அதிர்ஷ்டசாலி அசுரன்..; ‘ராக்கி’ இயக்குனருடன் இணையும் தனுஷ்

அதிர்ஷ்டசாலி அசுரன்..; ‘ராக்கி’ இயக்குனருடன் இணையும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் ஹிந்தியில் ‘அத்ரங்கி ரே’ என்ற பெயரில் உருவான படத்தை ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிட்டனர். கடந்த வெள்ளியன்று இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ்.

தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் சார் என்ற படத்தில் நடிக்கிறார்.

தமிழில இந்த படத்திற்கு வாத்தி என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கிறார்.

இந்த படங்களை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதை தனுஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.

தனுஷின் ட்விட்டர் பதிவில்,” ஆம்,யூகங்கள் உண்மைதான் அருண் மாதேஸ்வரன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டசாலி நடிகர் நான்தான். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ்டன் செல்வராகவன் முதன்முறையாக நாயகனாக நடித்து வரும் ‘சாணிக்காயிதம்’ படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

மேலும் கடந்த வாரத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் வெளியான ‘ராக்கி’ படத்தையும் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

திரையரங்குகளில் வெளியான ராக்கி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Rocky director joins next with Dhanush

விஜய் ஆண்டனிக்கு ஜோடியானார் தனுஷ்-சிம்பு பட நாயகி

விஜய் ஆண்டனிக்கு ஜோடியானார் தனுஷ்-சிம்பு பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இது சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘சலீம்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது.

சலீம் முதல் பாகத்தை நிர்மல் குமார் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் முக்கிய வேடங்களில் சரத்குமார், ரமணா, சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

விஜய் மில்டன் எழுதி, இயக்கும் இந்த படத்தை 2022ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினி உடன் பேட்ட, தனுஷ் உடன் எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் சிம்பு உடன் வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் மேகா ஆகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Megha Akash to romance Vijay Antony for her next

எமதர்மனுக்கு பாட்டிசைக்க புறப்பட்டாயோ..; மாணிக்க விநாயகம் மறைவுக்கு ஸ்டாலின் வைரமுத்து டிஆர் இரங்கல்

எமதர்மனுக்கு பாட்டிசைக்க புறப்பட்டாயோ..; மாணிக்க விநாயகம் மறைவுக்கு ஸ்டாலின் வைரமுத்து டிஆர் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் தனது 73 வயதில் மாரடைப்பு காரணமாக நேற்று (26.12.2021) உயிரிழந்தார் என்ற செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள மாணிக்க விநாயகம் பல படங்களில் குணசித்ர கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார்.

மாணிக்க விநாயகத்தின் உடல் சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்காவுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அவர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சென்றிருந்தார்.

முதல்வர் தன் இரங்கல் குறிப்பில்…

அவரது தந்தை மற்றும் அண்ணனைப் போலவே, தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற அன்பைப் பொழிந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்திக்கும்போதெல்லாம், மிகுந்த அக்கறையோடு நலம் விசாரிப்பவர்.

பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த திரு. வழுவூர் மாணிக்க விநாயகம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

கவிஞர் வைரமுத்து தன் ட்விட்டர் இரங்கல் குறிப்பில்…

இசை மரபிலே வந்த
மாணிக்க விநாயகம்
மறைந்துற்றார்

“விடைகொடு எங்கள் நாடே”
என்று பாடியவர் விடைபெற்றார்

நல்ல கலைஞன் – நல்ல மனிதன்
என்று இரண்டும் கூடிய
அபூர்வம் அவர்

குடும்பத்திற்கு
நாம் ஆறுதல் சொல்லலாம்

எவர் சொல்வது இசைக்கு…?

நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் தன் இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளதாவது…

அண்ணா, மனசு தாங்கலயே, உங்கள் மாணிக்க குரல் எங்களை விட்டு நீங்கலயே என நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

அதில்…

கன்னி தமிழ் மணக்க கணீர் குரல் ஒலிக்க, வெண்கல குரலுக்கு சொந்தக்காரர், வேணுகானம் இசைக்கும் பாட்டுக்காரர், மாணிக்க விநாயகமே, மங்கா தமிழகம்தான் உங்கள் தாயகமே,

நோய் வந்து உங்களை ஏன் வாட்டியது? எமலோகத்திற்கு யார் வந்து உங்கள் வாகனத்தை பூட்டியது

நண்பா எமதர்மன் சபைக்கு பாட்டிசைக்க புறப்பட்டாயோ, எங்கள் கலையுலகை மறந்துவிட்டாயோ, இம்மண்ணுலகை விட்டு மறைந்து விட்டாயோ

அண்ணா, மனசு தாங்கலயே, உங்கள் மாணிக்க குரல் எங்களை விட்டு நீங்கலயே.

அன்னாரை இழந்து வாடும் தமிழ் திரையுலகத்திற்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

· இப்படிக்கு,
டி. ராஜேந்தர் M.A,
தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர், தலைவர், சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம்.

கௌரவ ஆலோசகர், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

Celebrities condolence message to late singer Manikka Vinayagam

சூப்பர் 100 பிரிவு : ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் இலவச TNPSC பயிற்சி

சூப்பர் 100 பிரிவு : ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் இலவச TNPSC பயிற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏழை மாணவர்களின் கல்வியை மேம்படுத்த ரஜினிகாந்த் (பவுண்டேசன்) அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளை மூலம் முதலில் 100 மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என ரசிகர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.எம் சுதாகர் ரஜினிகாந்த் பிறந்தநாளில் அறிவித்திருந்தார்.

இந்த தகவலை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

அதன்படி தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சிக்காக http://rajinikanthfoundation.org என்ற இணையதளத்தை ரஜினிகாந்த் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இந்த தொடர்பான அறிக்கையில்…

“இந்திய திரைத்துறையின் சூப்பர் ஸ்டார் பத்மபூஷன் ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அமைப்பதற்காக உருவாக்கப்பட்டது.

எங்களுக்கு உலகளாவிய பார்வை இருந்தாலும் எங்களது ஆரம்ப முயற்சிகளை தமிழ்நாட்டில் மட்டுமே எடுக்க விரும்புகிறோம். தமிழ்நாட்டு மக்களின் கருணையும் அன்பும் தான் தனக்கு இவ்வளவு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது என்று சூப்பர் ஸ்டார் எப்போதும் கூறுவார்.

எனவே இந்த அறக்கட்டளை தமிழகத்திலிருந்து தொடங்கப்படும். அறக்கட்டளை சிறிய ஆரம்பம், முயற்சி, சுயதிருத்தம், பிறகு இதுவே இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை நம்புகிறது.

தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆசியுடன், இலவச டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு பயிற்சிக்கான சூப்பர் 100 பிரிவு பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இதில் பதிவு செய்ய http://rajinikanthfoundation.org/tnpsc.html என்ற இணையதள முகவரியை பின் தொடரவும்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Rajinikanth Foundation which had said that it will train students for the TNPSCExam

JUST IN பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் மரணம்; முதல்வர் நாளை அஞ்சலி.! மேலும் தகவல்கள்..

JUST IN பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் மரணம்; முதல்வர் நாளை அஞ்சலி.! மேலும் தகவல்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல சினிமா பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் காலமானார். வயது 78.
1943ல் டிசம்பர் 10ஆம் தேதி

விக்ரம், லைலா, விவேக் இணைந்து நடித்த ‘தில்’ படத்தில் பாடகராக அறிமுகமானார்.

திருடா திருடி, போஸ், கள்வனின் காதலி, வேட்டைக்காரன், திமிரு உள்ளிட்ட போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் அப்பா கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகனாவார். எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார்.

பார்த்திபன் கனவு, தம்பி, கனா கண்டேன், மஜா, ஓரம்போ, சிங்கம், சேவல், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார்.
இந்த நிலையில் இன்று சற்றுமுன் மாரடைப்பால் காலமானார்.

இவரது வீடு சென்னை, அடையார் சாஸ்திரி நகர், 14வது தெருவில் அமைந்துள்ளது. இவரது உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 7.00 மணிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளார்.

Play back singer Actor Manikka Vinayagam passed away

வெள்ளி விழா நாயகன் மோகன் ரீஎன்ட்ரி.; டைரக்டர் விஜய்ஸ்ரீ கொடுத்த வேறலெவல் அப்டேட்

வெள்ளி விழா நாயகன் மோகன் ரீஎன்ட்ரி.; டைரக்டர் விஜய்ஸ்ரீ கொடுத்த வேறலெவல் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் ரஜினி மற்றும் கமலுக்கே போட்டியாக கருதப்பட்டவர் நடிகர் மோகன். இவர் பல படங்களில் மேடை பாடகராக நடித்ததால் இவருக்கு மைக் மோகன் என்ற செல்லப்பெயரும் உண்டு.

இளையராஜா இசையில் இவரது பாடல்கள் மற்றும் படங்கள் பெரும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

‘மூடு பனி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மோகன். இதற்கு முன்பே மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தமிழில் இவர் நடிப்பில் வெளியான ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ திரைப்படம் 1 வருடம் ஓடி இவரது புகழை பட்டி தொட்டியெங்கும் சென்றயடைய வைத்தது.

இதனையடுத்து கிளிசல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, உதயகீதம், மெல்ல திறந்தது கதவு, இதயகோயில், மௌனராகம், உயிரே உனக்காக என பல வெள்ளி விழா படங்களை கொடுத்தார்.

எனவே இவரை வெள்ளி விழா நாயகன் என்றும் திரையுலகினர் அழைப்பதுண்டு.

1990களில் இவரது மார்க்கெட் வீழ்ச்சியை காண தொடங்கியது. இதனையடுத்து 1999ல் அன்புள்ள காதலுக்கு என்ற ஒரு படத்தை இயக்கி நடித்தார். அந்த படமும் சரியாக போகவில்லை.

சில ஆண்டுகளுக்கு பின்னர் 2008ல் ‘சுட்டப்பழம்’ என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் போதிய வரவேற்பை பெறவில்லை.

ஆனாலும் மோகன் பாடி நடித்த பாடல்களை இன்று வரை இவரது ரசிகர்கள் இரவு நேரங்களில் கேட்டுவிட்டுத்தான் உறங்க செல்கின்றனர்.

மோகன் படங்களில் எஸ்பி பாலசுப்ரமணியம் நிறைய பாடல்களை பாடியுள்ளார். எனவேதான் எஸ்பிபி மறைவு தனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது என மோகன் அப்போதைய பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

புதிய இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்தபோதிலும் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என உறுதியாக இருந்தார் மோகன்.

இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு மோகனை நடிக்க அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீஜி.
ஆனால் இது வழக்கமான மேடை பாடகர் கதையில்லையாம். எவருமே எதிர்பார்க்காத வகையில் ஆக்சன் த்ரில்லராக இருக்கும் என தெரிவித்துள்ளார். இது சேவல் சண்டையை மையப்படுத்திய கதைக்களம் எனவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை 2022 ஜனவரி 1ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாக விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.

தாதா 87 பட இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கிய ‘பவுடர்’ படம் 26 ஜனவரி 2022ல் வெளியாகவுள்ளது. இதனையடுத்து ‘பப்ஜி’ படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நடிகர் மோகனை மீண்டும் சினிமாவுக்கு அழைத்து வரும் விஜய்ஸ்ரீயை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Actor Mohan reentry first look update by Director Vijay Sri

More Articles
Follows