ஆந்திராவில் ரஜினிக்கு ஆதரவும் எதிர்ப்பும்.; ரோஜா பேச்சுக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்

ஆந்திராவில் ரஜினிக்கு ஆதரவும் எதிர்ப்பும்.; ரோஜா பேச்சுக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னாள் முதல்வரும் நடிகருமான என்டி ராமராவ் அவர்களின் நூறாண்டு விழா ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரஜினிகாந்த் தெலுங்கில் பேசினார்.

அவர் பேசும்போது என்டி ராமராவ் & அவரது மகன் நடிகர் பாலையா ஆகியோரை வாழ்த்து பேசினார்.

அதன் பின்னர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை குறிப்பிட்டு பேசும்போது.. “அவரின் தொலைநோக்கு பார்வையால் தான் இன்று ஹைதராபாத் ஹைடெக் சிட்டியாக மாறியுள்ளது என்றும் நியூயார்க் நகரம் போல வளர்ச்சி அடைந்துள்ளது” எனவும் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

இந்த பேச்சுக்கு அமைச்சரும் நடிகையுமான ரோஜா கண்டனம் தெரிவித்து இருந்தார்.

“ஒரு நடிகராக ரஜினிகாந்த் மீது பெரும் மரியாதை உள்ளது. ஆனால் அவருக்கு ஆந்திர அரசியல் குறித்து எதுவும் தெரியவில்லை.” என்றார்.

மேலும் சந்திரபாபு நாயுடு தேர்தல் தோல்வி குறித்தும் கிண்டல் அடித்திருந்தார் ரோஜா.

ஒரு பக்கம் ரஜினிக்கு ஆதரவாகவும் மறுபக்கம் எதிர்ப்பும் ஆந்திராவில் கிளம்பியது. கடந்த ஓரிரு நாட்களாகவே ஆந்திர மக்கள் ரஜினி பக்கம் என்றும் ஆந்திரா மக்களிடம் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனும் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங் ஆனது.

இந்த நிலையில் ரோஜாவின் கருத்துக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்..

“புகழ்பெற்ற நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எதிராக இழிவான கருத்துக்களைத் தெரிவித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

நேர்மை, ஒழுக்கம், மனிதநேயத்தின் உருவமாக திகழ்பவர் ரஜினிகாந்த். நல்லுள்ளம் படைத்த அவர் நாடு கடந்து உலக அளவில் எல்லோராலும் நேசிக்கப்படுகிறார்.

அவர் மீது கட்டவிழ்க்கப்பட்ட வக்கிரமான ஒய்எஸ்ஆர் கும்பலின் இந்த திட்டமிட்ட தாக்குதல், அவர்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து வருவதைக் காட்டுகிறது. மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என சந்திரபாபு நாயுடு பதிவிட்டுள்ளார்.

மேலும் ஆந்திரா மக்கள் ரஜினியுடன் என்ற வார்த்தையை அவர் குறிப்பிட்டுள்ளார்.

Support and opposition to Rajini in AP Chandrababu Naidu condemns Roja speech

ட்விட்டரில் இருந்து சிவகார்த்திகேயன் விலக இதுதான் காரணமா.?

ட்விட்டரில் இருந்து சிவகார்த்திகேயன் விலக இதுதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தன் திறமையால் உயர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். தன்னுடைய பட தொடர்பாகவும் மற்றும் பண்டிகை காலங்களில் வாழ்த்துக்களையும் பதிவிடுவார்.

சிவகார்த்திகேயனுக்கு ட்விட்டரில் ஏழு மில்லியன் பாலோயர்கள் இருப்பதால் நிறைய பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரிடம் தங்கள் பட ட்ரைய்லர் போஸ்டர்களை வெளியிட சொல்லி வற்புறுத்தி வந்தனர்.

அவரும் மற்ற நடிகர்களின் படங்களின் டிரைலர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவைகளையும் பதிவிட்டு மற்ற படங்களுக்கு விளம்பரம் தேடி தருவார்.

இந்த அன்புத் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகி வந்துள்ளது.

மேலும் ஒருவருக்கு பதிவிட்டு ஒருவருக்கு மறுக்கும்போது ஏற்படும் தர்ம சங்கடங்களை தவிர்க்கவே திடீரென சிவகார்த்திகேயன் ட்விட்டரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

Reason behind Sivakarthikeyan quits Twitter

கிரிக்கெட்டர் வீராட் கோலி – நடிகை அனுஷ்கா ஷர்மா வீட்ல விசேஷங்க..

கிரிக்கெட்டர் வீராட் கோலி – நடிகை அனுஷ்கா ஷர்மா வீட்ல விசேஷங்க..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா சர்மா.

கடந்த 2017 ஆம் ஆண்டு விராட் கோலி – அனுஷ்கா சர்மா திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு வாமிகா என்ற மகள் கடந்த 2021 ஆம் ஆண்டு பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அனுஷ்கா சர்மா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில், அனுஷ்கா சர்மாவின் கணவரும் கிரிக்கெட் வீரருமான விராட் கோலி தனது மனைவியின் க்யூட்டான புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், அனுஷ்கா ஷர்மாவுக்கு, பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

virat kohli wishes his wife anushka sharma birthday celebration

சூப்பர் ஸ்டார் விஜய் பிரச்சனை குறித்து ரஜினியிடம் பேசினேன் – சரத்குமார்

சூப்பர் ஸ்டார் விஜய் பிரச்சனை குறித்து ரஜினியிடம் பேசினேன் – சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என கலக்க ஆரம்பித்திருக்கிறார்.
இந்திய சினிமாவின் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டுகளை குவித்துள்ளது.

மேலும் தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில், நாயகன், எதிர்நாயகன், வெப் சீரிஸ் என படு பிஸியாக நடித்து வருகிறார்.

சரத்குமார்

பொன்னியின் செல்வன், ருத்ரன் திரைப்படங்களின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார் நடிகர் சரத்குமார்.

இந்நிகழ்வினில் நடிகர் சரத்குமார் பகிர்ந்து கொண்டதாவது…

நான் இப்போது பேசுவது பெரிய பழுவேட்டரையர் பேசுவது போல் உள்ளது என்கிறார்கள், மகிழ்ச்சி. நான் எப்போதும் நல்ல தமிழ் தான் பேசி வருகிறேன்.

கலை உலகத்தில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தேன், ஆனால் இப்போது தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளேன். கலை தான் என் தொழில்.

சரத்குமார்

பத்திரிகை நண்பர்கள் எப்போதும் என்னிடம் உரிமையுடன் எதையும் பரிமாறி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இப்போதைய தலைமுறைக்கும் நம்மை தெரிய வேண்டுமென நினைக்கிறேன்.

பொன்னியின் செல்வன் பட புரமோசனில் நான் கலந்துக் கொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். என்னை அழைத்திருந்தார்கள் ஆனால் நான் சென்னையில் இல்லாததனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.

சரத்குமார்

மணிரத்னம் மிகச்சிறந்த பாத்திரம் தந்திருந்தார், இப்போது படம் எல்லோரிடத்திலும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. பொன்னியின் செல்வன் வாய்ப்பு தந்ததற்கு மணிரத்னத்திற்கு லைகா புரடக்சன் சுபாஸ்கரன் இருவருக்கும் நன்றி.

இன்றைய தலைமுறைக்கு என்னை எடுத்து சென்ற வாரிசு படத்திற்காக வம்சி மற்றும் விஜய்க்கு நன்றி. ருத்ரன் வில்லன் பாத்திரம் என்றபோது தயங்கினேன் ஆனால் இப்போதைய ரசிகர்கள் வில்லனாக நடிப்பவர்களை அதே போன்று பார்ப்பதில்லை, அந்த கதாப்பாத்திரத்தை எப்படி செய்துள்ளனர் என்றே பார்க்கிறார்கள்.

அதனால் தைரியமாக நடித்தேன். அடி வாங்கும் சாதாரண வில்லனாக நடிக்க மாட்டேன். நான் நாயகனாக நடித்த காலத்தை விட இப்போது அதிகப்படம் நடித்து வருகிறேன். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன். தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும். அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது,

சரத்குமார்

விரைவில் அதற்காக தனியாக பத்திரிக்கை நண்பர்களைச் சந்திப்பேன். 2026-ல் ஒரு மாஸான அறிவிப்பு வரும். எப்போதும் உங்கள் ஆதரவு எனக்கு இருந்துள்ளது. அந்த ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி.

தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு சரத்குமார் பதிலளித்தார்.

சூப்பர் ஸ்டார் பிரச்சனை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. விஜய் சூப்பர் ஸ்டாரா ? என கேட்கப்பட்ட போது.. “இது குறித்து நான் ரஜினியிடம் பேசி விட்டேன். அவர் விடுங்க சரத் அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. நீங்களும் கவலைப்பட வேண்டாம்” என என்னிடம் தெரிவித்தார்.

சரத்குமார்

Sarathkumar talks about Superstar Rajini vs Vijay issue

நகுல் நடிக்கும் ‘வாஸ்கோடகாமா’ பட சூட்டிங் அப்டேட் இதோ..

நகுல் நடிக்கும் ‘வாஸ்கோடகாமா’ பட சூட்டிங் அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட நாட்களாக பிறகு நடிகர் நகுல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாஸ்கோடகாமா’.

அறிமுக இயக்குனர் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் ‘வாஸ்கோடகாமா’ என்ற நகைச்சுவைப் படத்தில் நகுல் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அருண் என்வி இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

மேலும், கடைசி நாள் படப்பிடிப்பில் இருந்து குழுவின் படத்தைப் பகிர்ந்துள்ளார் நடிகர் நகுல். அதில், “வாஸ்கோடகாமா இது ஒரு மடக்கு! இந்த வாய்ப்பையும் அனைத்து அழகான நினைவுகளையும் தந்த எனது இயக்குனர் ஆர்.ஜி.கிருஷ்ணன் மற்றும் முதலாளி டத்தோ பி சுபாஸ்கரன் அவர்களுக்கு நன்றி! ” என்று பதிவிட்டுள்ளார்.

Nakkhul’s ‘Vasco Da Gama’ shooting wrapped up

விஜய்யின் ‘லியோ’ படத்துடன் கனெக்ட்டாகும் கமலின் ‘விக்ரம்’

விஜய்யின் ‘லியோ’ படத்துடன் கனெக்ட்டாகும் கமலின் ‘விக்ரம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கிய பாவ கதைகளில் ‘லவ் பண்ண உத்திரனும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜாபர் சாதிக்.

கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தில் ஜாஃபர் சாதிக் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்தார்.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்தில் ஜாபர் சாதிக் தற்போது இணைந்துள்ளார்.

‘லியோ’ படத்துக்கும் ‘விக்ரமுக்கும்’ தொடர்பு இருக்கும் என்பதை நடிகர்கள் சேர்க்கையில் உறுதியாகிறது.

‘லியோ’ படத்தின் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

மேலும், இப்படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் இவர்களுடன் தற்போது ஜாபர் சாதிக் இணைய உள்ளார்.

Kamal’s ‘Vikram’ to connect with Vijay’s ‘Leo’

More Articles
Follows