‘மாநாடு’ படத்தில் சிம்பு வில்லனுக்கு தனுஷ் பெயர் ஏன்.? இதான் காரணமா?

‘மாநாடு’ படத்தில் சிம்பு வில்லனுக்கு தனுஷ் பெயர் ஏன்.? இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து தியேட்டர்களில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’.

இப்படம் அனைத்து தரப்பிலும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிக்கிறது.

இந்த படத்தில் நடிகர் சிம்புக்கும் அவரின் வில்லனாக நடித்த எஸ்.ஜே. சூர்யாவுக்கும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் வில்லன் கேரக்டருக்கு தனுஷ்கோடி என்று பெயர் வெங்கட்பிரபு வைத்தது ஏன்? என தனுஷ் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாநாடு டைரக்டர் வெங்கட்பிரபு அவர் அளித்த சமீபத்திய பேட்டியில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

‘மாநாடு’ படத்தின் வில்லன் பெயர் ஸ்ட்ராங்கா பவர்புல்லாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி வைத்தோம்.

நடிகர்களில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் சிம்பு, தனுஷ் தான் நம் அனைவரின் நினைவுக்கு வருவார்கள்.

எனவே அதுபோன்ற ஒரு பெயரை வைத்தால் வில்லன் கேரக்டருக்கு ஒரு பவர் வந்து விடும் என்பதால் அப்படி வைத்ததாகவும் கண்டிப்பாக நடிகர் தனுஷ் இதனையறிந்து சந்தோஷப்பட்டிருப்பார் எனவும் தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.

Reason behind Maanaadu villain name revealed?

JUST IN தல என்று அழைக்கவேண்டாம்..; அஜித் அறிக்கையின் பின்னணி..!?

JUST IN தல என்று அழைக்கவேண்டாம்..; அஜித் அறிக்கையின் பின்னணி..!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார்.

ரஜினிகாந்தை தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் ரசிர்கள் அழைக்கின்றனர். நடிகர் கமல்ஹாசனை உலக நாயகன் என்றும் விஜய்யை தளபதி என்றும் அழைக்கின்றனர்.

அதுபோல் அஜித்தை தல என்றே அழைத்தனர். ஒரு காலத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் என அழைத்தனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டில் இனிமேல் தன்னை அல்டிமேட் ஸ்டார் அஜித் என அழைக்க வேண்டாம் என அறிவித்து இருந்தார்.

கடந்த 2001-ம் ஆண்டில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா படத்துக்கு பின்னர் தான் தல என பட்டப்பெயர் அஜித்துக்கு உருவானது.

இந்த நிலையில் இனிமேல் தல என அழைக்க வேண்டாம் என அஜித் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது மக்கள் தொடர்பு அதிகாரி சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில்… பெரும் மரியாதைக்குரிய ஊடக பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என் பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே. என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் , அன்புடன் அஜித்குமார்.

என பதிவிட்டுள்ளார்.

சமீபகாலமாக அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் சண்டை இட்டு வருகீன்றனர்.

இது ஒரு கட்டத்தில் எல்லைமீறி கிரிக்கெட் வீர்ர் தோனி ரசிகர்களுடன் சண்டை இடும் அளவுக்கு மாறியது.

அதாவது தோனியை தல தோனி என்றே அவரது ரசிர்கள் அழைப்பர். நடிகர் விஜய்யை தோனி சந்தித்தபோது தல தளபதி சந்திப்பு என்றே பரவலாக பேசப்பட்டது.

அப்போதே அஜித் ரசிகர்கள் இதற்கு வாக்குவாதம் செய்தனர். ஒரே தல … அது அஜித் மட்டும்தான் என்றனர். இது நாளடைவில் பெரும் பிரச்சினைகள் இழுத்துக் கொண்டே சென்றது.

தற்போது அஜித் அறிக்கையின் பின்னணியில் இந்த பிரச்சினை கூட காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது,

சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் தன் பெயரில் இயங்கி வந்த ரசிகர் மன்றங்களை கலைத்தார் நடிகர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

No fans club, no title names for Ajith Kumar

உலக தமிழர்களின் நிதியால் உருவான ‘மேதகு’ 2ஆம் பாகம்

உலக தமிழர்களின் நிதியால் உருவான ‘மேதகு’ 2ஆம் பாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை படமாக ‘மேதகு’ படம் கடந்த ஜூன் மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. உலக தமிழர்களிடம் நன்கொடை பெறப்பட்டு இந்த படம் உருவானது

இந்த படத்தை கிட்டு என்பவர் இயக்கியிருந்தார்.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தை தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் பிரபாகரனின் இளம் வயது நினைவுகளை தொகுத்து படமாக்கியுள்ளனர்.

முதல் பாகத்தை போலவே உலக தமிழர்களிடம் இருந்து இந்த படத்திற்கும் நன்கொடை பெறப்பட்டுள்ளதாம்.

அறிமுக இயக்குனர் யோகேந்திரன் என்பவர் மேதகு 2 ஆம் பாகத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Methagu part 2 made by worldwide tamil people fund

தேவையான அரசியல்… சிம்புவின் திரைமொழி…; ‘மாநாடு’ பட வெற்றி மகிழ்ச்சியில் சீமான்

தேவையான அரசியல்… சிம்புவின் திரைமொழி…; ‘மாநாடு’ பட வெற்றி மகிழ்ச்சியில் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தை பார்த்த சீமான் 2 பக்கம் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது…

அன்புத்தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டுகளித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது. மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும்போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி விழிப்பூட்டும் சுவைமிக்கக் கலைப்படைப்பாக இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார் தம்பி வெங்கட்பிரபு.

இசுலாமிய மக்கள் குறித்துப் பரப்பப்படும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாகி, கோவை கலவரத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போகிறபோக்கில் பேசி, அவர்கள் குறித்துப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறானப் பிம்பத்தை தகர்த்தெரியும் விதத்திலான வசனங்களையும், காட்சிகளையும் படத்தின் கருப்பொருளாக அமையச் செய்திருப்பது இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும்.

சொல்ல வந்த செய்தியை மிகச்சரியாகக் காட்சிப்படுத்தி, அதனைத் திரைமொழியில் மக்களுக்கு விருந்தாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள தம்பி வெங்கட்பிரபுவின் கலைத்திறன் இத்திரைப்படத்தின் மூலம் மென்மேலும் மெருகேறியிருக்கிறது.

எனது தம்பி சிலம்பரசன் அவர்கள் தனது துடிப்பான நடிப்பாற்றலாலும், மக்களின் மனம்கவரும் வகையிலான தனித்துவமிக்க திரைமொழி ஆளுகையினாலும், நுட்பமான உடல்மொழியாலும், உயிரோட்டமான வசன உச்சரிப்புகளாலும் மீண்டுமொரு முறை முத்திரைப் பதித்திருக்கிறார்.

கலையுலகப் பயணத்தில் அவரது வளர்ச்சி குறித்து பெரும் அக்கறைகொள்கிறேன்! அவரது உயரத்தை எண்ணி மன மகிழ்வடைகிறேன்! அன்புச் சகோதரன் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தைத் தாங்கியிருந்தாலும் தனக்கே உரித்தான மொழி நடையாலும், எவரையும் சுண்டியிழுக்கும் வகையிலான அளப்பெரும் நடிப்புத்திறனாலும் படத்தினையே தாங்கி நிற்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் யாவற்றையும் பெரிதும் விரும்பி ரசித்தேன்!

தம்பி யுவன் சங்கர்ராஜாவின் பலமிக்க பின்னணி இசையும், தம்பி கே.எல்.பிரவீண் நேர்த்தியான படத்தொகுப்பும் படைப்புக்குப் பெரிதும் துணைநிற்கின்றன. இத்திரைப்படத்தில் நடித்த அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், ஐயா ஒ.ஜி.மகேந்திரன், தம்பி மனோஜ் பாரதிராஜா, தம்பி சுப்பு அருணாச்சலம், தம்பி பிரேம்ஜி அமரன், தம்பி கருணாகரன், தங்கை கல்யாணி பிரியதர்ஷன் என யாவரும் தங்களது பங்களிப்பினைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

காலத்திற்கேற்ற அரசியலைப் பேசும் சாலச்சிறந்தப் படைப்பாகவும், மாறுபட்ட திரைக்கதை அமைப்புகொண்ட நல்லதொரு திரைப்படமாகவும் வெளிவந்திருக்கும் இதனைத் தயாரித்து, பெரும் சிரமங்களையும், இடையூறுகளையும் எதிர்கொண்டபோதும் சற்றும் தளராது நின்று வென்றுகாட்டி, வெற்றிப்படைப்பாக நிலைநாட்டிய ஆருயிர் இளவல் எனது பாசத்திற்குரிய தம்பி சுரேஷ் காமாட்சி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

மண்ணுக்கும், மக்களுக்கும் தேவையான இன்னும் பல பல படைப்புகளைத் தந்து, அவர் மென்மேலும் வளர்ந்து உச்சம் தொட வேண்டுமென எனது வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவிக்கிறேன்!

எனது தம்பிகள் தங்களது அயராத உழைப்பின் மூலம் ஈட்டிய அளப்பெரும் வெற்றியைக் கண்டு உள்ளம்பூரிப்பு அடைகிறேன்!

நானே வெற்றி பெற்றதாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்! இப்படைப்புக்காக உழைத்திட்ட அத்தனை பேருக்கும் எனது வெற்றி வாழ்த்துகளையும், உளப்பூர்வமான பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

NTK leader Seeman praises STR’s Maanaadu

300 பேருடன் சதீஷ் சண்டை… 2 வருட போஸ்ட் புரடக்சன்.. 800 மணி நேர டப்பிங்….; ஜிவி. பிரகாஷின் ‘பேச்சுலர்’ பட சுவாரஸ்யங்கள்..

300 பேருடன் சதீஷ் சண்டை… 2 வருட போஸ்ட் புரடக்சன்.. 800 மணி நேர டப்பிங்….; ஜிவி. பிரகாஷின் ‘பேச்சுலர்’ பட சுவாரஸ்யங்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு வழங்கும், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் GV பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம, “பேச்சிலர்” . டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், இக்காலத்திய இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகிறது. உலகமெங்கும் திரைவெளியீடாக 2021 டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு, சென்னையில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.

இவ்விழாவில்

இசையமைப்பாளர் சித்துகுமார் பேசியதாவது…

முதலில் இப்படத்திற்காக சந்தித்த போது படத்தில் பங்கேற்க முடியாத சூழல் இருந்தது, அதன் பிறகு ஒரு 6 மதம் கழித்து மீண்டும் என்னை தேடி இந்த வாய்ப்பு வந்தது. ஜீவி சார் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை படம் தான் என் முதல் படம், ஜீவி இசை எனக்கு பிடிக்கும் அவருக்கு இசையமைக்க பயம் இருந்தது. அவருக்காக இசையில் சில விசயங்கள் செய்தேன். வெகு குறுகிய காலத்தில் இசையமைக்க வேண்டியிருந்தது ஆனால் முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளோம். இயக்குநருக்கு முதல் படம் மாதிரியே இல்லை நன்றாக செய்திருக்கிறார் உங்களுக்கு படம் பிடிக்கும் நன்றி.

படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் பேசியதாவது…

என்னோட கேரியரில் ராட்சசனுக்கு பிறகு, என் வாழக்கையில் மிக முக்கியமான படம். ஜீவி கூட என்னோட இரண்டாவது படம், சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தம்பியாக வந்திருப்பார் இதில் டோட்டலாக வேறு டோனில் நடித்திருக்கிறார். படம் முழுவதும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் உங்களுக்கு வித்தியாசம் தெரியும். இயக்குநரும் நானும் 11 வருடமாக இந்தக்கதையை பேசியுள்ளோம், அது படத்தில் வந்திருக்கிறது. எங்களுக்கு முழு திருப்தியை தந்துள்ளது. உங்களுக்கும் படம் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பேசியதாவது…

3 வருடத்துக்கு முன்னாடி டில்லிபாபு சாரை ஒரு மதியத்தில் சந்தித்து கதை சொன்னேன். மூன்று மாதங்கள் வெயிட் பண்ணுங்கள் செய்யலாம் என்றார் அப்படித்தான் இப்படம் ஆரம்பித்தது. நாம் நினைத்ததை திரையில் கொண்டுவருவது கஷ்டம், தயாரிப்பாளர் எப்போதும் வேறெதாவது எதிர்பார்ப்பார்கள். இப்படத்திற்கு 100 நாட்கள் டப்பிங் செய்தோம்,

தயாரிப்பாளர்களுக்கு அது என்ன மாதிரியான உணர்வை தருமென்று தெரியும். ஆனால் எங்கள் மேல் முழுமையாக நம்பிக்கை வைத்து, இப்படைப்பை உருவாக்கியுள்ளார் அவருக்கு நன்றி. தேனி ஈஸ்வர் சார், படத்தில் பல காட்சிகளை தோளில் கேமராவை வைத்தே தான் படமாக்கி தந்தார். நாங்கள் கேட்டதை விடவும் சிறப்பாக செய்துள்ளார்.

ஒரு காட்சி ஒகே டேக்கே 40 டேக் போகும், அதை அவ்வளவு பொறுமையாக பார்த்து, கிரியேட்டிவாக எடிட் செய்துள்ளார் ஷான். அவருக்கு ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. ஒரு நண்பனாக அவரை நினைத்து பெருமையாக இருக்கிறது. ஜீவி சார், ஒரு ஆக்டராக அவர் முகத்தில் ஒரு அமைதி இருக்கிறது, அது இயக்குநருக்கு வரம், இந்த மாதிரி படத்தில் அவர் முகத்தில் காட்டும் சின்ன, சின்ன உணர்வும் படத்திற்கு அவ்வளவு பலமாக இருக்கும்.

படம் இத்தனை இயல்பாக இருக்க அவர் தான் காரணம். எல்லா நடிகர்களும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்தார்கள் அனைவருக்கும் நன்றி.

திவ்யா 3 மாதங்கள் பயிற்சி எடுத்து நடித்தார். இந்தப்படம் அவர் வாழக்கையில் முக்கியமானதாக இருக்கும். ஒரு அறிமுக நடிகையாக அற்புதமாக நடித்திருக்கிறார்.

சித்துவை தான் அதிகமாக டார்ச்சர் செய்திருக்கிறேன் அதையெல்லாம் பொறுத்துகொண்டு சிறப்பான பின்னணி இசை தந்திருக்கிறார். அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் உழைத்து, அழகாக உருவாக்கியுள்ளோம், உங்களுக்கு பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி

Sakthi Film Factory சார்பில் B. சக்திவேலன் பேசியதாவது…

இந்தப்படத்தை நான் பார்த்து விட்டேன். சாதாரண ரசிகனாக சொல்கிறேன் இந்தப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும். படம் பார்த்து மறுநாளும் மனதிற்குள் இந்தப்படம் ஓடிக்கொண்டே இருந்தது. ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் டில்லிபாபு இந்தப்படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வோம் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம் என்றார். டப்பிங் மட்டுமே 800 மணி நேரத்திற்கும் மேலாக செய்திருக்கிறார்.

இவரைப்போல் சமீபத்தில் திரைத்துறை மீது காதல் கொண்ட எவரையும் பார்த்தில்லை. தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகப்பெரிய கலைஞனாக இப்படத்தின் மூலம் வந்திருக்கிறார் இயக்குநர் சதீஷ்.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஷங்கர் படம் போல் இப்படம் இருக்கும். ஜீவி சாரோட கேரியர் பெஸ்டாக இப்படம் இருக்கும். இளைஞர்களுக்கான படமே இங்கு இல்லை அதை போக்கும் விதமாக இப்படம் இருக்கும். எல்லோரும் அனுபவித்து ரசித்து பார்க்கும் படைப்பாக இப்படம் இருக்கும், பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு பேசியதாவது…

படத்தில் வேலை செய்த 300 பேரிடமும் சதீஷ் சண்டை போட்டுள்ளார். அவர் சண்டை போடாதது என்னிடம் மட்டும் தான். 800 மணி நேரம் டப்பிங் செய்தது இது தான் முதல் முறை. எல்லோருமே கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள்.

சதீஷ் உடன் வேலை பார்க்க முடியாது என ஓடியவர்கள் நிறைய பேர். நான்கு படத்திற்கான உழைப்பை இந்தப்படத்திற்கு தந்திருக்கிறது படக்குழு. போஸ்ட் புரடக்சன் மட்டுமே 2 வருடம் ஆகியிருக்கிறது.

அனைவருமே அவர்களின் பெஸ்ட்டை தந்துள்ளார்கள். படத்தை பார்த்த அனைவருமே படத்தை பாராட்டி பேசி வருகிறார்கள். எனக்கு ராட்சசனுக்கு பிறகு பெரிய படமாக இது இருக்கும். ஜீவி தந்த உழைப்பு பிரமிப்பானது இரவு பகலாக உழைத்திருக்கிறார். அவர் வாழ்வில் மிக முக்கியமான படமாக இருக்கும். திவ்யபாரதி அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார். ஜீவிக்கும் அவருக்கும் நடிப்பில் போட்டியிருக்கும். நான் எடுத்துள்ள 6 படத்தில் 5 பேர் அறிமுக இயக்குநர்கள் தான், ராட்சசன் இயக்குனருக்கு மட்டுமே இரண்டாவது படம்.

நான் அடுத்து எடுக்கும் 6 படமும் புதிய இயக்குநர்கள் தான். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருவதை பெருமையாக கருதுகிறேன். சிறந்த திரைக்கதைகள் செய்தால் அதற்கான பாதை இங்கு இருக்கிறது. 2 வருஷம் இயக்குநர் சதீஷ் கேட்ட அனைத்தையும் தந்திருக்கிறேன்.

இயக்குநருக்கான சுதந்திரத்தை தர வேண்டும் என்று நினைப்பவன் நான். நான் கண்டுபிடித்த இயக்குநர்களில் முக்கியமானவர் சதீஷ். எல்ல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். உங்கள் அனைவரையும் இந்தப்படம் கவரும் தியேட்டரில் படம் பாருங்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகை திவ்யபாரதி பேசியதாவது…

2 வருடமாக இந்த தருணத்திற்காகத்தான் உழைத்திருக்கிறோம். தயாரிப்பாளர் டில்லிபாபு சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் நினைத்திருந்தால் பெரிய நடிகைகளை நடிக்க வைத்திருக்கலாம் ஆனால் என்னை நம்பி நடிக்க வைத்ததற்கு நன்றி. முதலில் ஷீட் செய்யும்போது நான் பயந்துவிட்டேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சரியானது.

க்ளைமாக்ஸ் எல்லாம் என்னால் பண்ண முடியாது என நான் அழுதுவிட்டேன் இயக்குநர் சதீஷ் தான் ஆறுதல் தந்து நடிக்க வைத்தார். ஜீவி சார் மிக இயல்பாக இருந்து, எனக்கு டயலாக் எல்லாம் சொல்லி தந்தார். என் அம்மா சிங்கிள் பேரண்ட் எப்பவும் என் கூடவே இருந்தார். எல்லோரும் படம் பாருங்கள் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் GV பிரகாஷ் குமார் பேசியதாவது…

இந்தப்படம் ஆண் பெண் உறவை பேசும் படமாக இருக்கும். ஒவ்வொரு ஜெனரேஷனிலும் ஶ்ரீதர் சார், மணிரத்னம் சார், செல்வராகவன் சார் செய்ததை இப்படத்தில் சதீஷ் செய்திருக்கிறார். இது ரெகுலரான படமாக இருக்காது. என் வழக்கமான நடிப்பிலிருந்து விலகி வந்து இப்படத்தில் நடித்திருக்கிறேன். டில்லிபாபு சார் உடன் மேலும் 3 படம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். மிக நம்பிக்கையுடன் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

தமிழின் மிகச்சிறந்த இயக்குநர்களுக்கு ஒரு ஸ்டைல் இருப்பது போல், சதீஷுக்கு என்று தனி ஸ்டைல் இருக்கிறது அவர் தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைவார். முதல் படத்தில் பெரிய பாத்திரம் கிடைப்பது அரிதானது அது திவ்யபாரதிக்கு கிடைத்திருக்கிறது.

ஒவ்வொரு காட்சியும் நடிக்கும் போது, அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடித்தார். ஈஸ்வர் சார் ஒவ்வொரு படத்திலும் வளர்ந்துகொண்டே போய்க்கொண்டிருக்கிறார். ஷான் லோகேஷின் எடிட்டிங்கிற்கு ரசிகன் நான். நான் தப்பிச்சிட்டேன் சித்துகுமார் மாட்டிக்கொண்டார் ஆனால் பராவாயில்லை அருமையான மியூசிக் தந்திருக்கிறார்.

இந்தப்படத்தில் கோவையின் உண்மையான சிலாங்கை கொண்டு வந்திருக்கிறோம் அனைவருககும் பிடிக்கும். இது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

‘பேச்சிலர்’ திரைப்படத்தில் GV பிரகாஷ் குமார், திவ்யபாரதி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, இயக்குநர் மிஷ்கின், முனீஷ்காந்த், பகவதி பெருமாள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர் இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லி பாபு தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை Sakthi Film Factory சார்பில் B. சக்திவேலன் பெற்றுள்ளார்.

GV பிரகாஷ்குமார் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். திபு நினன் தாமஸ், காஷ்யப் மற்றும் சிகப்பு மஞ்சள் பச்சை படப்புகழ் சித்து தலா ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளனர், மேலும் படத்தின் பின்னணி இசையை சித்து செய்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பாளராக ஷான் லோகேஷ், கலை இயக்குநராக M.லட்சுமி தேவா, ஸ்டண்ட் இயக்கத்தில் PC பணியாற்ற, நடன இயக்குனராக அசார், K. பூரணேஷ் (நிர்வாகத் தயாரிப்பாளர்), SS.ஸ்ரீதர் (தயாரிப்பாளர் நிர்வாகி), விக்னேஷ் தங்கராஜூ (இணை இயக்குநர்), Sync Cinema (ஒலி வடிவமைப்பு), சுபையர் (உடை வடிவமைப்பு), Prism & Pixels VFX Studio (DI), கிரண் R (VFX), மணி தாமோதரன் (தயாரிப்பு மேலாளர்), கோபி பிரசன்னா (பப்ளிசிட்டி டிசைன்), இ.ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) பணிகளை செய்துள்ளனர்.

GV Prakash in Bachelor press meet highlights

என் கண்ணீரை தரையில் விழாமல் தாங்கிய உள்ளங்களே..; சிலிர்க்கும் சிலம்பரசன்

என் கண்ணீரை தரையில் விழாமல் தாங்கிய உள்ளங்களே..; சிலிர்க்கும் சிலம்பரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிய ‛மாநாடு படம் நவம்பர் 25ல் ரிலீசானது.

படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்து வருவதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த மாபெரும் வெற்றியை தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் சிம்பு.

அதில்…

‛‛இறைவன் மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம் மாநாடு. எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது.

‘மாநாடு’ படம் உலகம் முழுக்க மிகப்பெரும் வெற்றியை அள்ளியெடுத்துள்ளது. இதற்கு காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அற்புதமான இயக்கத்தை தந்த வெங்கட்பிரபு, அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், மாநாடு படக்குழுவும், என் தாய், தந்தை, படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரையுலக நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், என் ரத்தமாகிய அன்பு ரசிகர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது. ஆனால், பதிலுக்கு தெரிவிக்க வேறு வார்த்தை இல்லையே… ஆடியோ விழாவில் நான் சிந்திய (கண்ணீர்) சிறு துளிகளை தரையில் விழ விடாமல் தாங்கிக் கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன். வெறியோடு உலகம் முழுக்க வெற்றியை தேடி தந்திருக்கிறீர்கள், அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார் நடிகர் சிலம்பரசன் டிஆர்.

STR’s emotional thanks note on Maanaadu post release

More Articles
Follows