தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் & அமலா பால் நடிப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கிய படம் ‘ராட்சசன்’
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இன்பராஜ் கேரக்டர் உடன் PSBB ஆசிரியர் ராஜகோபாலனை தொடர்புபடுத்தி பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பள்ளி வகுப்பிலேயே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் கேரக்டர் தான் இன்பராஜ் கேரக்டர்.
இதனை PSBB ராஜகோபாலனுடன் ஒப்பிட்டு் பேசப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், இது குறித்து பேசியுள்ளார் அந்த திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார்..
அவரின் பதிவில்….
ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யபடவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்!
#PSBB
இவ்வாறு பதிவிட்டுள்ளார் ராம்குமார்.
Ratsasan director Ram Kumar on PSBB issue