தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ரஜினியின் ஸ்டைல்.. சூப்பர் ஹிட் பாடல்கள்.. நெல்சனின் பிளாக் காமெடி.. மோகன்லால் மற்றும் சிவராஜ் குமாரின் ஆக்ஷன்.. வில்லன் விநாயகனின் வெறித்தனமான நடிப்பு என அனைத்தையும் கலந்து இந்த படத்தை ரசிகர்களுக்கு படக்குழு வழங்கியிருந்தனர்.
இந்த படத்திற்கு பெரிய பிரமோஷன் இல்லை.. ரிலீஸ் நாளில் விடுமுறை இல்லை.. பண்டிகை தினம் இல்லை ஆனாலும் தொடர்ந்து இரண்டு வாரங்களாக பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது ‘ஜெயிலர்’.
வார நாட்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் வசூல் பற்றி அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகளளவில் இதுவரை ரூ. 525 கோடியை வசூல் செய்துள்ளது என அறிவித்துள்ளனர். மேலும் ரஜினிகாந்த் ரெக்கார்ட் மேக்கர் எனவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Record Maker Rajini Jailer collected Rs 525cr Box office