தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
மேலும், ‘ஜெயிலர்’ படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
‘ஜெயிலர்’ படம் 2 மணிநேரம் 49 நிமிடம் ரன்னிங் டைம் எனவும், முதல் பாதி 1 மணிநேரம் 19 நிமிடமாகவும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 30 நிமிடமாகவும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Rajini’s ‘Jailer’ movie running time update here