்துவிட்டேன்” என தெரிவித்துள்ளார் நயன்தாரா.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அறிவிப்பு; முழு விவரம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அறிவிப்பு; முழு விவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil film producer Union election to be held on 21 June 2020தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஜூன் மாதம் நடக்கிறது. இதை தேர்தல் அதிகாரியும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.

இச்சங்கத்தில் தலைவர், 2 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் அடங்கிய நிர்வாகிகள் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது…

2020 மே மாதம் 11ஆம் தேதி காலை 10 மணி முதல் 14.05.2020 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும்.

14.05.2020 மாலை 5 மணிக்கு மேல் விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது. மே மாதம் 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் 19 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சங்க அலுவலகத்தில் மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்த்துவிட வேண்டும்.

(தபால் அல்லது கூரியரில் அனுப்பும் உறுப்பினர்கள் 19 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் கிடைக்குமாறு செய்ய வேண்டும்)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள், மூடி முத்திரையிட்ட பெட்டியில் 19.05.2020 மாலை 5 மணிக்கு சீல் வைக்கப்படும். 20.05.2020 காலை 10 மணி முதல் 24.05.2020 மாலை 4 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்று கொள்ளலாம். 24.05.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

25.05.2020 அன்று, இறுதி வேட்பாளர் பட்டியல் தகுதிப்பெற்ற உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தேர்தல் 21.06.2020 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் தேர்தல் நடைபெறும் இடம் அறிவிக்கப்படும்.

தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விவரம்: தலைவர் பதவிக்கு ரூ.1 லட்சம், மற்ற நிர்வாகிகள் பதவிக்கு, ரூ. 50,000 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ. 10,000.

இந்த தேர்தலில் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி சார்பில் டி.சிவா, தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி சார்பில் என்.ராமசாமி என்ற முரளி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

Tamil film producer Union election to be held on 21 June 2020

ஊரடங்கை மதிக்காமல் நடந்த முன்னாள் பிரதமர் பேரன் நடிகர் நிகில் திருமணம்

ஊரடங்கை மதிக்காமல் நடந்த முன்னாள் பிரதமர் பேரன் நடிகர் நிகில் திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nikhil kumaraswamy marriageகன்னட சினிமாவில் உள்ள ஹீரோக்களில் ஒருவர் நிகில் குமாரசாமி.

இவர் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் தேவ கடவுடாவின் பேரன் ஆவார்.

அதாவது கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி கவுடாவின் மகன் தான் இவர்.

இவருக்கு இன்று (ஏப்ரல்17) பெங்களூர் அருகில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது.

சுமார் 100 நபர்கள் இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டார்களாம்.

கிட்டதட்ட 35 கார்களுக்கு அனுமதி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் மாஸ்க் அணியவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் யாவரும் சமூக விலகலைக் கடைபிடிக்கவில்லை என்ற சர்ச்சையும் கூடவே எழுந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பலரும் அவர்களது குடும்பத் திருமணங்களைத் தள்ளி வைத்துள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில் முன்னாள் முதல்வர், மற்றும் பிரதமரின் குடும்பத் திருமணம் பாதுகாப்பு இல்லாமல் நடைபெற்றது குறித்து கர்நாடகாவில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

கர்நாடகாவில் மட்டும் கொரோனாவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No Social Distancing at Nikkil Kumarasamy marriage

More Articles
Follows