தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் இந்த ஆண்டு 2023 ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இதே நாளில் தான் விஜய் நடித்த ‘வாரிசு’ படமும் வெளியானது. இந்த இரு படங்களும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
துணிவு படத்தை வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற சில்லா… சில்லா… காசேதான் கடவுளடா மற்றும் கேங்ஸ்டா ஆகிய பாடல்கள் பெரும் ஹிட்டானது.
இந்த படம் மாபெரும் வசூல் சாதனை படைத்த இருந்த நிலையில் இன்று மே 1ம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு கேங்ஸ்டா என்ற பாடலின் வீடியோவை வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இன்று மாலை 5 மணிக்கு இந்த பாடல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
release Gangstaa Video song From Thunivu Today at 5 PM